Тёмный

மாட்டு வண்டியில் ஸ்ரீரங்கம் வந்த மக்கள் |Villagers traveling in a cow cart to the Srirangam temple | 

open talk tamil
Подписаться 35 тыс.
Просмотров 7 тыс.
50% 1

#srirangam
#Cowcartride
#tamilnews
#anmeegam
#opentalktamil
#tamilnadu
#தமிழ்செய்திகள்
#தமிழ்நாடு
#opentalk
#anmeegathagaval
#ஆன்மீகம்தகவல்தமிழில்
#srirangamtemple
#karur
#Karurdistrictnews
#perumaltemple
#perumalkovil
#perumal
#குலதெய்வம்
#ஸ்ரீரங்கம்
#கரூர்
மாட்டு வண்டியில் ஒரு ஆன்மீக யாத்திரை
Cow cart ride
Villagers traveling in a cow cart to the Srirangam temple
திருச்சி: 03.06.2022
பாரம்பரியம் மாறாமல் கரூர் மாவட்டத்தில் இருந்து மாட்டு வண்டியில் பயணித்து ஸ்ரீரங்கம் பெருமாளை வழிபாடு செய்யும் கிராம மக்கள்...
ஐந்து ஆண்டுகளுக்கு ஒரு முறை பாரம்பரிய முறைப்படி குலதெய்வ வழிபாட்டுக்கு இரட்டை மாட்டு வண்டி பூட்டி வரும் கிராம மக்கள்
கரூர் மாவட்டம் ஆர்.டி மலை, பாறைகிழம், அழகாபூர், கிராமனம்பட்டி ஆகிய 4 கிராமத்தைச் சேர்ந்த 500க்கும் மேற்பட்ட பொதுமக்கள் இன்று ஸ்ரீரங்கம் வந்து தங்கி பின்னர் சுவாமி தரிசனம் செய்தனர்.
கரூர் மாவட்டம் ஆர்டி மலை கிராமத்தை சேர்ந்த கிராம மக்கள் ஸ்ரீரங்கம் பெருமாளை குலதெய்வமாகக் கொண்டு பரம்பரை பரம்பரையாக வழிபாடு செய்து வருகின்றனர்.
கிராம மக்கள் மூதாதையர் காலந்தொட்டே 5 ஆண்டுகளுக்கு ஒருமுறை பாரம்பரிய மாட்டு வண்டியில் வந்து ஸ்ரீரங்கம் நம்பெருமாளை வழிபட்டுச் செல்வது வழக்கம்.
அதன்படி இரட்டை மாடு பூட்டிய 70 மாட்டு வண்டிகளில் வழிபாட்டிற்குத் தேவையான மற்றும் அன்னதானத்திற்கு தேவையான பொருட்களுடன் தங்களது நாடு தலைக்கட்டு கிராம மக்கள் 500-க்கும் மேற்பட்டோரை அழைத்துக் கொண்டு நேற்று இரவு புறப்பட்டு இன்று காலை ஸ்ரீரங்கம் கோவிலுக்கு வந்தடைந்தனர்.
இவர்கள் அனைவரும் இன்று மேலூர் சாலையில் உள்ள தோப்பில் தங்கி அன்னதானம் வழங்கி பின்னர் கொள்ளிடம் ஆற்றங்கரையில் முடி காணிக்கை செலுத்திவிட்டு பெருமாளுக்கு காணிக்கையினை வழங்கி, நம்பெருமாளையும் தாயாரையும் வழிபாடு செய்துவிட்டு பொதுமக்களுக்கும் அன்னதானம் வழங்கி நாளை மறுதினம் தங்களது யாத்திரையை நிறைவு செய்து, மீண்டும் மாட்டு வண்டிகளில் ஊர்களுக்கு செல்வர்.
கொரானா பெருந்தொற்று காரணமாக கடந்த இரண்டு ஆண்டுகளாக இந்நிகழ்வு தடைபட்ட நிலையில் இன்றைய தினம் வந்து வழிபாடு மேற்கொண்டனர்
5 வருடத்திற்கு ஒரு முறை வைகாசி மாதத்தில் 7பூசாரிகளைக் கொண்டு, குறிகேட்டுவிட்டு பின்னர் ஊர்பெரியவர்கள் தலைமையில் புறப்பட்டு வந்து வழிபாடு நடத்திச் செல்வதாகவும், தங்களது பாட்டன் முப்பாட்டன் காலம்தொட்டே இவ்வாறு வழிபாடு செய்வதனால் கடவுளின் அனுக்கிரகம் கிடைப்பதோடு, சுபிட்சமாக ஒற்றுமையுடன் வாழ்ந்து வருவதாகவும் மகிழ்வுடன் தெரிவித்தனர்.

Опубликовано:

 

16 сен 2024

Поделиться:

Ссылка:

Скачать:

Готовим ссылку...

Добавить в:

Мой плейлист
Посмотреть позже
Комментарии : 2   
@eprohoda
@eprohoda 2 года назад
omg-his is top recording- Open-🎥
@punithavalli8293
@punithavalli8293 2 года назад
S nangalum poitu vanthom .400 vandi
Далее