இந்த உலகம் சுய நலம் மிகுந்த மனிதர்களால் பிண்ணி பட்டுள்ளது தன் குடும்பம் தன் அரசியல் தன் மனைவியின் சுற்றம் என்ற ஓரு கோட்டில் வாழும் சிலருக்கு மத்தியில் தான் வாழ்ந்த ஊர். தன் உறவினர்கள் தன் சமூகத்தை பற்றிய அக்கறையை தன் திரை படங்களில் எடுத்துரைத்து நான் உங்கள் பக்கம் நிற்கின்றேன் என்று சொல்லும் அன்பு இயக்குனர் மாரி செல்வராஜ் அவர்களுக்கு என் பாராட்டுகள் யார் எப்படி சொன்னாலும் அதை விடுத்து தாங்கள் பயணிக்க வேண்டுகிறேன்
நீ உன் ஊரின் அடையாளம்,, பொறந்த ஊருக்கு பெருமையும், வளர்த்த நாட்டுக்கு புகழ் சேர்த்த உன்னை என்ன சொல்ல, அண்ணா 🙏வணங்குகிறேன், நிறைய இன்டெர்வியூ பார்த்து இருக்கேன் அதே செப்பல் தான் இது தான் நீங்க என்றும் பழமை மாறாத உன் பண்பு
இயக்குனர்கள் பா ரஞ்சித் மாரி செல்வராஜ் வெற்றி மாறன் போன்ற இயக்குனர்களளைநாம் கொண்டாடுவோம் இவ்வுலகில் நல்ல எண்ணம் கொண்ட மனிதர்கள் மட்டும் வாழவேண்டும் என்ற அவசியம் இல்லை. ஒரு காட்டில் கஒன்றஉண்ணஇகளஉம் இரையும் வாழுகின்றன இவ்வுலகில் நல்ல உணவு சங்கிலியின் கோட்பாடு ஆகும் இதை சில மனிதர்கள் புரிந்து கொள்ள வேண்டும் நாம் நம் இயக்குனர் மாரிசெல்வராஜ் பா ரஞ்சித் வெற்றி மாறன் போன்ற இயக்குனர்களை போற்றுவோம் மற்றவர்கள் எப்படி ஏறினால் அவர்களை புறந்தள்ளி நம் பயணத்தை மேற்கொண்டு வருவோம் பேரன்பு கொண்ட இயக்குனர்களை தமிழ் மக்கள் உங்கள் பக்கம்
அன்பு தமிழன் சகோதரர் மாரி செல்வராஜுக்கு வாழ்த்துக்கள்.... மேலும் பல வெற்றிகள் பெற வாழ்த்துகள்... இந்த வலி எல்லாத் தமிழர்களுக்கும் உண்டு...இந்த வலி வாழைக்கு மட்டுமல்ல.... நெல்லையைப் பொறுத்தவரை (இன்று நெல்லை, தூத்துக்குடி, விருதுநகர் , தென்காசி )... அந்த காலங்களில் குடும்பம் குடும்பமாக நெல் அறுத்து களத்தில் சேர்ப்பது... கரும்பு அறுபது.... பீடி சுற்றுவது.... தீப்பெட்டி தொழில்... பட்டாசு தொழில் என்று தமிழர்கள் எவ்வளவு இன்னல் பட்டார்கள் படுகிறார்கள் என்பது வேதனை... பட்டாசு தொழில் இன்றும் பலரை காவு வாங்குவது மிக வேதனை.... இதில் சில சுயநல அரசியல்வாதிகளால் சாதியப் பாகுபாடு வேறு. ஒரு பக்கம் என்றால் ... போதைக்கு அடிமையாக்கி மாண்டுபோவது இன்னொரு பக்கம் .. இன்னும் எத்தனையோ.... தமிழர்களுக்கு ஒரு மாரி செல்வராஜ் பத்தாது இன்னும் இன்னும் பல மாரி செல்வராஜ்கள் வேண்டும்.... அவர் அவர் இன்னல்களை உலக்குக்கு காட்ட.... வாழ்க தமிழ்.... வளர்க தமிழர்கள்....
