Тёмный

கடவுளுக்கேற்ற செயல் | Rev. Fr. T. Albert | உலக மீட்பர் பசிலிக்கா | திருச்சி | The Homily | Sermon 

இன்றைய வார்த்தை
Подписаться 3,3 тыс.
Просмотров 12 тыс.
50% 1

பொதுக்காலம் 18ஆம் வாரம் - ஞாயிறு
முதல் வாசகம்
நான் உங்களுக்காக வானத்திலிருந்து அப்பத்தைப் பொழியப் போகிறேன்.
விடுதலைப் பயண நூலிலிருந்து வாசகம் 16: 2-4, 12-15
அந்நாள்களில்
இஸ்ரயேல் மக்கள் கூட்டமைப்பினர் அனைவரும் சீன் பாலை நிலத்தில் மோசேக்கும் ஆரோனுக்கும் எதிராக முறுமுறுத்தனர். இஸ்ரயேல் மக்கள் அவர்களை நோக்கி, “இறைச்சிப் பாத்திரத்தின் அருகில் அமர்ந்து, அப்பம் உண்டு நிறைவடைந்து, எகிப்து நாட்டிலேயே ஆண்டவர் கையால் நாங்கள் இறந்திருந்தால் எத்துணை நலமாய் இருந்திருக்கும்! ஆனால் இந்தச் சபையினர் அனைவரும் பசியால் மாண்டு போகவோ இப்பாலை நிலத்திற்குள் நீங்கள் எங்களைக் கூட்டிக்கொண்டு வந்திருக்கிறீர்கள்” என்றனர்.
அப்போது ஆண்டவர் மோசேயை நோக்கி, “இதோ பார்! நான் உங்களுக்காக வானத்திலிருந்து அப்பத்தைப் பொழியப் போகிறேன். மக்கள் வெளியே போய்த் தேவையானதை அன்றன்று சேகரித்துக் கொள்ள வேண்டும். என் கட்டளைப்படி நடப்பார்களா இல்லையா என்பதை நான் இவ்வாறு சோதித்தறியப் போகிறேன்.
இஸ்ரயேல் மக்களின் முறையீடுகளை நான் கேட்டுள்ளேன். நீ அவர்களிடம், ‘மாலையில் நீங்கள் இறைச்சி உண்ணலாம். காலையில் அப்பம் உண்டு நிறைவடையலாம். நானே உங்கள் கடவுளாகிய ஆண்டவர் என்பதை இதனால் நீங்கள் உணர்ந்து கொள்வீர்கள்’ என்று சொல்” என்றார்.
மாலையில் காடைகள் பறந்து வந்து கூடாரங்களை மூடிக்கொண்டன. காலையில் பனிப் படலம் கூடாரத்தைச் சுற்றிப் படிந்திருந்தது. பனிப் படலம் மறைந்தபோது பாலை நிலப்பரப்பின்மேல் மென்மையான, தட்டையான, மெல்லிய உறைபனி போன்ற சிறிய பொருள் காணப்பட்டது. இஸ்ரயேல் மக்கள் அதைப் பார்த்துவிட்டு, ஒருவரை ஒருவர் நோக்கி ‘மன்னா’ என்றனர். ஏனெனில், அது என்ன என்று அவர்களுக்குத் தெரியவில்லை.
அப்போது மோசே அவர்களை நோக்கி, “ஆண்டவர் உங்களுக்கு உணவாகத் தந்த அப்பம் இதுவே” என்றார்.
