Тёмный

Ramanujar kili paattu - வாழி யதிராசா! வாழி யதிராசா! 

Usha Padmanabhan
Подписаться 2 тыс.
Просмотров 12 тыс.
50% 1

Ragam: Punnagavarali
Talam: Jhampa
Composer: Smt. Rajam Vasudevan
Sigers: Usha Padmanabhan & Kanakavalli
1. யதிராசன் திருஉருவம் என்னுள்ளத்தில் நிறைந்திருக்க
வேறேதும் விரும்பேனடி கிளியே வேறேதும் விரும்பேனடி
எண்திசையும் புகழ்மேவும் இளையாழ்வார் திருவடிகள்
என்றும் மறப்பேனோடி கிளியே - என்றும் மறப்பேனோடி
வாழி யதிராசா வாழி யதிராசா
2. மாதவன் மனமுவக்க அனந்தனின் அம்சமாய்
ஆதிரையில் பிறந்தாரடி கிளியே ஆதிரையில் பிறந்தாரடி
ஆதவன்போல் ஒளிவீசி அகிலத்தில் இருளகற்ற
அழகுருவாய் வந்தாரடி கிளியே -அழகுருவாய் வந்தாரடி
வாழி யதிராசா வாழி யதிராசா
3. பெரியநம்பியைப் பணிந்து பஞ்சஸம்ஸ்காரம் பெற்று
பேருவகை அடைந்தாரடி கிளியே பேருவகை அடைந்தாரடி
திருக்கச்சியில் தேவப்பெருமாள் அனுக்ரஹிக்க
துறவறம் பூண்டாரடி கிளியே- துறவறம் பூண்டாரடி
வாழி யதிராசா! வாழி யதிராசா!
4. பஞ்ச ஆசார்யரின் பதங்களை ஆஸ்ரயித்து
பாண்டித்யம் பெற்றாரடி கிளியே - பாண்டித்யம் பெற்றாரடி
அறிவுச் சுடராம் ராமானுஜ முனியாய்
அருள் மழை பொழிந்தாரடி கிளியே - அருள்மழை பொழிந்தாரடி
வாழி யதிராசா! வாழி யதிராசா!
5. அரங்கனுக்குடையவர் திருமந்திரம் பெற்று
அடியவர்க்குரைத்தாரடிகிளியே - அடியவர்க்குரைத்தாரடி
ஆக்கியாழ்வானை வென்று ஆளவந்தார் மூவாசை
நிறைவேறச் செய்தாரடி கிளியே - நிறைவேறச் செய்தாரடி
வாழி யதிராசா! வாழி யதிராசா!
6. வைஷ்ணவப் பெருநிதியாய் விசிஷ்டாத்வைதத்தை
நிலை நாட்டி உயர்ந்தாரடி கிளியே -நிலை நாட்டி உயர்ந்தாரடி
அப்பனுக்கு சங்காழி அளித்தே கலியில்
ஏற்றம் அடைந்தாரடி கிளியே- ஏற்றம் அடைந்தாரடி
வாழி யதிராசா! வாழி யதிராசா !
7. நம் வினைகள் அகற்றியே பரமன் பதம் சேர்க்கும்
ஆசார்ய ரத்னமடி கிளியே - ஆசார்ய ரத்னமடி
பெரும்புதூர் மாமுனியின் கழலிணைகள் என்றும்
எந்தன் இருப்பிடமடி கிளியே - எந்தன் இருப்பிடமடி
வாழி யதிராசா! வாழி யதிராசா!
வாழி யதிராசா! வாழி யதிராசா!
வாழி யதிராசா! வாழி யதிராசா!
வாழி யதிராசா! வாழி யதிராசா!
எம்பெருமானார் திருவடிகளே சரணம்
............................................................

Опубликовано:

 

17 сен 2024

Поделиться:

Ссылка:

Скачать:

Готовим ссылку...

Добавить в:

Мой плейлист
Посмотреть позже
Комментарии : 39   
Далее
Ramanujar Odam
6:21
Просмотров 9 тыс.
Какой звук фальшивый?
00:32
Просмотров 610 тыс.
Saranagati gadyam (full)
22:43
Просмотров 1,3 тыс.
"வண் சடகோபன்"- song on Nammazhvar
5:42
Ramanujar vadivazhagu: Parpamena thigazh
4:41
Просмотров 17 тыс.
Thiruvengada Paasurangal Bombay Sisters
23:22
Просмотров 12 тыс.