Тёмный

ஆழ்வாரின் திருக்குடந்தை சரணாகதி. 

srirangam annanswamy
Подписаться 1,2 тыс.
Просмотров 16 тыс.
50% 1

ஸ்ரீ. உ. வே. வேளுக்குடி கிருஷ்ணன் ஸ்வாமி
ஆழ்வாரின் திருக்குடந்தை சரணாகதி.
• " ஆழ்வார் அருளும் பிரஹ...

Опубликовано:

 

12 сен 2024

Поделиться:

Ссылка:

Скачать:

Готовим ссылку...

Добавить в:

Мой плейлист
Посмотреть позже
Комментарии : 36   
@yuvvrajbjp7732
@yuvvrajbjp7732 2 месяца назад
🙏 ஸ்ரீமதே ராமானுஜாய நமஹ 🙏 ஸ்ரீமத் வரவரமுநயே நமஹ 🙏 ஆச்சார்யார் திருவடிகளே சரணம் 🙏அடியேன் யதிராஜ ராமானுஜ தாசன் 🙏
@sumathikrishnan7689
@sumathikrishnan7689 10 месяцев назад
அருமை அடியேன் பாக்கியம்
@suchitranimbalkar318
@suchitranimbalkar318 10 месяцев назад
Pranam. Adiyen. Srimathe Ramanujaya Namaha.
@ramalingame6576
@ramalingame6576 10 месяцев назад
Om namo bagavadhe vasudevaya fini
@geethabashyam1175
@geethabashyam1175 Месяц назад
அற்புதம்
@kuppuswamyvenkatakrishnan8751
@kuppuswamyvenkatakrishnan8751 9 месяцев назад
Alwar tiruvadigale saranam
@KRISHNAMURTHY-fs4ic
@KRISHNAMURTHY-fs4ic Месяц назад
Namaskar Guruji
@paalmuruganantham8768
@paalmuruganantham8768 11 месяцев назад
💯 lakh croer Trillion Vanakkam 🙏🙏 Vanakkam by Paal Muruganantham Palakkad Kerala India world 🌎🌍
@perumals1283
@perumals1283 11 месяцев назад
ஆச்சாரியர்ஸ்வாமிகள்திருவடிகளேசரணம்.
@manik1179
@manik1179 11 месяцев назад
அடியேன் 🌹🌹🌹
@venkateshr3634
@venkateshr3634 11 месяцев назад
Dhanyosmi Swami
@perumals1283
@perumals1283 11 месяцев назад
ஶ்ரீமதேராமாநுஜாயநம:ஶ்ரீமதேநிகமாந்தமஹாதேசிகாயநம:
@malathynarayanan6078
@malathynarayanan6078 11 месяцев назад
முதல் பகுதி - பாகம் - 1 அவதாரிகை - ஆழவாரின் திருக்குடந்தை சரணாக தி என்ற தலைப்பில் ஞான குரு வேளுக்குடி ஸ்ரீ கிருஷ்ணன் ஸ்வாமிகள் அத்புதமாய் ஆழ்வாரின் சரணாகதி காரணத்தை முன்வைத்ததிலிருந்து சில - ஸ்ரிய பதியான ஸர்வேஸ்வரனால் ஜகத் உத்தாரண விஷயமாய் 10 ஆழ்வார்கள் பலஆச்சார்யர்களும் பிறப்பிக்கப்பட்டனர் அதில் இறுதியாய் ஸ்வாமி மணவாள மா முனிகள் அவதரித்தார். அதில் அவருடைய அஷ்டதிக் கஜங்களாக கொண்டாடப்படும் அவர்களிலே திருவரங்க செல்வத்தை ரக்ஷித்தவர்களில் முதலியாண்டான் திருவம்சத்தில் அவதரித்த கோயில் அண்ணன் ஸ்வாமி கன்னி பூரட்டாதி 634 ஆகும். இவரின் தனியனான ஸகல வேதாந்த சாரார்த்த பூர்ணாதயம் எனதுவங்கும் இவரின் தனியனை சமர்ப்பித்து இதன் அர்த்தத்தையும் அருமையாய் விசேஷித்தார். இயற்பெயர் வரத நாராயணன் என்ற பெயர் கொண்டவராய் கோயில் அண்ணன் ஸ்லாமிகள்மாமுனிகள திருவடியை ஆஸ்ரயித்தவர்களில் ஒருவர். தலைப்பிலிருந்தே சில விஷயங்களை தெரிந்து கொள்ளலாம். எப்போது சரணாகதி இருக்கிறதோ பகவானை அடைய அது தான் சிறந்தவழி. ஸ்வாமி நம்மாழ்வார் என்று எங்கனம் சேர்த்து இருக்கிறதோ அவர் தான் ப்ரபன்ன ஜன கூட்டஸ்தராய் சரணாகதி புரிந்து கொண்டு நம்மையும் அனுஷ்டிக்க வைத்தார். திருக்குடந்தை சரணாகதி- கும்பகோணம் நோக்கி சரணாகதி அப்படித்தான் அல்லது ஆராமுதனை நோக்கி பண்ணினாராயெனில் ஒரு ஊரை பார்த்தா சரணாகதி பண்ணுவார். ஊர் நமக்கு மோக்ஷம் கொடுத்து விடுமா? நாம் எது வேண்டும் என்று கேட்பதை சைதன்யம் உடைய வர் ஞானம் உடையவர் தான் கொடுக்க முடியுமோ தவிர ஞானமே இல்லாதது ஊர். அப்போது அந்த ஊர் சரணாகதி கொடுக்குமா என்பதற்கு த்ருஷ்டாந்தமாய் மற்றொரு பாசுரம் விண்ணப்பித்தார் சமன் தகு வீடு தரும் தடம் குன்றமே. நம்மாழ்வார் திருவேங்கடவனை பார்த்து - ஒழிவில் காலமெல்லாம் ... தந்தைக்கே எனை கைங்கர்யத்தை பிரார்த்திக்கிறார். அப்போது வரிசையில் வரும் போது சமன் கொள் வீடு தரும் பகவானுடன் பரம சாம்யா பத்தி என்ற மோக்ஷம். திருவேங்கடமுடையான் என்று அவர் கூறவில்லை. தடங்குன்றம் திருவேங்கடமே அதை கொடுக்கும். அந்த பெருமானிடத்தில் சரணாகதி என்று சொல்வதை விட திவ்ய தேசத்து எம்பெருமானிடம் சரணாகதி என்பது முக்கியம். அதனால் தான் அதை விடாமல் சொல்கிறார்கள். பரரூபத்தில் சரணாகதி இல்லை. வியூகத்தில் சரணாகதி இல்லை. அந்தர்யாமித்துவத்- தில் சரணாகதி இல்லை. திவ்ய தேசத்தில் அதுவும் குறிப்பாக அர்ச்சாவதாரத்தில் தான் சரணாகதி என்று தெளிவாகிறது