I am your student. I am learning hindi from your videos. I have little confused which is next video? Your lessons are mixed up. So I can't find out correct line up. Let me guide. Thank you for your teaching video.
Ma'am enaku ipa sudden ah Hindi kathuka asa vandhurku. Thankyou so much ma'am. RU-vid la padika mudima nu starting la enaku doubt irunchu. Neenga soli tharadhu supera iruku. Please don't leave this. Thanks a lot.
மிகவும் அருமையான பாடங்கள் .. நன்றி... நம் தமிழ்மக்கள் பயன்பெறும் வகையில் இதைப் போலவே பிரெஞ்சு கற்றுக் கொள்ள ஒரு பாடவரிசையை Anbu_Pdy - என்ற யூடுப் பதிவைத் தொடங்கியுள்ளேன். கண்டு பயனடையுங்கள்.
நாம் ஆங்கிலம் கற்கத்தொடங்கியபோது இப்படித்தான் தொடங்கினோம் - அதாவது, ஆங்கிலம் படித்தால் நல்ல வேலை கிடைக்கும், பொருளாதாரம் வளரும்,மற்றும் பல சிந்தனைகளோடு. விளைவு, இன்று தமிழ் நாட்டில் எந்த ஒரு நிறுவனத்திலாவது கடிதப்பரிமாற்ற முறைக்கு தமிழ் பயன்படுத்தப்படுகிறதா? தமிழ் நாட்டில் தமிழக்கெடுத்தவன் யார்? நாம்தானே? நம்முடைய அறியாமை தானே? அவ்வளவு ஏன், நமது ஊரில் வேலைக்கு விண்ணப்பம் செய்யும்போது நமது சுயசரிதையை தமிழில் கொடுக்கமுடுயுமா? இதை மாற்றியது யார்? நாம் தான்...... ஹிந்தி மற்றும் சமஸ்கிருதத்தை உள்ளே விட்டதன் விளைவு நகரம் அனைத்தும் நகர் ஆனது. (அண்ணா நகர்........ இன்று பல நகர்கள் ) கைலாசம் என்ற பெயர் கைலாஷ் என்று ஆனது. பிரகாசம் என்ற பெயர் பிரகாஷ் ஆனது. குமரன் என்ற பெயர்களனைத்தும் குமார் ஆனது. (உங்கள் பெயர் கூட) தமிழ்ப்பெயர்களனைத்தும் சமஸ்கிருத பெயர்களாக்கத்தொடங்கின. இப்படி பல உள்ளன. ஆனால் ஒரு ஹிந்திக்காரன் கூட, தன பெயரை தமிழ் மாறன் என்றோ, இளந்திரையன் என்றோ, ஏன் அன்பழகன் என்ற ஒரு பொதுவான தமிழ் பெயரைக்கூட வைக்கவில்லையே? இதற்கு என்ன சொல்லப்போகிறீர்கள் தமிழ்ப்பற்றாளரே? நீங்கள் சொல்வதுபோல் பலமொழி கற்பதன்மூலம், எதையும் சாதிக்கமுடியாது. வளர்ச்சி என்பது அறிவு மற்றும் ஆராய்ச்சி மூலமாகத்தான் வரும். உலகில் விமானம் கண்டுபிடித்தவன் மக்கள் தொகை அதிகம் உள்ள சீன மொழியையோ, அல்ல து ஹிந்தி மொழியையோ படித்துவிட்டு பிறகு விமானம் கண்டுபிடிக்கவில்லையே... ஹிந்தி படிப்பதன் மூலம் எந்த ஆராய்ச்சியில் நாம் உலகை ஆளப்போகிறோம்? வாணாராய்ச்சியிலா? தொழில்நுட்பத்திலா? மனிதவாழிவியலிலா?...... உதாரணம்,மோட்டார் சைக்கிள் இந்தியாவில் அதிகம் விற்பனையாகிறது. ஆனால் எந்தஒரு மோட்டார் சைக்கிள் நிறுவனமும் தமிழ், மலையாளம், தெலுங்கு, போன்ற பல மொழிகளைப்படித்துவிட்டு தொழில் தொடங்கவில்லையே.. ஆகவே, ஹிந்திக்காரனிடம் பலிகடா ஆகாதீர்கள். அவன் உங்கள் ஊரில் வந்து உங்கள் அழகான ஊரை பான்பராக் போட்டு பாழ்படுத்திவிடுவான். ஏற்கெனெவே சென்னையில் சௌகார்பேட்டை என்ற ஊரையே பிடித்துவிட்டான் . 50 வயதுக்கு மேற்பட்டவர்களிடம் கேட்டுப்பாருங்கள், 1980 களுக்கு முன்பு தமிழ் நாடு எவ்வளவு அருமையாய் இருந்ததென்று... ஹிந்தி மற்றும் ஆங்கிலம் அதிகம் (அதிகம்) படிக்கத்தொடங்கினோம், தமிழ் அழியத்தொடங்கியது. இல்லையென்று உங்களால் மறுக்க முடியுமா?