முட்டை நூடுல்ஸ் | Egg Noodles Recipe in Tamil
English version of this recipe : • Egg Noodles | Hakka No...
தேவையான பொருட்கள்
நூடுல்ஸ் சமைக்க
தண்ணீர்
உப்பு - 1/2 தேக்கரண்டி
ஹக்கா நூடுல்ஸ் - 300 கிராம்
எண்ணெய் - 2 தேக்கரண்டி
முட்டை நூடுல்ஸ் செய்ய
எண்ணெய் - 1 1/2 மேசைக்கரண்டி
நறுக்கிய பூண்டு - 1 மேசைக்கரண்டி
நறுக்கிய இஞ்சி - 1 மேசைக்கரண்டி
வெங்காயம் - 1
குடைமிளகாய் - 1/2
கேரட் - 1
முட்டைகோஸ் - 1 கப்
வினிகர் - 2 தேக்கரண்டி
சோயா சாஸ் - 2 மேசைக்கரண்டி
சில்லி சாஸ் - 2 மேசைக்கரண்டி
வெங்காயத்தாள்
எண்ணெய் - 2 தேக்கரண்டி
முட்டை - 4
மிளகு
#முட்டைநூடுல்ஸ் #EggNoodles #Noodles
செய்முறை
1. முட்டை நூடுல்ஸ் செய்ய நூடுல்ஸை வேகவைக்க வேண்டும், அதற்கு ஒரு பாத்திரத்தில் தண்ணீர் விட்டு கொத்திக்கவிட்டு தேவையான அளவு உப்பு, ஹக்கா நூடுல்ஸை சேர்த்து ஐந்து நிமிடத்திற்கு வேகவைக்கவும்
2. ஐந்து நிமிடத்திற்கு பிறகு நூடுல்ஸை வடிகட்டவும்
3. நூடுல்ஸ் ஒன்றுடன் ஒன்று ஒட்டாமல் இருக்க எண்ணெய் ஊற்றி பரப்பி விடவும்
4. அடுத்து ஒரு கடாயில் எண்ணெய் ஊற்றி சூடேற்றிய பின்பு பொடியாக நறுக்கிய பூண்டு, பொடியாக நறுக்கிய இஞ்சி, மெலிதாக நறுக்கிய பெரிய வெங்காயம் சேர்த்து நிறம் மாறும் வரை வதக்கவும்
5. வெங்காயம் பொன்னிறமானவுடன் இதில் மெலிதாக நறுக்கிய குடை மிளகாய், மெலிதாக நறுக்கிய கேரட், மெலிதாக நறுக்கிய முட்டைகோஸ், வினிகர், சோயா சாஸ், சில்லி சாஸ் ,வெங்காயத்தாள் வெங்காயம் சேர்த்து நன்கு வதக்கவும்
6. இந்த காய்கறிகளை நன்கு வதக்கிய பின்பு இதன் நடுவில் முட்டையை உடைத்து ஊற்றி காய்கறிகளுடன் கலக்கவும்
7. இந்த கலவையில் வேகவைத்த நூடுல்ஸ் சேர்த்து நன்கு கிளறவும்
8. வெங்காயத்தாள் பச்சை பாகத்தை பொடியாக நறுக்கி நூடுல்ஸ் மேல் தூவி பரிமாறவும்
You can buy our book and classes on www.21frames.in/shop
HAPPY COOKING WITH HOMECOOKING
ENJOY OUR RECIPES
WEBSITE: www.21frames.in/homecooking
FACEBOOK - / homecookingtamil
RU-vid: / homecookingtamil
INSTAGRAM - / homecookingshow
A Ventuno Production : www.ventunotech.com
Here is the link to Amazon HomeCooking Store where I have curated products that I use and are similar to what I use for your reference and purchase
17 ноя 2019