நான் யாழ்ப்பாணத்தை பிறப்பிடமாக கொண்டவன், இந்த ஐயாவின் தமிழ் பேச்சு அபாரம், இவரது தமிழை கேட்கும் போது தமிழ் இனிக்கின்றது. வாழ்க ஐயா பல்லாண்டு காலம்.இவரது தமிழில் யாழ்ப்பாணத் தமிழர்களின் தமிழ் பேச்சும் கலந்திருக்கின்றது, இவரது பேச்சை கேட்கும் போது 45வருடங்களுக்கு முன்னர் யாழ்ப்பாணத்தில் ஆரம்ப பாடசாலையில் வெள்ளிக்கிழமைகளில் காலையில் தெய்வீக வழிபாட்டின் பின்னர் ஆசிரியர்களின் சிறு பேச்சுக்கள் இடம் பெறும், அந்த பேச்சுக்களை இவரது பேச்சினூடாக நினைவுகூர்ந்தேன். நன்றிகள் ஐயா