Тёмный
No video :(

பொன்னார் மேனியனே | தேவாரம் -5 | Ponnar Meniyane | சுந்தரர் | Thevaram| Sundarar 

KEERTHANA MUSIC WORLD
Подписаться 26 тыс.
Просмотров 2,3 млн
50% 1

Namaskaram!!
Here we Present a Beautiful composition of Sundara Moorthy Swamigal, Ponnar Meniyane, Thevaram.
Meaning of the song:
பாடல் எண் : 1
பொன்போலும் திருமேனியை உடையவனே , அரையின்கண் புலித்தோலை உடுத்து , மின்னல்போலும் சடையின் கண் , விளங்குகின்ற கொன்றை மாலையை அணிந்தவனே , தலைவனே , விலையுயர்ந்த இரத்தினம் போல்பவனே , திருமழபாடியுள் திகழும் மாணிக்கம் போல்பவனே , எனக்குத் தாய்போல்பவனே , இப்பொழுது உன்னையன்றி யான் வேறு யாரை நினைப்பேன் ?
பாடல் எண் : 2
கீளின்கண் பொருந்திய கோவணத்தையும் உடுத்து , திருநீற்றையும் திருமேனியிற் பூசினவனே , யாவர்க்கும் தலைவனே , வாள்போலும் கண்களையுடைய உமாதேவியை உடைய ஒரு பங்கினனே , திருமழபாடியில் திகழும் மாணிக்கம்போல்பவனே , அடியேன் , உனது திருவடியையே புகலிடமாக வந்து அடைந்தேன் ; இனி உன்னையல்லாது வேறு யாரை எனக்கு உறவாக நினைப்பேன் ? என்னை நீ ஏற்றுக்கொள் .
பாடல் எண் : 3
மேகம் தவழும் அழகிய மாஞ்சோலை சூழ்ந்த திரு மழபாடியில் திகழும் மாணிக்கம் போல்பவனே , எங்கள் தலைவனே , ` என் தந்தை என் தாய் ` என்று இவர்கள் எனக்கு எள்ளளவும் துணையாக மாட்டார் ; அவர்களைத் துணையாக நினைத்துத்தான் இந்த நிலையில்லாத பிறவியை எடுத்துப் பின் பிறந்து இளைத்துப் போனேன் ; ஆதலின் , இப்பொழுது உன்னையல்லாது வேறு யாரை நினைப்பேன் ?
பாடல் எண் : 4
வண்டுகள் ஆரவாரிக்கின்ற பூஞ்சோலைகள் சூழ்ந்த திருமழபாடியில் திகழும் மாணிக்கம்போல்பவனே , வானுலகில் வாழ்பவனே , உனக்கு அடியவனாகிய யான் அப்பொழுதே உன் அடியார் , அவர்க்கு அடியராயினார் ஆகிய எல்லார்க்கும் தொண்டு செய்தலை மேற்கொண்டுவிட்டேன் ; உன்னோடாயினும் , உன் அடியாரோடாயினும் தொடர்புகொள்ளாத குற்றம் என்பால் இல்லாதவாறு அதனைக் களைந்தொழித்தேன் ; ஆதலின் இனி , யான் உன்னை யன்றி வேறு யாரை நினைப்பேன் ?
பாடல் எண் : 5
ஏழுலகங்களிலும் உள்ள எல்லா உயிர்கட்கும் அறிவாகியும் , அவை விரும்பப்படுகின்ற பொருள்களாகியும் , பண் அமைந்த இனிய தமிழ்ப்பாடலாகியும் , எல்லாப் பொருட்கும் மேலாயும் உள்ள மேலான ஒளியே , நிலம் நிறைந்த பூஞ்சோலைகள் சூழ்ந்த திருமழபாடியுள் திகழும் மாணிக்கம்போல்பவனே , தலைவனே , இப்பொழுது யான் உன்னைத் தவிர வேறு யாரை நினைப்பேன் ?
பாடல் எண் : 6
அடியவர்கட்கு , முடிவில்லாத வாழ்நாளைக் கொடுக்கின்ற , திருமழபாடியில் திகழ்கின்ற மாணிக்கம் போல்பவனே , உனக்கு நான் ஆளாயினபின் , உன்னை யல்லது வேறு யாரை நினைப்பேன் ? எனக்கு இறுதிநாள் வந்து நெருங்கித் துன்புறுத்துவதற்கு முன்பே உனக்கு நான் ஆளாதற்பொருட்டு வந்து உன்னை அடைந்தேனாதலின் , அடியேனையும் உனக்கு உரியவனாக நீ ஏற்றுக் கொண்டருள் .
பாடல் எண் : 7
பொருத்து வாய் உடைய குழையை அணிந்தவனே , சடையின்கண் பிறையைத் தாங்கியுள்ளவனே , வெந்து நிறைந்த நல்ல வெண்டிரு நீற்றை அணிந்தவனே , இடபத்தை ஏறும் ஊர்தியாகக் கொண்ட சதுரப்பாட்டினை உடையவனே , அழகு பொருந்திய சோலைகள் சூழ்ந்த திருமழபாடியுள் திகழும் மாணிக்கம்போல்பவனே , என் தந்தையே , நான் உன்னை யல்லாது வேறு யாரை நினைப்பேன் ?
பாடல் எண் : 8
வெப்பமான விரிகின்ற கதிர்களை யுடைய பகலவன் முதலாக மிகுந்த தேவர் கூட்டங்கள் எல்லாம் , நல்ல மலர்களை இட்டு வழிபட , அவர்கட்கு மிகவும் நேர் நின்று அருள் செய்கின்றவனே , இருள் நிறைந்த அழகிய சோலைகள் சூழ்ந்த திருமழபாடியுள் திகழ்கின்ற மாணிக்கம் போல்பவனே , என் தலைவனே , அடியேன் இப்பொழுது உன்னை யல்லாது வேறு யாரை நினைப்பேன் ?
பாடல் எண் : 9
உயிர்களுக்கு நன்னெறியாய் நிற்பவனே , மலத்தாற் பற்றப்படாதவனே , நீண்ட திருமாலும் பிரமனும் ஏத்தெடுக்கும் தியானப் பொருளே , நற்பண்புடையவனே , கொடிபோலும் இடை யினையுடைய உமாதேவிக்குக் கணவனே , மான் கன்று பொருந்திய அகங்கையை யுடையவனே , திருமழபாடியுள் திகழும் மாணிக்கம் போல்பவனே , அறிவு வடிவானவனே , அடியேன் , இப்பொழுது உன்னை யல்லாது வேறு யாரை நினைப்பேன் ?
