மறப்பேனோ உமதன்பை - Marappeno Umathanbai மறப்பேனோ உமதன்பை (2) என் ஆயுள் உள்ளவரை என் ஜீவன் உள்ளவரை - 2 மறப்பேனோ உமதன்பை (2) 1. தனிமையில் அழுது தூக்கத்தை இழந்து இராவெல்லாம் படுக்கையை கண்ணீராலே நிரப்புகையில் - 2 கண்ணீரை துடைக்க வந்த நேசத்தை நான் மறப்பேனோ - 3 - என் ஆயுள் 2. பணம் செல்வம் இல்லையென்று நமக்கு வேண்டாமென்று நேசித்த உறவுகள் என்னை தூக்கி வீசுகையில் - 2 தேடிவந்து மார்போடு அணைத்த உறவை மறப்பேனோ -3 - என் ஆயுள் 3. எனக்கு எதிரான நாவுகள் குற்றப்படுத்தி என் பேரை அழிக்க தீவிரமாய் வருகையிலே -2 எனக்கு துணைநின்று யுத்தம் செய்ததை மறப்பேனோ - 3 - என் ஆயுள்