தமிழ்நாட்டை தமிழ் தேசியம் என்னும் அண்ணன் திரு. சீமான் நாம் அனைவரும் ஒரே ஜனநாயக நாடான இந்தியாவில் வாழ்வதை மறந்தாரா? இந்தியாவின் சுதந்திரத்திற்கு தமிழர்களின் பங்கு இருந்தது. ஆனால், முற்றிலும் தமிழர்களால் சுதந்திரம் கிடைக்கப்பெறவில்லை அல்லவா. அண்ணன் திரு. சீமான் அவர்களே இதுவும் ஒரு பிரிவினைவாதமே... திராவிடம் என்பது தென்னிந்தியத்தையே குறிக்கிறது இதில் தென்னிந்திய மொழிகள்,மாநிலங்கள் போன்றவை உள்ளடங்கும். தமிழ்தேசியத்திற்கு முக்கியத்துவம் தரலாமே தவிர திராவிடமே வேண்டாம் என்பது இடம், மொழி மற்றும் மாநிலப் பிரிவினையை ஏற்படுத்துகிறது. இதானால் நீங்கள் இந்தியாவிலிருந்து தமிழகத்தை தனிநாடாக்கி விடுவதுபோல்தான் தெரிகிறுது. தமிழகம் தனிநாடாக இருந்தால் நீங்கள் கூறும் தமிழ் தேசியக் கருத்துக்களை ஏற்கலாம். இதனால் நான் திராவிடத்திற்காக மட்டும் பேசுகிறேன் என எண்ண வேண்டாம். திராவிடமும், தமிழ்தேசியமும்... சிந்தித்து செயல்படுவோம்... சிறப்பான தமிழகத்திற்காக...