Тёмный

Gandhi 

Karaikal K.Prabakaran
Подписаться 320
Просмотров 26
50% 1

RJ And Writter
Lives In Nedungadu,Karaikal.
எழுத்தாள்பவர்கள் தொகுப்பில் என்னைப்பற்றி...
***************************
ஒலியால் ஒளிர்பவர்!
**************************
"தன் படைப்புகளால் வாசகர்களின் விழிகளில் நுழைந்து மனதில் நின்று,பின் வானொலி ஊடகம் வாயிலாக நம் செவிகளில் நுழைந்து உணர்வோடு கலந்து,தன் வசிய பேச்சால் ஒளிர்ந்தும்-மிளிர்ந்தும் வருபவர் இவர்..
திரு.கே.பிரபாகரன் அவர்கள்.காரைக்காலிலுள்ள நெடுங்காடு எனும் ஊரைச் சேர்ந்தவர்...படிப்பு-மின்னணு மற்றும் மின்னோட்டவியல் டிப்ளமோ மற்றும் இளங்கலை தமிழ் இலக்கியம்..பணி-அகில இந்திய காரைக்கால் வானொலி 100.3 அறிவிப்பாளர்.இதற்கு முன் விகடன் ஒளித்திரை நடத்திய நேர்முக தேர்வில் வெற்றி பெற்று,சென்னையின் நெருக்கடி பிடிக்காமல்,தன் சொந்த ஊருக்கே திரும்பியவர்.மனைவி-குடும்பத் தலைவி;மூன்று மகன்கள்...பிரியா பிரபா,பிரபா ஆகிய புனைப் பெயர்களிலும் எழுதியவர்..
பள்ளி பருவத்தில் மாநில,மாவட்ட அளவிலான பேச்சு மற்றும் கட்டுரை போட்டிகளில் பல முதல் பரிசுகளை வென்றவர்..1996-ல் விகடன் நடத்திய ரஜினிக்கு அட்வைஸ் எனும் கடிதமெழுதும் போட்டியில் முதல் பரிசை வென்று ஆசிரியர் பாலசுப்ரமணியம் அவர்களின் நம்பிக்கையை பெற்றவர்..தொடர்ந்து ஜூனியர் விகடனில் இவரது டயலாக் பிரசுரம்.இதில் பலமுறை ஒரே இதழில் இரண்டு டயலாக் ஆக்கங்கள் வெளியாகியுள்ளது.குங்குமம் இதழில் காதல் கடித போட்டியிலும்,கோகுலம் கதிர் காதல் கவிதை போட்டியிலும் முதல்பரிசு வென்றது குறிப்பிடதக்கதாகும்..தஞ்சை-நாகை-திருவாரூர் மற்றும் குடந்தை எழுத்தாளர்கள் கூட்டமைப்போடும் நெருங்கிய தொடர்பிலுள்ளவர்..விக்கிபீடியாஇணையத்தில் 55-க்கும் மேற்பட்ட தமிழ் இசைகலைஞர்கள் பற்றி விரிவாக கட்டுரையெழுதியுள்ளார்.இவரது திரையிசையில் பாரதியார் என்ற கட்டுரை இணைய உலகில் இன்றளவும் பரவலாக பயன்படுத்தப்படுகிறது..வெண்மணி பதிப்பகம் இவரது தொடர் இலக்கிய பணிகளை பாராட்டி "இலக்கியத் தென்றல் விருது"வழங்கி கௌரவித்துள்ளது.
இவரது வானொலி மற்றும் இணையதள சாதனைப் பட்டியல் பிரமிப்பைத் தருகிறது..பொதிகை தொலைக்காட்சி எதிரொலி நிகழ்ச்சியில் சிறந்த விமர்சகருக்கான பரிசை வென்றவர்..பல தொலைக்காட்சி நிகழ்ச்சிகளிலும் பங்கேற்றவர்..காரைக்கால் வானொலி தொடங்கிய காலம் தொட்டே இளையபாரதம் நிகழ்ச்சியில் பங்கேற்று கதை-கவிதை-கட்டுரை-சிறுகதை வழங்கியுள்ளார்.2004-முதல் காரைக்கால் வானொலியில் பகுதி நேர அறிவிப்பாளராக பணிபுரிந்து வருகிறார்..பல சீனியர் திரைப்பட கலைஞர்களை பேட்டிக் கண்டவர்..பிரபல வானொலிக் கலைஞர்களோடு இணைந்து 200-க்கும் மேற்பட்ட பட்டிமன்ற நிகழ்ச்சியில் பேச்சாளராகவும்,நடுவராகவும் பங்கேற்றுள்ளார்...வாட்ஸப் மூலம் தமிழகத்தில் முதன்முதலாக வானொலி உருவாக்கியவராவார்..வாட்ஸப் மூலமாக பட்டிமன்றம்-பிரபலங்களின் சந்திப்பு-உரையாடல்களையும் நடத்தியமைக்காக,சமூகவலைதளங்களை சரியாக பயன்படுத்துபவர் என்ற அங்கீகாரத்தை பல்கலை பேராசிரியர்களிடம் பெற்றவர்..வானொலி தொடர்புடைய மாநாடுகளில் இவரது நேசகானம் பலராலும்,பத்திரிக்கைகளாலும் பரவலாக
