வணக்கம் தமபி. என் மகள், மகன் 38,35 வயது. உன்னையும் என் மகன் போலத்தான் நினைக்கிறேன். இந்த 15 நாள் காய்ச்சல் காரணமாக யூடியுபில் உங்கள் தொடர்பு கிடைத்ததது. நட்பு தொடர ஆசைப்படுகிறேன். எந்த எதிர்பார்ப்பும் இல்லை.
என் நண்பருடன் ஒரு முறை பாரீஸ் புறநகர் பகுதி கிராமம் ஒன்றில் நடந்த பாண்டிச்சேரிக் காரர்களின் திருமணத்திற்கு மணவறை பூட்டி, பிறகு இரவு ஒரு மணியளவில் பாரீசுக்கு வந்து கொண்டிருக்கிறோம்.இங்கு ஊருக்குள் மட்டும் தான் தெரு விளக்கு எரியும். நெடுஞ்சாலைகளில் மின் விளக்குகள் கிடையாது. ஒரு ஆள் அரவமற்ற கிராம சாலையில் வரும் போது, நண்பருக்கு தூக்கம் வந்து விட்டது. உடனே நான் பேய் கதைகள் சொல்ல ஆரம்பிக்க, சும்மா இருங்க பிரபா அண்ணா என்றார். மனிதருக்கு உள்ளார பயம். போதாததற்கு மான்கள், மரைகளின் திடீர் குறுக்கீடும், வாகன ஒளியில் அதன் கண்கள் ஒளிர்வதும் , எனக்கு கூட ஒரு வித பயத்தை கொடுத்தது என்று தான் சொல்ல வேண்டும்.