Тёмный

அற்புதம்-23. எற்றான் மறக்கேன்(பதிகம்) 

Sambandam Gurukkal
Подписаться 33 тыс.
Просмотров 2,5 тыс.
50% 1

Опубликовано:

 

25 авг 2024

Поделиться:

Ссылка:

Скачать:

Готовим ссылку...

Добавить в:

Мой плейлист
Посмотреть позже
Комментарии : 1   
@saravanashivam723
@saravanashivam723 2 года назад
எற்றான் மறக்கேன் எழுமைக்கும் எம்பெரு மானையே உற்றாய் என்றுன்னையே உள்குகின் றேன்உணர்ந் துள்ளத்தால் புற்றா டரவா புக்கொளி யூரவி நாசியே பற்றாக வாழ்வேன் பசுபதி யேபர மேட்டியே. 1 வழிபோவார் தம்மோடும் வந்துடன் கூடிய மாணிநீ ஒழிவ தழகோ சொல்லாய் அருளோங்கு சடையானே பொழிலாருஞ் சோலைப் புக்கொளி யூரிற் குளத்திடை இழியாக் குளித்த மாணிஎன் னைக்கிறி செய்ததே. 2 எங்கேனும் போகினும் எம்பெரு மானை நினைந்தக்கால் கொங்கே புகினுங் கூறைகொண் டாறலைப் பார்இலை பொங்கா டரவா புக்கொளி யூரவி நாசியே எங்கோ னேஉனை வேண்டிக்கொள் வேன்பிற வாமையே. 3 உரைப்பார் உரைஉகந் துள்கவல் லார்தங்கள் உச்சியாய் அரைக்கா டரவா ஆதியும் அந்தமும் ஆயினாய் புரைக்காடு சோலைப் புக்கொளி யூரவி நாசியே கரைக்கால் முதலையைப் பிள்ளை தரச்சொல்லு காலனையே. 4 அரங்காவ தெல்லா மாயிடு காடது அன்றியும் சரங்கோலை வாங்கி வரிசிலை நாணியிற் சந்தித்துப் புரங்கோட எய்தாய் புக்கொளி யூரவி நாசியே குரங்காடு சோலைக் கோயில்கொண் டகுழைக் காதனே. 5 நாத்தா னும்உனைப் பாடல்அன் றிநவி லாதெனாச் சோத்தென்று தேவர் தொழநின்ற சுந்தரச் சோதியாய் பூத்தாழ் சடையாய் புக்கொளி யூரவி நாசியே கூத்தா உனக்குநான் ஆட்பட்ட குற்றமுங் குற்றமே. 6 மந்தி கடுவனுக் குண்பழம் நாடி மலைப்புறம் சந்திகள் தோறுஞ்சலபுட்பம் இட்டு வழிபடப் புந்தி உறைவாய் புக்கொளி யூரவி நாசியே நந்தி உனைவேண்டிக் கொள்வேன் நரகம் புகாமையே. 7 பேணா தொழிந்தேன் உன்னைஅல் லாற்பிற தேவரைக் காணா தொழிந்தேன் காட்டுதி யேலின்னங் காண்பன்நான் பூணாண் அரவா புக்கொளி யூரவி நாசியே காணாத கண்கள் காட்டவல் லகறைக் கண்டனே. 8 நள்ளாறு தெள்ளா றரத்துறை வாய்எங்கள் நம்பனே வெள்ளாடை வேண்டாய் வேங்கையின் தோலை விரும்பினாய் புள்ளேறு சோலைப் புக்கொளி யூரிற் குளத்திடை உள்ளாடப் புக்க மாணியென் னைக்கிறி செய்ததே. 9 நீரேற ஏறுநிமிர் புன்சடை நின்மல மூர்த்தியைப் போரேற தேறியைப் புக்கொளி யூரவி நாசியைக் காரேறு கண்டனைத் தொண்டன் ஆரூரன் கருதிய சீரேறு பாடல்கள் செப்பவல் லார்க்கில்லை துன்பமே. 10
Далее
А ВЫ УМЕЕТЕ ПЛАВАТЬ?? #shorts
00:21
Просмотров 584 тыс.
Sotrunai Vedhiyan
11:10
Просмотров 147 тыс.