Тёмный

கும்பகோணம் கும்பேஸ்வரர் கோயில் சகலவிதமான ஐஸ்வர்யங்களும் வழங்கும் மங்களாம்பிகை Kumbakonam Kumbeshwar 

ஆன்மீகத்துடன் நட்பு
Просмотров 9 тыс.
50% 1

கும்பகோணம் கும்பேஸ்வரர் திருக்கோயில் விஷ்ணு பீடம்
தேவாரப்பாடல் பெற்ற 274 சிவாலயங்களில் இது 89 வது தேவாரத்தலம் ஆகும். அம்மனின் 51 சக்தி பீடங்களில் இது விஷ்ணு சக்தி பீடம், மந்திரிணி சக்தி பீடம் ஆகும்.
தேவாரப்பாடல் பெற்ற காவிரி தென்கரைத்தலங்களில் இது 26வது தலம்.
மூலவர் : கும்பேசுவரர் (அமுதேசுவரர், குழகர்)
அம்மன்/தாயார் : மங்களாம்பிகை
தல விருட்சம் : வன்னி
தீர்த்தம் : மகாமகம், காவிரி
புராண பெயர் : திருக்குடமூக்கு
ஊர் : கும்பகோணம்
மாவட்டம் : தஞ்சாவூர்
மங்கள நாயகி
இத்தல அம்மனுக்கு மங்களநாயகி, மந்திரபீட நலத்தாள் ஆகிய திருநாமங்கள் உண்டு. சம்பந்தர் இவளை "வளர்மங்கை' என அழைக்கிறார். சிவபெருமான் தனது திருமேனியில் பாதியை அம்மனுக்கு வழங்கியதைப்போல், தனது மந்திர சக்திகளில் 36 ஆயிரம் கோடியை இத்தல நாயகிக்கு வழங்கியுள்ளார். அம்பாளுக்கென 36ஆயிரம் கோடி மந்திர சக்திகள் உள்ளதால், 72ஆயிரம் கோடி மந்திர சக்திகளுக்கு அதிபதியாக "மந்திரபீடேஸ்வரி' என்ற திருநாமமும் பெறுகிறாள்.அம்மனுக்குரிய 51 சக்தி பீடங்களில் இத்தலம் முதன்மையானதாக கருதப்படுகிறது.
அம்பாள் மஞ்சள் பட்டு உடுத்தி முகத்தில் மஞ்சள் பூசி, குங்கும திலகம் இட்டு அருள்பாலிப்பதை பார்த்துக் கொண்டே இருக்கலாம்.
தல சிறப்பு:
இங்கு சிவன் சுயம்பு மூர்த்தியாக அருள்பாலிக்கிறார் 12 ஆண்டுகளுக்கு ஒரு முறை மாசி மாதத்தில் குரு சிம்ம ராசியிலும், சூரியன் கும்ப ராசியிலும் பிரவேசிக்கும் பவுர்ணமி நன்னாளில் மகாமக திருவிழா கொண்டாடப் படுகிறது. லிங்கம் கீழே பருத்தும், மேலே செல்ல செல்ல ஊசி வடிவிலும் காணப்படும்.
ஆலய அமைப்பு
ராஜகோபுரம் வழியாக நுழைந்து, நீண்ட மண்டபத்தை கடந்து, பலி பீடத்தையும் கொடி மரத்தையும் வணங்கி, வாசலில் உள்ள நந்தி தேவரிடம் அனுமதி பெற்று கோயிலுக்குள் நுழைய வேண்டும். கும்பேஸ்வரரை வணங்கிய பிறகு, முதல் பிரகாரத்தில் உள்ள 63 நாயன்மார்கள், சப்த மாதர்கள், காமதேனு, பவலிங்கம், சர்வ லிங்கம், ஈசான லிங்கம், பசுபதி லிங்கம், ருத்ர லிங்கம், உக்ர லிங்கம், பீம லிங்கம், மகாலிங்கம், தெட்சிணாமூர்த்தி ஆகியோரை தரிசித்து, சற்று தள்ளியுள்ள வலஞ்சுழி விநாயகரை வணங்க வேண்டும். பின்னர் பிட்சாடனர், முருகன், அட்சயலிங்கம், சகஸ்ரலிங்கம், அன்னபூரணி, கஜலட்சுமி, மகாலட்சுமி, கோஷ்டத்திலுள்ள பிரம்மா, சரஸ்வதி ஆகியோரை வழிபட்டு அம்மன் சன்னதியை வணங்க வேண்டும்.பிறகு கண்ணாடி அறையில் இறைவன் பள்ளி கொண்டுள்ள காட்சியை கண்டு, அஷ்ட புஜ துர்கையை வணங்கி, அருகிலுள்ள நவநீத விநாயகர், கிராத மூர்த்தி, பைரவர், கால பைரவர்,ஜுரகேஸ்வரர், சாஸ்தா, மகான் கோவிந்த தீட்சிதர், நாகாம்பாள் ஆகியோரை தரிசிக்க வேண்டும். இதன்பிறகு, நவக்கிரகமண்டபத்தை சுற்றி கோயிலிலிருந்து வெளியேற வேண்டும். இம்முறைப்படி வணங்கினால், வாழ்வுக்குத் தேவையான பாதுகாப்பு அனைத்தும் கிடைக்கும்.