பாடல் எண் : 10
அழகு பொருந்திய மூன்று புரங்களும் எரிந்தொழியுமாறு வில்லை வளைத்தவனும் , கச்சால் கட்டப்பட்ட தனங்களை யுடையவளாகிய உமாதேவியுடன் திருமழபாடியுள் விரும்பி வீற்றிருப்பவனும் ஆகிய சிவபெருமானை , புகழ் நிறைந்த திருநாவலூரில் உள்ளார்க்குத் தலைவனாகிய நம்பியாரூரன் பாடிய இத்தமிழ்ப் பாடல்களைப் பாட வல்லவர்களாகிய மக்கள் , சிவலோகத்தில் இனிது வீற்றிருப்பார்கள் .
A Humble Offering by Keerthana Vengatesan.
Let us get soaked by Eternal Music..
Like || Share || Comment || Love
If you like the song, please Remember to SUBSCRIBE to the channel. Like and Share with your Family and Friends.
Make sure you Subscribe and Never miss a Video.
Link: / @keerthanamusicworld
Follow us on Instagram:
/ keerthanavengatesan123
Follow us on Facebook Page:
/ keerthanavengatesan1
#ponnarmeniyane
#thevaram
#sundarar

Опубликовано:

 

26 авг 2024

Поделиться:

Ссылка:

Скачать:

Готовим ссылку...

Добавить в:

Мой плейлист
Посмотреть позже
Комментарии : 1,7 тыс.   
@nayanmarsmaiyam
@nayanmarsmaiyam 2 года назад
அருமை சுந்தரத்தேன் குரலில் சுந்தரர் பாடல்🙏தங்கள் திருவடி வணக்கம் அம்மா 🙏உங்களுள் உள்ள சிவபெருமானின் பொன்னார் மலரடிகளை பணிந்து வணங்கி மகிழ்கிறேன் 🙏திருச்சிற்றம்பலம் 🙏சிவாயநம 🙏🌸🙏🌸🙏🌸🙏🌸🙏🌸🙏
@malarmurugan8335
@malarmurugan8335 2 года назад
🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🌹🌹🌹🌹🌹🌹🌹🌹
@haridhanya2644
@haridhanya2644 2 года назад
Thensuvai kural amma
@ravichandrangodamman241
@ravichandrangodamman241 2 года назад
Ponnarmeniyane meanig
@sekarkannan2887
@sekarkannan2887 Год назад
@@ravichandrangodamman241 y6 hh y6 no no
@subrumaligai6846
@subrumaligai6846 Год назад
@@malarmurugan8335 PS NBC..
@AbiVimal-fh2te
@AbiVimal-fh2te 2 месяца назад
என் பையன்.5 மாத குழந்தை இந்த பாடலை கேட்டால் தாண் தூங்குவாண் ஒரு நாளைக்கு 10 முறை கேட்போம் 🙏
@kumarshanmugam1984
@kumarshanmugam1984 8 месяцев назад
போகும் போது இதை கேட்டு கொண்டே போயிடனும்....சிவ...சிவ...
@MohanK-sl8qz
@MohanK-sl8qz Месяц назад
ஓம் நமச்சிவாயா போற்றி போற்றி போற்றி 🙏🙏🙏🌹🌹🌹🥭🥭🥭❤️❤️❤️
@jeyanthisrinivasan4859
@jeyanthisrinivasan4859 2 года назад
இனியகுரலேஅழகுதமிழே தேவகானம்இதுதானோ அம்மாஅய்யனைஆலவாய் அப்பனைபாடுதாயேபாடு
@shasikalagovindraj3559
@shasikalagovindraj3559 2 года назад
ஆயிரம் ஆண்டுகளுக்கு முன்னால் ஆண்டவனுக்கு ஆலயம் எழுப்பி பாக்கள் இயற்றுவித்து இக்காலத்தில் எம் இதயம் மகிழ அதை பாடும் படிக்கு நின்னை பணித்தது அந்த ஆண்டவனின் அற்புத திருவிளையாடல் ஆகும் ஓம் நமோ சிவாய
@KEERTHANAMUSICWORLD
@KEERTHANAMUSICWORLD Год назад
மிக்க நன்றி அம்மா 🙏
@KEERTHANAMUSICWORLD
@KEERTHANAMUSICWORLD Год назад
ru-vid.com/video/%D0%B2%D0%B8%D0%B4%D0%B5%D0%BE-pieMBzj1THQ.html
@ekanathannl9775
@ekanathannl9775 3 месяца назад
அருமை அருமை அருமை அருமை ...... எத்தனை தடவை செவி கொடுத்து கேட்டாலும் ..... செவுக்கு ... இன்பம் தரும் வகையில் தேன் கலந்து சாப்பிட்டது .... போல் உணர்வுகள்.... மனத்தில் கலந்து விட்டது .... இறைவ..... சிவயா நம!!!!!!!!.... வாழ்க வளமுடன்....தங்கள் குரல் ....
@KEERTHANAMUSICWORLD
@KEERTHANAMUSICWORLD 3 месяца назад
மனமார்ந்த நன்றிகள் ஐயா 🙏🏻🙏🏻🙏🏻🙏🏻
@pvijayaraja4582
@pvijayaraja4582 15 дней назад
உள்ளம் நெகிழும் சிவனின் தேவார பாடல்கள்
@m..sivanarulsivanadiyar2583
@m..sivanarulsivanadiyar2583 5 дней назад
தங்கம் தங்க குரல் வாழ்த்துக்கள் நலமாக வளமாக வாழ்வாங்கு வாழ வாழ்த்துக்கள் அனைத்து உயிர்களும் நலமாக வளமாக வாழ்வாங்கு வாழ வாழ்த்துக்கள்.
@KEERTHANAMUSICWORLD
@KEERTHANAMUSICWORLD 5 дней назад
Thankyou...
@jegajothisammikannu634
@jegajothisammikannu634 Год назад
சாமிநீங்கபுனிதவதித்தாயாரா; இசைஞானிதாயாரா!மங்கையர்கரசித்தாயாரா!அடியேனறியேன்.ஆயினும்தங்திருவடித்தாமரையைவணங்கிக்கொள்கிறேன்பெருமான்தங்களுக்குகஅருகில்இருபாராக!திருவடிவணக்கம்.பாடல்.சிவாயநம!.
@KEERTHANAMUSICWORLD
@KEERTHANAMUSICWORLD Год назад
மிக்க நன்றி ஐயா 🙏🙏🙏🙏என்ன சொல்வதென்று தெரியவில்லை.... எல்லாம் அவன் செயல் 🙏🙏🙏
@venkateshseshadri7910
@venkateshseshadri7910 Год назад
இந்த.தேவாரபாடல்.எனக்கு..ஆரம்பபள்ளியில்.கடவுள்.வாழ்த்தாக.கற்பிக்கப்பட்டது.
