அய்யா, சிவ புண்ணியம் இருந்தால் மட்டுமே ஒரு சீவாத்மா பிறப்பு-இறப்பு எனும் மீளாத சுழற்சியிலிருந்து நிலையாக விடுதலை பெற்று, முக்தி அடையலாம். “புல்லாகிப் பூடாய்ப் புழுவாய் மரமாகிப், பல்விருகமாகிப் பறவையாய்ப் பாம்பாகிக், கல்லாய் மனிதராய்ப் பேயாய்க் கணங்களாய், வல்லசுரராகி முனிவராய்த் தேவராய்ச், செல்லா நின்ற இத்தாவர சங்கமத்துள், எல்லாப் பிறப்பும் பிறந்திளைத்தேன் எம்பெருமான், மெய்யே உன் பொன்னடிகள் கண்டின்று வீடுற்றேன்"