Тёмный

Adaiyalam Yeralam | Naatpadu Theral - 07 | Vairamuthu | Vagu Mazan | Anthony Daasan | Selvakannan 

Vairamuthu Official
Подписаться 121 тыс.
Просмотров 609 тыс.
50% 1

In this melancholic folk song, he recollects their landmarks of love, as she parts away married to a stranger.
கல்யாணப் புடவையில் கண்ணீரைத் துடைத்துக் கொண்டே தன் காதல் நினைவுகளைக் கடந்து போகிறாள் கல்யாணப் பெண் ஒருத்தி. காதலர்களின் பழைய காதல் அடையாளங்கள் வழியெல்லாம் வலம் வருகின்றன.
*
Naatpadu Theral is a 100 song project by Kavipperarasu Vairamuthu. 100 Composers - 100 singers - 100 Directors.
கவிப்பேரரசு வைரமுத்துவின் நாட்படு தேறல் 100 பாடல்கள் திட்டம். 100 இசையமைப்பாளர்கள் - 100 பாடகர்கள் - 100 இயக்குநர்கள். வெவ்வேறு உள்ளடக்கங்களில் உலகத்தின் எல்லாப் பொருள் குறித்தும் பாடப்படும் பாடல்கள்.
*
Song : Adayaalam Aeraalam
Lyricist: Vairamuthu
Composer: Vagu Mazan
Singer : Anthony Daasan,Vagu Mazan
Director : Selvakannan
Produced by : Vairamuthu
Video Crew :
Artist : Priyadharshan Jerry , Subhapriya Malar
Video Credits :
Dop : P.Chelladurai
Editor : Sudharsan , Selvam
Assistant Cinematographer : Lokesh , Rajasehkar
Choreographer : Vishnu Vimal
Colorist : Babu (Knack Studio)
Drone : Udhay
Song Composed, Arranged, and Produced by Vagu Mazan
Musicians :
Nadaswaram : Padmanaban
Guitars and Bass : Vagu Mazan
Additional programming - Vinu Uday
Music Advisor - Vaishnavi Kannan
Recorded at - D studio, Chennai
Sound Engineers - Vaishnavi Kannan, Gowtham Raj
Mixed by - Vagu Mazan
Mastered by - S.Sivakumar
*
Music Distrubution Partner : Believe Digital
PRO : Nikil Murukan
Office Administration : P.Baskaran, Kesavan Vellaichamy
Line Production : Kanaa Ads
*
பாடல் வரிகள் :
அடையாளம் ஏராளம்
ஆளெங்க? பேரெங்க?
நெனப்பிருக்கு நெஞ்செல்லாம்
நீயெங்க? நானெங்க?
கும்பி எரியுதடி
கொந்தளிக்கும் எம்மனசில்
தும்பி பறக்குதடி
தோணுதடி பழையகதை
அடையாளம் ஏராளம்
ஆளெங்க? பேரெங்க?
நெனப்பிருக்கு நெஞ்செல்லாம்
நீயெங்க? நானெங்க?
கும்பி எரியுதய்யா
கொந்தளிக்கும் எம்மனசில்
தும்பி பறக்குதய்யா
தோணுதய்யா பழையகதை
*
மின்னல் வெட்டும் ராத்திரியில்
சன்னல் பக்கம் நீஅழைக்க
அந்நேரம் பாத்து
அஞ்சாறு நாய் கொலைக்க
வெறிச்சோடிப் போயிருந்த
வீதியில நான்விழுந்து
தெறிச்சோடிப் போனதுக்குத்
தெருவிளக்கு அடையாளம்
சொட்டாங்கல்லு ஒண்ணு - எந்
தொடைப்பக்கம் தவறிவிழ
கல்லெடுக்கும் சாக்குல நீ
கள்ளத்தனம் பண்ண
ஆடி விழுந்ததுக்கும்
ஆளவிடு சாமியின்னு
ஓடி ஒளிஞ்சதுக்கும்
ஓடைக்கரை அடையாளம்
*
சீலகட்டத் தெரியாத
சிறுமியின்னு பாக்காம
வேளகெட்ட வேளையில
வெறிகொண்டு நீயணைக்க
மாமான்னு மிரண்டதுக்கும்
மணமாலை கேட்டதுக்கு
ஆமான்னு சொன்னதுக்கும்
அம்மன்கோயில் அடையாளம்
ஊருக்கே தெரியாம
யாருக்கோ பெண்டாகிக்
குதிரைவண்டி ஏறிக்
கொடிக்கால் கடக்கையில
மடிவிழுந்த கண்ணீரு
மழையாகிப் போனதுக்கு
இடிவிழுந்த ஆலமரம்
இன்னைக்கும் அடையாளம்
*
AdaiyaaLam aeraaLam
aaLenga? paerenga?
nenappirukku nenjellaam
neeyenga? naanenga?
kumbi eriyudhadi
kondhaLikkum emmanasil
thumbi paRakkudhadi
thoaNudhadi pazhaiyahadhai
adaiyaaLam aeraaLam
aaLenga? paerenga?
nenappirukku nenjellaam
neeyenga? naanenga?