@KEERTHANAMUSICWORLD
@KEERTHANAMUSICWORLD Год назад
ru-vid.com/video/%D0%B2%D0%B8%D0%B4%D0%B5%D0%BE-pieMBzj1THQ.html
@ChitraNandakumar-hi8um
@ChitraNandakumar-hi8um 25 дней назад
ஓம்நமச்சிவாய திருச்சிற்றம்பலம் ஓம்நமச்சிவாய திருச்சிற்றம்பலம் ஓம்நமச்சிவாய திருச்சிற்றம்பலம் ஓம்நமச்சிவாய திருச்சிற்றம்பலம் ஓம்நமச்சிவாய திருச்சிற்றம்பலம் 🌹🌹🌹🌹🌹🌹🌹🌹🌹🌹🌹🌹🌹🌹🌹🌹🌹🌹🌹🌹🌹🌹🌹🌹🌹🌹🌹🌹🌹
@mohanasundri4524
@mohanasundri4524 3 месяца назад
கண்களில் தண்ணீர் வருகிறது சிவாய சிவாய❤❤❤❤❤❤❤❤
@jayponkm
@jayponkm 2 года назад
சிவபெருமான் நிச்சயம் குளிர்ந்திருப்பார். தேனெனப்பொழிகிறது உன் குரலம்மா.
@mnmn-bp9sp
@mnmn-bp9sp 2 года назад
அருமையான குரல் வளம் அம்மா.
@KEERTHANAMUSICWORLD
@KEERTHANAMUSICWORLD Год назад
ru-vid.com/video/%D0%B2%D0%B8%D0%B4%D0%B5%D0%BE-pieMBzj1THQ.html
@vasanthakokila4440
@vasanthakokila4440 Год назад
Om namah shivaya namah Om Shanti
@kasthurinataraj3406
@kasthurinataraj3406 2 года назад
நின் பாடலால் எம்மை மெய்மறக்க செய்த என் அன்னையே உன்னை வணங்குகின்றேன் தாயே.
@KEERTHANAMUSICWORLD
@KEERTHANAMUSICWORLD 2 года назад
Romba periya varthaigal amma🙏🙏🙏🙏mikka nanri..
@KEERTHANAMUSICWORLD
@KEERTHANAMUSICWORLD Год назад
ru-vid.com/video/%D0%B2%D0%B8%D0%B4%D0%B5%D0%BE-pieMBzj1THQ.html
@asokrajasok2959
@asokrajasok2959 Месяц назад
அண்ணாமலையாரின்ஆசிர்வாதம்உண்டு
@ChitraNandakumar-hi8um
@ChitraNandakumar-hi8um Месяц назад
ஓம்நமச்சிவாய திருச்சிற்றம்பலம் நன்றி வாழ்த்துக்கள் 🌹🌹🌹🌹🌹🌹🌹🌹🌹🌹🌹
@thirumurugamuruga9346
@thirumurugamuruga9346 Год назад
மழழை குரலில் ஆக அற்புதம் எத்தனை முறை கேட்டாலும் சலிக்காது சத்தியமாக அவன் அருள் உண்டு
@KEERTHANAMUSICWORLD
@KEERTHANAMUSICWORLD Год назад
மனமார்ந்த நன்றிகள் 🙏🙏
@ksathishkumar4320
@ksathishkumar4320 4 месяца назад
தெய்வீக குரல்... ஈசனே உருகி விடுவார்.❤
@KEERTHANAMUSICWORLD
@KEERTHANAMUSICWORLD 4 месяца назад
மனமார்ந்த நன்றிங்க 🙏🏻
@vijayamanimurugesan8504
@vijayamanimurugesan8504 Месяц назад
இனிய குரல் அதை விட அழகு பாடல் வரிகள் 🎉 அற்புதம் 🙏🥰💐
@ksathishkumar4320
@ksathishkumar4320 3 месяца назад
ஓம் நமசிவாய வாழ்க ❤ ஓம் நமசிவாய வாழ்க ❤ ஓம் நமசிவாய வாழ்க ❤
@gunasekaranunion9448
@gunasekaranunion9448 4 месяца назад
இறையருள் கொண்ட ஒருவரால் மட்டுமே இசை தமிழில் இவ்வளவு இனிமையாக பாட முடியும் தமிழ் தாய் உன்னை உச்சி முகர்வால் தாயே 🎉
@KEERTHANAMUSICWORLD
@KEERTHANAMUSICWORLD 4 месяца назад
மனமார்ந்த நன்றிகள் ஐயா 🙏🏻
@manikandane9373
@manikandane9373 9 месяцев назад
ஆறுதல் ,தாலாட்டும் என எந்த சூழ்நிலையலும் மன அமைதி யை தரும் பாடல் இந்த குரலில் அமுதும் கூட....சிவாய நம..
@YamunaRani-ie5hy
@YamunaRani-ie5hy 5 месяцев назад
ஓம் நமசிவாய அருமையான பாடல் வரிகள் மற்றும் அருமையான இசை ❤❤❤
@user-or8jj8zk2k
@user-or8jj8zk2k 3 месяца назад
அம்மையப்பனே வாழ்க வாழ்க🙏✡️🕉️♥️♥️♥️♥️♥️
@neelavathinatarajan8328
@neelavathinatarajan8328 Год назад
மனது கஷ்டப்படும் போதெல்லாம் இந்தப்பாடலை கேட்பேன்மனதுக்குஇதமாஇருக்கும்
@KEERTHANAMUSICWORLD
@KEERTHANAMUSICWORLD Год назад
மனமார்ந்த நன்றிகள் ☺️🙏
@ravik4719
@ravik4719 8 месяцев назад
கீர்த்தனா குரல் . கேட்காமல் இருக்க முடியாது இது உண்மை.... ரசிகை...இந்திரா....
@ravik4719
@ravik4719 8 месяцев назад
❤❤❤😅😅😅😂😂😂
@anbalaganp2930
@anbalaganp2930 21 час назад
இனிமை..தேன் போன்ற குரல்
@kalaimathishanmugam-ew1gi
@kalaimathishanmugam-ew1gi 5 месяцев назад
அருமையான பாடல் இனிமையான குரல் காதில் தேன் பாயுது ஓம் நமசிவாய ஐயனின்‌அருள் என்றும் கிடைக்கும்
@KEERTHANAMUSICWORLD
@KEERTHANAMUSICWORLD 5 месяцев назад
மனமார்ந்த நன்றிங்க 🙏🏻🙏🏻
@r.chinnarasurasur.chinnara3949
@r.chinnarasurasur.chinnara3949 2 года назад
குரலும் இசையும் குறுங்காதில் பெருந்தேனாய்
@KEERTHANAMUSICWORLD
@KEERTHANAMUSICWORLD Год назад
ru-vid.com/video/%D0%B2%D0%B8%D0%B4%D0%B5%D0%BE-pieMBzj1THQ.html
@spdharani6798
@spdharani6798 2 года назад
கண்களில் கண்ணீர் வரச்செய்கிறது . பொறுமை யாக உணர்ந்து பாடிஇருக்க தங்கமே. ஐயா சிவனே போற்றி...