பதிலுரைப் பாடல்
திபா 78: 3,4bc. 23-24. 25,54
பல்லவி: ஆண்டவர் அவர்களுக்கு வானத்து உணவை வழங்கினார்.
நாங்கள் கேட்டவை, நாங்கள் அறிந்தவை, எம் மூதாதையர் எமக்கு விரித்துரைத்தவை - இவற்றை உரைப்போம்.
வரவிருக்கும் தலைமுறைக்கு ஆண்டவரின் புகழ்மிகு, வலிமைமிகு செயல்களையும் அவர் ஆற்றிய வியத்தகு செயல்களையும் எடுத்துரைப்போம். - பல்லவி
ஆயினும், மேலேயுள்ள வானங்களுக்கு அவர் கட்டளையிட்டார்; விண்ணகத்தின் கதவுகளைத் திறந்துவிட்டார்.
அவர்கள் உண்பதற்காக மன்னாவை மழையெனப் பொழியச் செய்தார்; அவர்களுக்கு வானத்து உணவை வழங்கினார். - பல்லவி
வானதூதரின் உணவை மானிடர் உண்டனர்; அவர்களுக்கு வேண்டியமட்டும் உணவுப் பொருளை அவர் அனுப்பினார்.
அவர் தமது திருநாட்டுக்கு, தமது வலக்கரத்தால் வென்ற மலைக்கு, அவர்களை அழைத்துச் சென்றார். - பல்லவி
இரண்டாம் வாசகம்
திருத்தூதர் பவுல் எபேசியருக்கு எழுதிய திருமுகத்திலிருந்து வாசகம் 4: 17, 20-24
சகோதரர் சகோதரிகளே,
நான் ஆண்டவர் பெயரால் வற்புறுத்திச் சொல்வது இதுவே: பிற இனத்தவர் வாழ்வதுபோல இனி நீங்கள் வாழக் கூடாது. அவர்கள் தங்கள் வீணான எண்ணங்களுக்கேற்ப வாழ்கிறார்கள்.
ஆனால் நீங்கள் கிறிஸ்துவைப் பற்றிக் கற்றறிந்தது இதுவல்ல. உண்மையில் நீங்கள் இயேசுவைப் பற்றிக் கேள்விப்பட்டதும் கற்றறிந்ததும் அவரிடமுள்ள உண்மைக்கேற்பவே இருந்தது. எனவே, உங்களுடைய முந்தின நடத்தையை மாற்றி, தீய நாட்டங்களால் ஏமாந்து அழிவுறும் பழைய மனிதருக்குரிய இயல்பைக் களைந்துவிடுங்கள். உங்கள் மனப்பாங்கு புதுப்பிக்கப்பட வேண்டும். கடவுளது சாயலாகப் படைக்கப்பட்ட புதிய மனிதருக்குரிய இயல்பை அணிந்துகொள்ளுங்கள். அவ்வியல்பு உண்மையான நீதியிலும் தூய்மையிலும் வெளிப்படும்.
நற்செய்திக்கு முன் வாழ்த்தொலி
மத் 4: 4b
அல்லேலூயா, அல்லேலூயா! மனிதர் அப்பத்தினால் மட்டுமல்ல, மாறாக, கடவுளின் வாய்ச்சொல் ஒவ்வொன்றாலும் வாழ்வர். அல்லேலூயா.
நற்செய்தி வாசகம்
✠ யோவான் எழுதிய தூய நற்செய்தியிலிருந்து வாசகம் 6: 24-35
அக்காலத்தில்
