✨️❌️படம் இன்னைக்கு தான் பாத்தேன். 19.01.2024 .. எதிர்பார்க்காத கிளைமாக்ஸ் .. ஆனா படத்தில சில இடங்கள்ல லோஜிக் அவ்ளோ இல்ல. இத படமா மட்டும் பாத்தா நல்லா இருக்கு. ஆனா கிளைமாக்ஸ்ல இப்டி தான் நடக்கும்னு எதிர்பாக்க முடீல. படத்தில சீதா ஊமை என்றதுக்கு ஏதாவது அதிர்ச்சியான செய்தி நடந்தா தான் சீதா குணப்படுவா என்றதது கொஞ்சம் ஓவரா இருக்கு. இதுக்கு வேற மாதிரி ஏதும் பண்ணி இருக்கலாம். பாடல்கள் சுமார்தான். அதிலும் "ஆயிரம் பூக்கள் மலரட்டும்" னு சுசீலா அம்மா பாடுறது றொம்ப இனிமையான இருந்தீச்சு. படத்தில சீதாவோட நடிப்பு றொம்ப சுமார் தான். மோகன் அருமையா நடிச்சிருக்காரு. மத்தும்படி படம் நல்லா இருக்கு. என்னோட ரேட்டிங் 7.3/10