kumbi eriyudhayyaa
kondhaLikkum emmanasil
thumbi paRakkudhayyaa
thoaNudhayyaa pazhaiyahadhai
*
minnal vettum raathiriyil
channal pakkam neezhaikka
annaeram paathu
anjaaRu naay kolaikka
veRichoadip poayirundha
veedhiyila naanvizhundhu
theRichoadip poanadhukkuth
theruviLakku adaiyaaLam
chottaangallu oNNu - en
thodaippakkam thavaRivizha
kalledukkum chaakkula nee
kaLLathanam paNNa
aadi vizhundhadhukkum
aaLavidu chaamiyinnu
oadi oLinjadhukkum
oadaikkarai adaiyaaLam
*
cheelahattath theriyaadha
chiRumiyinnu paakkaama
vaeLahetta vaeLaiyila
veRihoNdu neeyaNaikka
maamaannu miraNdadhukkum
maNamaalai kaettadhukku
aamaannu chonnadhukkum
ammangoayil adaiyaaLam
oorukkae theriyaama
yaarukkoa peNdaahik
kudhiraivaNdi aeRik
kodikkaal kadakkaiyila
madivizhundha kaNNeeru
mazhaiyaahip poanadhukku
idivizhundha aalamaram
innaikkum adaiyaaLam
***
© 2021 Vairamuthu
#Adaiyalam_Yeralam #Vairamuthu #New_Tamil_song

Опубликовано:

 

23 сен 2024

Поделиться:

Ссылка:

Скачать:

Готовим ссылку...

Добавить в:

Мой плейлист
Посмотреть позже
Комментарии : 535   
@santhanamr7005
@santhanamr7005 3 года назад
ஞாயிறு மதியம் கறி சோற்றுக்கு இருக்கும் ஆவலை விட கவிஞரின் வரிகளுக்கு மனம் ஏங்குகிறது😍😘
@tamilarasan5901
@tamilarasan5901 3 года назад
காதலிக்காதவர்கள் இந்தபாடலைகேட்டாலே நெஞ்சம் கலங்கும் காதலித்து பிரிந்தவர்கள் கேட்டால் என்னநிலமை நெஞ்சத்தை கல்லாக்கிகொண்டுதான் கேட்கவேண்டும் வாழ்க கவிஞர்
@marisk977
@marisk977 3 года назад
வெறிச்சோடிப் போயிருந்த வீதியில நான்விழுந்து தெறிச்சோடிப் போனதுக்குத் தெருவிளக்கு அடையாளம் 👌👌👌...
@VasanthKumar-jm2ni
@VasanthKumar-jm2ni 3 года назад
Jjhhf up
@masaladance2445
@masaladance2445 3 года назад
@@VasanthKumar-jm2ni wkwkakaskskskwkskskska9eksZksssskAksksi
@shakilaarivu4462
@shakilaarivu4462 3 года назад
சூப்பர் 🌹
@prasanthvellingiri8339
@prasanthvellingiri8339 3 года назад
Might have happened for many
@jeyabaljb1600
@jeyabaljb1600 3 года назад
மடிவிழுந்த கண்ணீரு மழையாகி போனதுக்கு இடிவிழுந்த ஆலமரம் இன்னைக்கும் அடையாளம்... என்னா வரிகள் ஐயா இது ❤️💞 "காதலுக்கு அடையாளம் கவிதைகள் என்றால், கவிதையின் அடையாளம் நீங்கதான் ஐயா"... இந்த ஒரு படைப்பு விட்டுச்சென்ற காதலிக்கும் தொட்டுச்சேரா காதலுக்கும் மிகப்பெரும் அடையாளம்.. அருமையான படைப்பு ❤️💞💕❤️
@தமிழ்வணக்கம்-ய4வ
இயக்குனர் செல்வகண்ணன்தன் திறமையை நெடுநல்வாடையில் நிரூபித்தார். மீண்டுமொருமுறை இந்தபாடலின் மூலம்தான் சிறந்தகிராமிய இயக்குனர் என்பதை நிரூபித்து விட்டார்
@sakthisivan7539
@sakthisivan7539 3 года назад
நரைபூத்த நாற்பதிலும்..காதல் நுரைபூத்து வழியுதய்யா.. உறைபோட்ட மோர்போல ..காதல் உள்ளுக்குள் சிலிர்க்குதய்யா. மல்லிகை கொடிபோல மனதுக்குள் படர்ந்தவளை.. கிள்ளி பறித்துப்போனான் கீழநாட்டு கருத்தமகன்.. நந்தவனம் பட்டுப்போக.. நாட்கள் பல செத்துப்போக.. நாட்படு தேறலிலே..என் நந்தவனம் பூக்குதய்யா.. ..வாழ்த்த வயதில்லை ஐயா.. வணங்குகிறேன் உம்மையும்,தமிழையும்...
@priyasakthivel9126
@priyasakthivel9126 3 года назад
என்னை அடிமையாகி உங்களின் இன்னொரு படைப்பு❤️❤️ஓவ்வொருவருடைய புதைக்கப்பட்ட முதல் காதலை தோண்டி எடுத்து விட்டீர்கள் ஐயா... ஒவ்வொரு வரியும் புதைக்கப்பட்ட கதறல்ககளையும் நினைவூட்டுகிறது ..... தமிழின் தலைமகன் நீங்கள்.... ❤️
@bloodyatheist.7697
@bloodyatheist.7697 3 года назад
நீ கெட்டவன்னு செல்றளவுக்கு இங்க யாரும் ஒழுங்கு இல்ல. ஒழுக்கத்தை அடுத்தவர்களிடம் எதிர்பார்க்கும் உலகம். வைரமுத்து ❤️❤️❤️
@tamilmotivationalsongs6642
@tamilmotivationalsongs6642 3 года назад
First Likes, next dha watch. அந்தளவுக்கு காதல் எனக்கு, இந்தக் கவிஞன் மீது.
@thebrandbrothers9930
@thebrandbrothers9930 3 года назад
unmai than bro....
@sikkandarbatcha4047
@sikkandarbatcha4047 3 года назад
Me too bro...