பாராட்டை பெற்றுள்ளது...தற்போது விஷ்வல் மீடியாவின் காலமென்பதால்,தனது ஆக்கங்களை விஷூவலாக தயாரிக்கும் முயற்சியில் உள்ளார்..புதுவை அரசின் பதிவு பெற்ற நேசம் மீடியா என்ற நிறுவனத்தை நடத்தி இணையதளம் மற்றும் ஆன்ட்ராய்டு செயலிகளும் உருவாக்கி வருகிறார்..வானொலி துறையில் ஆர்வம் உள்ளவர்களுக்கு தேவையான தொழில்நுட்ப பயிற்சிகளையளித்து இணையத்தில் பல வானொலி கலைஞர்களையும் உருவாக்கி வருகிறார்.www.nesaganam.com என்ற இணையதளத்தின் மூலமாக பல வானொலி கலைஞர்களை அறிமுகப்படுத்தி வருகிறார்.
திருநள்ளார் ஸ்ரீ தர்பாரண்யேஸ்வரர் சனிபகவான் ஆலய வரலாற்றை புத்தகமாக எழுதியதோடு,ஒலி வடிவில் குறுந்தகடாகவும் வெளியிட்டுள்ளார்..தற்போது வரை பல ஆன்மீக தொடர்புடைய பல குறுந்தகடுகளையும் உருவாக்கி வெளியிட்டு வருகிறார்..
இயற்கை வாழ்வியலில் ஆர்வமுடையவர்.அமரர்.நம்மாழ்வார் அவர்களை பலமுறை பேட்டிக் கண்டு அவருடன் நெருங்கி பழகும் வாய்ப்பை பெற்றவர்.அவரது மரணத்தை இன்றுவரை கனவுபோல உள்ளது என்பவர்.சில குறும்படங்களுக்கும் இவர் டப்பிங் பேசியிருப்பது ஆச்சர்யம்..இனம்,மதம்,கட்சி சார்பற்ற ஊடகத்தை உருவாக்குவதே இவரது லட்சியமாகும்...வானொலியால் தன் குரலை "வான்"வரை ஒலிக்கச் செய்தவர்..இணையத்தால் பல உள்ளங்களை இணைப்பதில் இவரொரு"முன்னவர்"..இவரது குரலொலி நேயர் மனதின் எதிரொலி..பிரபாகரன்,வானொலியின் "அரண்" என கூறி,பிர"வாவ்"கரன் அவர்களை வாழ்த்துகிறோம்!
நன்றி :
வெ.ராம்குமார் - வேலூர்
நேசகானம் 2016 ஆம் ஆண்டின் துவக்கத்தில் இணைய வானொலி என்ற நிலைக்கு உயர்ந்தது. ஊடகங்களால் அடையாளம் காணாப்படாமல் இருக்கும் பல்லாயிரம் இளம் கலைஞர்களை உலகம் அறிந்திட நேசகானம் உலகத் தமிழர்களின் கலை மேடை என்ற தாரக மந்திரத்தோடு செயல்படுகிறது. “நாங்க பேசுறோம் !நீங்க கேளுங்க!” என்ற வாசகத்தை மாற்றி நீங்களும் எங்களோடு பேசுங்க உலகம் உங்களை உற்று நோக்கட்டும் என்ற அடிப்படையில் நேசகான இணைய வானொலி சங்கம் வைத்து தமிழ் வளர்த்த மதுரை மண்ணில் நூற்றுக்கும் மேற்பட்ட உலக தமிழர்கள் ஒன்று சேர ஊடகங்கள் பல அறிந்திட நேசகான இணைய வானொலிக்கான துவக்கவிழா நடத்தப்பட்டு நேசகானம் உலக அளவில் வலம் வருகிறது.
வானொலி என்றால் திரைப்பாடல்களும், பொழுதுப்போக்கு அம்ச நிகழ்ச்சிகளும் மட்டும் தான் என்ற நிலையை மாற்றி பல்வேறு வகையில் பயனுள்ள நிகழ்ச்சிகள் நேசகான இணைய வானொலியின் வழியாக உலக தமிழ் நெஞ்சங்களை தஞ்சம் அடைகிறது. தென்னிந்திய மொழிப்பாடல்கள் பள்ளி மற்றும் கல்லூரி மாணவர்களுக்கான சிறப்பு நிகழ்ச்சிகள், பலதுறை சார்ந்த வல்லுநர்களை நேரடியாக பேட்டி கண்டு நிகழ்ச்சியாக்குதல். முகநூல் நெஞ்சங்களை நேசகானத்தில் பங்கு கொள்ள செய்து நிகழ்ச்சிகளாக்குதல் நேசகானத்திற்காக பிரத்யேகமாக உலக அளவில் பல்வேறு நாடுகளிலும் மாவட்ட வாரியாகவும் நிருபர் மற்றும் நிகழ்ச்சி ஒருங்கிணைப்பாளர்களை நியமித்து நேசகான இணைய வானொலி பயனுள்ள புதுமுயற்சியிலான பல்வேறு நிகழ்ச்சிகளை உலகிற்கு வழங்கி வருகிறது.

Опубликовано:

 

16 июл 2023

Поделиться:

Ссылка:

Скачать:

Готовим ссылку...

Добавить в:

Мой плейлист
Посмотреть позже
Комментарии    
Далее
ПРИКОЛЫ НАД БРАТОМ #shorts
00:23
Просмотров 2,4 млн
How to win a argument
9:28
Просмотров 511 тыс.