@kasikasi4123
@kasikasi4123 2 года назад
Thalatuuppadal pool uuullathu Ennabeya 🙏🙏🙏🙏🙇🙇
@anbujaga6841
@anbujaga6841 2 года назад
உள்ளம் உருகுகின்றது கண்களில் கண்ணீர் கசிகின்றது சிவாயநம தங்கள் திருவடி வணங்கு கின்றேன்
@shunmugasundaram3908
@shunmugasundaram3908 2 года назад
Om namasivaya thiruchitampalam valkavalamudan
@vasanthakokila4440
@vasanthakokila4440 Год назад
😭😭😭😭😭🙏🙏🙏🙏🙏🙏🙏
@KEERTHANAMUSICWORLD
@KEERTHANAMUSICWORLD Год назад
ru-vid.com/video/%D0%B2%D0%B8%D0%B4%D0%B5%D0%BE-pieMBzj1THQ.html
@kobika287
@kobika287 8 месяцев назад
ஓம் நமசிவாய ஓம் நமசிவாய ஓம் நமசிவாய ஓம் நமசிவாய ஓம் நமசிவாய ஓம் நமசிவாய ❤️🙏❤️🙏❤️🙏😂🙏❤️🙏🙏🙏❤️🙏❤️🙏❤️🙏❤️🙏❤️🙏❤️🙏🙏❤️🙏❤️🙏❤️🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏
@vishalammu1675
@vishalammu1675 Год назад
உன் குரலை கேட்டால் கல் மனமும் கரையும்....எத்தனை முறை கேட்டாலும் கண்ணீர் வழிகிறது....சிவனிடம் அழைத்துச் செல்கிறது...அப்பனின் கருணையை என்னவென்று சொல்வது.... சிவாய நம....
@KEERTHANAMUSICWORLD
@KEERTHANAMUSICWORLD Год назад
மனமார்ந்த நன்றிகள் ஐயா ☺️🙏
@vishalammu1675
@vishalammu1675 Год назад
@@KEERTHANAMUSICWORLD உங்கள் மெசேஜ் வரும் நேரத்தில் கூட நான் பொன்னார் மேனியனே கேட்டுக் கொண்டு இருக்கிறேன்... சிவாய நம 🙏🏻
@dhanalakshmikarunanidhi5787
கேட்க கேட்க இறையின் இனிமை!!!
@veeraramya6404
@veeraramya6404 2 года назад
சிவன் ஓடி வந்துவிடுவார் இந்த இனிய குரலுக்கு... வாழ்த்துக்கள்
@KEERTHANAMUSICWORLD
@KEERTHANAMUSICWORLD Год назад
ru-vid.com/video/%D0%B2%D0%B8%D0%B4%D0%B5%D0%BE-pieMBzj1THQ.html
@vasanthakokila4440
@vasanthakokila4440 Год назад
Om namah shivaya namah Om Shanti
@mangalakumar3127
@mangalakumar3127 Год назад
நிச்சயமாக
@rajann564
@rajann564 Год назад
Sundaramana kelvi. Sundaram
@rajalakshmichairmansamy9130
வார்த்தைகளில்லையம்மா🙏🏼
@ravic2159
@ravic2159 2 года назад
இந்த பாடலை கேட்கும் போது சிவ கடாட்சம் நிறைந்து காணப்படுகின்றன சிவ சிவ திருச்சிற்றம்பலம்....
@KEERTHANAMUSICWORLD
@KEERTHANAMUSICWORLD 2 года назад
Thankyou Ayya🙏🙏
@KEERTHANAMUSICWORLD
@KEERTHANAMUSICWORLD Год назад
ru-vid.com/video/%D0%B2%D0%B8%D0%B4%D0%B5%D0%BE-pieMBzj1THQ.html
@kobika287
@kobika287 7 месяцев назад
ஓம் நமசிவாய ஓம் நமசிவாய ஓம் நமசிவாய ஓம் நமசிவாய ஓம் நமசிவாய
@t.palani6868
@t.palani6868 6 месяцев назад
அருமை. தாலாட்டு போல் இருந்தது. மனத்தின் பாரம் இறங்கியது
@azhagiyachitrambalamudaiyaan
@azhagiyachitrambalamudaiyaan 9 месяцев назад
ஆறுதல் ,தாலாட்டும் . மன அமைதி யை தரும் பாடல். இந்த குரலில் அமுதும் கூட.... சிவாய நம..
@manikandanaathitya4756
@manikandanaathitya4756 2 года назад
கலங்கினேன் அம்மா....பாதம் பனிகிறேன் பனிகிறேன்.அடியேன் குரலக்கு அடிமையானேன் ..அய்யன் அளவிள்ள அருள் பொழிந்திக்கிறான் அம்மா வாழ்க வளத்துடன்........
@KEERTHANAMUSICWORLD
@KEERTHANAMUSICWORLD Год назад
ru-vid.com/video/%D0%B2%D0%B8%D0%B4%D0%B5%D0%BE-pieMBzj1THQ.html
@santhinivasangovind5693
@santhinivasangovind5693 4 месяца назад
ஓம் சிவாய நம ஓம் ஓம் சிவாய நம ஓம் ஓம் சிவாய நம ஓம்.