அர்ச்சாவதாரம் என்னும் போது திருவேங்கமுடையாளிடத்தில் என சொல்லலாம். திருவேங்கடத்தில் சரணாகதி என்று கூறும்போது திருவேங்கடமான திவ்ய தேச முக்கியத்துவம் தெரியாமல் போய்விடும். அவர் முக்கியமில்லை போலிருக்கு. அவர் குடிகொண்ட தேசம் தான் முக்கியம் என தெளிவுபடும். அதற்குத்தான் இந்த தலைப்பில் திருகுடந்தையில் சரணாகதி என்று போட்டுருக்கிறார்கள் இந்த ஸ்வாமி பிள்ளை லோகம் ஸ்ரீவசன பூஷணத்தில் சாதிக்கும் போது திவ்ய தேசத்தில் அர்ச்சாவதாரத்தில் தான் சரணாகதி பண்ணனும்.6 ப்ரகடனங்கள் புருஷகார வைபவம் சாதனஸ்ய கௌரவம் தத்.... ஜகத் குடும்ச ஆஸ்ரயே என்று ஸ்ரீவசன பூஷணத்தின் பெருமைகளை சொல்லும் ஸ்லோகம். புருஷகார வைபவம் - அவள் புருஷ காரம் அல்லாது ஈஸ்வரன் காரியம் செய்யான். பிராட்டியை புருஷகாரமாய் பற்றினால் தான் பெருமான் அனுக்ரஹிப்பார். அடுத்து ப்ரகடனத்தில் சாதனஸ்ய கௌரவம் - பெருமான் தான் உபாயம் ஸ்ரீமன்நாராயணன் தான் சாதனமாய் உபாயமாக இருக்கிறார். அவர் எப்போது உபாயமோ (உபாயம் என்றால் சாதனம்) கர்மயோகம், ஞான யோகம் அது போல் பக்தியோகம் என 3உபாயங்கள்.ஹரித்தாம்..எனதுவங்கும் ப்ரமாணப்படி புருஷகார வைபவஸ்ய சாதனஸ்ய கௌரவம், பெருமான் தான் சாதனம் என்றார். அந்த சாதனத்தை எதற்காகவும் பற்றலாம் எங்கிருக்கும் பெருமானும் சாதனம். பரவாஸுதேவன் சாதனம். வியூக வாஸுதேவன் சாதனம். யார் வேண்டுமானால் இருக்கலாம். ஆனால் அர்ச்சாவதார பெருமாளைத் தான் சாதனமாய் பற்றனும் என வலியுறுத்தி கூறுகிறார் என்று கூறி இப்பகுதியை அருமையாய் நிறைவு செய்தார். ஸ்வாமிகளுக்கு ஜெய ஜெய க்ஷமிக்க பிரார்த்திக்கிறேன்.
@vasavisridharan5922
@vasavisridharan5922 11 месяцев назад
Thank you swami 🙏🙏🙏🙏
@mythilisheshadri8483
@mythilisheshadri8483 11 месяцев назад
Very very interesting and informative upanyasam Swamy Danyosmy
@malathynarayanan6078
@malathynarayanan6078 11 месяцев назад
பகுதி-2. பாகம் - 1 கடந்த பகுதியின் தொடர்ச்சியாய் தன் நிரதிசய ஞானத்துடன் ஞானகுரு வேளுக்குடி ஸ்ரீ கிருஷ்ணன் ஸ்வாமிகள் சிறப்புற உரைத்ததிலிருந்து சில - சரணாகதி என்பதாலேயே மற்ற அனைத்து உபாயங்களைக் காட்டிலும் இது தான் சிறந்த உபாயம் என அறிந்து கொள்வோமாக.. ஆக 3 விஷயங்களாக - நம்மாழ்வார் ப்ரபன்ன ஜன கூட்டஸ்தர், திருக்குடந்தை என்பதினாலே திவ்ய தேசத்தில் சரணாகதி ,சரணாகதி என்றும் நியாஸம் என்றும் ப்ரபத்தி என்றும் சொல் பகவத் சரண வர்ணம் - அவர் திருவடிகளே உபாயம் என்கிற அத்தியாவசியம். அது தான் சிறப்பான வழி. மோக்ஷோ உபாயம் தான் சிறந்த வழி என்று புரிந்து கொள்வோம். இனி பாசுரப்படி கூறுவதை பார்க்கலாம். ஸ்வாமி நம்மாழ்வார் 5 இடங்களில் சரணாகதி செய்தார். ஆச்சார்ய ஹ்ருதயத்தில் நாயனார் சாதிக்கும் போது அஸ்க்ருது ப்ரபத்தி சரணம் என எழுதினார். ப்ரபத்தி என்பது ஒரு முறை செய்ய வேண்டியது . கத்யத்ரயம் வாசிக்கும் போது இது தான் தத்வத்வயம் சதுர்தச் சாரோ பவதி .. ஒரு முறை சரணம் செய்யப்படுகிறது. ஏன் 2, 3, 8 தடவை பண்ணப்படாதா எனில் அது சகப்பனார் கண்ட ப்ரஹ்மாஸ்திரம் போல். ஆதிவிடும். ப்ரஹ்மாஸ்திரத்திற்கு குடு சொரணை அதிகம். ப்ரஹ்மாஸ்திரம் கட்டிவிட்டால் அதற்கு மேல் சணல் கயிறு, சங்கிலி என்று அதன் மேல் கட்டினால் அது தன்னை விடுவித்துக் கொள்ளும். அது விட்டு போய்விடும். ப்ரஹ்மாஸ்திரத்தின் மகிமையை அறியும் பொருட்டு ஹனுமனுக்கு ப்ரஹ்மாஸ்திரம் கட்டின விருத்தாந்தத்தை அருமையாய் நினைவு கூர்ந்தார். அதில் ப்ரஹ்மாஸ்திரம் விடுபட போது இந்த வானரம் எ தற்கு கட்டுப்பட்டது போல் வேஷமிட்டு கொண்டு இருக்கிறது என சாமர்த்தியசாலியான இந்திரஜித் யோசிப்பதையும் நினைவு கூர்ந்தார் பெருமானும் அப்படித்தான். தங்கத்தை உருக்கி தடம் போட்டு, தட்டான் போட்டு தட்டும் போதும் அது யாரோ ஒருவர் கழுத்தை அலங்கரிக்கும் என சந்தோஷப்பட்டுக் கொண்டு இருக்கும். அதன் எடையை சமநிலை படுத்த ஒரு குந்துமணியை அதன் எடைக்கு சமமாய் நிறுத்தும் போது தான் அது குந்து மணிக்கு சமமாய் தங்கம் எனஎன்னை ற்றுத்துகிறார்களே என சங்கடப்படுமாம். ஆக ஆழ்வார் 5 இடங்களில் சரணாகதி செயதார். சரணாகதி என்று ஒன்று செய்து விட்டால் இன்னொரு உபாயம் அதன் அருகில் கொண்டு வரக்கூடாது. இதன் அடியாய் ஸ்வாமி பிள்ளை லோகம் சாதிக்கும் போது அது தன்னை பொறாது. பிறரையும் பொறாது. ஒத்துக்காது. கர்மயோகம் பக்தியோகம் ஞானயோகம் உபாயம் என்றாலும் ஒத்துக்காது. சரணாகதி