Тёмный

64 தரித்திர நிலைகளையும் களையும் ஸ்ரீ ஜேஷ்டா தேவி(கோ மகள்) வழிபாடு 

Sri Agasthiyar Sri Lobhamatha Agasthiyar
Подписаться 9 тыс.
Просмотров 23 тыс.
50% 1

ஜேஷ்டா தேவி வீட்டில் வழிபடலாமா :-
• ஜேஷ்டா தேவியை வீட்டில்...
தினமும் காலையில் எழும்போது சொல்ல வேண்டிய துதி :-
• தினமும் காலையில் எழுந்...
ஜேஷ்டா தேவி போற்றி துதிகள் :-
• ஸ்ரீ ஜேஷ்டா தேவி போற்ற...
ஜேஷ்டா தேவி போற்றி துதிகள் :-
• ஸ்ரீ ஜேஷ்டா தேவி போற்ற...
ஸ்ரீ வாத்தியார் மஹாராஜ் கி ஜெய்
🔯 ஜேஷ்டா விரதம் மூன்று நாட்களுக்கு (பொதுவாக ஆவணியில்) அனுஷ்டிக்கப்பட்டு அனுஷம், கேட்டை, மூலம் ஆகிய மூன்று நாட்களுக்கு நிரவுவதாம்🔯
ஸ்ரீ ஜேஷ்டா தேவியை வீட்டில் வழிபடலாம். அதில் எந்தவித ஐயமும் வேண்டாம்
ஸ்ரீஜேஷ்டா தேவி போற்றித் துதிகள்
(சனீஸ்வர பகவான் ஸ்ரீஜேஷ்டாதேவியை சுஜனி என்ற தேவமொழியில் ஓதி வணங்கிய துதியை தமிழ் மொழியில் அருளியவர் ஸ்ரீசதாதப சித்த ஈச பிரான் ஆவார்)
1. ஓம் க்லீம் ஐங்கரன் அவணியாய் போற்றி
2. ஓம் க்லீம் அடைக்கலம் அருள் அன்னையே போற்றி
3. ஓம் க்லீம் சிவனருள் இனிதருள் சியாமளா போற்றி
4. ஓம் க்லீம் ஆசை அறுப்பாய் போற்றி
5. ஓம் க்லீம் மும்மலம் நீக்கும் மூலதேவியே போற்றி
6. ஓம் க்லீம் பாற்கடல் பனித்த பைந்தளிர் போற்றி
7. ஓம் க்லீம் சுயம்வர சூட்சும சுந்தரி போற்றி
8. ஓம் க்லீம் சுரபி முலைப்பால் சுவையே போற்றி
9. ஓம் க்லீம் இணைகரம் ஓர்கரம் உவந்தாய் போற்றி
10. ஓம் க்லீம் ஆதவன் செஞ்சுடர் அருட்குடை போற்றி
11. ஓம் க்லீம் நாமம் பதிக்கும் நல்லாள் போற்றி
12. ஓம் க்லீம் சந்தியா வந்தன தாரகை போற்றி
13. ஓம் க்லீம் மூலாதார முப்புரி முனிநிழல் போற்றி
14. ஓம் க்லீம் ஆறாதாரம் அமர்தீ அருளே போற்றி
15. ஓம் க்லீம் தினகரன் கனல்மேவும் வெஞ்சுடர் போற்றி
16. ஓம் க்லீம் அங்காரகனுக்கு அருள் அம்மையே போற்றி
17. ஓம் க்லீம் நீலோத்பலம் நயந்த நிர்மலா போற்றி
18. ஓம் க்லீம் முத்திக்கு வித்தே முழுமதி போற்றி
19. ஓம் க்லீம் நித்திய திருவடி நீங்காய் போற்றி
20. ஓம் க்லீம் நிலமளந்தான் நல்லுறவே போற்றி
21. ஓம் க்லீம் தீர்க சுமங்கலித் தாயே போற்றி
22. ஓம் க்லீம் வரம்பிலா வரமருள் வனிதா போற்றி
23. ஓம் க்லீம் உள்ளம் உவக்கும் உண்மை போற்றி
24. ஓம் க்லீம் துன்பத்திடை துணை வரும் தோணி போற்றி
25. ஓம் க்லீம் அறிதுயிலான அருமருந்தே போற்றி
26. ஓம் க்லீம் வழித் துணை நீயே தோளா மணியே போற்றி
27. ஓம் க்லீம் ஆனந்த பைரவி அமுதே போற்றி
28. ஓம் க்லீம் ஆணி பொன்னம்பலத்து அற்புதமே போற்றி
29. ஓம் க்லீம் சுந்தர வடிவழகி சூலினி போற்றி
