என் சுவாசக் காற்றே என் வாழ்வின் ஊற்றே இறைவா என் உள்ளம் வருவாய் என்னுயிரின் உணவே என் வாழ்வின் வழியே தலைவா நீ உன்னைத் தருவாய் என் வாழ்வும் என் வளமும் எல்லாமும் நீதானே இறைவா தலைவா அன்பினைப் பொழிவாய் என் சொந்தம் யாவும் என் தேவை யாவும் நீதானே நீதானே இறைவா என் நெஞ்சில் நேசம் மாறாத வாசம் தருவாயே தருவாயே தலைவா வாழ்நாளெல்லாம் நீ வேண்டுமே வளர்ந்திட நாளும் வரம் வேண்டுமே - 2 வாழ்வாய் வழியாய் நிறைந்திட வருவாய் 2 எழில் வானம் போல நிலைக்கும் உன் அன்பை அறிவேனே அறிவேனே இறைவா உனைப் போல நானும் பிறரன்பில் வளர அருள்வாயே அருள்வாயே தலைவா மகிழ்ந்திட நாளும் அருள் வேண்டுமே ஒளிர்ந்திட நாளும் துணை வேண்டுமே - 2 நிழலாய் நிறைவாய் வாழ்வினில் வருவாய்
நான் சிறு மூங்கில் தான் என் இறைவா நீ விரும்பும் குழலாக எனை மாற்ற வா நீ ஊதும் காற்றினில் உயிர் வாழுவேன் உன் விரல் அசைவினில் இசையாகுவேன் வாழ்நாளெல்லாம் இனி உன் ராகமே வாழும் நொடிகள் அதன் சப்தஸ்வரமே 1. உனக்காக உருவான இசைக்கருவி நான் உன் பாடல் அரங்கேறும் சிறுமேடை நான் நிகழ்வாக என் வாழ்வில் நடப்பதெல்லாம் நீ எழுப்பும் விண்ணிசையின் ஸ்வரக்கோர்வை தான் உன்னில் இணைந்தால் என்னில் விண்ணின் இசையே நீ இல்லையேல் நான் வெறும் ஓசையே 2. உன் அன்பு இசைவெள்ளம் என் நெஞ்சிலே புது ராகப் புனலாகப் பாய்ந்து வந்ததே சுமையான பழம்போக்கு போய் மறைந்ததே சுவையான புதுவாழ்வு கரைபுரண்டதே உன்னில் இணைந்தால் வாழும் புதுச்சுவையே நீ இல்லையேல் அது பெரும்சுமையே
We cannot see anywhere in bible that Jesus budge to anyone's command The only place i see is in the marriage of cana when Mother Mary commands Jesus to produce wine What kind of human is she who can command her lord and the Lord obeys without a word Is she just another human being