Тёмный

அட்டகாசமான பன்னீர் ரெசிப்பீஸ் | Paneer Recipes In Tamil | Paneer Snacks Recipes | Paneer Recipes 

HomeCooking Tamil
Подписаться 1,1 млн
Просмотров 18 тыс.
50% 1

அட்டகாசமான பன்னீர் ரெசிப்பீஸ் | Paneer Recipes In Tamil | Paneer Snacks Recipes | Paneer Recipes | ‪@HomeCookingTamil‬
#paneerrecipes #paneersnacks #paneercutletrecipe #paneersandwichrecipe
Chapters:
Promo - 00:00
Paneer Cutlet: 00:24
Paneer Sandwich: 05:44
Paneer Popcorn: 09:44
Paneer Tikka: 12:51
Here is the link to Amazon HomeCooking Store where I have curated products that I use and are similar to what I use for your reference and purchase www.amazon.in/shop/homecookin...
பன்னீர் கட்லெட்
தேவையான பொருட்கள்
மசாலா செய்ய
எண்ணெய்
பெரிய வெங்காயம் - 1 பொடியாக நறுக்கியது
பச்சை மிளகாய் - 2 பொடியாக நறுக்கியது
இஞ்சி பூண்டு விழுது - 1/2 தேக்கரண்டி
மஞ்சள் தூள் - 1/4 தேக்கரண்டி
மிளகாய் தூள் - 1 தேக்கரண்டி
உப்பு - 1 தேக்கரண்டி
சீரக தூள் - 1/2 தேக்கரண்டி
கரம் மசாலா தூள் - 1/2 தேக்கரண்டி
சாட் மசாலா தூள் - 1/2 தேக்கரண்டி
கேரட் - 1 துருவியது
உருளைக்கிழங்கு - 1 வேகவைத்து துருவியது
கொத்தமல்லி இலை பொடியாக நறுக்கியது
பன்னீர் - 200 கிராம்
பிரட் தூள் - 1/4 கப்
மைதா கலவை செய்ய
மைதா - 1 மேசைக்கரண்டி
சோள மாவு - 2 தேக்கரண்டி
தண்ணீர்
செய்முறை:
1. ஒரு அகல கடாயில் எண்ணெய் ஊற்றி, பெரிய வெங்காயம், பச்சை மிளகாய் சேர்த்து வதக்கவும். வெங்காயம் பாதி வதங்கியதும் இஞ்சி பூண்டு விழுது சேர்த்து வதக்கவும்.
2. இப்போது இதனுடன் மஞ்சள் தூள், மிளகாய் தூள், உப்பு, சீரக தூள், கரம் மசாலா தூள், சாட் மசாலா தூள் சேர்த்து கலந்து விடவும்.
3. அடுத்து துருவிய கேரட், வேகவைத்து துருவிய உருளைக்கிழங்கை சேர்த்து குறைந்த தீயில் வைத்து கலந்து விடவும்.
4. பிறகு கொத்தமல்லி இலை சேர்த்து கலந்து விட்டு அடுப்பை அணைத்து, மசாலாவை வேறு கிண்ணத்திற்கு மாற்றி ஆறவிடவும்.
5. ஆறியவுடன் பன்னீரை துருவி சேர்த்து கலந்து விடவும். பின்பு பிரட் தூளை சேர்த்து நன்கு கலந்து விடவும்.
6. பன்னீர் கலவையை சிறிதளவு எடுத்து உங்களுக்கு விருப்பமான வடிவில் கட்லெட் செய்து கொள்ளவும்.
7. மைதா கலவை செய்ய, ஒரு கிண்ணத்தில் மைதா, சோள மாவு, தண்ணீர் சேர்த்து கலந்து கொள்ளவும்.
8. பிரட் தூளை ஒரு தட்டில் எடுத்து கொள்ளவும். இப்போது பன்னீர் கலவையை எடுத்து, மைதா கலவையில் போட்டு, பிரட் தூளில் பிரட்டி எடுக்கவும். பின்பு செய்த கட்லெட்டை 15 நிமிடம் பிரிட்ஜில் வைக்கவும்.
9. சூடான எண்ணெயில் கட்லெட்களை போட்டு, குறைந்த தீயில், பொன்னிறமாகும் வரை பொரித்து எடுக்கவும்.
10. டொமேட்டோ கெட்சப் அல்லது மயோனைஸ் உடன் பன்னீர் கட்லெட்டை சூடாக பரிமாறவும்.
பன்னீர் சான்ட்விச்
தேவையான பொருட்கள்
பன்னீர் - 400 கிராம்
பூண்டு - 3 பற்கள்
பெரிய வெங்காயம் - 1
பச்சை மிளகாய் - 3
குடை மிளகாய் - 1
உப்பு - 1 தேக்கரண்டி
காஷ்மீரி மிளகாய் தூள் - 1 தேக்கரண்டி
கரம் மசாலா - 1 தேக்கரண்டி
அம்ச்சூர் தூள் - 1 தேக்கரண்டி
சாட் மசாலா - 1 தேக்கரண்டி
மல்லி தூள் - 1 தேக்கரண்டி
சீரகம் தூள் - 1 தேக்கரண்டி
கொத்தமல்லி இலை
பன்னீர் பாப்கார்ன்
தேவையான பொருட்கள்
பன்னீர் - 400 கிராம்
கார்ன் பிளேக்ஸ்
எண்ணெய் - பொரிப்பதற்கு
மாவு கலவை செய்ய
சோள மாவு - 1/4 கப்
மைதா - 1/4 கப்
காஷ்மீரி மிளகாய் தூள் - 1 தேக்கரண்டி
பூண்டு தூள் - 1 தேக்கரண்டி
வெங்காய தூள் - 1 தேக்கரண்டி
இட்டாலியன் சீசனிங் - 1 தேக்கரண்டி
உப்பு - 1/2 தேக்கரண்டி
மிளகு தூள்
தண்ணீர்
மயோ டிப் செய்ய
மயோனைஸ் - 1/4 கப்
சில்லி சாஸ் - 1 மேசைக்கரண்டி
இட்டாலியன் சீசனிங் - 1/4 தேக்கரண்டி (விரும்பினால்)
உப்பு - 1 சிட்டிகை
செய்முறை:
1. பன்னீரை சிறிய துண்டுகளாக நறுக்கி தனியாக வைக்கவும்.
2. ஒரு பாத்திரத்தில், சோளமாவு, மைதா, காஷ்மீரி மிளகாய் தூள், பூண்டு தூள், வெங்காய தூள், இட்டாலியன் சீசனிங், மிளகு தூள், உப்பு ஆகியவற்றை சேர்த்து கலந்து, சிறிது சிறிதாக தண்ணீர் ஊற்றி தோசை மாவு பதத்திற்கு கலக்கவும்.
3. கார்ன் பிளேக்ஸை பொடியாக்கி தனியாக வைக்கவும்.
4. இப்போது, ​​பன்னீர் துண்டுகளை மாவு கலவையில் போட்டு, பொடியாக்கிய கார்ன் பிளேக்ஸில் பிரட்டி 10 நிமிடம் பிரிட்ஜில் வைக்கவும்.
5. அடுத்து ஒரு கடாயில் எண்ணெய் ஊற்றி சூடானதும், பன்னீர் துண்டுகளை மெதுவாக சேர்த்து, பொன்னிறமாக மாறும் வரை பொரித்து எடுக்கவும்.
6. பன்னீர் பாப்கார்ன் தயார்.
மயோ டிப் செய்ய:
1. ஒரு கப்பில் மயோனைஸ், சில்லி சாஸ், இட்டாலியன் சீசனிங், உப்பு
சேர்த்து நன்கு கலக்கவும். மயோ டிப் தயார். இதை பன்னீர் பாப்கார்னுடன் சேர்த்து பரிமாறவும்.
பன்னீர் டிக்கா
தேவையான பொருட்கள்
பன்னீரை ஊறவைக்க
தயிர் - 400 கிராம்
மஞ்சள் தூள் - 1/2 தேக்கரண்டி
மிளகாய் தூள் - 2 தேக்கரண்டி
மிளகு தூள் - 1/2 தேக்கரண்டி
உப்பு - 1 தேக்கரண்டி
தனியா தூள் - 1 1/2 தேக்கரண்டி
சீரக தூள் - 1 1/2 தேக்கரண்டி
கரம் மசாலா தூள் - 1 தேக்கரண்டி
சாட் மசாலா தூள் - 1 தேக்கரண்டி
இஞ்சி பூண்டு விழுது - 1 1/2 தேக்கரண்டி
எலுமிச்சைபழச்சாறு - 1 பழம்
கசூரி மேத்தி - 1 தேக்கரண்டி
கடலை மாவு - 2 தேக்கரண்டி (விரும்பினால்)
சோள மாவு - 1 தேக்கரண்டி
பன்னீர் டிக்கா செய்ய
பன்னீர் - 600 கிராம்
மஞ்சள் குடைமிளகாய்
சிவப்பு குடைமிளகாய்
பச்சை குடைமிளகாய்
வெங்காயம் - 2
HAPPY COOKING WITH HOME COOKING Tamil Recipes
ENJOY OUR TAMIL RECIPES
You can buy our book and classes on www.21frames.in/shop
WEBSITE: www.21frames.in/homecooking
FACEBOOK - / homecookingt. .
RU-vid: / homecookingtamil
INSTAGRAM - / homecooking. .
A Ventuno Production : www.ventunotech.com