@தமிழ்வணக்கம்-ய4வ
கும்பி எரியுதடி கொந்தளிக்கும் என் மனசில், தும்பி பறக்குதடிதோணு தடி பழையகதை காதலின் அழியாத நினைவுகள். கவிப்பேரரசு வைரமுத்துவால் மட்டுமே வரிகளால் மனதை மொழிபெயர்க்க முடியும்
@shifasdiary9672
@shifasdiary9672 3 года назад
I'm
@dev_farmhouse
@dev_farmhouse 3 года назад
ஐயா கவிஞரே நீர் வாழ்ந்த காலத்தில் நாங்கள் வாழ்ந்தோம் -என்பதே எங்கள் அடையாளம்......🙏
@tamilsuvinth86
@tamilsuvinth86 3 года назад
Arumai sago
@arunaKadhan
@arunaKadhan 3 года назад
🎉💐🙏👌
@rackla_tamilan
@rackla_tamilan 3 года назад
மடி விழுந்த கண்ணீரு மழையாகிப்போனதுக்கு இடி விழுந்த ஆலமரம் இன்னைக்கும் அடையாளம்
@vanithathangaraj9363
@vanithathangaraj9363 3 года назад
காதலை சூழ்நிலைகளுக்கும்,காலத்திற்க்கும் காணிக்கையாக்கி நினைவுளை மட்டும் சுமந்து கொண்டிருக்கும் ஒவ்வொருவருடைய வார்தைகளையும்,குமுறல்களையும் கூறும் வரிகள். காதல் மட்டுமல்ல நாம் விட்டு வந்த பல உறவுகளின் நினைவற்க்கு கூட்டி செல்லும் நினைவின் வரிகள்.
@mohamedriyas2761
@mohamedriyas2761 3 года назад
எங்கள் தமிழ் நாட்டின் அடையாளம் வைரமுத்து அய்யா நீங்கள் we support vairamuthu sir
@ramamoorthiadhiseshan9571
@ramamoorthiadhiseshan9571 3 года назад
Iam not sure his comment is appropriate in present context vairamuthu is withdoubt a great lyrics creator for cinema but,,,,,,,,?,,,
@skinsence_misba2412
@skinsence_misba2412 3 года назад
@@ramamoorthiadhiseshan9571 jk
@mahalakshmi1661
@mahalakshmi1661 3 года назад
அருமையான பாடல் வரிகள் இதில வர கூட அனைத்து வார்த்தைகளும் என் வாழ்க்கைகு பொருந்தும் 😭😭😭😭இந்த வரிகள் கேட்டாலே கண்கள் தன்னை மீறி அழுகை வருது 😭😭😭😭
@kanis2116
@kanis2116 3 года назад
சூப்பரானபோக்சாங். நாக்குசெவந்தவரே இசையமைச்ச வாகுமசான், கவிப்பேரரசு வைரமுத்து அய்யாவோட இந்தபாட்டுலேயும் கலக்கிட்டாங்க. அந்தோணிதாசனும் கலந்துகட்டி அடிச்சிருக்காரு
@deepikabala4400
@deepikabala4400 3 года назад
Oooh sottangallu onnu en Thoda pakkam thavari vizha Kal edukum saakula nee Kalla thanna Panna Aadi vizhunthathukum aala vidu saamiyinu Odi olinjathukum Oda Kara adaiyaalam 😍😘😘😘😘 lovely lines
@pandiselvinathan8251
@pandiselvinathan8251 3 года назад
வலி மிகுந்த வரிகள்😍😢 படைப்பாளிகளுக்கு மனமார்ந்த நன்றிகள்....🙏
@chittubhatlu3407
@chittubhatlu3407 3 года назад
ஒட்டுமொத்த கிராமத்து வார்த்தைகளையும்,வாசனையையும் ஒரு எழுதுகோலில் நிரப்ப முடியுமானால் அது வைரமுத்து அவர்களால் மட்டுமே முடியும்...
@ranjithvlogs5540
@ranjithvlogs5540 2 года назад
Yea
@manipk3541
@manipk3541 3 года назад
ஞாயிரு வரும் முன்னே நாட்படு தேறல் வரும் பின்னே. Super song...
@ethoorukavithai
@ethoorukavithai 3 года назад
அடைபாளங்கள் என்றும் அழகு, சில அடையாளங்கள் வலிமிக்கதாய் மாறிவிடுகிறது. தங்களின் அடையாள வரிகள் எல்லாம், நெஞ்சில் அடையாளமாகிவிட்டது, கவிஞரே.....நன்றி
@nandhakumar9632
@nandhakumar9632 2 года назад
இந்த பாட்டு இயல்பாக இதயத்தை தொடுகிறது. கவிப்பேரரசு அவர்களுக்கு நெஞ்சார்ந்த நன்றிகள்.
@yourdesirelover
@yourdesirelover 3 года назад
நினைவுகள் எல்லாம் ஊர் முழுவதும் உன் உருவாய் எழுந்து நிற்குதடா!! எழுந்து நிற்கும் உருவிலெல்லாம் அனையா தீயொன்று பற்ற வைத்து புது வாழ்வு தேடி நான் போகையிலும் என் முகம் பார்த்தே போகாதென ஏங்கி நிற்குதடா!! வண்டிகட்டி வட காட்டு திசையில போகையில பற்ற வைத்த தீயோடு உன் உருவமெல்லாம் ஊர்வலமாய் பின் தொடருதடா!! முள்ளு காட்டுக்குள் உன்கூட நடக்கையில குத்திய முள்ளொன்று விழிகளில் கிடந்து இன்று உறுத்துதடா!! அன்று காலில் குத்திய முள்ளு தான் இன்று விழிகளில் குருதியை வடிக்குதடா!! உடலிருக்கு உயிரிருக்கு உணர்வில்லா உயிராய் உடல் மட்டும் தான் ஊர்வலம் போகுதடா!! பட்டு புடவைய உடுத்தி புது வாழ்க்கைய தேடியவளுக்கு புது ராகமாய் ஓலமொன்று புடரி பின்னே ஒலிக்குதடா!! மண மாலை கேட்டவன விட்டு மணமுடித்து சவமொன்று மணப்பெண்ணா போகுதடா!! வா ன்னு சொல்லிடவும் முடியலையடா!! போ ன்னு சொல்லிடவும் மனமில்லையடா!! இரு மனம் இனைவது தானடா திருமணம்!! இன்று இனைந்தது இரு பினங்கள் தானடா!! பினமாய் அலைந்தாலும் என்னில் உன் வாசமே வீசுதடா!! உனதாய் வாழும் மறுஜென்மம் வேண்டியே இறைவாசல் போகிறேனடா!!
