அம்மா தாமரைத் தண்டு தரி, வெள்ளெருககன்பட்டை திரி வாழைத்தண்டு திரி போன்றவற்றில் கடையில் வாங்கினோம் ஆனால் எப்படி அகல் விளக்கில் போடுவது ன்க்ஷஉ என்று தெரியவில்லை. அதை செய்முறை விளக்கமாக ஒரு பதிவு கொடுக்க வேண்டுகிறோம். நன்றி.
அம்மா காலங்காலமாக அனைவருக்கும் இருக்கும் இந்த சந்தேகத்தை விரைவில் தீர்த்து வையுங்கள் அம்மா. 💰 இறப்பு வீடுகளுக்கு சென்று வந்த பின்னர் உடைகளை நனைத்து குளித்துவிட்டு வீட்டுக்குள் நுழைவோம். நம்மிடம் இருக்கும் காசு மற்றும் பணத்தை என்ன செய்வது?? 💰 பொதுவாக காசுகளை பூஜைக்கு பயன்படுத்தும் போதும், ஆலயங்களில் நெற்றிக்காணிக்கயாக கொடுக்கும்போதும் பலபேர் கைபட்டு எங்கெங்கிருந்தோ வரும் காசு என்பதால் அதை கழுவலாமா?? 💰 பொதுவாக காசுகளை கழுவலாமா??
அம்மா, வீட்டில் உள்ள சுவாமிக்கு நெய்வேத்யமாக நாம் சாப்பிட சமைத்த அன்னத்தையே நாம் சாப்பிடுவதற்கு முன்பு தனியாக எடுத்து வைத்து நிவேதனம் செய்யலாமா?? பச்சரிசி அன்னத்தையே சுவாமிக்கு படைக்க வேண்டும் என்று கூறுகின்றனர். நாம் புழங்கும் அரிசி ஏற்கனவே சமைக்கப்பட்டதாம். இதைப்பற்றி கூறுங்கள் அம்மா
கருடபுராணம் வீட்டில் படிக்கலாமா அம்மா?? கருடபுராணம் என்பது இறந்தவர் வீட்டில் தான் படிப்பர் என்றும், அதைப் படித்தால் கண்டிப்பாக குளிக்கவேண்டும் என்றும் ஒரு கருத்து நிலவுகிறது அம்மா. கருடபுராணத்தில் என்ன சொல்லப்படுகிறது என்று தெரிந்துகொள்ள புத்தகம் வாங்கி வைத்துள்ளோம் அம்மா.
நம் உடலில் பல்லி விழுந்தால் என்ன செய்வது?? நம் உடலில் இந்த இடத்தில் விழுந்தால் இன்ன பலன் என்று இருக்கிறதே. அதை பட்டியலிடுங்கள் அம்மா. ஒருவேளை கெடுபலனாக இருந்தால் என்ன பரிகாரம் செய்வது?
🙏 ஆலயங்களில் சுவாமிக்கு நெற்றியில் நாணயங்களை ஒட்டவைத்து 'நெற்றிக்காணிக்கை' என்று கூறுகிறார்கள். அதன் தத்துவம் மற்றும் தாத்பரியம் என்ன? 🙏 நாம் சுவாமிக்கு நெற்றிக்காணிக்கை தருவதால் என்ன பலன்?? 🙏 சுவாமிக்கு கொடுக்கும் நெற்றிக்காசுகளை நீரில் கழுவிதானே தரவேண்டும்?? பொதுவாக காசுகளை கழுவலாமா?? இதைப்பற்றி ஒரு பதிவு கொடுங்கள் அம்மா.