The Lyrics of "Uyir Ondrai" இரவின் பொழுதும் நீளுதே வழியறியா எந்தன் வாழ்விலே... பகலின் பொருளும் மாறுதே.. பணயம் என காதல் ஆகுதே.. உதிரும் சிறகும் உன்னிலே - அதை உணரும் நிலையும் இல்லையே சேராமல் பிரிவும் ஆனதே... சேறாகும் வாழ்வின் மீதிலே... உயிர் ஒன்றாய் வேக உடல் இரண்டாய் வாழ இது என்ன வாழ்க்கையோ . . . வழி வேறாய் போக நான் எதனை நோக வாழ்வெங்கே மீளுமோ . . . கானலே காயுமா.... நெஞ்சிலே வடு ஆறுமா.... ஏற்கவே இல்லையே உன் நிலையும் எரியும் தீயிலா.... என் கனவு கொண்ட உறுதி இன்று கலைந்ததன் காரணம் என்னவோ... ஓர் சிநேகம் காட்டி சென்ற நெஞ்சம் இன்று இல்லை என்று ஆனதோ... தேடி தேடி பாக்கிறேன் உன் நினைவுகள் என்னை கொல்லவே... முழு புன்னகை தந்த பெண்ணவள் எங்கே என்று தேடினேன்..... நிறைந்த நினைவுகள் நிறமற்று போகவோ உறைந்த உணர்வுகள் உருக்குலைந் ஆகவோ இறந்த இருதயம் உதிரமும் காணுமோ இழந்த மெய் நகை திரும்பிடுமோ.. அரிதாகும் அவள் சிரிப்பு அமுதில்லையா அகம் தேடும் எமதிருப்பு (எமது இருப்பு) நிறைவில்லையா அணை மோதும் நம் அழுகை முடிவில்லையா இரையாகும் மனம் ஏனோ கானலே காயுமா.... நெஞ்சிலே வடு ஆறுமா.... ஏற்கவே இல்லையே உன் நிலையும் எரியும் தீயிலா.... காணும் யாவும் காரிருள் சூழும் வானம் மேலும் நீண்டிடும் -என் காலம் மீதும் ஏறுமோ விதி எழுதும் விரலுமாகுமோ காணும் யாவும் காரணம் தேடும் வானம் மேலும் நீண்டிடும் -என் கோபம் யாவும் தோற்கவோ மதி பழகும் மனித மார்க்கமோ.. இரவின் பொழுதும் நீளுதே வழியறியா எந்தன் வாழ்விலே... பகலின் பொருளும் மாறுதே.. பணயம் என காதல் ஆகுதே... உதிரும் சிறகும் உன்னிலே - அதை உணரும் நிலையும் இல்லையே சேராமல் பிரிவும் ஆனதே... சேறாகும் வாழ்வின் மீதிலே... என் காதல் காயம் ஆறுமோ - உயிர் உணர்வை மென்று தீருமோ கன காலம் ஆன போதிலும் - உனை தேடும் நெஞ்சம் மாறுமோ கனவிலேனும் சேருமோ - என் கண்ணீர்த் துளியும் வேகுமோ பெருவெளியில் நானும் காணவே கல்லூரும் எறும்பென் காதலுமே . . . .
Hats off to the Mahi and incredible crew for their hard work and dedication! 😇❤ Your efforts have truly paid off. I am really happy to be a part of this and working with these beautiful souls.I wish you all the best to continue doing beautiful works like this.🤍💫
This is one of music video in RU-vid that make me emotional. I can't understand Tamil language but both of your facial expressions felt me a lot.💔 Keep it up guys.💖 I wish this video get million of views. Fantastic..❤🔥
enga ponaalum intha "Glad to be a part" ai thookkeettu vanthidraan Recording engineer, Bassist innum ennenna avatar eduthuttu again composer aakalaam nnu irukkeenga saar ?