@ksathishkumar4320
@ksathishkumar4320 2 месяца назад
ஓம் நமசிவாய வாழ்க ❤ ஓம் நமசிவாய வாழ்க ❤ ஓம் நமசிவாய வாழ்க ❤ ஓம் நமசிவாய வாழ்க ❤ ஓம் நமசிவாய வாழ்க ❤
@ramalingamr5316
@ramalingamr5316 2 года назад
தாயே.உங்கள்.குரல்.அருமையாக.உள்ளது.சிவாயநம.வணங்குகிரேன
@KEERTHANAMUSICWORLD
@KEERTHANAMUSICWORLD Год назад
ru-vid.com/video/%D0%B2%D0%B8%D0%B4%D0%B5%D0%BE-pieMBzj1THQ.html
@kalaiarasi1924
@kalaiarasi1924 2 года назад
மிக அருமை.வீட்டில் தீபம் ஏற்றி மனதை ஒருமைப்படுத்தி‌ செவி குளிர இந்த தேவாரப் பாடலைக் கேளுங்கள் ‌வாழ்வில் எல்லா வளமும் மன அமைதியும் கிடைக்கும்.பதிவிட்டவர்க்கு மிக்க நன்றி‌‌ சிவ சிவ ‌திருச்சிற்றம்பலம்
@KEERTHANAMUSICWORLD
@KEERTHANAMUSICWORLD Год назад
Thanku so much🙏🙏
@VasuDevan-lh3xs
@VasuDevan-lh3xs Год назад
P0
@kannammam919
@kannammam919 Год назад
Thank you ma
@KEERTHANAMUSICWORLD
@KEERTHANAMUSICWORLD Год назад
ru-vid.com/video/%D0%B2%D0%B8%D0%B4%D0%B5%D0%BE-pieMBzj1THQ.html
@KEERTHANAMUSICWORLD
@KEERTHANAMUSICWORLD Год назад
ru-vid.com/video/%D0%B2%D0%B8%D0%B4%D0%B5%D0%BE-pieMBzj1THQ.html
@thavaprakasam8989
@thavaprakasam8989 Год назад
அம்மா என் தாயே சிவனே உன் குரலில் தங்கியுள்ளார்
@KEERTHANAMUSICWORLD
@KEERTHANAMUSICWORLD Год назад
ru-vid.com/video/%D0%B2%D0%B8%D0%B4%D0%B5%D0%BE-pieMBzj1THQ.html
@KEERTHANAMUSICWORLD
@KEERTHANAMUSICWORLD Год назад
ru-vid.com/video/%D0%B2%D0%B8%D0%B4%D0%B5%D0%BE-pieMBzj1THQ.html
@user-uj4bn5uy4w
@user-uj4bn5uy4w Месяц назад
மனபாரத்தை இறக்கி மனநிம்மதி தரும் இனிமையான குரல் குழந்தையே நீ பல்லாண்டு வாழ்க
@kingprabhu3557
@kingprabhu3557 2 года назад
என்னை அறியாமல் கண்ணீர் வருகிறது
@KEERTHANAMUSICWORLD
@KEERTHANAMUSICWORLD Год назад
ru-vid.com/video/%D0%B2%D0%B8%D0%B4%D0%B5%D0%BE-pieMBzj1THQ.html
@nagavelnatrajan5740
@nagavelnatrajan5740 Год назад
ஓம் சிவாய நம இந்த இனிமையானகுரலில் தேவாரம் கேட்பவர்கள் என்ன தவம் செய்தோமோ, நன்றி தாயே வாழ்க நீவீர்
@KEERTHANAMUSICWORLD
@KEERTHANAMUSICWORLD Год назад
மனமார்ந்த நன்றிகள் 🙏🙏
@RajeshKumar-tl8gq
@RajeshKumar-tl8gq 2 месяца назад
அற்புதம்... என் மகள் என் சகோதரி...ஒருவர் இசை மூலம்...ஈசனின் இதயத்தை தொடுவது போல் பிரமிப்பு... ❤❤❤❤❤ இத
@girimurugan689
@girimurugan689 2 года назад
நெஞ்சுருகப் பாடியுள்ளார். அன்னாரின் திருவடிகளே சரணம்.
@KEERTHANAMUSICWORLD
@KEERTHANAMUSICWORLD 2 года назад
Mikka nanri ayya...ellam.avan seyal🙏🙏🙏🙏🙏
@KEERTHANAMUSICWORLD
@KEERTHANAMUSICWORLD Год назад
ru-vid.com/video/%D0%B2%D0%B8%D0%B4%D0%B5%D0%BE-pieMBzj1THQ.html
@anbujaga6841
@anbujaga6841 Год назад
சிவமே உன்திருவடி வணங்குகின்றேன்
@user-qw6mm3pd4d
@user-qw6mm3pd4d Месяц назад
Oru like podalamea.... Alagu chlmea
@ramankrishnappan6068
@ramankrishnappan6068 2 года назад
இனிய குரலில் இனிய தேவாரம் சிவன் அருள் பெற்றோம்
@KEERTHANAMUSICWORLD
@KEERTHANAMUSICWORLD Год назад
ru-vid.com/video/%D0%B2%D0%B8%D0%B4%D0%B5%D0%BE-pieMBzj1THQ.html
@natarajanpn6130
@natarajanpn6130 2 года назад
Sivayanama arumai kankalil neerpergugirathu thiruvadivanakkam thiruchitrambalam nalvarthiruvadigalpotri potri
@KEERTHANAMUSICWORLD
@KEERTHANAMUSICWORLD 2 года назад
Thankyou ayya🙏🙏
@manivannancn1844
@manivannancn1844 10 месяцев назад
மீண்டும் மீண்டும் கேட்க தூண்டும் பாடல்
@murjana42
@murjana42 11 месяцев назад
சுத்தமான தமிழ் உச்சரிப்பு.. நன்றி.. செவிக்கு தெனாக உள்ளது.. வாழ்த்துக்கள்.. வாழ்க வளர்க .. வணக்கம்.. 🙏🙏🙏
@selvaperumalnagarajan3354
@selvaperumalnagarajan3354 2 года назад
தேவாரத் தேனுண்டேன். வாழ்க வளமுடன்.
@KEERTHANAMUSICWORLD
@KEERTHANAMUSICWORLD Год назад
ru-vid.com/video/%D0%B2%D0%B8%D0%B4%D0%B5%D0%BE-pieMBzj1THQ.html
@MeikandarSidhantham-rh4rt
@MeikandarSidhantham-rh4rt Год назад
பெருங்கருணை.....செல்லமே......திருவருள்.....
@Vallalar
@Vallalar Год назад
மிக மிக அருமை சிவ சிவ திருச்சிற்றம்பலம்!!!
@KEERTHANAMUSICWORLD
@KEERTHANAMUSICWORLD Год назад
மிக்க நன்றி ஐயா 🙏
@KEERTHANAMUSICWORLD
@KEERTHANAMUSICWORLD Год назад
ru-vid.com/video/%D0%B2%D0%B8%D0%B4%D0%B5%D0%BE-pieMBzj1THQ.html
@samyvp3889
@samyvp3889 Год назад
சிவ சிவ சிவனே கண்களில் நீர் சொரிந்து கொண்டே இருக்கிறது குழந்தாய்
@KEERTHANAMUSICWORLD
@KEERTHANAMUSICWORLD Год назад
எல்லாம் ஈசனின் செயல் ஐயா 🙏🙏🙏🙏
@KEERTHANAMUSICWORLD
@KEERTHANAMUSICWORLD Год назад
ru-vid.com/video/%D0%B2%D0%B8%D0%B4%D0%B5%D0%BE-pieMBzj1THQ.html
@devarajsellam4942
@devarajsellam4942 2 года назад
சிவன் கொடுத்த குரல் தேனை விட அருமை அம்மா வாழ்க வளமுடன் 🙏🙏🙏
@KEERTHANAMUSICWORLD
@KEERTHANAMUSICWORLD Год назад
ru-vid.com/video/%D0%B2%D0%B8%D0%B4%D0%B5%D0%BE-pieMBzj1THQ.html
@KEERTHANAMUSICWORLD
@KEERTHANAMUSICWORLD Год назад
ru-vid.com/video/%D0%B2%D0%B8%D0%B4%D0%B5%D0%BE-pieMBzj1THQ.html
@ayyathuraimurugan4385
@ayyathuraimurugan4385 Год назад
குழந்தை மொழி பாடல் மனம் நெகிழ்ச்சி அடைகின்றது.... நன்றி
@priyasandy7313
@priyasandy7313 2 года назад
Om nama sivaya en nadhu udaya sivane potri thiruchitrambalam ammaiappa vatieswara thayumanavane en ayyane ungal kulanthaiku negal than thunai esane appa
@mnatesan6701
@mnatesan6701 2 года назад
அம்மா தாயே உன் பாடல் கேட்டு கண்ணில் கண்ணீர் ஆறாக ஓடுதம்மா. நீ பல்லாண்டு நலமுடன் வாழவேண்டும் தாயே
@kotteswarana5572
@kotteswarana5572 2 года назад
Manm laitha oru inya devarppadal arumyana kuralil nanry
@arunelakkiya1400
@arunelakkiya1400 Год назад
Very good voice pa
@KEERTHANAMUSICWORLD
@KEERTHANAMUSICWORLD Год назад
ru-vid.com/video/%D0%B2%D0%B8%D0%B4%D0%B5%D0%BE-pieMBzj1THQ.html
@vasanthakokila4440
@vasanthakokila4440 Год назад
Om namah shivaya namah Om Shanti
@sktharun
@sktharun Год назад
​@@arunelakkiya1400 😊veryniceA
@user-wd1ft8gi2f
@user-wd1ft8gi2f 2 года назад
ஓம்சிவாயநம.அடியேனுக்குஇந்தபாடல்ரொம்பபிடிக்குதுஅருமை.அருமை👌👌👌👌👌🌹🙏🙏🙏🙏🙏🌹🙏🙏🙏🙏🙏📿🌹📿சிவசிவ கலா.