என்பது ப்ரஹ்மாஸ்திரம் போல். பெருமானை என்ன வேலை வேண்டுமானாலும் வாங்கலாம். ஆனால் அவரை மற்றவரோடு ஒப்பிட்டால் வருத்தப்படுவார். யாரை உபாயம் என்றாலும் பொறுத்து கொள்ளும். ஆனால் கர்ம ஞான பக்தி யோகம் உபாயம் என்றால் பொறுத்தே கொள்ளாது. கர்மா ஞான பக்தியோகம். ஸாத்ய உபாயம். பெருமான் திருவடி சித்த உபாயம். சரணாகதி என்று சொன்னால் பெருமாள் திருவடிகளே உபாயம் - சித்த உபாயம். த்வமேவ உபாய பூ தோ மே பவ இதி ப்ரார்த்தனாவதி சரணாகதி. இதில் ஒரு பகுதி ஞானம் - பகவான் தான் உபாயம். வேறு ஒன்றும் உபாயம் ஆகாது. அடுத்த பகுதி ப்ரார்த்தனை அடியேனுக்கு தேவரீரே உபாயமாக இருக்க வேண்டும் .இதன் அடியாய் லெளகீக திருஷ்டாந்தம் கூறி விளக்கினார். அநந்ய ஸாத்யே : ஸ்வாபிஷ்டே மஹா விஸ்வாச பூர்வகம் கண்ணி நுன் சிறுத்தாம்பில் நன்மையாய் மிக்க நான் மறையாளர்கள்...அத்தனாய் என்னை ஆளும் தன்மையாய் ஆகமற்றது விட்டால் தான் இது ஏற்கும். ததோ கோபாய காயாஞ்சன.. ப்ரபத்தி சரணாகதி சாஸ்திரம் படித்த பக்தர்கள் கைவிட்டதால் நம்மாழ்வார் என்னை பிடித்துக் கொண்டார். இது ஒரு ஞானம்.வானமாமலையில் சரணாகதி பண்ணுகிறார். திரு குடந்தையில் சரணாகதி பண்ணுகிறார் திருவல்ல வாழில் சரணாகதி பண்ணுகிறார். கிருஷ்ணா அவதாரத்தில் சரணாகதி பண்ணுகிறார். நிறைவாக திருவேங்கடத்தில் சரணாகதி பண்ணினார். ஸக்ரு தேவ ப்ரபன்னா... வ்ரதம்மம என்ற ராமசரம ஸ்லோகத்தை அனுசந்தித்து ஆழ்வார் 5 தடவை சரணாகதி பண்ணினார். வானமாமலையில் சரணாகதி பண்ணினார் . ரக்ஷிக்க வேண்டும் என்று ஏதோ சொல்லவில்லை. அவரும் செய்யலை. என்று கூறி இப்பகுதியை அருமையாய் நிறைவு செய்தார். ஸ்லாயிருக்கு ஜெய ஜெய க்ஷ மிக்க ப்ரார்த்திக்கிறேன்.
@suchitranimbalkar318
@suchitranimbalkar318 11 месяцев назад
Pranam. Adiyen. Srimathe Ramanujaya Namaha.
@sujibal
@sujibal 11 месяцев назад
Adiyen Swamigal thiruvadigalukku pallandu
@mkvenkat53
@mkvenkat53 11 месяцев назад
🙏🙏🙏🙏
@shyamaladd5316
@shyamaladd5316 11 месяцев назад
Harekrishna prabuji pranam 🙏🙏🙏🙏
@malathynarayanan6078
@malathynarayanan6078 11 месяцев назад
பகுதி - 4 - பாகம் - 3 கடந்த பகுதியின் தொடர்ச்சியாய் வேளுக்குடி ஸ்ரீ கிருஷ்ணன் ஸ்லாமிகள் உரைத்ததிலிருந்து சில - ஹனுமனு நீ எனக்காக ஒரு தடவை போய் நீராமனை வணங்கு. 10 மாதமாய் ராமன் என்ன பண்ணினார். என கேளு.ராமனுக்கு எந்த சக்தி இல்லை என 10 மாதம் தள்ளினார்? மாமியாரை கொண்டாடினாள் சீதை என் மாமியார் எதற்காக தெரியுமா ராமனை பெற்றாள்? என்று வினவி இப்பகுதியை அத்புதமாய் நிறைவு செய்தார். ஸ்வாமிகளுக்கு ஜெய ஜெய க்ஷமிக்க பிரார்த்திக்கிறேன்.
@malathynarayanan6078
@malathynarayanan6078 11 месяцев назад
நிறைவுப் பகுதி - பாகம் - 1 கடந்த பகுதியின் தொடர்ச்சியாய் ஆழ்வாரின் திருக்குடந்தை சரணாகதியை அருமையாய் ஞானமயமான வேளுக்குடி ஸ்ரீ கிருஷ்ணன் ஸ்வாமிகள் சாதித்ததிலிருந்து சில - உலகமே வாழனும் என்பதற்காக என் மாமியார் பெற்றெடுத்தாள். அதில் ரக்ஷிக்க வேண்டிய மொத்த உலகத்திற்குள்ளே இந்த சீதை விடுபட்டு போனாளா என்பதை நான் கேட்டதாக கேளு என்று ஹனுமனிடம் சொல்லி அனுப்பினாள் சீதை. தம்மமாக்கே... ராமா சௌக்கியமா என்று கேள். சீதை உன்னை பார்த்து செளக்கியமா என்று கேட்கச் சொன்னாள் ஏன் கேட்க சொன்னாள் என்றால் உலகத்தையே காப்பாற்றும் பிள்ளையை பெற்றவள் இந்த ஒருத்தியை மட்டும் விட்டு விட்டு மற்றவர்களை காப்பாற்றி கொண்டிருக்காரர் .நான் என்ன சொன்னாலும் பண்ண மாட்டார். ஆனால் அவர் அம்மா என்ன சொன்னாலும் மீற மாட்டார். அப்போ அம்மாவின் வார்த்தையை மீறுவது போல் தோற்றமளிக்கிறதே. என்னை ஏன் விட்டார் ?