Kandy#cooking#home facial#srilanka
ஆப்பிள் சீடர் வினிகர் நன்மைகள் (Apple cider vinegar benefits in tamil):-
ஆப்பிள் சீடர் வினிகரில் பெக்டின் என்னும் நீரில் கரையக்கூடிய நார்ச்சத்து உள்ளது. எனவே வயிற்றுப்போக்கு பிரச்சனையை சரி செய்ய பயன்படுகிறது.
காலை எழுந்தவுடன் ஒரு கிளாஸ் தண்ணீரில் ஐந்து மில்லி ஆப்பிள் சீடர் வினிகர் கலந்து, 10 நொடிகள் வாய் கொப்பளிக்க வேண்டும். இவ்வாறு தொடர்ந்து ஐந்து முறை செய்துவர, வாய் மற்றும் ஈறுகளில் மறைந்துள்ள கிருமிகளை அழித்து, வாய் துர்நாற்றங்களை போக்கி, சுவாச புத்துணர்ச்சியை தரும்
சுத்தமான தண்ணீரில் ஆப்பிள் சிடர் வினிகரைக் கலந்து அதைச் சிறிய பஞ்சால் முகத்தில் ஆங்காங்கே ஒற்றி எடுத்து, 10 நிமிடங்கள் கழித்து முகத்தை கழுவ வேண்டும். இவ்வாறு செய்வதினால் முகத்தில் உள்ள கருமை, கரும்புள்ளிகள் ஆகியவற்றைச் சரிசெய்து, முகத்தைப் பளபளப்பாகவும் ஈரப்பதத்துடனும் வைத்திருக்க உதவும்.
18 июл 2023