இயேசுவும் அவருடைய சீடரும் திபேரியாவில் இல்லை என்பதைக் கண்ட மக்கள்/ கூட்டமாய் படகுகளில் ஏறி இயேசுவைத் தேடிக் கப்பர்நாகுமுக்குச் சென்றனர். அங்குக் கடற்கரையில் அவர்கள் அவரைக் கண்டு, “ரபி, எப்போது இங்கு வந்தீர்?” என்று கேட்டார்கள்.
இயேசு மறுமொழியாக, “நீங்கள் அரும் அடையாளங்களைக் கண்டதால் அல்ல, மாறாக, அப்பங்களை வயிறார உண்டதால்தான் என்னைத் தேடுகிறீர்கள் என உறுதியாக உங்களுக்குச் சொல்கிறேன். அழிந்து போகும் உணவுக்காக உழைக்க வேண்டாம். நிலைவாழ்வு தரும் அழியாத உணவுக்காகவே உழையுங்கள். அவ்வுணவை மானிட மகன் உங்களுக்குக் கொடுப்பார். ஏனெனில் தந்தையாகிய கடவுள் அவருக்கே தம் அதிகாரத்தை அளித்துள்ளார்” என்றார்.
அவர்கள் அவரை நோக்கி, “எங்கள் செயல்கள் கடவுளுக்கு ஏற்றவையாக இருப்பதற்கு நாங்கள் என்ன செய்யவேண்டும்?” என்று கேட்டார்கள். இயேசு அவர்களைப் பார்த்து, “கடவுள் அனுப்பியவரை நம்புவதே கடவுளுக்கேற்ற செயல்” என்றார். அவர்கள், “நாங்கள் கண்டு உம்மை நம்பும் வகையில் நீர் என்ன அரும் அடையாளம் காட்டுகிறீர்? அதற்காக என்ன அரும் செயல் செய்கிறீர்? எங்கள் முன்னோர் பாலைநிலத்தில் மன்னாவை உண்டனரே! ‘அவர்கள் உண்பதற்கு வானிலிருந்து உணவு அருளினார்’ என்று மறைநூலிலும் எழுதப்பட்டுள்ளது அல்லவா!” என்றனர்.
இயேசு அவர்களிடம், “உறுதியாக உங்களுக்குச் சொல்கிறேன்: வானிலிருந்து உங்களுக்கு உணவு அருளியவர் மோசே அல்ல; வானிலிருந்து உங்களுக்கு உண்மையான உணவு அருள்பவர் என் தந்தையே. கடவுள் தரும் உணவு வானிலிருந்து இறங்கி வந்து உலகுக்கு வாழ்வு அளிக்கிறது” என்றார்.
அவர்கள், “ஐயா, இவ்வுணவை எங்களுக்கு எப்போதும் தாரும்” என்று கேட்டுக் கொண்டார்கள். இயேசு அவர்களிடம், “வாழ்வு தரும் உணவு நானே. என்னிடம் வருபவருக்குப் பசியே இராது; என்னிடம் நம்பிக்கை கொண்டிருப்பவருக்கு என்றுமே தாகம் இராது” என்றார்.
#மறையுரை_சிந்தனைகள் #மறையுரை #மறைக்கல்வி #christ #christian #Jesuschrist #verseoftheday #ourladyoffathima #vailankannishrine #sermon #sermons #homily #bernat #carmel #christiansermons