என்னை என் செய்கின்றார். ராமனும் ஏன் இதுவரை செய்யவில்லை காலதாமதம் செய்கின்றார் என்று கேட்டாள் என்னை என் செய்தேன். மற்ற யாரையும் தவிர்த்தாள் இதன் அடியாய் நம்பிள்ளை ஈட்டில் சாதிக்கும் போது யாவையாலும் கர்ம ஞான பக்தி யோகம் இல்லை யாவையாலும் ஒன்றும் குறை வேண்டின் . இந்தப்பாட்டு உயிர் பாட்டு ஸ்ரீவசன பூஷணத்தில். அர்ச்சாவதார பெருமையை சொல்லி விட்டார். இதில் ப்ரபத்தி பண்ணும் அதிகாரி மூவர். அர்ச்சாவதாரத்தில் 3 வகை. அந்த மூவர் யாரெனில- அக்ஞர், ஞானாதிகள், பக்தி பரவசர் அக்ஞர் - நாம தான் அக்ஞானத்தில் உழல்பவர்கள். அக்ஞானாதிகள் நம் போன்றவர்களுக்கு சரணாகதி தான். வழி. ஞானாதிகள் - ப்ரபன்னர்கள் பூர்வாச்சாரியார்கள் பெருமாள் ஸ்வதந்த்ரன் நான் அத்யந்த பரதந்த்ரன் என்ற ஸ்வரூப ஞானம். இந்த ஸ்வருப ஞானம் நன்றாக இருக்க இருக்க ஞானம் வளர்ந்து விட்டது ஞானாதிகள் என்று அர்த்தம். அடுத்தது பக்திபரவசர். ஆழ்வார்களின் நிலை. பக்தி பாரவஸ்யத்தில் இருந்த ஆழ்வார்கள். அத்யந்த பாரதந்திரியர்களாக இருப்பதால் அக்ஞானாதிகள் நம் போன்றவர்களுக்கு சரணாகதிதான் வழி. ஆனால் ஞானாதிகள் சரணாகதி செய்கிறார்கள் என்றால் ஸ்வரூப ஞானத்தாலே செய்கிறார்கள். ஆழ்வார்கள் பக்தி பாரவஸ்யத்தாலே ப்ரபன்னர்கள். பக்திக்கு வசப்பட்டவர்களுக்கு அதை எப்படி பண்ணனும் என்ற ஒழுங்குமுறை தெரியாது.நம்மாழ்வார் பத்துடை எளியவர்க்கு எளியவர் என்று கேட்டவுடன் மயக்கம் மூவாறு மாதம் மோஹித்தவர் அப்படி என்றால் 3 பேருக்கும் ஒவ்வொன்று இருக்கு. அக்ஞானம் ஞானம் கொஞ்சம் இருக்கு. ஸ்வரூப ஞானமும் எல்லோருக்கும் துளி உள்ளது. பக்திக்கு பாரவசப்பட்டு சரணாகதி மட்டுமே என்ற அளவிற்கு இல்லை. ஸ்ரீரங்கத்திற்கு ஒருவர் முஹீர்த்தம் என்று வருவார். இன்னொருவர் பெருமாளுக்கு உத்சவம் சேவித்து விட்டு போகலாம் என்று வந்தேன் என்பார். மற்றொருவர் இந்த இடத்தில் உறவுக்காரர் இருக்கார் என்று சொன்னார். இன்னொருத்தர் துலா காவிரி ஸ்னானத்திற்காக வந்தேன் என்றார். ஆக அவரும் பெருமானை சேவிப்பார். ஆக ஒவ்வொருவரும் எந்த மாற்றத்தை பற்றி கூற வந்தாரோ அது தான் ப்ரதான்யம். அது போல் நம்மை கேட்டால் அக்ஞானம் என்கிறோம். பூர்வாச்சாரியார்களை கேட்டால் ஸ்வரூப ஞானத்தால் என்பார்கள். ஆழ்வார்களை கேட்டால் பக்தி பாரவஸ்யத்தாலே என்பார்கள். பூர்வாச்சார்யர்கள் இடத்தில் அக்ஞானம் இருக்கனும். ஸ்வரூப ஞானம் இருக்கனும். பக்தி பாரவஸ்யம் இருக்கனும். ஆனால் அவர்களிடத்தில் மற்ற இரண்டையும் விட ஸ்வரூப ஞானம் கூட இருக்கனும். அவர்களுக்கு அக்ஞானம் உண்டா? அரும்ப தக்காரர்கள் கூறுகிறார்கள் - சாக்ஷாத்காரம் இல்லாதபடியால் உன்னை பார்க்கவும் தழுவனும் என்பதே ஆழ்வாரின் ஆசை. அக்ஞானம் ஒரு துளி மட்டும் ஒட்டியிருக்கும். பூர்வாச்சாரியார்களுக்கு, ஆச்சர்யர்கள் பக்தி பாரவஸ்யர்கள். என் நான் செய்தேன்? என்ற இடத்தில் இந்த 3 தான் உள்ளது. யாரே களை கண?. என்னை என் செய்கின்றாய்? என்று கூறி இப்பகுதியை அருமையாய் நிறைவு செய்தார். ஸ்வாமிகளுக்கு ஜெய ஜெய க்ஷமிக்க பிரார்த்திக்கிறேன்.
@malathynarayanan6078
@malathynarayanan6078 11 месяцев назад
முதல் பகுதி - பாகம் 3 கடந்த பகுதியின் தொடர்ச்சியாய் வேளுக்குடி ஸ்ரீ கிருஷ்ணன் ஸ்வாமிகள் அருமையாய் சிறப்பித்ததிலிருந்து சில - உபநிஷத்து கூறுகிறது- இதம் பூர்ணம் அதம் பூர்ணம், பூர்ணா பூர்ண முத்ருஜ்யதே.பூர்ணஸ்ய பூர்ண மாதாய பூர்ண மிடுவாய வசிஷ்ட தே. ஸர்வம் பூர்ணம் ஸஹேஹ. அங்கிருந்து அது பூர்ணம். அங்கிருந்து அது பூர்ணம். அங்கிருந்து அது பூர்ணம் கடைசியில்அதுவே பூர்ணம். பூர்ண குணங்களால் நிறைந்தவர். என்ன தான் பரவாஸுதேவனின் குணங்கள் பூர்த்தியாக இருக்குமேயானாலும் செளலப்யம் என்ற குணம் பூர்த்தியா கலை. அது அர்ச்சாவதாரத்தில் மட்டும் தான் பார்க்க முடியும். ராமாவதாரத்திலும் திருஷ்ணாவதாரத்திலும் அவர் தனக்கு வேண்டியவரிடத்தில் காட்டினாரே தவிர எல்லோருக்கும் காண்பிப்த்தாரா என்று தெரியாது. அந்தர்யாமி பூர்ணம். ஆனால் அர்ச்சாவதாரத்தில் தான் இன்னார் இணையார் என்று வித்தியாசம் இல்லாமல் காட்டிற்கும் வானரத்திற்கும் வேடர்களுக்கும் திருவேங்கடத்திலும் தென்னாடும் வடநாடும் தொடை நின்ன திருவரங்களில் இத்திவ்ய தேசத்திலும் குடில் குஞ்சே ஷீ ரங்கேஸ்வர ஷிலாதியு பூயதே... என பராசரபட்டர் சாதித்தபடி சோலையில் இருக்கார். கடற்கரையில் இருக்கார். வீட்டுமாடியில் இருக்கிறார். மாடியில் இருக்கார். எங்கும் இருக்கிறார். அதை நினைத்து நினைத்து அவனுக்கு சௌலப்யம் பூர்ணம் என்று தோன்றுகிறது ஆக எங்கு செளலபயம் பூர்ணமாய் காணப்படுகிறதோ அங்கு தான் சரணாகதி செய்ய முடியும் . ஆக சரணாகதி என்றாலே அது அர்ச்சாவதாரத்தில் என்று தெரிந்து விட்டது. ஸ்லாமி நம்மாழ்வாரின் சரணாகதி என்பதினால் ஸ்லாமி நம்மாழ்வார் ப்ரபன்ன ஜன கூட்டஸ்தர் என அறிந்து விட்டோம் என்று கூறி இப்பகுதியை அருமையாய் நிறைவு செய்தார். ஸ்லாமிகளுக்கு பல்லாண்டு பல்லாண்டு என பிரார்த்திக்கிறேன். க்ஷமிக்க பிரார்த்திக்கிறேன்.
