தனுஷ் நீங்கள் காணொளி ஆரம்பிக்கும் வசாவிளான் மத்திய கல்லூரியில் தான் நான் விவசாய விஞ்ஞானப் பிரிவில் உயர்தரம் (AL) கற்றேன். ஆரம்பத்தில் பேருந்து அல்லது தட்டிவானில் செல்வேன். பின்னர் மிதியுந்தில் சென்றேன். பண்டத்தரிப்பு.விளான். அளவெட்டி.அம்பனை. தெல்லிப்பழை.கட்டுவன் ஊடாக வசாவிளான் சென்றடைவேன். அந்த ஐயா கூறியது போல் வசாவிளான் சந்தியில் நிறைய கடைகள் இருந்தது. அருமையான செம் மண் நிறைந்த இடம். இன்னும் நிறைய எழுதலாம். கோயில் சுற்றி காட்டும் போது என் நெஞ்சம் படபட என அடித்தது செருப்பு இல்லாமல் இப்படியான இடங்களுக்கு செல்ல வேண்டாம் என் அன்புக்குரிய தனுஷ். பதிவிற்கு நன்றி. நான் கல்வி கற்ற ஆண்டு 1980-1982
வசாவிளான் சந்தியில் இறங்கி அதாவது நவாலி மானிப்பாயில் இருந்து வசாவிளான் போகும் பேரூந்தில் எனது தந்தையார் தினமும் பயணம் செய்து அங்கிருந்து பலாலி விமானநிலையத்தில் வேலை செய்யச் சென்று இருந்த காலத்தை மீள இரைமீட்டிப் பார்க்கின்றேன் . அது ஒரு பொற்காலம் . எனது தந்தையார் திரு நமசிவாயம் அங்கு cicil aviation department இல் radio engineer ஆக பலகாலம் கடமை ஆற்றியவர் . ❤❤❤
ஜனாதிபதி அணுர சகல இன மக்களையும் சம உரிமையோடு வாழ வைக்க கூடிய ஒரு தலைவர். உங்கள் வாக்குகளை இவ்வளவு காலமும் இந்த பிரச்சனைகளை வைத்து அரசியல் செய்து ஏமாற்றியவர்களிக்கு வழங்காமல் NPP அரசுக்கு ஆதாரவாக வழங்குங்கள். அரசு பலமாக அமையும் போது மேலும் பல சட்டங்கள் திருத்தப்பட்டு அனைவருக்கும் சிறந்த எதிர்காலம் அமையும். 🧭✅