Опубликовано:

 

18 сен 2024

Поделиться:

Ссылка:

Скачать:

Готовим ссылку...

Добавить в:

Мой плейлист
Посмотреть позже
Комментарии : 18   
@Nanthinypriv
@Nanthinypriv 18 часов назад
God 🙏 bless you father really really very nice 👍
@peterpandiyan486
@peterpandiyan486 15 дней назад
Praise the Lord fr pray for us jesus AVE MARIA AMEN fr your message super fr thanks fr AMEN
@laxmananmrs4757
@laxmananmrs4757 17 дней назад
Thank you father
@MichaelAndrews-p4k
@MichaelAndrews-p4k 21 день назад
மிக்க ரொம்ப நன்றி பாதர்
@devakialogan5322
@devakialogan5322 21 день назад
மிக்க மகிழ்ச்சி பதார் நன்றி தகப்பனே ஆமென் 🙏ஆமென்
@ruvanruvan-dn3lf
@ruvanruvan-dn3lf 15 дней назад
Amen ❤❤❤
@marieaugustin2031
@marieaugustin2031 20 дней назад
இறைவா உமக்கு நன்றி
@selvambikaisenathirajah3611
@selvambikaisenathirajah3611 20 дней назад
Praise the Lord Amen Praise the Lord Amen Praise the Lord Amen Praise the Lord Amen Praise the Lord Amen Praise the Lord Amen Praise the Lord Amen Praise the Lord Amen Praise the Lord Amen Praise the Lord Amen
@leemrose7709
@leemrose7709 21 день назад
Praise the lord father amen Jesus Christ Jesus ave Mariya alleluia alleluia alleluia alleluia alleluia alleluia alleluia alleluia alleluia alleluia alleluia alleluia alleluia alleluia 🙏🙏🙏🙏🙏🙏
@carolinepeter6729
@carolinepeter6729 21 день назад
Praise the lord, Amen.
@jasminejoseph8495
@jasminejoseph8495 20 дней назад
Father your preaching is very nice from the world of God. Thank you Jesus 🙏🙏❤
@antonyjosephine494
@antonyjosephine494 21 день назад
Glory to God 🙏
@malliga1970
@malliga1970 15 дней назад
Romba. Nanti. Father
@Nanthinypriv
@Nanthinypriv 18 часов назад
உலகம் விதித்த தடையா இல்லையா மனிதர்கள் உருவாக்கிய தடையா இறைவா ஏன் இந்த உலகில் இவ்வளவு பெரிய தண்டனைகள்
@Today_Verse_bible
@Today_Verse_bible 15 часов назад
உங்கள் கேள்வி ஆழமான மற்றும் நுட்பமான விஷயத்தைத் தொடுகிறது, இதை பலர் புரிந்துகொள்ள முடியவில்லை, ஏனெனில் இந்த உலகில் துன்பங்களும் தடைகளும் இருப்பது உண்மையில் தொந்தரவாக இருக்கலாம். நம்பிக்கை மற்றும் சவால்கள் பெரும்பாலும் ஒரு பெரிய நோக்கத்திற்கு உதவுகின்றன, அந்த நோக்கம் நமக்கு உடனடியாகத் தெளிவாகத் தெரியவில்லை. தொடக்க நூல் புத்தகத்தில், உலகம் நன்றாகப் படைக்கப்பட்டதைக் காண்கிறோம், ஆனால் பாவத்தின் அறிமுகத்துடன், மனிதத் தேர்வுகள் கடவுளுடனான நமது உறவில் மட்டுமல்ல, ஒருவருக்கொருவர் மற்றும் படைப்பிலும் முறிவை ஏற்படுத்தியது. இந்த முறிவுகள் தடைகளாக வெளிப்படும், துன்பம் மற்றும் தண்டனைக்கு வழிவகுக்கும், இது சில நேரங்களில் கடுமையாகத் தோன்றலாம். விவிலியத்தின் பெரும்பகுதி சோதனைகளின் சுத்திகரிப்பு தன்மையைப் பற்றி பேசுகிறது. இந்த தடைகள் பெரும்பாலும் ஆன்மீக வளர்ச்சியையும் தெய்வீகத்தை நம்புவதையும் ஊக்குவிக்கின்றன. கடவுள் மனிதகுலத்திற்கு சுதந்திரமான விருப்பத்தை