@malathynarayanan6078
@malathynarayanan6078 11 месяцев назад
பகுதி - 4பாகம் - ௨ கடந்த பகுதியின் தொடர்ச்சியாய் தன் நிரதிசய ஞானத்தோடு வேளுக்குடி ஸ்ரீ கிருஷ்ணன் ஸ்வாமிகள் சரணாகதி தத்துவத்தை உரைத்ததிலிருந்து சில - வளருவது என்றால் தூங்குவது என அர்த்தம். நீ தூங்கும் போது மலர்கிறது. நீ தூங்கும் போது பூக்கும் அதிகாரி நான் இல்லை உன் கண் என்ற தாமரை மலரவில்லை. அதனால் நான் மலரலை என்கிறார் ஆழ்வார் என சாதித்தார். நீ முழித்தால் தான் நான் முழிப்பேன் என சொல்கிறார். அம்மான் மலர்க்கண் மலர்கின்றாயே என் நான் செய்கேனே. நான் ப்ரபன்னன் . நீ மலர்ந்தால் தான் நான் மலர முடியும். அதை தெளிவுபடுத்த தான் அடுத்த பாசுரம். என் நான் செய்கேன் ? யாரே களை கண் என்னை என் செய்கின்றாய்.உன்னாலல்லால் யாவராலும் குறை வேண்டேன்..... தேவரீர் திருவடியை பிடித்து சொல்லனும். நான் என்ன பண்ணுவேன்? யாரே களை கண் உன்னை தவிர வேறு யாராவதா? எனக்கு நானே காப்பாளன் என நினைக்கிறாயா ? அல்லது எனக்கு வேறு காப்பாளன் இருக்கிறார் என நினைக்கிறாயா? இந்த 2ம் தான் சாமான்யமாய் உலகத்தில் நிலவும். நம்மை நாமே காப்பாற்றிக்கலாம் அல்லது வேறு யாராவது காப்பாற்றலாம். ஆழ்வார் இந்த இரண்டும் நடவாது என்கிறார். இதில் நான் செய்ய என்ன இருக்கு? யாரே களை கண். உன்னைத் தவிர வேறு ரக்ஷகன் யார் இருக்கிறார்கள்? நாளைக்கு பண்ணலாம் என்று காத்துக் கொண்டு இருக்கிறாயா? இன்று பண்ணப் போகிறாயா? நாளை பண்ணப் போகிறாயா? உபாயாந்தரத்திற்கு வழி காட்டுவாயா? அல்லது நீயே உபாயமாய் இருப்பாயா? என்ன பண்ணுவதாக உத்தேசம் என தெரியலை? இந்த 3ல் என்ன சொல்கிறார் என பார்ப்போம். இதன் அர்த்தத்தை ரஸமாய் நம்பிள்ளை ஈட்டில் சாதிக்கிறார். என் நான் செய்கேன் என்று சொல்வதினால் என்னால் ஆகாது என்று கூறுகிறார் ஆழ்வார். யாரே களை கண் மற்ற யாராலும் ஆகாது என தவிர்க்கிறார். என்னை என் செய்கின்றாய்? என்பதினால் நீயே வேறு உபாயத்தை காட்டி என்னை தவிர்க்கக்கூடாது. பிறத்தியாரும் எனக்கு ஆளில்லை. நீயும் வேறு உபாயத்தை பண்ணுகிறேன் என்று காட்டக் கூடாது. சீதாதேவி அசோக வனத்தில் சிறைப்பட்டு இருந்தாள். அப்போது ஹனுமன் நான் உன்னை முதுகில் சுமந்து கொண்டு போய் விடுகிறேன் என்றார். அதற்கு சீதை தன்னைத்தானே ரக்ஷிப்பதாய் சொன்னேனா ? இல்லை மாட்டேன் என்று கூறிவிட்டாள். அதற்கு சீதை சொல்லினால் சுடுவேன். அது தூயவனின் மாசற்ற வில்லுக்கு மாசு என்று அஞ்சினேன். என்னுடைய சொல்லால் எப்போதும் இவனை பார்த்து பஸ் மீப வ நட்டோ பவ என பஸ்பமாயோ நஷ்டமாய் போ என்றோ கற்புக்கனலால் எரித்ததில்லை.. உன் வாலில் இருக்கும் நெருப்பு சுட வேண்டாம் என்று சொன்ளது அவனை சுடனும் என்று சொல்ல எத்தனை நேரம் பிடிக்கப்போகிறது? வாலில் நெருப்பு அக்னி தகிக்காமல் சீதமாய் குளிர்ச்சியாய் இருக்கட்டும் என்று சொன்ன எனக்கு நஷ்டமாகட்டும் என்று அவனுக்கு சொல்ல எத்தனை மணி நேரம் பிடிக்கும். என் கையை எதிர்பார்க்க மாட்டேன். ராமன் வர வேண்டும். சரக் கூட்டத்தால் மூட வேண்டும். அது தான். என்னுடைய சீதை தன்கையை எதிர்பார்த்து இருந்ததில்லை. அதற்குத்தான் ஹனுமன் முதுகில் சுமந்து கிஷ்கிந்தையில் விடுகிறேன் என்று சொன்னதும் மறுத்து விட்டாள். ஒரு ராக்ஷஸன் சீதையை இக்கரையிலிருந்து அக்கரைக்கு கொண்டு போய் விட்டானாம். ஒரு குரங்கு அக்கரையிலிருந்து இக்கரைக்கு கொண்டு போய்விட்டது. அப்போது ராமனுக்கு என்ன வேலை? அவர் தான் கைப்பிடித்த கணவன். நீயும் ரக்ஷகன் அல்லன். அநிஷ்டத்தை தொலைத்து இஷ்டத்தை கொடுக்கும் ரக்ஷகன் யார்? யார் போக்குவது? நானா போக்கிப்பேன் வேறு யாராவது போக்கப் போகிறாரா? அல்லது என்னை வேறு யாருக்காவது காட்டெதாக உள்ளாயா? கண்ணன் இப்படியும் சொல்லியிருந்தார். நீ ஏதாவது 9வது அத்தியாயமாய் சொல்லி விட்டால் என்ன செய்வது என ஆழ்வார் வினவினார். மம்மனாதிபவ... 9வது அத்தியாயப்படி என்றாலே பாதையை மாற்றி விடுவார் என அர்த்தம் நெறிகாட்டி நீக்கு தயோ கர்ம ஞான பக்தி யோகத்தை காண்பிப்பாயா? அதற்கே என்னை என் செய்கின்றாய் என்றார். 18வது அத்தியாயத்தில் ஸர்வதர்மான் பரித்யஜ்ய ... மோக்ஷயிஷ்யாமி(சித்த உபாயம்) மாஸீ ஸஹ.புரு என்றால் நீ பண்ணு என்று அர்த்தம். சாத்ய உபாயம். என்னை மற்றொரு இடத்தில் காட்டில் விடாதே. இதன் அடியாய் சீதை கேட்டாள் - கெளசல்யா லோக பர்த்தாரம்.. மனஸ்வினி... ஹனுமனு நீ ஒரு தடவை போய் ராமனை சேவியும். எனக்காக ஒரு தடவை சேவி. என்பதை லெளகீக திருஷ்டாந்தத்துடன் விளக்கினார் என்று கூறி இப்பகுதியை அருமையாய் நிறைவு செய்தார். ஸ்வாமிகளுக்கு ஜெய ஜெய க்ஷமிக்க பிரார்த்திக்கிறேன்.