@KEERTHANAMUSICWORLD
@KEERTHANAMUSICWORLD Год назад
ru-vid.com/video/%D0%B2%D0%B8%D0%B4%D0%B5%D0%BE-pieMBzj1THQ.html
@Chozhan213
@Chozhan213 8 месяцев назад
🙏தென் தமிழ்நாடுடைய சிவனே 🌹போற்றி.. எல்லா நாட்டவர்க்கும் 🙏இறைவா 🙏தமிழ் கடவுள் சிவனே 🌹போற்றி.. 🙏சரணம்..
@ksathishkumar4320
@ksathishkumar4320 14 дней назад
ஓம் நமசிவாய வாழ்க ❤
@thamilarsim7283
@thamilarsim7283 2 года назад
நமசிவாய வாழ்க திருச்சிற்றம்பலம் அருமையான குரல் வளம் அருமை கண்கலங்க வைத்தது மகிழ்ச்சி அடைகிறேன் நன்றாக வளர்ந்து வரும் உன்னை குருவருளும் திருவருளும் காக்கட்டும்
@vvinothprabu1987
@vvinothprabu1987 2 года назад
IT WAS SO NICE
@mselvaraj3216
@mselvaraj3216 2 года назад
பாதங்களை வணங்குகிறேன்.வாழ்க வளமுடன்.எல்லைஇல்லாஆனந்தம் அளித்தீர்கள். 🙏🙏🙏
@KEERTHANAMUSICWORLD
@KEERTHANAMUSICWORLD 2 года назад
Amma, ivalavu periya vaarthaigal etharuku...Anaithum avan seyal...Om Nama shivaya! Feeling so happy it touched your soul.
@KEERTHANAMUSICWORLD
@KEERTHANAMUSICWORLD Год назад
ru-vid.com/video/%D0%B2%D0%B8%D0%B4%D0%B5%D0%BE-pieMBzj1THQ.html
@subbulakshmiirungolan712
@subbulakshmiirungolan712 Год назад
திகட்டவே இல்லை தாயே, தினமும் கேட்கிறேன், என் பெயரன் கேட்டவுடன் அப்படியே நிதானித்து கவனிப்பான். ஆறு மாத குழந்தை. சுந்தரர் பெருமானே உன் வடிவில் வந்துள்ளாரோ, உன் பொற் பாதங்களுக்கு நாயேன் சரணம் தாயே, வாழ்க பல்லாண்டு. திருச்சிற்றம்பலம்.
@KEERTHANAMUSICWORLD
@KEERTHANAMUSICWORLD Год назад
தங்களின் மனமார்ந்த வாழ்த்துக்களுக்கு மிகவும் நன்றி அம்மா 🙏🙏🙏..... தேவாரம் சிறிய குழந்தையையும் கவர்ந்தது... அந்த ஈசனின் செயல் அம்மா 🙏🙏🙏மிக்க மகிழ்ச்சி அம்மா 🙏🙏🙏
@KEERTHANAMUSICWORLD
@KEERTHANAMUSICWORLD Год назад
ru-vid.com/video/%D0%B2%D0%B8%D0%B4%D0%B5%D0%BE-pieMBzj1THQ.html
@vasukiramesh1575
@vasukiramesh1575 2 года назад
என் தங்கமே உன் குரல் என்னை மெய்மறக்கச் செய்கிறது தாயே. இறையருளால் எல்லா நலமும் வளமும் பெற்று பல்லாண்டு காலம் வாழ்க வளமுடன் 💐💐💐
@thivshalini1115
@thivshalini1115 2 года назад
Yes me too
@lakshmikalirengan2412
@lakshmikalirengan2412 2 года назад
அருமை அருமை இனிய குரல் அனைவரும் பாடக்கூடிய அபூர்வ ராகம்
@KkMani-hr2xw
@KkMani-hr2xw 2 года назад
Maruperavi..suntharar....aanantha Kinnear...
@divyadhanasekaran3540
@divyadhanasekaran3540 2 года назад
வாழ்க வளமுடன் தங்கம்
@r.parthasarathy.2473
@r.parthasarathy.2473 2 года назад
q1
@senthilkumarkumar9395
@senthilkumarkumar9395 Год назад
அற்புதமான இந்த குரல் ஆண்டவன் புகழை பாடுவதில் கேட்கின்ற அனைவரும் சிவனின் அருளை நிச்சயமாக பெறுவார்கள்.வாழ்க பல்லாண்டு.