பிரார்த்தனை
கல்வியில் சிறந்து விளங்க நினைப்பவர்கள், தொழில் துவங்குபவர்கள், திருமணத்தடை உள்ளவர்கள், குழந்தை பாக்கியம் வேண்டுபவர்கள், குபேர வாழ்வு விரும்புபவர்கள் மங்கள நாயகிக்கு ஆவணி ஞாயிற்றுக்கிழமைகளில் செம்பருத்தி பூவால் அலங்காரம் செய்து அர்ச்சனை செய்தால் வேண்டியது கிடைக்கும்.
மகாமக தீர்த்தம்
ஊரின் நடுவே 3 ஏக்கர் பரப்பளவில் மகாமக குளம் அமைந்துள்ளது. பிரளய காலத்தின் போது அமுத குடத்தில் இருந்து வழிந்தோடிய அமுதத்தை "பூமி குழிந்து தாங்குக' என சிவபெருமான் நினைத்ததால் அமுதம் திரண்டு இந்த குளத்தில் தங்கியது. இங்கு தான் 12 ஆண்டுகளுக்கு ஒரு முறை மாசி மாதத்தில் குரு சிம்ம ராசியிலும், சூரியன் கும்ப ராசியிலும் பிரவேசிக்கும் பவுர்ணமி நன்னாளில் மகாமக திருவிழா கொண்டாடப்படுகிறது. இத்திருவிழாவின் போது தான் கங்கை, யமுனை, கோதாவரி, நர்மதை, சரஸ்வதி, காவிரி, குமரி, பயோடினி, சரயு ஆகிய 9 நதிகளும் தங்களது பாவங்களை போக்கி கொள்ள நீராடுவதாக ஐதீகம். மகாமக தினத்தன்று இத்தீர்த்தத்தில் நீராடுபவருக்கும், அவரைச்சார்ந்த ஏழு குலத்தாருக்கும் புண்ணியம் உண்டு என புராணங்கள் கூறுகின்றன.
தல வரலாறு:
முன்னொரு காலத்தில் தண்ணீரால் உலகம் அழிய இருந்த போது, பிரம்மா தனது படைப்புத்தொழிலை எங்கிருந்து ஆரம்பிப்பது என சிவனிடம் கேட்டார். சிவபெருமான் அவரிடம், ""நீ இப்போதே பல புண்ணிய தலங்களிலும் உள்ள மணலை எடுத்து அமுதத்தோடு சேர்த்து பிசைந்து மாயக்கும்பம் ஒன்றை செய்.
அந்தக் கும்பத்தில் அமுதத்தை நிரப்பி, படைப்புக் கலன்களை அதனுள் வைத்து நீரில்மிதக்க விடு,'' எனச்சொல்லி அதை மிதக்கவிடும் முறை பற்றியும் விளக்கமாகத் தெரிவித்தார். இதன்படியே பிரம்மா செய்த கும்பம் வெள்ளத்தில் மிதந்தது. அந்தக் குடம் ஒரு இடத்தில் தங்கியது. சிவன் ஒரு பாணத்தை அதன் மீது எய்தார். இதனால் கும்பத்தின் மூக்கு சிதைந்தது.
கும்பத்திலிருந்த அமுதம் நான்கு புறமும் பரவியது. அந்த அமுதம் வெண்மணலுடன் கலந்து ஒரு லிங்கம் உருவானது. இந்த லிங்கமே "கும்பேஸ்வரர்' எனப் பெயர் பெற்றது.
அமைவிடம்
தஞ்சாவூரில் இருந்து மயிலாடுதுறை செல்லும் வழியில் 41 கி.மீ தொலைவில் கும்பகோணம் அமைந்துள்ளது.
தமிழகத்தில் உள்ள அனைத்து ஊர்களில் இருந்தும் கும்பகோணம் வர பேருந்து வசதி உள்ளது.
கோயில் கும்பகோணத்தில் இருந்து தஞ்சாவூர் செல்லும் வழியில் 2 கி.மீ தொலைவில் அமைந்துள்ளது. கும்பகோணம் பேருந்து நிலையத்தில் இருந்து மினி பேருந்து மற்றும் நகர பேருந்து வசதி உள்ளது.
சென்னை, திருச்சி, இராமேஸ்வரம், அயோத்தி ,புவனேஸ்வர், மைசூர் மற்றும் கோயம்புத்தூர் போன்ற ஊர்களில் இருந்து கும்பகோணம் வர ரயில் வசதி உள்ளது.
கோயில் Google Map Link
maps.app.goo.g...
குடவாசல் கோணேஸ்வரர் கோயில் தரிசனம்
• குடவாசல் கோணேஸ்வரர் கோ...
if you want to support us via Google pay phone pay paytm
9655896987
Join this channel to get access to perks:
/ @mathina
- தமிழ்

