அருளின் நகராம் மதினபதியை பிரிந்து செல்லும் நேரமே அழுத இதயம் எழுதும் கவிதை அழகு நபியே பாருமே அறையின் கதவை திறந்து கொஞ்சம் வெளியில் வாரும் நேசரே உம் வருகை நோக்கி பைத்தியங்கள் வருடகணக்கில் நிற்குதே உண்மை நீங்கள் உள்ளும் புறமும் ஒன்று போலே காண்பது உம்மை நாங்கள் காண வேண்டும் உள்ளும் புறமும் ஏங்குதே ஆசை எல்லாம் கோடி கோடி அடக்கி வைத்தோம் நெஞ்சிலே நேசர் உங்கள் முன் அமர்ந்து நேரில் சொல்ல வேண்டுமே சென்று வாரோம் செம்மல் நபியே இல்லை எங்கே செல்வது உயிரில் உணர்வில் கலந்த நபியே பிரிந்து எங்கே செல்வது அருமை தோழா விரைவு வேண்டாம் தயங்கி தயங்கி செல்கிறேன் தயங்கி தயங்கி நடந்து மீண்டும் திரும்பி நின்று அழுகுறேன் வெளியில் நீங்கள் வரவும் வேண்டாம் காட்சி தந்தால் போதுமே திரையை கொஞ்சம் நீக்கியம்மை பார்த்துவிட்டால் போதுமே அஸ்ஸலாமு அலைக்கும் எங்கள் அருமை நபியே அன்புடன் பதில் கூறியமை அனுப்பி வைப்பீர் நேசரே கருணை நபி உன் அருளை வேண்டி கண்கள் நதியாய் நிற்கிறேன் அருமை நபி உன் அடிமைகளிலே ஆக கடையோன் பைஜீயே ஏந்தலே உன் வாசல் நின்று பிச்சை கேட்பேன் தாருங்கள் மீண்டும் மீண்டும் உம்மை காண எம்மை அழைப்பீர் நேசரே அருமை நபியே உடலை விட்டு உயிரும் பிரியும் போதிலே அருகில் வந்து அரவணைத்து கலிமா சொல்லி தரணுமே