@sureka0radha
@sureka0radha 11 месяцев назад
🙏🙏🙏
@ChandraSekaran-be3sl
@ChandraSekaran-be3sl 11 месяцев назад
அடியேன் தாஸாநுதாஸன்
@ramanivaikuntam8819
@ramanivaikuntam8819 11 месяцев назад
Ramanujaya namaha
@lalithad9424
@lalithad9424 11 месяцев назад
நமஸ்காரம் உங்களுடைய யாத்திரையில் நாங்களும் கலந்துகொள்ள ஆவல் உள்ளது எப்படி?
@parvathid4001
@parvathid4001 11 месяцев назад
பகவான் ஶ்ரீ திருக்குடந்தை ஆராவமுதப் பெருமாள் திருவடிகளுக்கும், ஸ்வாமி ஶ்ரீ நம்மாழ்வார் திருவடிகளுக்கும், ஸ்வாமிகளின் திருவடிகளுக்கும் பல்லாண்டு பல்லாண்டு பல்லாண்டு 🙏🙏🙏🙏🙏
@malathynarayanan6078
@malathynarayanan6078 11 месяцев назад
பகுதி - 2. பாகம் 2 கடந்த பகுதியின் தொடர்ச்சியாய் வேளுக்குடி ஸ்ரீ கிருஷ்ணன் ஸ்வாமிகள் சரணாகதி தத்துவத்தின் அர்த்தத்தை வர்ஷித்ததிலிருந்து சில - ஆழ்வார் பிறந்தவாறு கிருஷ்ணா அவதாரத்தில் சரணாகதி பண்ணினார். அதுவும் பலிக்கலை. பின் திருவேங்கடத்தில் சரணாகதி பண்ணினார். எ தற்கு 2வது இடத்தில் சரணாகதி பண்ணினார்? போவதற்கு உண்டான சக்தி அவருக்கு வேண்டுமே. நோற்ற நோன்பிலே.பாசுரப்படி அவர் திருவடியை வேரற்று மரம் போல் சரணாகதி செய்திருக்கிறார். அங்குத்தேன் அல்லேன் . இங்குத்தேன் அல்லேன். அங்கும் இருக்க பிடிக்கலை. இங்கும் இருக்க பிடிக்கலை . ஆத்யாத்மிக ஆதி தைவத ஆதி பெளதிக என தாபத்ரயம் படுத்தும் பாடு. ரொம்ப படுகிறேன் என ஒலமிட்டு சரணாகதி பண்ணினார். உண்மை என்ன என்றால் ஆழ்வார் புளியமரத்தை விட்டு காலடி எடுத்து வைத்ததில்லை. ஏனைய திவ்ய தேச பெருமாள் என்னை பாடு என்று பாட்டு வாங்கிக் கொண்டு போனார்கள். ஆனால் மனசால போக வேண்டும் அல்லவா? இங்கேயே வாயார சரணாகதி அனுஷ்டித்தார். திருக்குடந்தை போக சக்தி வேண்டும் அல்லவா அந்த சக்தி இருந்த தா என 2வது கேள்வி. இதைத்தான் நம்பிள்ளை ஈட்டில சாதித்தார். கால பேதத்தாலும்பலன் கிட்டும். தேச பேதத்தாலும் பலன் கிட்டும். தேச பே தததால் ஒருவருக்கு (திருமங்கை ஆழ்வாருக்கு)பலன் கிட்டிற்று. கால பேதத்தினால் பலன் கிட்டியது பரதனுக்கு. பரதனுக்குபலன் கிட்டியது ஒரு மாதிரி. திருமங்கை ஆழ்வார் திருவரங்க பெருமானிடம் வந்து தான் மோக்ஷத்தை ப்ரார்த்தித்தார். திருநெடுந்தாண்டகம் அனுக்ரஹித்து அதை அனுசந்தானம் செய்து மோக்ஷம் கேட்டார். தரேன் என்றார் பெருமாள். ஆனால் ஆழ்வாரை திருக்குறுங்குடிக்கு வரக் கோரினார். இங்கிருந்து திருக்குருங்குடிக்கு போய் அங்கிருந்து தான் வைகுந்தத்திற்கு - பரமபதத்திற்கு ஏளினார். இது தேச பேதத்தில் கொடுத்தது. ஏன் ௨வது தடவை கொடுத்தார் என நாம் கேள்வி கேட்க முடியாது அடுத்து கால பேதம் இன்னிக்கு கேட்ட பரதாழ்வானுக்கு 14 வருஷங்கள் கழித்து கொடுத்தாரே. நான் அனைவரையும் அழைத்துக கொண்டு வந்திருக்கேன். என் பேச்சுக்கு நீ செவி சாய்க்காமல் போனாலும் போகலாம். அதனால் ஆடு மாடு .. தாய்மார்கள் அனைவரையும் கூட்டிக்கொண்டு வந்திருக்கேன். சிஷ்டஸ் ச தாஸஸ் ச... தம்பி என்று நினைத்துக் கொண்டாலும் திரும்பி வா.தாஸன் என்று நினைத்துக் கொண்டாலும் தொண்டன் என்ற நினைத்து கொண்டாலும் திரும்பி வரனும் என ப்ரார்த்தித்தான்.நான் ராமனுக்கு தொண்டனாயிற்றே ஸ்வரூப விரோதம் நேர்ந்து விடுமோ என பரதனுக்கு பயம். இன்னென்று ராமன் திரும்ப வந்து நாட்டை ஆளனும். இதில் ஒரு கஷ்டத்தை ராமன் அப்பவே தீர்த்தார். இன்னொரு கஷ்டத்தை 14 வருஷம் கழித்து தீர்த்தார். அப்போதே கொடுத்தது தன் பாதுகையை பரதன் தலையில் அலங்கரித்ததன் விளைவாய் பரதனுக்கு ஸ்வாதந்திரியம் இல்லை என்று நிரூபித்தார். தொண்டன் என்று முடிந்து போய் விட்டது. அநிஷ்டம் முதலில் தொலையனும். (தான் ராஜா என்ற பெயர்) நல்லது தானே நடக்கும். இஷ்டத்திற்கு 14 வருஷம் கழித்து வரேன் என்றார். ராமா நீ அப்படி வரவில்லை என்றால் நெருப்பில் ப்ரவேசம் பண்ணுவேன் என பரதன் ப்ரதிக்ஞை பண்ண ஒப்புக் கொண்டார் ராமன். நாமாக இருந்தால் உடனே வர வேண்டும் என கொடிபிடிப்போம். ஆக கால பேதத்தால் பரதனுக்கு கிட்டியது. ஆனால் நம்மாழ்வாருக்கு பெருமான் "நீர் வந்திருக்கிறீர் ஆனால் மந்திர ஆலோசனை மண்டபத்திற்கு அல்லவா வந்திருக்கிறீர். நாளை சாயங்காலம் வசந்த உத்சவ மண்டபத்திற்கு வருவேன். அது தான் திருக் குடந்தை. காவிரிக் கரையில் செளகரியமாய் சயனித்து இருக்கேன். நீர் அங்கு வாரும் என்று சொல்ல ஆழ்வாரும் அங்கு விரைகிறார். இது பெருமானின் உரிமை என்று ஆழ்வாருக்கு தெரியும். அவர் ஸர்வேஸ்வரன் சொன்னபடி போக வேண்டும். பின் மலையாள திவ்யதேசத்திற்கு வா என்றார். மானே நோக்கு.. பாசுரப்படி சரணாகதி திருவல்லவாழ் பெருமாளிடம் அனுஷ்டித்தார். அதன் பின் பிறந்தவாரும் வளர்ந்த வாரும் என கிருஷ்ணா அவதாரத்தில் சரணாகதி. ஆனால் மோக்ஷ உபாயமாய் பண்ணவில்லை. கொஞ்சம் தெம்பாக நின்று கை கால் நடுங்காமல் சரணாகதி செய்ய பிரார்த்தித்தார். காலாழி நீ கேட்டும் ... என்ற பாசுரப்படி ரொம்ப உழன்று போயிருந்தேன். தெம்பாக சேவிக்க சரணாகதி ஆழ்வார் பண்ணினார். சரணாகதி எந்த நோக்கத்திற்கும் செய்யலாம் தஎன்றுஇப்பகுதியை நிறைவு செய்தார். ஸ்வாமிகளுக்கு ஜெய ஜெய க்ஷமிக்க பிரார்த்திக்கிறேன்.