Хобби

Опубликовано:

 

30 июл 2024

Поделиться:

Ссылка:

Скачать:

Готовим ссылку...

Добавить в:

Мой плейлист
Посмотреть позже
Комментарии : 9   
@ARUNKUMAR_B.TECH-IT
@ARUNKUMAR_B.TECH-IT 19 дней назад
Super paneer recipes ❤😊
@vaishnaviav3701
@vaishnaviav3701 19 дней назад
Wow..tempting paneer recipes 😊😊
@user-he3gy8rc2g
@user-he3gy8rc2g 19 дней назад
Vanakkam mam thank you mam yenakku theriyaatha tasty paneer recepes thank you mam
@elizabethselvarani1331
@elizabethselvarani1331 19 дней назад
Super mam
@shubhlaxmiiyer3692
@shubhlaxmiiyer3692 18 дней назад
Yummy ka ❤❤❤❤❤
@hariharanp.r.7559
@hariharanp.r.7559 19 дней назад
Yummy 😋
@vaishnaviav3701
@vaishnaviav3701 19 дней назад
Poondu thool vengam thool yethu ellam enka kidaikum mam
@shanthiabiya7994
@shanthiabiya7994 19 дней назад
Amazon
@teresa985
@teresa985 19 дней назад
Supermarkets la ellam kooda kedaikum.
Далее
Наше обычное утро 💕
0:42
Просмотров 2,1 млн
МОЖЕТ ЛИ УКУСИТЬ СОБАКА
0:14
Просмотров 2,9 млн
Молилась за сына🙏
0:25
Просмотров 3,6 млн