@ArunKumar-pn1hi
@ArunKumar-pn1hi 3 года назад
அழகிய வரிகள் ஐயா.. அந்தோணி தாசன் அவர்கள் மற்றும் வாகு மாசான் அவர்களின் குரலில் கேட்க இனிமையாக உள்ளது. இசையை விட பெரிய போதை இல்லை என்பது மறுக்கமுடியாது உண்மை.
@SUNDARkks
@SUNDARkks 3 года назад
இடி விழுந்த ஆலமரம் இன்னைக்கும் அடையாளம்.
@RamRomeomedia
@RamRomeomedia 3 года назад
கவிஞருக்கு எனது நெஞ்சார்ந்த நன்றிகள் பல🙏🙏🙏 பெருமை கொள்கிறேன் ஐயா நான் உம் ஊர் காரனாக
@MrMrajakumaran
@MrMrajakumaran 3 года назад
இதயத்தின் மூலையில் பனிப்பாறைகளாய் படிந்து கிடக்கும் "ஏராளமான அடையாளங்களை " நினைவலைகளாய் உருகி ஓடவைக்கும் பாடல்... நன்றி அய்யா!
@aarthisenthil4531
@aarthisenthil4531 3 года назад
அருமையான பாடல் அன்றைய நினைவோடு இன்று சில நிமிடங்கள் 😍
@Kalamindia
@Kalamindia 3 года назад
பேசிக்கொண்டிருந்த அடையாளங்களெல்லாம் இனி பாடப் போகிறது... தொலைத்தவர்கள் எல்லாம் மீண்டும் தொலைந்துவிடுவார்கள் இறந்தகாலத்தின் இளமைக்குள்... உறைந்த கண்ணீரெல்லாம் மீண்டும் இந்த அடையாளத்தில் உருகி மழையாகிருக்கும்..✍️ வாழ்த்துகள் பாடல் குழு 💐💐 & வைரமுத்து ஐயா ❤️❤️❤️
@indiravijayalakshmi7727
@indiravijayalakshmi7727 3 года назад
‘மடிவிழுந்த கண்ணீரே மழையாகிப் போனதுக்கு இடிவிழுந்த ஆலமரம் இன்னைக்கும் அடையாளம்’ ❤️🙏
@prabuthangam6123
@prabuthangam6123 3 года назад
அதென்ன பெரிய ONV விருது ஒரு கொண்டாட்டம், நாங்கள் வாரமெங்கும் கொண்டாடித் தீர்த்துக் கொண்டிறுக்க மீண்டும் மீண்டும் புத்துணர்ச்சி ஊட்டி கொண்டாட செய்கிறது நாட்படு தேறல்... வெல்க தமிழ் .. வெல்க கவிப்பேரரசர் ...
@srinivasanmuniraj3825
@srinivasanmuniraj3825 3 года назад
உண்மை!
@prabuthangam6123
@prabuthangam6123 3 года назад
@@srinivasanmuniraj3825 👍🙏
@subbijoghan7671
@subbijoghan7671 3 года назад
Uuïoouuuooouooouoooouoououuooîuouououoouuoouoouuuuoouooooouooooooouuououououuououooououuuouuououuouooouou ko
@alagarsamyk2060
@alagarsamyk2060 3 года назад
@@subbijoghan7671 .
@m.r.karthi5701
@m.r.karthi5701 3 года назад
@@alagarsamyk2060 mmkmmmmmkommm know the mmg mmmmmkmmmkkkkkkkkkkkkkkkkkmkkkokkomkkmkmkkmo.kkmkkmkmkkokkookmkkkkkkokmkmommmkokkkmokokomkomkmkkmkmkkomkmkkokkkkkommmmommooookkoookmk
@banupriaya
@banupriaya 6 месяцев назад
எத்தனை முறை பார்த்தாலும் சலிக்க வில்லை, பழைய ஞாபகம் தான் வருகிறது
@kanis2116
@kanis2116 3 года назад
உயிருள்ள வலி மிகுந்த வரிகள். பழைய நினைவுகள் படம் போடுகின்றன. ஊருக்குப் போகும் போதெல்லாம் இப்படிப் பட்ட அடையாளங்கள் உள்ளத்தை உருத்தும். வைரமுத்து வரிகளில் அவரது வழக்கமான முத்திரை.
@rabindarnath5852
@rabindarnath5852 3 года назад
இறந்த கால ஞாபக வலியில் நிகழ்காலம் இறப்பாகும் காதலின் பிரிவு வரிகள்...எத்தனை கண்கள் இப்பாடலை கேட்டு கசிகிறதோ...
@cradle2grave15
@cradle2grave15 3 года назад
மிகவும் அற்புதமான வரிகள்....👍
@asrafbanuasra2251
@asrafbanuasra2251 3 года назад
Crt bro..nanum aludhen indha song kettu😓😭
@sirajudeensirajudeen5500
@sirajudeensirajudeen5500 3 года назад
@@cradle2grave15 7
@manipavi6213
@manipavi6213 3 года назад
Muhkkj IP or r
@ஶ்ரீவிஜயவானி
Kkkk🚩⚡🚩✔️
@vijayarani7737
@vijayarani7737 3 года назад
எங்கள் தமிழே! இவ்வுலகில் தமிழ் உள்ளவரை நீ இருப்பாய்!