வழங்குகிறார், அன்பையும் நன்மையையும் தேர்ந்தெடுக்க அனுமதிக்கும் ஒரு அழகான பரிசு. ஆயினும்கூட, வலி ​​மற்றும் அழிவுக்கு வழிவகுக்கும் பாதைகளை நாம் தேர்வு செய்யலாம். நமது தேர்வுகளின் விளைவுகள் மற்றவர்களைப் பாதிக்கும் வகையில் தனிப்பட்ட மற்றும் வகுப்புவாத தடைகளை உருவாக்கலாம். தண்டனை என்ற கருத்தை நீதிக்கான வழிமுறையாகவும் பார்க்கலாம். உரோமையர் 12:19 இல், "அன்பார்ந்தவர்களே! பழிவாங்காதீர்கள்; அதைக் கடவுளின் சினத்திற்கு விட்டுவிடுங்கள். ஏனெனில், மறைநூலில் எழுதியுள்ளவாறு, “பழிவாங்குவதும் கைம்மாறு அளிப்பதும் எனக்கு உரியன” என்கிறார் ஆண்டவர்." என்று கூறப்பட்டுள்ளது. கடவுள் நீதியுள்ளவராக இருந்தாலும், அவருடைய கருணை அவரது குழந்தைகளின் மனந்திரும்புதலையும் மீட்டெடுப்பையும் தீவிரமாக நாடுகிறது என்பதை இது வலியுறுத்துகிறது. வீழ்ந்த உலகில் வாழ்வது என்பது கஷ்டங்களை அனுபவிப்பதாகும். இருப்பினும், திருவெளிப்பாடு 21:4-ல் நாம் வாசிக்கிறபடி, இறுதியில், கடவுள் ஒவ்வொரு கண்ணீரையும் துடைப்பார், மேலும் துன்பம் இருக்காது என்று ஒரு வாக்குறுதி கொடுக்கப்பட்டுள்ளது. அவருடைய எல்லையற்ற ஞானத்தில் நம்பிக்கை வையுங்கள், ஏனெனில் நாம் எதிர்கொள்ளும் துன்பங்கள் மற்றும் தடைகளின் திரைக்குப் பின்னால் ஒரு பெரிய நோக்கம் இருக்கிறது. இறுதியில், இந்த வாழ்க்கையில் பதில்கள் அனைத்தும் கிடைக்காது. ஆயினும்கூட, நம்முடைய சோதனைகளுக்கு மத்தியில் கடவுளின் பிரசன்னத்தை நாம் உறுதிப்படுத்துவோம், நம் இதயங்களை வளர்த்து, நம்பிக்கை மற்றும் மீட்பை நோக்கி நம்மை வழிநடத்துவோம். இதை நீங்கள் ஆழமாகச் சிந்திக்கும்போது, ​​ஒவ்வொரு சோதனையிலும் நம்மோடு நடந்துகொண்டு, நம் புரிதலுக்கு அப்பாற்பட்ட நித்தியமான அற்புதமான ஒன்றிற்காக நம்மைத் தயார்படுத்தும் கடவுளுடன் உறவைத் தேடுவதில் நீங்கள் அமைதியைக் காண்பீர்கள்.
@Nanthinypriv
@Nanthinypriv 13 часов назад
@@Today_Verse_bible thank you so much for the message நான் ஒரு இந்துவாக பிறந்தேன் ஆனால் சிறுமியாக இருந்த நிலையில் இருந்து இயேசுவே என் உயிராக நேசிக்கும் அளவிற்கு உருமாறினேன் அவரின் ஒவ்வொரு வல்லமையும் நான் ஒவ்வொரு நொடியும் உணர்ந்தேன் பின்னர் ஒரு கிறிஸ்தவர் ஏ என் வாழ்வில் துணைவியாக வந்தார் ஆனால் என் வாழ்க்கை ஒரு விபத்தாக போய் விட்டது 19வயதில் சொற்ப கால வாழ்வின் பின் ஒரு வயது மகனுடன் விதவை ஆனேன் ஏன் இறைவன் என்னை கை விட்டார் தனிமையோடு போராடி என் மகனை வளர்த்து ஆளாக்கி விட்டேன் இப்போ நான் அவர் இறந்த பின்னர் கிறிஸ்தவராக மாறி வாழும் என் வாழ்வில் பல வேதனையை அனுபவித்து கொண்டு தான் இன்று வரை இருக்கிறேன் அன்று ஒவ்வொருவர் மீதும் இரங்கிய என் தந்தை என் வாழ்வில் ஏன் கண்ணீரை வாழ்வாக்கினார் நான் அவரின் மகள் இல்லையா என் கண்ணீரை துடைக்க ஏன் அவரால் முடியவில்லை thank you so many times my love father Jesus Christ amen 🙏🙏💖🙏🙏🙏
@deepakkandhasamy6007
@deepakkandhasamy6007 19 дней назад
Thank you Father
Далее
ХИТРАЯ БАБУЛЯ #shorts
00:20
Просмотров 1,2 млн
For my passenger princess ❤️ #tiktok #elsarca
00:24
Fr.Paul Robinson Message-1 , 2012
21:35
Просмотров 29 тыс.
ХИТРАЯ БАБУЛЯ #shorts
00:20
Просмотров 1,2 млн