@skssks8342
@skssks8342 Год назад
கண்ணீர் மல்குதம்மா.... உந்தன் குரல் மூலம் என் வாழ்க்கைமுறை மெதுவாக மாறிக் கொண்டு இருக்கிறது 🙏🙏 உந்தன் இசை பணி சிறக்க அந்த ஆதி சிவன் அருள் என்றும் உனக்கு நிறைந்ததாக இருக்கும் 🙏🌺🌺🙏
@KEERTHANAMUSICWORLD
@KEERTHANAMUSICWORLD Год назад
மிக்க மகிழ்ச்சி ஐயா 🙏🙏🙏தேவாரம் நமது தமிழ் பெருமை 🙏🙏🙏இசையும் தேவாரமும் சேரும் பொழுது அமுதாமாகியது... எல்லாம் ஈசனின் செயல் 🙏🙏🙏
@KEERTHANAMUSICWORLD
@KEERTHANAMUSICWORLD Год назад
ru-vid.com/video/%D0%B2%D0%B8%D0%B4%D0%B5%D0%BE-pieMBzj1THQ.html
@kamalakumar9799
@kamalakumar9799 2 года назад
குழந்தை அணுகுதல் அழகான குரல்
@KEERTHANAMUSICWORLD
@KEERTHANAMUSICWORLD Год назад
மிக்க நன்றி ஐயா 🙏
@KEERTHANAMUSICWORLD
@KEERTHANAMUSICWORLD Год назад
ru-vid.com/video/%D0%B2%D0%B8%D0%B4%D0%B5%D0%BE-pieMBzj1THQ.html
@vigneshperumal4240
@vigneshperumal4240 Год назад
Woww.ladoo kutty. Nice. Tamil.songs
@KEERTHANAMUSICWORLD
@KEERTHANAMUSICWORLD Год назад
Thankyou ayya🙏🙏🙏
@ganeshkrishna9555
@ganeshkrishna9555 Месяц назад
Super sweet voice akka Amma தினமும் உங்க பாட்டை கேட்பார்கள்
@gramasamy5684
@gramasamy5684 2 года назад
மழபாடியுள் மாணிக்கமே! அருமை குழந்தையின் இனிய குரல் வளம் எம் அம்மையப்பன் ஈசனை உணரத் தூண்டுகிறது. குழந்தையும் அவர்தம் குடும்பத்தினரும் மென்மேலும் எல்லா வளமும் நலமும் பெற்று சிறப்புடன் வாழ எம் சிவன் திருமலரடி போற்றுகின்றேன்..🙏🙏🙏
@KEERTHANAMUSICWORLD
@KEERTHANAMUSICWORLD 2 года назад
Thankyou Sir.. Let Shiva bless all of us...
@KEERTHANAMUSICWORLD
@KEERTHANAMUSICWORLD Год назад
ru-vid.com/video/%D0%B2%D0%B8%D0%B4%D0%B5%D0%BE-pieMBzj1THQ.html
@mrameshmrg1573
@mrameshmrg1573 15 дней назад
Om Namah Shivaya Vaazhgha...♥️💐🙏
@sundaramoorthypandiyar5560
@sundaramoorthypandiyar5560 3 месяца назад
அருமையான தெய்வீக குரல்
@velmurugansomasundaram8508
@velmurugansomasundaram8508 Год назад
சுந்தரரின் தேவாரம் எளிமையான மெட்டில் குழந்தையின் அருமயான குரலில் அந்த சிவபெருமானிடமே நம்மைக் கொண்டு சேர்க்கிறது. மெய் சிலிர்க்கிறது. இதுபோல் மற்றுமுள்ள தேவாரப்பதிகங்களையும் எளிய மெட்டில் அமைத்துப் பதிவேற்றம் செய்தால் மிகவும் நன்று! பாராட்டுகள்!
@KEERTHANAMUSICWORLD
@KEERTHANAMUSICWORLD Год назад
Thankyou so much ayya... such support and encouragement keeps her going🙏🙏🙏🙏🙏🙏🙏
@aarumugam0509
@aarumugam0509 2 года назад
ஈசனின் அருள் பரிபூர்ணமாய் உள்ளதம்மா உனக்கு! வினாயகர், முருகன் மட்டும் அல்லாது நீயும் ஈசனின் குழந்தைதான்! வாழ்த்துக்கள் 🌹
@KEERTHANAMUSICWORLD
@KEERTHANAMUSICWORLD 2 года назад
நன்றி ஐயா 🙏
@KEERTHANAMUSICWORLD
@KEERTHANAMUSICWORLD Год назад
ru-vid.com/video/%D0%B2%D0%B8%D0%B4%D0%B5%D0%BE-pieMBzj1THQ.html
@karalamoorthy7329
@karalamoorthy7329 Месяц назад
தாலாட்டு வடிவில் ஆண்டவனை இறைஞ்சும் பாங்கு எனை ஆழ்ந்த சிவசிந்தனையில் ஆழ்த்தியது
@KEERTHANAMUSICWORLD
@KEERTHANAMUSICWORLD Месяц назад
மனமார்ந்த நன்றிகள் 🙏🏻🙏🏻
@jawaharm6424
@jawaharm6424 2 месяца назад
ஓம் நமசிவாய திருச்சிற்றம்பலம்
@siva_muruga_dm_94
@siva_muruga_dm_94 2 года назад
எனையாளும் என் அப்பன் சிவனே துணை🙏🔱
@KEERTHANAMUSICWORLD
@KEERTHANAMUSICWORLD Год назад
ru-vid.com/video/%D0%B2%D0%B8%D0%B4%D0%B5%D0%BE-pieMBzj1THQ.html
@Thennaitv
@Thennaitv 2 года назад
ஆகச்சிறந்த பணி. அம்மா இதற்குனைப் பாராட்டாமல் வேறெதற்கும் வேறவரைப் பாரட்டுவோம் அம்மே ! பிறவியினை கடைத்தேற்றிவிட்டீர்கள். வாழ்க நின்புகழ் ! வளர்க நின் திறன் ! திருச்சிற்றம்பலம்.
@DS-mv5nc
@DS-mv5nc Год назад
nowords
@KEERTHANAMUSICWORLD
@KEERTHANAMUSICWORLD Год назад
ru-vid.com/video/%D0%B2%D0%B8%D0%B4%D0%B5%D0%BE-pieMBzj1THQ.html
@umajeganathan9445
@umajeganathan9445 8 месяцев назад
நெஞ்சமெல்லாம்.விம்முகிறது.பக்தியில்.❤❤❤❤❤
@KEERTHANAMUSICWORLD
@KEERTHANAMUSICWORLD 7 месяцев назад
Thankyou 🙏
@shanthiips5324
@shanthiips5324 Год назад
இப் பதிவு நமக்கு சிவனருள்
@KEERTHANAMUSICWORLD
@KEERTHANAMUSICWORLD Год назад
மனமார்ந்த நன்றிகள் ☺️🙏
@n.velmurugann.velmurugan1728
கள்ளம் கபடம் இல்லா கனிந்த குரல்... சிவ அருள் பெற்ற மகள் வாழ்க பல்லாண்டு 🙏
@KEERTHANAMUSICWORLD
@KEERTHANAMUSICWORLD Год назад
மனமார்ந்த நன்றிகள் ஐயா ☺️🙏அனைவருக்கும் பகிருங்கள் ☺️🙏
@mganesan6019
@mganesan6019 2 года назад
அற்புதம் அற்புதம் பேரற்புதம் ஜயா 🙏🙏🙏 திருச்சிற்றம்பலம்
@KEERTHANAMUSICWORLD
@KEERTHANAMUSICWORLD Год назад
மிக்க நன்றி ஐயா 🙏
@c.kannan4336
@c.kannan4336 Год назад
Arumai kangalil neer valinthugonde irrukirthu Vallthugal Amma ohm nanmashivaya
@girimurugan689
@girimurugan689 Год назад
மிகவும் தெய்வீகமான குரல். நாத்திகனுக்கும் பக்தி வரச்செய்து விடும். தங்களுக்கு இறைவன் அளித்த கொடை இந்த குரல்வளம். அநேக நமஸ்காரம் அம்மா.