@onemanmusicband
@onemanmusicband 3 года назад
அடையாளம் ஏராளம் ஆள் எங்கே பேர் எங்க நினைப்பு இருக்கு நெஞ்செல்லாம் நீ எங்கே நான் எங்கே....... "இப்போது தோணுகிறது பழைய கதை"💔🚶🚶🚶
@vaiyapuricongress5072
@vaiyapuricongress5072 3 года назад
காதல் கைகூடாமல் போனவர்களுக்கு இப்பாடல் ஒருதேசியகீதம்தான். நாங்கள் உண்மையான காதலர்கள் என்பதற்கு தெருவிளக்கு ஓடக்கரை அம்மன்கோவில் இடிவிழுந்தஆலமரம் போன்றவை அடையாளமாக சாட்சியாக உள்ளன என்று காதலர்களின் காட்சிஅமைப்பை கவிஞர் நேர்த்தியாகவே செய்திருக்கிறார்.காதல்தோல்வியின் ஏக்கத்தை விரக்தியை வெறுப்பை ஆதங்கத்தை வெறியை இயலாமையை காதலன் வெளிப்படுத்தும் பாங்கு அவருக்கான இடத்தை நிறைவாக செய்திருக்கிறார்.அருமை வாழ்த்துக்கள்!
@pvbaskarpoet6466
@pvbaskarpoet6466 3 года назад
கவிப்பேரரசரின் ஏராளமான (இலக்கிய) அடையாளங்களில் இந்தப்பாடல் முன்வரிசையில் நிற்கப்போகிறது।
@dhayanithyarunan3200
@dhayanithyarunan3200 3 года назад
Vagu Mazan rockzzz ❤️❤️❤️🔥🔥🔥. Mind blowing song lyrics, music especially rythem section great...
@karthia6827
@karthia6827 3 года назад
இதயத்தைக் கிளறும் வரிகள். ஒரு பாட்டுக்குள் எவ்வளவு சம்பவங்கள்? வைரமுத்து வரிகளுக்குள் ஒரு வாழ்க்கை. ஜாதி எங்கள் காதலை பிரித்தது. மறந்திருந்த என் காதலையும் காதலியையும் நினைவுபடுத்திய கவிப்பேரரசுவை கோபிப்பதா. நெகிழ் வதா
@nirujanniru2306
@nirujanniru2306 3 года назад
வைரமுத்து💝 ஐயாவுக்கு என் வாழ்த்து..... 🙏🙏 உன் வரிகளை தோக்கடிக்க ஒருத்தன் மட்டும் வருவானே.. அட அவனும் இங்க நீ தானே
@God-ly7vo
@God-ly7vo 3 года назад
இனி சினிமா படத்திற்காக காத்திருக்க வேண்டிய அவசியம் இல்லை வைரமுத்து ஐயாவின் பாடல்கள் இனி எப்போதும் கேட்டுக் கொண்டே இருக்கலாம்.
@arivug5954
@arivug5954 3 года назад
Loop mode🔃 வழக்கம் போல் லெஜண்ட் வைரமுத்து ஐயாவின் புதுமையான வரிகள்!❤️❤️👍
@funncrazy9226
@funncrazy9226 3 года назад
கவிஞரின் எழுத்துக்களில் என்றென்றைக்கும் ஊறி வரும் கிராமத்து மண் வாசனை கண்டேன்....!
@srinivasanmuniraj3825
@srinivasanmuniraj3825 3 года назад
கும்பி எரியுதடி... அந்தோனி தாசன் குரல் உங்கள் வரிகளை நெஞ்சில் குத்தி இறக்குது அய்யா. 🤍
@nlxmedia7179
@nlxmedia7179 3 года назад
அழகான கிராமிய காதல். அருமையான இசை நெஞ்சை தொட்ட வரிகள் 💗💗💗💗❤❤❤❤❤💗💗💗💗💗
@paramana1677
@paramana1677 3 года назад
காதல் அனுபவம் உள்ளவர்களின் கண்களில் கண்ணீர் அருவியை வரவழைக்கும் பாடல். காதலித்த அடையாளங்களை வரிசைப்படுத்தும் இப்பாடல் நாட்படு தேறளின் நல் அடையாளம்.
@zhulbiharali117
@zhulbiharali117 3 года назад
Vazu magan குரல் அருமை... இதயத்தின் வருடல்... ஹம்மிங்.. நல்ல எதிர்காலம்.. புது முயற்சி.. வைரமுத்து வரிகள்.. என்றும் இனிமை.. ONV விருது கொடுத்து அவரை ஒரு வட்டத்துக்குள் அடைத்து விட வேண்டாம்.. அவர் என்றும் தமிழ் மொழியின் மற்றும் என் தமிழ் இனத்தின்.. வான் உயர பறக்கும் கழுகு!....