இந்த பூர்வ குடி இந்த தமிழ் குடியின் வலிகளையும் மாண்புகளையும் வீழ்த்தப்பட்ட வஞ்சகங்களையும் பெருமைகளையும் பேசு உன்னால் வரும் தலைமுறைகள் வாழ்வில் வளம் பெறட்டும் கொண்டாடட்டும்
வாழ்த்துக்கள் அண்ணா..உங்கள் படைப்பு என்னை போன்ற எளியவின் வழிகளை படைப்பாக அமைந்தது... வாழ்த்துக்கள் அண்ணா...நீங்கள் பல்லாண்டு வாழ்க வளமுடன் வாழ்க...தேனியில் இருந்தது உன்னை வாழ்த்தும் அன்பு சகோதரன் ....
இந்த படம் மட்டும் வெற்றி பெறாமல் இருந்திருந்தால் தென் மாவட்டங்களில் நிறைய பேர் சந்தோசப்பட்டிருப்பார்கள் மாரியை தூற்றுவதற்கு கண்டென்ட் கிடைத்திருக்கும் எனக்கு தெரியும் சாதி படம் எடுத்ததனால் மக்கள் புறக்கனித்துவிட்டார்கள் என்று கூறி யு டியூப்பில் சுறுசுறுப்பாக செயல்பட்டிருப்பார்கள்
தென் மாவட்டங்கள் தென் மாவட்டங்கள்னு ஒட்டுமொத்த தென் மாவட்டத்தை தப்பான பின்பத்துக்குள்ள அடக்குறத நிறுத்துங்க. ஒட்டுமொத்த தென்மாவட்ட மக்களையும் நீங்க எல்லாம் இப்படி சொல்லி சொல்லி பண்ணி பண்ணி தென் பகுதி மக்களனா தப்பானவனு சொல்றாங்க. பெரிய மென்பொருள் நிறுவனத்தில பணிபுரியறப்போ கூட அந்த பையன் south போல பாத்து இருங்க பொண்ணுங்க பாத்து இருங்கன்னு சொல்றத கேக்குறப்போ வேலையில இருக்கணுமானு தோணுச்சு. தென்மாவட்டதுல எல்லா மக்களுக்குள்ளையும் அவ்வளவு இருக்கு. ஏங்க எங்களை ஒட்டுமொத்தமா தப்பா மட்டும் சொல்றிங்க. ஒரு கூட்டம் தப்பு பண்ணா தைரியமா அந்த கூட்டத்தோட பேர சொல்லுங்க மொத்தமா எங்க எல்லாரையும் தப்பா அடையாள படுத்தாதீங்க
சாதியை வெளிய சொல்லவே பயப்படும் கீழ்த்தட்டு மக்களுக்கு மத்தியில் தன் சமூகம் படும் வலியை வலியுறுத்த சொல்வது .....அவர் சமூக நீதிக்காக மன்றாடுகிறார். அவருடைய தைரியத்தை பாராட்டிய ஆக வேண்டும். பெண்களை ஒரு போதை பொருளாக காட்டி ,காலத்தையும் வன்முறையும் பெரிய ஆளாக காட்டும் டைரக்டர்கள் மத்தியில் சமூக அக்கறையுள்ள இருக்கிறார். மேன் மேலும் வளர வாழ்த்துகள்🎉
மகனே நீ படைத்தது அடிதட்டு மக்களின் வலி வேதனை அவமானம்.பேசறவன் பேசட்டும். துணிந்து நில் இழிந்த இந்த இளிச்சவாயன்கள் பார்த்தாவது உன்னை நிந்திக்காமல் இருக்கட்டும்.வாழ்த்துக்கள் மகனே நீ பனை போல் உயர்வாய். .
பக்கத்துல கழுகுமலை யில் உள்ள துலுக்கர்பட்டி கிராமத்தில ஏகப்பட்ட கதைகள் ,மற்றும் அன்பு நிறைந்த மக்கள் கூட்டமாக கூட்டம் உங்களுடைய உங்களுக்காக காத்திருக்க றார்கள் மாரி தோழரே