@KEERTHANAMUSICWORLD
@KEERTHANAMUSICWORLD Год назад
Thankyou so much Sir for your encouragement...🙏🙏🙏🙏🙏🙏
@KEERTHANAMUSICWORLD
@KEERTHANAMUSICWORLD Год назад
ru-vid.com/video/%D0%B2%D0%B8%D0%B4%D0%B5%D0%BE-pieMBzj1THQ.html
@r.palaniswamy4633
@r.palaniswamy4633 11 месяцев назад
இரத்தினகிரி முருகன் அருள் புரிவான் என்றும் உங்களைக் காத்தருள்வான் வசீகரமான பக்திமயமான தெய்வீகமான அருட் குரல் ஆண்டவன் சிவபெருமான் திருவருட் செல்வி கீர்த்தனாவிற்குத் தந்துள்ள தனி வரம். நாடுவோர் தமக்கு நல்வரங் கொடுக்கும் நல்லீசன் பாடுவோர் தமக்குப் பாடுதற்கு இசைந்த நற்பரிசினை தந்திடும் இறைவன் சிவபெருமான் கீர்த்தனாவிற்கு நீண்ட ஆயுளையும் வற்றாத நற் செல்வ வளங்களை நலங்களை நல்வாழ்வைத் தந்தருள்வான். கீர்த்தனாவின் பெற்றோர்கள் முன் செய்த பெருந்தவப் பயன். உங்கள் குலம் தழைத்து ஓங்கும் அன்புடன் பாம்பன் சுவாமிகள் அன்பன் இரத்தினகிரி முருகதாசன் இரா.பழனிச்சாமி எண்ணூர்
@arunrkm1
@arunrkm1 Год назад
அப்பனே!!!அப்பனே!!!என்னுள் வந்து ...என்னை உருக வைத்தாய்...மீண்டும் உறைய வைத்தாய்.....
@KEERTHANAMUSICWORLD
@KEERTHANAMUSICWORLD Год назад
Nanri ayya🙏🙏🙏
@KEERTHANAMUSICWORLD
@KEERTHANAMUSICWORLD Год назад
ru-vid.com/video/%D0%B2%D0%B8%D0%B4%D0%B5%D0%BE-pieMBzj1THQ.html
@rajeshpdmentertainment6984
@rajeshpdmentertainment6984 3 месяца назад
ஓம் நமச்சிவாய போற்றி போற்றி போற்றி 🪷🪷🌺🪷🌺🌺
@mallikaramesh5833
@mallikaramesh5833 Год назад
எப்பேர்ப்பட்ட குரள். மனதை உருக்குகிறது அம்மா உங்கள் குரல். சிவாய நம.
@KEERTHANAMUSICWORLD
@KEERTHANAMUSICWORLD Год назад
மனமார்ந்த நன்றிகள் 🙏🙏
@rajaaruchamy808
@rajaaruchamy808 Год назад
அருமை கேட்ககேட்க என்னையே மறந்தேன் இந்த பாடலை திணமும் கேட்பேன்
@KEERTHANAMUSICWORLD
@KEERTHANAMUSICWORLD Год назад
மனமார்ந்த நன்றிகள் 🙏🙏🙏🙏
@mukhil8082
@mukhil8082 2 года назад
அழுதே விட்டேன், ஆரூரா தியாகேசா 🙏🙏🙏🙏. இந்த பிள்ளை எல்லா வளமும் பெற்று வாழ்வாங்கு வாழ வேண்டும். வாழ்க வளமுடன் 🙏🙏🙏🙏🙏🙏🙏.
@KEERTHANAMUSICWORLD
@KEERTHANAMUSICWORLD 2 года назад
நன்றி ஐயா 🙏🙏🙏🙏
@KEERTHANAMUSICWORLD
@KEERTHANAMUSICWORLD Год назад
ru-vid.com/video/%D0%B2%D0%B8%D0%B4%D0%B5%D0%BE-pieMBzj1THQ.html
@vasanthakokila4440
@vasanthakokila4440 Год назад
Om namah shivaya namah Om Shanti
@ravidranv2126
@ravidranv2126 Год назад
அருமையான பதிவு கண்களில் இருந்து கண்ணீர் வழிந்தது. மிகவும் அருமையான குரல் வளம் .நான் கேட்கவே புண்ணியம் செய்திருக்க வேண்டும்
@KEERTHANAMUSICWORLD
@KEERTHANAMUSICWORLD Год назад
மிக்க நன்றிகள் ஐயா 🙏ஈசனின் திருவிளையாடல் அல்லவா ☺️☺️🙏🙏
@KEERTHANAMUSICWORLD
@KEERTHANAMUSICWORLD Год назад
ru-vid.com/video/%D0%B2%D0%B8%D0%B4%D0%B5%D0%BE-pieMBzj1THQ.html
@darsanmaxx3749
@darsanmaxx3749 2 месяца назад
அன்பே சிவம்
@Akash-gd2op
@Akash-gd2op 8 месяцев назад
Mesmerized Lord Shiva descends from Mount Kailash.🙏🙏🙏
@SankarSankar-zt4kn
@SankarSankar-zt4kn 2 года назад
தேவதையின் தெய்வீக ராகம்.மனம் சொக்கச்செய்கிறது.இறைவா நின்னைஒருபோதும் மறவேன்.
@KEERTHANAMUSICWORLD
@KEERTHANAMUSICWORLD Год назад
ru-vid.com/video/%D0%B2%D0%B8%D0%B4%D0%B5%D0%BE-pieMBzj1THQ.html
@MsGowsik
@MsGowsik Год назад
காதலாகி கண்ணீர் மல்க ஆத்மாவின் ராகம் ஓம் நமசிவாய
@KEERTHANAMUSICWORLD
@KEERTHANAMUSICWORLD Год назад
மனமார்ந்த நன்றிகள் ☺️🙏
@muthukumar4994
@muthukumar4994 2 года назад
நமசிவாய வாழ்க நாதன் தாள் வாழ்க அமிழ்தினும் இனிய தமிழே என்றும் வாழ்க திருச்சிற்றம்பலம்
@KEERTHANAMUSICWORLD
@KEERTHANAMUSICWORLD Год назад
ru-vid.com/video/%D0%B2%D0%B8%D0%B4%D0%B5%D0%BE-pieMBzj1THQ.html
@manomani7105
@manomani7105 7 месяцев назад
சூப்பர் சூப்பர் சூப்பர் சூப்பர் சூப்பர் ❤❤❤❤
Далее
HOW DID SHE DECIDE TO DO THIS?!
00:27
Просмотров 8 млн