@ORASURGIRAMATHUKARAN
@ORASURGIRAMATHUKARAN 2 года назад
காயங்கள் ஆறா தழும்பாக இருந்தாலும் அதை ஆற வைத்து மனதை மயக்கி அனைத்தையும் மறக்கச்செய்து மாற்றம் ஏற்பட செய்கிறது என் மனதில் வாழும் எனது கவிஞர்
@kulitalaimano5312
@kulitalaimano5312 2 года назад
இந்த பாடலை மீண்டும் கேட்டு விட்டு மனம் நடுங்கினேன் கலங்கினேன்
@vanakampa9222
@vanakampa9222 3 года назад
சோகத்தையே சுகமாக்குகிறது இப்பாடல். மடி விழுந்த கண்ணீரு மழையாகிப் போனதுக்கு இடிவிழுந்த ஆலமரம் இன்னைக்கும் அடையாளம்" கிராமத்துக்காதல் அடையாளங்களை அடையாளப்படுத்த கவிஞரால் மட்டுமே சாத்தியம்
@vanakampa9222
@vanakampa9222 3 года назад
நாட்படு தேறல்! வளமான பாடல்கள் இனி வந்துசேரும் என்ற நம்பிக்கையைத் தருகின்றன. "மனிதா மனிதா, கனவு காணும் வாழ்க்கை யாவும், காந்தி தேசமே, எரிமலை எப்படி பொறுக்கும், கண்ணான பூ மகனே, ஓ ஒரு தென்றல் புயலாகி வருமே, மேகமே மேகமே, வானத்தைப் பார்த்தேன் "மாதிரியான பாடல்களையும் ஆவலோடு எதிர்பார்த்து காத்திருக்கிறேன் வைரமுத்து அய்யா.
@patminibala5020
@patminibala5020 3 года назад
பாடல் வரிகளுக்கேற்ப....இசை,குரல்தேர்வு மற்றும் ஒளிப்பதிவு மிகவும் அருமை 🎉🎊 நம் மண்வாசனை வீசுகிறது..🙏 வாழ்த்தி வணங்குகிறேன் அப்பா 🌹🙏 முனைவர்.சே.பத்மினிபாலா
@vanakampa9222
@vanakampa9222 3 года назад
நல்ல வரிகள் கிராமத்தில் காதல் தோல்வியடைந்தவர்களுக்கு இந்த பாடல் பொக்கிஷம்.
@kanis2116
@kanis2116 3 года назад
எனக்கும் காதல் அடையாளம் ஏராளம். மீண்டும் மீண்டும் அந்த அடையாளங்கள் நினைவில் வருகின்றன... தலை சுத்திப் போச்சு பாட்ட கேட்டுட்டு. இதில் ரெண்டு சம்பபங்கள் என் வாழ்க்கையிலும். காதலுக்கு எத்தனையோ அடையாளம். நாட்டுப்பாடலுக்கு ஒரே அடையாளம் எங்கவைரமுத்து
@praveenkumar-lw2of
@praveenkumar-lw2of 3 года назад
எத்தனை தடவை கேட்டேனு எனக்கே தெரீயலை ஆனாலும் இன்னும்"ஆவல் இருக்கு
@pavipavi6522
@pavipavi6522 2 года назад
நெனப்பு இருக்கு நெஞ்செல்லாம் நீ எங்க நா எங்க 💔😭💔
@thavamani.r9610
@thavamani.r9610 3 года назад
யோவ்..., வைரமுத்து உன் மேல ஆயிரம் குறை சொன்னாலும் உன் எழுத்துக்கு நீதான்யா நிகர். தேனிக்காரனாகச் சொல்றேன் ரொம்ப பெருமையா இருக்குய்யா!
@yokitha4712
@yokitha4712 3 года назад
Meee tooo thalaiva theni la irunthu
@thavamani.r9610
@thavamani.r9610 3 года назад
@@yokitha4712 😍
@manoraju7193
@manoraju7193 3 года назад
கவிப்பேரரசு அண்ணன் அவர்களுக்கு வணக்கம் . இன்றைய ஏழாம் பாடல் நாட்டுப்புற மெட்டில் அமைக்கப்பட்ட மிக சிறப்பான பாடல் . நினைவுகளை தட்டி எழுப்பி அதற்கான அடையாளங்களை துணைக்கழைத்துள்ள விதம் போற்றத்தக்கது . ஒரு கிராமத்தில் இரவின் காட்சியாக சன்னலோரம் எட்டிப் பார்க்க வரும்போது நாய் குறைத்து துரத்துவதும் வெறிச்சோடிய வீதிகள் வீதி வழி நாயகன் ஓடுவதும் கிராமத்து நிலையை அறியக் காட்டுகிறது . கிராமப்புற விளையாட்டான சொட்டாங்கல் ஆட்டம் ஆடும் பொழுது தவறி தொடைமீது விழுக அப்போது நடக்கும் சேட்டை கவிஞரின் முத்தாய்ப்பு . ஒவ்வொரு காட்சியும் வைகை அணை , வடுகபட்டி , அதனைச் சுற்றிய பகுதிகளில் இடி விழுந்த ஆலமரம் , கொடிக்கால் , குதிரை வண்டி , வராகநதி இவை அனைத்தும் அப்பகுதிக்கான காட்சிகள் இவ்வாறாக ஒவ்வொன்றையும் ரசித்து ரசித்து காட்சிப்படுத்தி உள்ள விதம் கவிப்பேரரசின் உச்சத்தைக் காட்டுகிறது. அன்புடன் தேவாரம் முனைவர் இரா.மனோகரன் சின்னமனூர் .
@selvamk5628
@selvamk5628 3 года назад
அட என்னது பாட்டா படமா இப்படி படம்படிச்சிருக்கீங்க... ரொம்ப சூப்பரா இருக்குங்க அஞ்சுநிமிஷ பாட்டில் ஒருகாதல் படத்த சூப்பரா எடுத்துட்டாங்க
@punithakanniappan6541
@punithakanniappan6541 3 года назад
எங்கள் வைரமுத்துவுக்கு ஈடு இணை யாருமில்லை, தமிழே வாழ்க, 🌹
@Dineshdkbooks
@Dineshdkbooks 3 года назад
மின்னல் வெட்டும் ராத்திரியில் ஜன்னல் பக்கம் நீ அழைக்க அந்நேரம் பார்த்து நாளஞ்சி நாய் குலைக்க (கவிஞர் இதை கூடவா கவனிக்கிறாரு என எண்ண தோன்றுகிறது) வெறிச்சோடி போய் இருந்த வீதியில நான் விழுந்து தெறிச்சோடி போனதுக்கு தெருவிளக்கு அடையாளம் அருமையான வரிகள்
@dhnanuchhc8068
@dhnanuchhc8068 3 года назад
உண்மை தான் சகோ இதை கூட கவனித்து தான் எழுதி இருக்கிறார் என்ன மனுஷன் அவரு
@poetvk06
@poetvk06 3 года назад
அடையாளம் அது அழியாதது... இந்த பாடல் நெஞ்சோரம் ஓயாது...
