Тёмный

சித்திரை திருவிழாவை முன்னிட்டு ஸ்ரீ கள்ளழகரின் தங்க குதிரை பராமரிக்கும் பணி நடைபெற்று வருகிறது.. 

Jaya TV Aanmeegam
Подписаться 47 тыс.
Просмотров 1,5 тыс.
50% 1

#jayatv #madurai #chithiraithiruvizha2023
மதுரையில் நடைபெறும் விழாக்களில் மிகவும் பிரசித்தி பெற்றது சித்திரை திருவிழாவாகும். அழகர் தங்கை குதிரையில் வகை ஆற்றில் எழுந்தருளி பக்தர்களுக்கு அருள் பாலிக்கும் நிகழ்ச்சி இவ்விழாவின் முக்கிய நிகழ்ச்சியாகும். அதன்படி இந்த வருடம் மே - 3ஆம் தேதி அழகர் கோவிலில் இருந்து தங்க பல்லக்கில் புறப்படும் கள்ளழகர் மே- 5ஆம் தேதி அதிகாலை தங்க குதிரை வாகனத்தில் அமர்ந்து வைகை ஆற்றில் எழுந்தருளி பக்தர்களுக்கு அருள் பாலிக்க உள்ளார். இந்நிலையில் மேலூர் அருகே அழகர் மலையின் அடிவாரத்தில் அமைந்துள்ள கள்ளழகர் என்ற ஸ்ரீசுந்தரராஜ பெருமாள் திருக்கோவிலின் உட்பிரகாரத்தில் உள்ள அழகரின் வாகனங்களான தங்க குதிரை வாகனம், தங்க பல்லக்கு, கருட வாகனம், சேஷ வாகனம் ஆகியவை பராமரிக்கும் பணி தொடங்கியுள்ளது.
அழகர் மலையில் இருந்து தங்க பல்லக்கில் புறப்படும் ஸ்ரீ கள்ளழகர் தங்க குதிரை வாகனத்தில் அமர்ந்து வைகை ஆற்றில் இறங்கி பக்தர்களுக்கு அருள் பாலிப்பார். அதனைத் தொடர்ந்து வண்டியூர் பகுதியில் உள்ள தேனூர் மண்டபத்தில் சேஷ வாகனம் மற்றும் கருட வாகனத்தில் அமர்ந்து பக்தர்களுக்கு காட்சி தருவார். இந்த சித்திரைத் திருவிழாவினை கான உலகம் எங்கும் இருந்து இலட்சக்கணக்கான பொதுமக்கள் மதுரையில் கூடுவர்.
Contact no: 9840243858
Mail us at: jayatvaanmeegam@gmail.com

Опубликовано:

 

18 апр 2023

Поделиться:

Ссылка:

Скачать:

Готовим ссылку...

Добавить в:

Мой плейлист
Посмотреть позже
Комментарии    
Далее