Опубликовано:

 

16 сен 2024

Поделиться:

Ссылка:

Скачать:

Готовим ссылку...

Добавить в:

Мой плейлист
Посмотреть позже
Комментарии : 20   
@mathina
@mathina 11 месяцев назад
குடவாசல் கோணேஸ்வரர் கோயில் தரிசனம் ru-vid.com/video/%D0%B2%D0%B8%D0%B4%D0%B5%D0%BE-geB89GGAKy4.html
@KavithaSugar-t3m
@KavithaSugar-t3m 28 дней назад
ஓம் நமசிவாய போற்றி ஓம் சக்தி போற்றி
@aruvaiambani
@aruvaiambani 7 месяцев назад
நான் கும்பம் ராசி. எனக்கு உரிய கோவில் கும்பகோணம் கும்பேஸ்வரர். 🙏🙏🙏🙏🙏
@RadhaN-4322
@RadhaN-4322 11 месяцев назад
அற்புதமான தலம் ❤
@mariselvamg197
@mariselvamg197 5 месяцев назад
Om namaha shivaya 🙏🙏🙏
@இராசேந்திரசோழன்-ந3ச
ஓம் நம சிவாய
@rbsn2877
@rbsn2877 5 месяцев назад
Thank you so much sir 🙏 🙏 🙏 🙏 🙏
@lakshminarashiman9901
@lakshminarashiman9901 11 месяцев назад
❤🎉சிவாய நம🌷🌼🙏🙏🙏🔱❤
@devarooba1831
@devarooba1831 6 месяцев назад
🙏🙏🙏🙏👌👌
@s.gogulakrishnan1552
@s.gogulakrishnan1552 11 месяцев назад
Super sir
@RadhaN-4322
@RadhaN-4322 11 месяцев назад
ஓம் நமசிவாய 🙏
@kamalakannankarnayourgreat1888
@kamalakannankarnayourgreat1888 4 месяца назад
ஓம் நமசிவாய
@saravananjayaram1910
@saravananjayaram1910 11 месяцев назад
🙏🙏🙏
@AalayamSelvomeNaam
@AalayamSelvomeNaam 11 месяцев назад
Nyc
@d.thumilan3985
@d.thumilan3985 11 месяцев назад
Hi sir Super sir😊
@rajumettur4837
@rajumettur4837 7 месяцев назад
Thulam& kadagam endha thalam sir?
@jayakumarm3149
@jayakumarm3149 10 месяцев назад
விருச்சிக ராசி கோயில் எந்த கோயில் சொல்லுங்கள் ஐயா
@mathina
@mathina 10 месяцев назад
கும்பகோணம் கௌதமேஸ்வரர் கோயில் இந்த கோயிலை வீடியோவில் தரிசனம் செய்ய கீழே உள்ள லிங்க் ஐ கிளிக் செய்யவும் ru-vid.com/video/%D0%B2%D0%B8%D0%B4%D0%B5%D0%BE-zjhJqvHrVQ8.html
@jaikumar.ssundararaj.k8342
@jaikumar.ssundararaj.k8342 11 месяцев назад
மகர ராசிக்கு என்ன கோயில் ஐயா
@mathina
@mathina 11 месяцев назад
கும்பகோணம் சோமேஸ்வரர் கோயில்
Далее