எனக்கும் இந்த அனுபவம் உண்டு சார் பத்து வருடங்களுக்கு முன்பு எங்களுக்கு குழந்தை வரம் வேண்டி நிறைய கோவில்களுக்கு சென்றோம் அப்படி ஒரு முறை பழமுதிர் சோலை சென்றபோது ஒரு சித்தர் எங்களை பார்த்து இங்கு வாருங்கள் என்று கூப்பிட்டார் நாங்களும் சென்றோம் எங்களை அமர சொல்லி உங்களுக்கு விரைவில் குழந்தை பாக்யம் கிடைக்கும் என்று சொல்லி தரையில் இருந்த மண் எடுத்து எங்கள் கையில் கொடுத்தார் எங்களுக்கு ஆச்சர்யம் அந்த மண் சந்தனமாக எங்கள் கையில் கொட்டியது அதுமட்டும் அல்ல நீங்கள் மீண்டும் இந்த கோவிலுக்கு வரும்போது உங்கள் சொந்த காரில் வருவீர்கள் என்றார் இவை அத்தனையும் எங்கள் வாழ்க்கையில் நிஜமாகி உள்ளது இப்போது எங்களுக்கு 6 வயதில் ஒரு மகனும் 2 வயதில் ஒரு மகளும் பிறந்துள்ளனர்😊 நாங்கள் சொகுசு கார் சொந்தமாக வாங்கி உள்ளோம் ஆனால் எங்கு தேடியும் அந்த சித்தரை எங்களால் மீண்டும் பார்க்க முடியவில்லை 🙏🙏🙏
என்ன தானம் செய்தாலும் முதலில் மனதை சுத்திகரம் செய்யுங்கள். ஆசையில்லா பிற உயிரையும் தன் உயிர் போல் எண்ணி கண்ணீர் சிந்தி மனதார உளமார செய்யுங்கள். நல்லதே நடக்கும்
வள்ளல்லார் கோவிலில் ஒரு சன்யாசி தாத்தாக்கு சாப்பாடு குடுத்து, தண்ணீர் எடுக்க சென்றேன், அப்போது என்னை அழைத்து நீ 92 வயசு வரைக்கும் சுமங்கலியா இருபாய் என்றார்.
சார் நீங்கள் கூறுவது தவறூ ஒருவரின் பெயனர 7 வயதிற்க்கு பிறகு மாற்றினால் பிரயோஜனமில்லை என் கூறியுள்ளீர். சூப்பர் ஸ்டாருக்கு 40 வயதில் பெயர் மாற்றம் செய்யப்பட்டு அதன் பிறகு தான் அவருக்கு வாழ்க்கையே ஆரம்பிக்கப்பட்டது. இதற்கு மழுப்பாமல் பதில் கூறவும்.
சித்தர்கள் பற்றி விசால் சார் நீங்கள் கூறியது எனக்கு மிகுந்த மனத்தெளிவை ஏற்படுத்தியது.தொடர்ந்து உங்கள் கானொளிகளை கண்டு வருகிறேன்.மிகுந்த பயன் உள்ளதாக அமைந்துள்ளது.வாழ்க வளமுடன்.
எங்களுக்கும் இதே அனுபவம் காஞ்சி மடத்தில் ஏற்பட்டது.நானும் என் கணவரும் அவர் வேலை பிரச்சனையில் குழப்பமாக அமர்ந்திருந்தோம்.அப்போது இருவரும் மகா பெரியவர் அபயம் தரும் மாதிரி உள்ள போட்டோ வாங்கி செல்லவேண்டும் என்று பேசிக் கொண்டு இருந்தோம். அப்போது ஒரு வயதான பெரியவர் தோளில் பையை வைத்து கொண்டு அதிலிருந்து அதே போட்டோவை தந்தார்.பணம் எவ்வளவு என் கேட்டதும் உண்டியலில் காசு போடவும் என் கூறிவிட்டு கண்ணிமைக்கும் நேரத்தில் மறைந்து விட்டார்.நானும் பலமுறை சுற்றி வந்து தேடியும் அவரை மறுபடி காணமுடியவில்லை. அதன் பின்னர் எங்களது எல்லா பிரச்சனை தீர்ந்தது.அவர் சித்தர் வடிவில் வந்து ஆசி வழங்கியதாக அறிந்து கொண்டோம்
விருச்சிக லக்னத்திற்கு பற்றி சொன்னது அப்படியே இருக்கு சார் வாழ்க்கையே வெறுத்துப் போய் வாழ்கிறேன் என் உழைப்பில் எனக்கு எந்த ஒரு பயனும் இல்லாமல் இருக்கிறது எனக்கு ஏதாவது வழி கூறவும் மிக்க நன்றி
மரபணு ஜோதிடத்தில் சிந்திக்கும் வகையில் கேட்கப்படும் கேள்விகளுக்கு சிறப்பாக விடையளித்து ஜோதிடத்தில் மறுமலர்ச்சி ஏற்படுத்திவரும் திரு.விஷால் லோகேஷ்வரன் அவர்களை எவ்வளவு பாராட்டினாலும் தகும்.
🙏SirAbroad MBA study panlama?Asc-Mithuna-(Punarposam1).Leo-Ma(Poram3)&Ra(Magham2). Thula-Su&Ve(Swati3).Vrichagam - Me(Anusam1).Kumba- Ju&moon), Ke(Avitam4).Mesha- Sa(Aswi2). Now sani dasa, rahu buti
Sir I new followers tna astrology Vishal sir tna astrology class romba enakku putikum sir naan tna astrology class followers pannuren sir you astrology class video enakku pokkisam sir