Тёмный

VP:184/வாருங்கள் படைப்போம் / படைப்பாளர் சோலச்சி உடன் கலந்துரையாடுபவர் முனைவர் வா. நேரு 

Varungal Padaipom
Подписаться 335
Просмотров 44
50% 1

#184VarungalPadaipom
Guest: படைப்பாளர் சோலச்சி
Interviewer: முனைவர் வா. நேரு
Co-ordinator: Vinitha Mohan,
Olivannan, Elango, Kumaran, Arsha, Sunitha, Uma.
படைப்பாளர் சோலச்சி அவர்களைப் பற்றி:
புதுக்கோட்டை மாவட்டம் வயலோகம் கிராமம் அகரப்பட்டியைச் சேர்ந்த ''சோலச்சி'' என்னும் இவர் அரசுப் பள்ளியில் இடைநிலை ஆசிரியராகப் பணியாற்றி வருகின்றார். இயற்பெயர் தீ.திருப்பதி. புதுக்கோட்டையில் நச்சாந்துபட்டி இராமநாதன் செட்டியார் மேல்நிலைப்பள்ளியில் பத்தாம்வகுப்பு அறிவியல் பாட ஆசிரியர் திருமதி எஸ்.சோலச்சி அவர்கள் 1998 இல் இவருக்கும் இவரது குடும்பத்திற்கும் உற்ற துணையாக இருந்து வாழ்வில் ஒளியை உண்டாக்கியவர். அதனால் ஆசிரியரின் பெயரையே புனைபெயராக வைத்துக் கொண்டார்.
இவர் படைப்புகள் :
சிறுகதை:
1.முதல் பரிசு
2.கருப்புச் சட்டையும் கத்திக் கம்புகளும்
3.அட்டணக்கால்,
4. தொவரக்காடு
கவிதை:
1.காட்டு நெறிஞ்சி
2.விரிசல்
நாவல்:
1. முட்டிக்குறிச்சி
''முதல் பரிசு'' சிறுகதை நூலுக்கு 2017இல் கல்பாக்கம் சாலோம் அறக்கட்டளை விருது." கருப்புச்சட்டையும் கத்திக்கம்புகளும்" சிறுகதை நூல் 2017 இல் சென்னை பொதிகை மின்னல் விருது, ராஜபாளையம் மணிமேகலை மன்றத்தின் சிறுகதைச் செம்மல் விருது மற்றும் புதுச்சேரி தமிழ்ச் சங்கம் விருதும் பெற்றுள்ளார். முதல்பரிசு மற்றும் கருப்புச் சட்டையும் கத்திக்கம்புகளும் இரண்டு சிறுகதை நூல்களும் எம்.பில் ஆய்வு செய்யப்பட்டுள்ளன.
சமூகம் மற்றும் இயற்கை ஆர்வலரான இவர் கஜா புயல் மற்றும் கொரோனா பெருந்தொற்று காலங்களில் புதுக்கோட்டை நண்பர்களோடு இணைந்து பெரும் தொண்டு ஆற்றியுள்ளார். ஒரே நாளில் 2000 பனை விதைகளைச் சேகரித்து தனது குடும்பத்தாருடன் இணைந்து ஏரி குளங்களில் நடவு செய்துள்ளார்.
தற்போது இந்த ஆண்டுக்கான சௌமா இலக்கிய விருது முட்டிக்குறிச்சி நாவலுக்குக் கிடைத்துள்ளது.

Развлечения

Опубликовано:

 

2 июл 2024

Поделиться:

Ссылка:

Скачать:

Готовим ссылку...

Добавить в:

Мой плейлист
Посмотреть позже
Комментарии : 1   
@solachypudukkottai1883
@solachypudukkottai1883 Месяц назад
மகிழ்ச்சியும் பேரன்பும் நிறைந்த கலந்துரையாடல்.
Далее