@santhanamr7005
@santhanamr7005 3 года назад
என் தமிழ் ஆசான்...முத்தமிழறிஞர் டாக்டர் கலைஞர் ... கவியரசர் கண்ணதாசன்,... கவிப்பேரரசு வைரமுத்து ❤️🙏🙏🙏
@kumarnagarajan8692
@kumarnagarajan8692 3 года назад
விருதாப் போகட்டுமே அவ்விட விருதுகள்.... எங்கள் விருதும் விருந்தும் உம் தமிழே. வெறும் கனி புசிக்க ரிஷிப் பசியா எம் பசி? கொட்டும் மழையெல்லாம் குடிக்கும் மண் பசி எம் பசி! நாட்பட்ட காயங்களைக் கூட ஆற்றும் நாட்படு தேறலே இச்சமயத்தின் பேராறுதல்! நன்றி ‌ஐயா.....
@karthikarumugam1512
@karthikarumugam1512 3 года назад
Kalli kaatu ithikasathin " murugayi " ninaivuku varugiral❤️
@ramakrishnanking
@ramakrishnanking 3 года назад
AdaiyaalamEraalam What a feeling song...Semmaiyaana lyric.. NaatPaduTheral. Tamil Padalkalin Adaiyaalam... Weldone Vairamuthu sir Good Job.
@ebiimmu6626
@ebiimmu6626 3 года назад
அன்னைத் தமிழின் அடையாளம் ஏராளம் என்றைக்கும் நிலைக்கும் கவிப்பேரரசின் அடையாளம் .
@dhanapaulissac9480
@dhanapaulissac9480 3 года назад
Excellent wording and soulful music .
@subramanian1677
@subramanian1677 3 года назад
எங்கள் கவிப்பேரரசு நம்மில் கலந்திருப்பார்❤️ எங்கள் கவிப்பேரரசுக்கு கொடுக்கப்படும் விருதுகளுக்குத்தான் பெருமை❤️❤️ வாழ்க தமிழ் வைரமுத்து
@Develophealthypeople
@Develophealthypeople 3 года назад
ஒவ்வொரு பாடலையும் எதிர் பார்த்து காத்து இருக்கிறேன்
@Ra2Cinemas
@Ra2Cinemas 3 года назад
சுதந்திரமாக சுற்றித் திரிந்த நாட்களின் நினைவுகள், இந்த பொது முடுக்கத்தின் போது நன்றிகள் பல
@manipk3541
@manipk3541 3 года назад
கேட்டுடே இருக்கலாம் இந்த பாடல் மனதின் படிமம்
@sravi997
@sravi997 2 года назад
இடி விழுந்த ஆலமரம் இன்னைக்கும் அடையாளம்...
@karthia6827
@karthia6827 3 года назад
நீங்கள் எழுதும் ஒவ்வொரு வரிகளும் எங்களது வாழ்வில் நாங்கள் செய்த ஏதோ ஒன்றை ஞாபகப்படுத்துகிறது
@syedhussainsyedhussain7592
@syedhussainsyedhussain7592 3 года назад
P
@suryaeditz2009
@suryaeditz2009 3 года назад
Yes
@chidambaranathan2917
@chidambaranathan2917 3 года назад
KaviPerarassu Ayya is real Identity for Our Traditional Tamil Language, Most Powerful Words Ayya, I like You Ayya by Your Well Wisher Dr S.Chidambaranatha
@gunas8881
@gunas8881 3 года назад
கடைசி வரிகள் கண்ணீர் வழிய வைக்கிறது...அந்த வரிகள் வாகு வின் குரலில் அமைந்திருந்தால் நன்றாக இருந்திருக்கும்...
@selvamk5628
@selvamk5628 3 года назад
Earthy Vairamthu lyric! Vibrating VaguMasaan Music! Good Singing by Anthonidhaasan!
@anbunithianbunithi3848
@anbunithianbunithi3848 3 года назад
பல சூழ்ச்சிகள் நடக்கிறது. நீங்கள் கவலைப்பட வேண்டாம் ஐயா ! We support you!
@arunmohan6567
@arunmohan6567 3 года назад
Vagu Mazan... I am ur fan now🎸🎸
@kumaranvelu6224
@kumaranvelu6224 3 года назад
Me 2
@paramana1677
@paramana1677 3 года назад
காதலில் தோற்றுப் போன இதயங்களுக்கு இந்த பாடலின் வலி அதிகமா புரியும். இந்த பாட்டால் என் பழைய நினைவுகளை மீட்டி விட்டார் வைரமுத்து.இனி எப்படி மீள்வேன்?
@kknrking
@kknrking 3 года назад
மிக அருமை, எங்களுக்கு நீதானையா அடையாளம். பல வருடம் நெஞ்சு சுமந்த நினைவுகளை நகலெடுத்த வரிகள். இனிமையான இசை.
@priyaparamasivam7165
@priyaparamasivam7165 3 года назад
intha song kaga evlo nerama wait pamnitu irukken 😍😍😍
@sebastianj5804
@sebastianj5804 3 года назад
வரிகளும் வார்த்தைகளும்,வாய்மொழியில் தேன் சுவை ...
