Тёмный

தாதனூத்தில் கல்குவாரிக்கு அனுமதி: தமிழக அரசை கண்டித்து தமிழர் விடுதலை களம் மக்களை திரட்டி போராட்டம் 

Nellai Kanna TV
Подписаться 3,3 тыс.
Просмотров 348
50% 1

திருநெல்வேலி மாவட்டம் தாதனூத்து கிராமம் திருநெல்வேலி - மதுரை தேசிய நெடுஞ்சாலையில் அமைந்துள்ளது இந்த கிராமத்தில் சுமார் 300க்கும் மேற்பட்ட வீடுகள் உள்ளது விவசாயம் மற்றும் கூலி தொழிலை நம்பி பகுதி மக்கள் வாழ்ந்து வருகின்றனர். இப்பகுதி அருகே கங்கைகொண்டான் மான்கள் சரணாலயம் அமைந்துள்ளது. இந்த கிராமத்தைச் சுற்றி செயல்பட்டு வரும் கல்குவாரிகளில் ஆழ்துளை அமைத்து வெடிபொருட்கள் பயன்படுத்தி கற்கள் வெட்டி எடுப்பதால் அதிர்வுகள் ஏற்பட்டு வீடுகள் விரிசல் விடும் நிலை இருந்து வருவதாக கூறப்படுகிறது மேலும் வெடி வைக்கும் போது அதிக ஒலி பகுதியில் உள்ள வயதானவர் சிறுவர்கள் கர்ப்பிணி பெண்கள் மிகுந்த பாதிப்புக்கு உள்ளாகின்றனர் அரசின் அனுமதி வழங்கப்பட்ட அளவை விட கூடுதல் அளவிற்கு ஆழ்துளைகள் அமைக்கப்பட்டு கற்கள் வெற்றி எடுக்கப்படுவதாக அப்பகுதி மக்கள் குற்றம் சாட்டி வருகின்றனர் மேலும் அப்பகுதியில் செயல்பட்டு வரும் கல்குவாரிகள் அருகே ரயில்வே இருப்புப் பாதை மான்கள் சரணாலயம் உள்ளிட்டவைகள் இருந்து வருகிறது அதிக அளவிலான தொல்லைகள் அமைத்து வெடி பயன்படுத்துவதனால் நிலத்தடி நீர் குறைந்து விவசாயம் உள்ளிட்ட தேவைகளுக்கு தண்ணீர் பயன்படுத்த முடியாத நிலைக்கு தள்ளப்பட்டுள்ளது எனக் கூறி நெல்லை மாவட்ட ஆட்சித்தலைவரை சந்தித்து புகார் அளித்தும் இதுவரை மாவட்ட ஆட்சியரின் தரப்பில் இருந்து எந்த நடவடிக்கையும் எடுக்கப்படவில்லை இந்த சூழலில் புதிதாக கல்குவாரி அமைப்பதற்கு நடவடிக்கைகள் எடுக்கப்பட்டு வருகிறது சுற்றுச்சூழல் துறை மூலம் புதிய கல்குவாரி அமைப்பதற்கு ஒரு தலைப்பட்சமாக கூட்டம் நடத்தி கல்குவாரிக்கு அனுமதி வழங்குவதற்கான ஏற்பாடுகள் செய்து வருவதை உடனடியாக கைவிட வலியுறுத்தி தாதன்குளம் பகுதியைச் சேர்ந்த மக்கள் சுமார் நூற்றுக்கும் மேற்பட்டோர் ஊரின் நடுவே சாமியான பந்தல் அமைத்து காத்திருப்பு போராட்டத்தில் ஈடுபட்டு வருகின்றனர் அரசு உடனடியாக புதிய கல்குவாரிகளை நிறுவுவதை கைவிட வேண்டும் விதிமுறைகள் மீறி செயல்படும் கல்குவாரிகளை மூட வேண்டும் உள்ளிட்ட கோரிக்கைகளை முன்வைத்து தொடர் போராட்டமும் நடந்து வருகிறது.

Опубликовано:

 

23 окт 2024

Поделиться:

Ссылка:

Скачать:

Готовим ссылку...

Добавить в:

Мой плейлист
Посмотреть позже
Комментарии : 1   
@EsakkimuthuK-rg8vp
@EsakkimuthuK-rg8vp 2 месяца назад
😮
Далее
iPhone Flip станет ХИТОМ!
00:40
Просмотров 99 тыс.
Why is it different from what I thought?
00:15
Просмотров 1,7 млн