30. ஓம் க்லீம் சாட்சியானவளே சத்தியமே போற்றி
31. ஓம் க்லீம் இந்திரன் போற்றும் சந்திர பதம் போற்றி
32. ஓம் க்லீம் தன்னிலை மறைக்கும் தயாநிதி போற்றி
33. ஓம் க்லீம் என்னிலை எனக்கருள் எந்தாய் போற்றி
34. ஓம் க்லீம் எண்ணம் வண்ணமாக்கும் ஏந்திழை போற்றி
35. ஓம் க்லீம் சித்சபையின் நர்த்தனமே சிந்தாமணி போற்றி
36. ஓம் க்லீம் குருவருள் திருவருள் நினதருள் போற்றி
🌀 தியாகவல்லி, தியாகஜோதி என்று சித்தர்களால் போற்றப் பெறும் *ஜேஷ்டாதேவி வழிபாடு 1⃣*🌀
🙏 வாத்தியார் அருளுரையிலிருந்து
தேன் துளிகள் 🛐
🌷ஜேஷ்டாதேவி வழிபாட்டுக்கான ஜேஷ்டா விரத நாள்
🌷கேட்டை நட்சத்திரம் ஜேஷ்டாதேவிக்கு மிகவும் ப்ரீதியான தினமாகும்.
🌷அனுஷ நட்சத்திர நாளில் ஜேஷ்டா தேவியை கும்பத்தில் ஆவாஹனம் செய்து
🌷கேட்டை நாளில் பூஜித்து
🌷மூல நட்சத்திர நாளில் கடல், ஆற்றில், குளத்தில் தீர்த்தத்தை சேர்த்து தீர்த்தவாரி உற்சவத்தை நடத்துவார்கள்
🌷குறைப் பிரசவம், குழந்தைப் பேறின்மை, குழந்தை இறந்து பிறத்தல் போன்றதான சந்தான தோஷ, தரித்திரங்களையும் தீர்க்க வல்ல விரதமிது.
🌷அட்ட தரித்திரங்களையும் களைய வல்ல இத்தகைய ஜேஷ்டா விரத பூஜையை எட்டியத்தளியில் அக்காலத்தைய ராஜாக்கள் கடைப்பிடித்தனர்.
🌷பஞ்ச காலத்தில் தம் நாட்டு மக்கள் சமுதாயத்தை வாட்டிய அஷ்ட தரித்திரங்களுக்கும் ஜேஷ்டாதேவிப் பூஜைப் பலன்கள் மூலம் மன்னர்கள் தக்க தீர்வையும் நிவர்த்தியையும் பெற்றார்கள்
🙏🏽நன்றி :- *ஸ்ரீ அகஸ்திய விஜயம், ஜூலை 2011
இல்லத்தில் ஸ்ரீஜேஷ்டாதேவியை வழிபட விரும்பினால் அவர்கள் குறைந்தது ஒரு வருடமாவது (300 நாட்களுக்குக் குறையாமல்) காலையில் எழுந்தவுடன் கரதரிசனம் செய்து உத்தாதலக மகரிஷியை வழிபட்டிருக்க வேண்டும். ஸ்ரீசதாதப சித்தர் அருளிய ஸ்ரீஜேஷ்டாதேவி துதியை குறைந்தது 300 தடவை ஓதி வழிபட்டவர்களும் இல்லத்திலேயே ஸ்ரீஜேஷ்டாதேவியை வழிபடும் தகுதியைப் பெறுகிறார்கள்.
சுத்தமான நல்லெண்ணையால் 36 அகல் விளக்கு தீபங்களை ஏற்ற வேண்டும். இந்த 36 தீபங்களும் திசைக்கு ஒன்பது தீபங்களாக இருக்குமாறு அமைத்துக் கொள்ள வேண்டும். அதாவது கிழக்கு திசையை நோக்கி மூன்று வரிசையில் மூன்று தீபங்களையும். அதே போல தெற்கு, மேற்கு, வடக்கு திசைகளையும் நோக்கி தீபங்களை ஏற்றி அந்த 36 தீபங்களின் நடுவில் பச்சரிசி மாவால் ஹிருதய கமல கோலத்தையோ அல்லது ஸ்வஸ்திக் சக்கரத்தையோ வரைந்து கொள்ள வேண்டும்

Опубликовано:

 

10 сен 2024

Поделиться:

Ссылка:

Скачать:

Готовим ссылку...

Добавить в:

Мой плейлист
Посмотреть позже
Комментарии    
Далее
АХХАХАХАХАХАХАХАХ
00:16
Просмотров 185 тыс.