@malathynarayanan6078
@malathynarayanan6078 11 месяцев назад
பகுதி - ௨ பாகம் 3 கடந்த பகுதியின் தொடர்ச்சியாய் வேளுக்குடி ஸ்ரீகிருஷ்ணன் ஸ்வாமிகள் அத்புதமாய் சாதித்ததிலிருந்து - ஆழ்வாரை பெருமான் மலையாள திவ்ய தேசத்திற்கு வா என்றார்.. மானை நோக்கு பாசுரப்படி சரணாகதி திருவல்லவாழ் பெருமானிடம் அனுஷ்டித்தார். அதன் பின் பிறந்தவாரும் வளர்ந்த வாரும் என்று கிருஷ்ணாவதாரத்தில் சரணாகதி. ஆனால் மோக்ஷ உபாயமில்லை. கொஞ்சம் தெம்பாக நின்று கைகால் நடுங்காமல் சரணாகதி செய்ய பிரார்த்தித்தார் காலாழி நீ கேட்டும் ...என்ற பாசுரப்படி ரொம்ப உழன்று போயிருந்தார். தெம்பாக உன்னை சேவிக்க சரணாகதி ஆழ்வார் பண்ணினார். சரணாகதி எந்த நோக்கததிற்கும் செய்யலாம் என்பதற்கு சான்றாய் திரெளபதி வஸ்திரம் வேண்டும் என கண்ணனை ப்ரார்த்தித்தாள். உத்தரை தன் கர்ப்பம் நிலைத்து நிற்க வேண்டினாள். தர்மபுத்திரனோ தனக்கு ராஜ்யம் வேண்டும் என்பதற்காக சரணாகதிகோரினான். விபீஷணன் ராம கைங்கர்யத்தை ப்ரார்த்தித்து கேட்டான். ஆக எந்த பலத்திற்கும் சரணாகதி பண்ணலாம். அது போல் இங்கு ஆழ்வார் சரணாகதி பண்ணியது 4-7, 5.10, 6.1.. அகலகில்லேன் இறையுமென்று ... உன் அடிக்கீழ் அமர்ந்து புகுந்தேனே எனக் கூற அந்த சரணாகதி பலித்தது. மேற்கொண்டு முக்தி அடைந்தார் என்று கொள்க என்று கூறி அத்புதமாய் இப்பகுதியை நிறைவு செய்தார். ஸ்வாமிகளுக்கு ஜெய ஜெய க்ஷமிக்க பிரார்த்திக்கிறேன்.
@BalajiBalaji-pp6bs
@BalajiBalaji-pp6bs 11 месяцев назад
கோயில் அண்ணன் திருவடிகளே சரணம்
@malathynarayanan6078
@malathynarayanan6078 11 месяцев назад
பகுதி 3 கடந்த பகுதியின் தொடர்ச்சியாய் வேளுக்குடி ஸ்ரீகிருஷ்ணன் ஸ்வாமிகள் அத்புதமாய் உபன்யஸித்ததிலிருந்து- திருக்குடந்தை சரணாகதி 2வது ஆயிற்றே. இரண்டாவது பண்ணலாமா எனில் தேச பேதத்தாலும் கால பேதத்தாலும் செய்யலாம் என சாதித்தார். அவருக்கு அப்படி சக்தி இருந்ததா என்றால் ஆழ்வார் சக்தி இழந்தது உண்மைதான். ஆனாலும் நீச்சல் குளத்தில நீந்தி களைப்பு அடைந்தவனுக்கு ஒரு தெப்பக் கட்டை கிடைத்தால் எங்கனம் உற்சாகமாய் இருப்பானோ அது போல் ஆழ்வார் தளர்ந்து போயிருக்கும் போது கொழு கொம்பாய் பிடித்துக் கொள்ள பெருமானின் அனுகிரஹகம் கிட்டிற்று. 5.7-ல் வானமாமலை 5.8 ல் திருக்குடந்தை . ஆறு எனக்கு நின்பாதமே சரண். இது தான் ஆறு - நின் பாதமே ஆறு. நின் திருவடியே உபாயம். (ஆகிஞ்சன்யம்) உபாயந்தர சம்பந்தத்தை தவிர்க்கிறேன். நின் பாதமே சரண்- ரக்ஷகமும் நீயே.(அநந்ய கதித்வம்) வேறு காப்பாளன் இல்லை. வேறு போக்கிடம் இல்லை. இந்த ஸ்வரும் ஞானம் தான் ஆழ்வாருக்கு கிட்டியது. இந்த ஞானத்தையே தெப்பக்கட்டையாக கொண்டு வானமாமலையிலிருந்து திருக்குடந்தைக்கு ஆழ்வார் வந்தார். இது கால பேதத்தால் தேசப் பேதத்தால் பலிக்கும். நாஸ்திகன் அல்லாத படியால் இங்கு பலிக்காவிட்டாலும் அங்கு பலிக்கும். ருச்சி குலையாது. விசுவாசம் குலையாது. இந்த சரணம் என்ற சப்தம் 3 அர்த்தத்தில் வரலாம். ப்ரதானமாய் சரணம் என்ற சப்தம் மோக்ஷ உபாயம் என்ற அர்த்தத்தில் வரும். எனது ஆவியும் உளதே... பரதன் போன போது எப்படி ராமன் அதரத்தை விரித்து வா என்று அழைத்தாமரா அது போல்என்று நினைத்தார் ஆழ்வார், ஆனால் மேலும் ஆழ்வாரை பக்குவமாக்க திருக்குடந்தை ஆறாமுதன் பேசவில்லை. கடைசியில் ராமன் முன்னோர் மொழிந்ததை தாண்டாமல் மீறாமல் இருக்கிறாயா என்று ராமன் கேள்வி கேட்கும் போது அதை சரிபடுத்தத் தான் நான் வந்தேன் என்றான் பரதன். மேலும் பரதன் நான் செய்த பாவம் தான் ராமன் காட்டிற்கு போனார் என்றாள். அக்ரூரர் போல் கண்ணனின் எதிரியான கம்சன் செஞ்சோற்று கடன் தீர்த்தவன் அவனிடம் முகம் மலர்ந்து ஆரத்தழுவி கண்ணன் பேசினாரே என்பது ஆழ்வார் திருவுள்ளம். ஆறா அமுதே பதிகம் மூலம் ஆழ்வார் சரணாகதி அனுஷ்டித்தார். உழலை என் பேய்ச்சி முலையுண்டு கழல் களவையே சரணாக கொண்டு. பெருமானே உபாயம். அவரே ப்ராப்யம். வானமாமலையில் - ஆகிஞ்சன்யம் முன்னிட்டு கொண்டு, திருக்குடந்தையில் அநந்ய கதித்துவம் முன்னிட்டு கொண்டு 