ஐயா , இன்று எவன் எவனோ ஆராய்ச்சிகள் பல செய்து, பலவழிகளிலும் செலவு செய்து கண்டு பிடித்து விட்டார்கள் என்பதை ஏதோ புதுமை போன்று இக்காணொளி மூலம் மக்களுக்கு கூறி அறிவுரை வழங்க முயற்சிக்கின்றீர்கள்.மிக்க நன்றி.தொடரட்டும் தங்கள் பணி.ஆனால் ஓர் உண்மையையும் இங்கு கூறி வையுங்கள்.ஆதிகாலம் தொட்டே நம் மூதாதையர் அதாவது " தமிழன்" அறுசுவை உணவு பற்றியும் அவற்றின் பயன்கள் பற்றியும் , 'உணவே மருந்து' என கூறி எம்மை ஆரோக்கியமான முறையில் வாழ வழி வகுத்து தந்துள்ளனர்.ஆனால் நாம்தான் அவற்றை இன்று மறந்து புதுமையான நாகரீக போர்வைக்குள் புகுந்து நம் வாழ்கை முறைமைகளையும், உண்ணும் உணவுகளையும் கைவிட்டு, கலங்கி, நோயுற்று அல்லல் படுகின்றோம்.நம் தமிழர் உணவு முறையை பின்பற்றி வாழ்வோமானால் " நோய் அற்ற வாழ்வே குறைவற்ற செல்வம்" என வாழலாம்.(பூண்டுக்கு மிஞ்சிய மருந்து இல்லை என்பதும் நம் முன்னோரின் கருத்து.)