Тёмный

சிப்பி காளான் பண்னை அமைப்பது எப்படி? | How to construct mushroom farm in tamil | காளான் வளர்ப்பு 

Unnoticed Farms
Подписаться 9 тыс.
Просмотров 40 тыс.
50% 1

சிப்பிக்காளான் (PLEUROTUS) என்பவை தாவர இனத்தில் பூசண வகைப்பாட்டைச் சேர்ந்ததாகும். இயற்கையமைப்பில் இதுவரை பத்தாயிரத்துக்கும் மேற்பட்ட உணவுக் காளான் வகைகள் தாவரவியல் நிபுணர்களால் அறியப்பட்டுள்ளன. இவற்றில் சுமார் 60-70 வகைகள் மனிதனால் எளிதாக உணவுக்காக பயிரிடத்தக்கவையாக உள்ளன. இந்திய சூழ்நிலைக்கும் தட்பவெப்ப மற்றும் நிலவியல் அமைப்புக்கும் ஏற்ற வகையில் பயிரிடத் தக்கவையாகத் தாவர விஞ்ஞானிகளால் கண்டறியப்பட்ட காளான் வகைகளில் ஒன்று தான் சிப்பிக் காளான்.
சிப்பிக்காளான்
அமைப்பு தொகு
கடலிலுள்ள முத்து சிப்பியின் அமைப்பை இந்த வகைக் காளான்கள் பெற்றுள்ளதால் இவை இப்பெயர் பெற்றுள்ளன (OYSTER MUSHROOM SPECIES) . இக்காளான்கள் இயற்கையில் சாம்பல், மஞ்சள், வெண்மை, வெளிர் மஞ்சள், இளஞ்சிவப்பு , பழுப்பு ஆகிய நிறங்களில் காணப்படுகின்றன. அந்தந்த சூழ்நிலைக்கேற்ப நிறமும் மாறுகின்றன. சிப்பிக் காளானுக்கு சதைப்பிடிப்பு அதிகம். மேலும் சிறிய தண்டுப் பகுதியும் உண்டு. சிலவகைகளில் தண்டுப் பகுதி காணாமலும் இருக்கும். சிப்பிக் காளானின் அடிப்பகுதியில் வரிவரியாக செதில் போன்ற அமைப்பு காணப்படுகிறது. இச்செதில் போன்ற அமைப்புகளுக்கிடையில் லட்சக்கணக்கான வித்துக்கள் காணப்படும். இவ்வித்துக்களை சாதாரண கண்களால் காண இயலாது. நுண்ணோக்கியின் மூலம் தெளிவாகக் காணலாம். இவ்வித்துக்களை காண வேண்டுமெனில் ஒரு கறுப்பு காகிதத்தின் மேல் நன்கு வளர்ந்த காளானை பறித்து செதில் பகுதி அடியில் இருக்குமாறு வைத்தால் சில மணி நேரம் கழித்து அக்காகிதத்தின் மேல் வித்துக்கள் பதிந்து ரேகை போன்ற அமைப்பு காணப்படும்.
சிப்பிக்காளானின் வகைகள்
சிப்பிக்காளானின் சிறப்புகள் தொகு
இந்திய மற்றும் தமிழக சூழ்நிலைகளுக்கு சிப்பி காளான் வளர்ப்பு மிகவும் ஏற்றது. ஏனெனில் சிப்பிக் காளான் 200 செ.கி. முதல் 300 செ.கி. வெப்ப நிலையில் காற்றில் 75 சதவீதத்திற்கு குறையாத ஈரப்பதம் உள்ள சூழ்நிலையில் நன்கு செழித்து வளரும் தன்மை உடையது.
சிப்பிக் காளான் வைக்கோலில் மட்டும் அல்லாது செல்லுலோஸ் என்னும் பொருள் அதிகம் உள்ள பல்வேறு வகைப்பட்ட பண்ணை கழிவு பொருட்களிலும் நன்கு வளரச் செய்ய முடியும்.
சிப்பிக் காளானின் வளர்ப்பு முறைகளும் கையாளும் தொழில் நுணுக்கங்களும் ஐரோப்பிய காளான் , வைக்கோல் காளான்களைக் காட்டிலும் மிகவும் எளிதானதாகும்.