@directoracademics9114
@directoracademics9114 3 года назад
அடையாளம் ஏராளம் - அவை அப்படியே தான் இருக்கின்றன. அவற்றின் இயக்கத்தில் எதுவும் மாறவில்லை , மனித மனம் மட்டும் கால இயந்திரத்திற்குள் சிக்குண்டு சின்னபின்னமாகிறது. அன்பிற்கு மட்டுமே இந்த சக்தி உண்டு. இந்த மூன்று எழுத்து வார்த்தைக்கு எத்துணை ஆற்றல். வாகு மாசான் ம்ற்றும் அந்தோனி தாசனிற்கு வாழ்த்துகள்.
@meganathansisuper2778
@meganathansisuper2778 3 года назад
கவிப்பேரரசு வைரமுத்து அவர்களே‌ கும்பி கொதிக்குது எனறு என் இளம்வயதில் எங்க அலமேலு பாட்டி வயிறு எரிகிறது என்ற அர்த்தத்தில் சொன்ன வார்த்தையை நினைவூட்டியது அய்யா தங்களின் அடையாளப்பாடல் நன்றியுடன் ந‌.மேகநாதன் காவல்துறை பொறையார்
@KalpanaKalpana-pb3yt
@KalpanaKalpana-pb3yt 3 года назад
புதிதாக பிறக்கும் குழந்தையின் வரவுக்கு காத்திருப்பது போல் ஒவ்வொரு வாரமும் காத்திருக்கிறோம் உங்களின் பாடலுக்காக🙏🙏
@anniefenny8579
@anniefenny8579 3 года назад
தேன் குடிச்ச வண்டுகளாய் தெச மாறி போன கத காதலுக்கு கண்ணில்லையோ கடவுளுளந்தான் இரங்கலயோ...
@xraymohan8433
@xraymohan8433 3 года назад
அருமையான வரிகள்... ஆனால் ஒரு சிறிய அளவிலான மாறுபட்ட கருத்து உள்ளது..... "இரங்கலயோ" இப்படி வருமா என்று தெரியவில்லை. எனக்கு தெரிந்து வல்லின"ற"கரம் வருமோ.... ?
@anniefenny8579
@anniefenny8579 3 года назад
இரக்கம் காட்டவில்லையோ என்பதுதான் அது.இறக்கம் என்பது ஏற்றத்தின் எதிர்ச்சொல்.நன்றி
@xraymohan8433
@xraymohan8433 3 года назад
@@anniefenny8579 நன்றிகள் ...என்னுடைய தவறு தான் .... தெளிவடைந்தேன்
@sangeetharaju864
@sangeetharaju864 3 года назад
வரிகள் ஒவ்வொன்றிலும் அர்த்தங்கள் ஆயிரம்........❤️❤️.....
@sunderm813
@sunderm813 3 года назад
Beautiful Camera and Original Village Flavour! வாவ் வைரமுத்து! பென்டஸ்டிக் சாங்.... பெரிதாய் தமிழ் தெரியாத எனக்கே ருசியா இருக்கு…
@karthia6827
@karthia6827 3 года назад
விடியும் போதூம் தூங்கும் போதும் இந்த பாட்டோடு நாட்கள் செல்கிறது
@kannanr4780
@kannanr4780 3 года назад
ஒவ்வொரு காதலன் காதலியையையும் உருகச்செய்யும் காதலர் கீதம் வைரமுத்து வரிகள் இதயத்தில் ஆணியாய் இறங்குகிறது காதல்வலி...
@jewelleryjewellery7902
@jewelleryjewellery7902 3 года назад
How many time see this song my favorite.
@sangeethaat9333
@sangeethaat9333 2 года назад
காதில் ஒலித்துக் கொண்டே இருக்கும் வரிகள்...
@vijayavenkatesan7518
@vijayavenkatesan7518 3 года назад
Namakendru yeralamana Adayalangal irundallum Nam nenjil sila Adayalangal aratha Ranamai Excellent kavinzharey
@janadeepanrvn2475
@janadeepanrvn2475 3 года назад
அழகான பாடல் வரிகள் மற்றும் இசை, இயற்கையான நடிப்பு , கண்களுக்கு விருந்து...
@mukilbalanandhupupi6387
@mukilbalanandhupupi6387 3 года назад
உயர்ந்த அடையாளம் நீங்க தான் ஐயா.
@karthia6827
@karthia6827 3 года назад
அருமையான நாட்டுப்புறபாடல். இந்த ஒரிஜினல்பிளேவர் வைரமுத்துவிடம் மட்டுமே கிடைக்கிறது. காதலர்களின் நிறைவேறாதநினைவுகளைக்கிளறி கண்ணீர் வரவழைக்கும் வரிகள்
@govindaramkrishna8899
@govindaramkrishna8899 3 года назад
அடையாளம் ஏராளம் கண்ணுக்கும் காதுக்கும் மட்டுமல்ல. மனதுக்கும் நிறைவை தந்தது. வாராவாரம் சுவை கூடிக்கொண்டே இருக்கிறது. கோவிந்தராம். மதுரை.
@paramana1677
@paramana1677 3 года назад
நெஞ்சைப்பிழியும்வரிகள். எத்தனைமுறை கேட்டாலும் அலுக்காது
@kannanr4780
@kannanr4780 3 года назад
வார்த்தைகளின் கஜானா வைரமுத்து.இந்தபாட்டைகேட்கும் போது இன்னுமும் ரசனை குறையாமல் இப்படிப்பட்டபாடல்களை தர முடியும் என்றால் எங்கள் கவிஞரால் மட்டுமே முடியும்
Далее
БЕЛКА РОЖАЕТ#cat
00:19
Просмотров 1,2 млн
Признавайтесь, кто его смыл?
00:54