இம்மட்டும் என்னை நடத்தினீர் இம்மட்டும் என்னை தாங்கினீர் எந்தன் இயேசு நல்லவரே அவர் என்றுமே போதுமானவர் - 2 எந்தன் பாவ பாரமெல்லாம் தன் மேலே ஏற்றுக்கொண்டு எனக்காய் குருசில் மரித்த எந்தன் இயேசு நல்லவரே - 2 மனபாரத்தின் நேரத்தில் மனவேதனையின் வேளையில் மனமுருகி நான் ஜெபிக்கையிலே எந்தன் இயேசு நல்லவரே - 2 ஒரு போதும் கைவிடாரே ஒரு நாளும் விலகிடாரே ஒரு நாளும் மறப்பதில்லை எந்தன் இயேசு உண்மை உள்ளவர் - 2 எந்தன் இயேசு வரும் போது மார்போடு அணைப்பாரே சீக்கிரமாய் வருவாரே நான் அவருடன் சென்றிடுவேன் - 2
We sing this song multiple times in our worship in church. Wonderful 🎉 Meaningful ❤ Soul stirring 🌟 Keep producing more songs to worship our Lord Jesus❤