இந்த படம் வரும்போது எனக்கு வயது 20. இன்று 60. மதுரை கல்லூரியின் நினைவு மற்றும் நண்பர்கள் நினைவு வந்து பாடாய் படுத்துகிறது. மிட்லாண்ட் தேட்டரில் பார்த்த படம். இப்போது அந்த நண்பர்கள் அனைவரும் எங்கிருக்கிறார்களோ...கண்ணில் கண்ணீர் கசிகிறது
காதலின் தீபம் ஒன்று ஏற்றினாளே என் நெஞ்சில் காதலின் தீபம் ஒன்று ஏற்றினாளே என் நெஞ்சில் ஊடலில் வந்த சொந்தம் கூடலில் கண்ட இன்பம் மயக்கம் என்ன காதல் வாழ்க காதலின் தீபம் ஒன்று ஏற்றினாளே என் நெஞ்சில் நேற்று போல் இன்று இல்லை இன்று போல் நாளை இல்லை ஹா நேற்று போல் இன்று இல்லை இன்று போல் நாளை இல்லை அன்பிலே வாழும் நெஞ்சில்... ஆ... ஆ... அன்பிலே வாழும் நெஞ்சில் ஆயிரம் பாடலே ஒன்று தான் எண்ணம் என்றால் உறவுதான் காதலே எண்ணம் யாவும் சொல்ல வா... காதலின் தீபம் ஒன்று ஏற்றினாளே என் நெஞ்சில் என்னை நான் தேடித் தேடி உன்னிடம் கண்டு கொண்டேன்... என்னை நான் தேடி தேடி உன்னிடம் கண்டு கொண்டேன் பொன்னிலே பூவை அள்ளும்... ஆ... பொன்னிலே பூவை அள்ளும் புன்னகை மின்னுதே கண்ணிலே காந்தம் வைத்த கவிதையை பாடுதே அன்பே இன்பம் சொல்ல வா... காதலின் தீபம் ஒன்று ஏற்றினாளே என் நெஞ்சில் ஊடலில் வந்த சொந்தம் கூடலில் கண்ட இன்பம் மயக்கம் என்ன காதல் வாழ்க காதலின் தீபம் ஒன்று ஏற்றினாளே என் நெஞ்சில்
Greatest composition by ragha devan iyya ilaiyaraja👌👍 Spb sir sang fabulously👍👍 I am fan of kamal sir but i like this song rajni sir done extraordinary performance👌
இந்தப் படம் இன்று வரை நான் முழுதாக தியேட்டரிலும் யூ ட்யூப் லும் பார்த்தது இல்லை..... ஆனால் இந்தப் பாடல் என் மனதில் நின்ற பாடல்...... என்றும் அழியாத இளையராஜா பாடல்..... 🎉🎉🎉🎉