அப்பூதி அடிகள் திருநீலகண்டர் முருகன் ந்ந்தன் சத்தியவான் சாரங்கதரன் கோவலன் பிலேந்திரன் அர்ச்சுன்ன் அந்திராசி இரணியன் இலங்கேஸ்வரன் புருஷோத்தமன் கனகராஜன் இவைக்கு முன்பான பெண் பாத்திரங்கள் யாவும் நடிகமணி நடித்த நாடகங்கள் அக்காலம் நவீன வசதிகள் இல்லாமையும் பிற்காலம் நாட்டின் அசாதாரண சூழ்நிலையும் ஒளிப்பதிவு செய்யப்படமுடியாமல் போய்விட்டது என்பது மிகவும் கவலைக்குரியது
இந்தப் பாடலுக்கு ஒரு வரலாறு உண்டு. ஆதாரம் எழுத்தாளர் வாமணன் வெளியிட்ட "டி.எம்.எஸ் ஒரு பண்பாட்டுச் சரித்திரம்" நூல். திரையிசைத் திலகம் கே.வி.மகாதேவன் இந்தப் பாடலுக்கான சுருதியைவைத்து சீர்காழி கோவிந்தராஜன் அவர்களை வைத்து பாடலைப் பதிவுசெய்துவிட்டார். இது நடிகர் திலகம் சிவாஜிகணேசனுக்கு தெரிந்திருக்கவில்லை . பாடலுக்கு நடிக்கும் தருணமும் வந்துவிட்டது. தனது பயிற்சிக்காக பாடலை சிவாஜிகணேசன் வாங்கியபோதுதான் அவருக்குத் தெரியவந்தது. பாடலை டி.எம்.எஸ் ஏன் பாடவில்லை?, அவர்தான் பாடவேண்டும் என சிவாஜி பிடிவாதமாக நின்றார். டி.எம்.எஸ் பாடுவதாகில் சுருதி குறைக்கவேண்டும் என கே.வி.எம் சொல்ல, என்னமாமா? (கே.வி.எம் அவர்களை மாமா என்றுதான் எல்லோரும் அழைப்பார்கள்), டி.எம்.எஸ் அவர்களுக்கு சுருதி ஒரு பொருட்டா?, இதே சுருதியில் அவர் பாடுவார், பாடவையுங்கள் எனக் கூறிவிட்டு சென்றுவிட்டார். பின்னர் கே.வி.எம் சுருதி மாற்றாமல் டி.எம். எஸ் அவர்களைப் பாடவைத்து பாடல்தான் இது. கே.வி.எம் அவர்களிலும் ஒரு தவறு உண்டு. 1953 இலிருந்து டி.எம்.எஸ் = சிவாஜி என்பது உலகறியும். அப்படியிருக்கும்போது, 1963 இல் வெளிவந்த குங்குமம் படத்திற்கு, கே.வி.எம் அவர்கள் சீர்காழி கோவிந்தராஜனைப் பாடவைத்தது தவறு. ஒரு கர்நாடக சங்கீத இசைமேதை என்கின்றவகையில், பாடலின் தரத்தை அதிகரிக்க சுருதியை அதிகரித்தார் கே.வி.எம். டி.எம்.எஸ் அவர்கள் இங்கு எல்லோரையும் வென்றார்.