ராஜா ஹரிசந்திரன..... விஸ்வாமித்ரரின் பொறுப்பில் வந்து விட்டநிலையில்..... விஸ்வாமித்ரருடன் காட்டுக்கு பயணம்... மதிய உச்சி வேளையில்..... ஒரு மர நிழலில் இருவரும் இளைப்பாற..... சற்று கண் அயர்ந்து விடுகிறார்... நம்ம ஹரிச்சந்திரன்..... விஸ்வாமித்ரரிடம் அனுமதி பெறாமல் உறங்கி விட்டதால்.... கோபக்கணல் விஸ்வாமித்ரர் ஹரிச்சந்திரனை பார்த்து.... ஹரிச்சந்திரா..... என்ன தூக்கமா என்று கேட்க.... அந்த சின்ன தூக்கத்திலிருந்து விழித்து.... ஆமாம்... அசதியாக இருந்தால்.... சற்று கண் அயர்ந்து விட்டேன்... என்றார்..... உண்மை உரைத்தார் ஹரிச்சந்திரன்..... நாமயிருந்தால்.... விஸ்வாமித்ரரிருக்கு என்ன பதில் சொல்லியிருப்போம்..... தூங்கலயே....என்று உடனடியாக பொய் சொல்லியிருப்போம்..... அது தான் நமக்கும் தெய்வப்பிறவி ஹரிச்சந்திரனுக்குமுள்ள வித்தியாசம்.... சத்தியமே கடவுள்.... சத்தியமேவ ஜெயதே ..... !!!