சிப்பிக் காளான் வகை மற்ற உணவு காளான்களைக் காட்டிலும் அதிக உற்பத்தி திறன் கொண்டுள்ளது. 100 கிலோ நெல் வைக்கோலிலிருந்து சராசரியாக 70 கிலோ காளான் வரையிலும் உற்பத்தி செய்ய முடியும் . அதுவம் 40 அல்லது 45 நாட்களுக்கு உள்ளாக உற்பத்தி செய்ய முடியும். வளர்ப்புக்கேற்ற சூழல் அமையுமானால் 100 கிலோ அளவு கூட உற்பத்தி செய்யும் வாய்ப்பு உள்ளது.
சிப்பிக்காளான் வளர்ப்பின் பின்னணி தொகு
1917ஆம் ஆண்டு முதன் முதலாக ஜெர்மன் நாட்டைச் சார்ந்த பால்க் என்பவரால் மரத்துண்டுகளில் .பிளிரோட்டர்ஸ் ஆஸ்டிரியேட்டர்ஸ் என்ற வகை சிப்பிக் காளான் வளர்கப்பட்டது. சிப்பிக் காளான் வளர்க்கும் தொழில் நுணுக்கங்களை அமெரிக்காவைச் சார்ந்த விஞ்ஞானிகளான பிளாக,; டாஸோ,ஹாவ் ஆகியோர் ஆராய்ந்து வெளியிட்டனர். இந்தியாவில் முதல் முதலாக மத்திய உணவு மையத்தில் நெல் வைக்கோலில் பிளிரோட்டர்ஸ் ஃபிளாபெல் லேட்டஸ் வகை சிப்பிக் காளான் மைசூரைச் சார்ந்த பானோ மற்றும் ஸ்ரீவத்ஸவ் ஆகிய விஞ்ஞானிகளால் வெற்றிகரமாக 1962ல் வளர்க்கப்பட்டது. இந்திய சூழல் மற்றும் தட்ப வெட்ப நிலைக்கு ஏற்ற வகையில் அமைந்த சாம்பல் சிப்பிகாளானான பிளிரோட்டர்ஸ் சசோர்காஜீ என்ற வகை 1974ல் ஜாண் டைக் மற்றும் கபூர் என்பவர்களால் எம் 2 ரகமாக இந்தியாவில் அறிமுகப்படுத்தப்பட்டது.வெள்ளை நிறமுடைய பிளிரோட்டர்ஸ் சிட்ரினோபைரியேட்டஸ் வகையான சிப்பிக் காளான் தமிழகத்தில் முதன் முதலாக நெல் வைக்கோலில் வளாக்கப்பட்டது. பிறகு முறையாக தமிழ் நாடு வேளாண்மை பல்கலைகழகத்தால் 1986ம் ஆண்டு கோ 1 என்னும் ரகமாக வெளியிடப்பட்டது. தற்போது அகில இந்திய இளவில் ஒருங்கிணைந்த காளான் மேம்பாட்டு திட்டத்தின் கீழ் பல்வேறு மாநிலங்களில் உள்ள வேளாண் பல்கலைக்கழகங்கள் வழியாக சிப்பிக்காளான் பற்றிய ஆய்வுகள் நடைபெற்று வருகின்றன.[2]
காளான் பயிர் செய்யும் முறை தொகு
சதுரப் படுக்கை முறை
வெற்றிட உருளைப் படுக்கை முறை
உயர்ந்த படுக்கை முறை
சதுரப் படுக்கை முறை தொகு
காய்ந்த வைக்கோல் சுமார் 1.5 கிலோ எடுக்க வேண்டும். வைக்கோலை சிறு சிறு துண்டுகளாக (5 செ.மீ) வெட்ட வேண்டும். பின்னர் அதை வெளியே எடுத்து கொதிக்கும் நீரில் சுமார் பதினைந்து நிமிடங்கள் கொதிக்க வைக்க வேண்டும். இதனால் வைக்கோலிலிருக்கும் நோய் கிருமிகளும் அவற்றின் முட்டைகளும் வெப்பத்தால் அழிந்து விடும். பின்னர் தண்ணீரை பிழிந்து நீக்கி விட்டு வைக்கோலை உபயோகப்படுத்த வேண்டும். 1.5 கிலோ வைக்கோலுக்கு சுமார் 300 கிராம் வித்து தேவைப்படும். இதனை வேள

Опубликовано:

 

14 сен 2020

Поделиться:

Ссылка:

Скачать:

Готовим ссылку...

Добавить в:

Мой плейлист
Посмотреть позже
Комментарии    
Далее
How To Grow Mushrooms in a Bucket
12:06
Просмотров 964 тыс.
Mushroom Cultivation Training
21:52
Просмотров 5 млн