2கையும் (அஞ்சலி முத்திரை) கூப்பிய வண்ணம், 2 காலையும் சேர்த்துக் கொண்டு வேறு புகல் இல்லை என சரணாகதி செய்தார். ஆறா அமுதே... அபரியாப்தா ம்ருதம் என சம்ஸ்கிருதத்தில் பெயர். ஆறாத அமுதம் எத்தனை தடவை சாப்பிட்டாலும் திருப்தி ஏற்படாது. எத்தனை நேரம் வேண்டுமானாலும் பெருமாளை அனுபவித்துக் கொண்டு இருக்கலாம். அளவிற்கு உட்பட்ட அமுதம் உலகத்து அமுதம். தெற்கிலிருந்து வந்தவரை வடக்கில் இருப்பவர் கேட்க, அபரியாப்த அமுதனை சேவித்து விட்டு வந்தோம் எனக் கூற, அவர் திரும்ப அவரை ஆறாஅமுதன் என ஆழ்வார் பாடினாரே என்று வினவ அந்த பெயரே வடக்கத்திகாரருக்கு போக்கியமாய் ஏற்பட அவர் திருக்குடந்தைக்கே குடிபுகுந்தார் என்றார். அந்த இனிமையை சொல்லி ஆழ்வார் தொடங்கியிருக்கிறார். ஆச்சார்யர்களும் இந்த காரணத்திற்காக சரணாகதி செய்தார்கள். நின் பால் அன்பாயே. சரீரமே அன்பாக இருந்தது. நீராய் அலைந்து கரைந்து உருக்குகின்ற நெடுமாலே நீராய் - என் உடல் நீர் பண்டமாய் உருகிற்று. சீரார் செந்நெல் கவரி வீசும் செழுநீர் திருக்குடந்தை என்பதை லெளகீக திருஷ்டாந்தத்துடன் விளக்கினார். ஏரார் கோலம் திகழக் கிடந்தாய். எழுப்பவே ஆழ்வாருக்கு மனசில்லை. பெருமான் அவ்வளவு அழகு .சில இடத்தில் நின்ற திருக்கோலம், சில கடத்தல் அமர்ந்த திருக்கோலம், சில இடத்தில் சயன திருக்கோலம் என்று இருந்தாலும் இந்த மூன்றில் ஏற்றம் சயனத் திருக்கோலத்திற்குத்தான் என அறுதியிட்டு இப்பகுதியை நிறைவு செய்தார். ஸ்வாமிகளுக்கு ஜெய ஜெய க்ஷமிக்க பிரார்த்திக்கிறேன்.
@malathynarayanan6078
@malathynarayanan6078 11 месяцев назад
நிறைவுப்பகுதி - நிறைவுபாகம் கடந்த பகுதியின் தொடர்ச்சியாய் வேளுக்குடி ஸ்ரீ கிருஷ்ணன் ஸ்வாமிகள் அத்புதமாய் உரைத்ததிலிருந்து - நானோஅக்ஞன். அசட்டன். உனக்கு ஞானசக்தியை நான் தானே கொடுத்தேன் என ஆழ்வாருக்கு பெருமாள் கேட்டார். மயர்வற மதிநலம் நீ கொடுத்திருக்கிறாய். நீ ஸ்வதந்திரன் நான் பரதந்திரன். அதனால் நீ தான் நடவடிக்கை எடுக்க வேண்டும். என்று ஸ்வரூப ஞானத்தோடு கேட்கிறார். நான் ஏன் பண்ணனும்? என் நான் செய்கேன்? ஸ்வரூப யாதாத்மய ஞானம். அடையப் போவது அவராக இருந்தால் நியாய தர்மம் பேசினால் ஆகுமா? நம்பெருமாளை சேவிக்க முடியுமா? வழி இல்லா வழியில் போவது. ஆழ்வார் கூறுகிறார். மயர்வற மதிநலம் என்று பாடினேனே. நீ பக்தி ரூபா வன்ன ஞானம் கொடுத்தாய். அந்த பக்திக்கு வசப்பட்டதால் என் நான செய்தேன்? என்னை என் செய்கின்றாய்? உன்னையல்லால் யாவரால் குறை வேண்டேன். அக்ஞானத்தில் ப்ரபத்தியும், ஞானாதிக்கத்தாலே ப்ரபத்தியும், பக்தி பாரவஸ்யத்தில் ப்ரபத்தியும் செய்தேன். உன்னால் அல்லால் யாவராலும் குறை வேண்டேன். சரணாகதி அர்த்தத்தை ஆத்ம ஸ்வருபம் புரிந்து கொண்டு பக்திக்கு பரவசப்பட்டு ஆழ்வார் பாடினார். என்னை அறியாயோ?உன்னை அறியாயோ? பிறரை அறியாயோ? ஆத்ம ஸ்வரூபம் பகவானுக்கு தெரியாதா? பிறத்தியார் ஸ்வரூபம் தெரியாது. உன்னை அறியாமோ? இப்போதே கொடுக்கும் சக்தி இருப்பதால் அவரே கொடுப்பார். உன்னை அல்லால் யாவரால் குறை வேண்டேன். தளராது உடல் என் ஆவி சரிந்து போகும் போது இணையாது உன் திருவடிகளை கெட்டியாக பிடிக்கும் பாக்கியத்தை கொடு. கண்ணார் மதில் சூழ் ஆழ்வாரின் உபாயம் - ஆறா முதன் தான் உபாயம் என்று வராஹ சரம ஸ்லோகத்தை அனுசந்தித்து உன் திருவடிகளை கெட்டியாக பிடிக்கும் பாக்யத்தை கொடு என்று இந்த பாசுரப்படி ஸ்வாமி பிள்ளை லோகாச்சார் சாதித்தார் என்று கூறி இந்த தலைப்பை நிறைவு செய்தார். ஆறா அமுதே பதிகத்தின் அர்த்தத்தை அருமையாய் அர்த்தித்து ஞானத்தின் உறைவிடமான யுக உபன்யாசகர் வேளுக்குடி ஸ்ரீகிருஷ்ணன் ஸ்வாமிகள் வாழி வாழி என்று பிரார்த்திக்கிறேன். ஸ்வாமிகளுக்கு ஜெய ஜெய க்ஷமிக்க பிரார்த்திக்கிறேன்.
Далее
Аушев, Путин, «пощечина»
00:56
Просмотров 803 тыс.
Мужа или парня
00:42
Просмотров 15 тыс.
Как подписать? 😂 #shorts
00:10
Просмотров 822 тыс.
உண்மை பக்தி எது ?
2:20:14
Просмотров 173 тыс.
Аушев, Путин, «пощечина»
00:56
Просмотров 803 тыс.