ஐயா, தகவலுக்கு நன்றி. நீங்கள் சொல்வது உண்மைதான். புருவமத்தி, உள்ளே செல்வதற்கான வழிதானே தவிர ஜோதி தோன்றும் இடம் இல்லை. என்னுடைய தியான ஆரம்ப அனுபவத்தில், புருவமத்தியில் கவனம் செய்யும்போது சிறியதாக சூடு உண்டானது. அந்த சூடு காரணமாக நெற்றி மையத்தில் கட்டியே வந்துவிட்டது. பின்பு தொடர்ச்சியாக செய்ததின் பின், தலையின் இடது வலது உச்சம் மூன்று இடங்களிலும் பூரான் ஊர்வது போன்ற உணர்வு உண்டானது. இந்த உணர்வு சில வருடம் கழித்து நாள் முழுவதும் இப்பொழுது இருந்து வருகிறது. குறிப்பாக உணவு உண்ணும்போது இந்த உணர்வு பலமடங்கு உயர்ந்து காணப்படுகிறது. ஆறு ஆதாரங்களில் தியானம் செய்யவில்லை என்றாலும் புருவமத்தி தியானம் மூலம் அணைத்து ஆதாரங்களும் இயங்குவதை உணரவும் முடிகிறது. தினமும் குறைந்தது எட்டுமணி நேரம் தியானம் செய்தால் அல்லது சதாகாலமும் இறைவனை நினைத்துக்கொண்டே இருந்தால் இந்த அனுபவம் விளங்கும். தூக்கம் இரண்டு மணிக்குள்ளும், உணவு ஒரு வேலைக்குள்ளும், ஐந்து சுவாசம் ஒரு நிமிடத்திற்குள்ளும் ஒடுங்கிவிட்டது.
Can Aiya teach aaraam thirarutpa song s start from one beginning to last songs? Hope to happen I'm so eager to listen follow as much possible.nandri Aiya
ஆன்மா என்பது வியாபகமாக எங்கும் பரவி இருக்கும்.ஒருகற்பகாலம் மறைந்து இருக்கும்.அந்த ஆன்மா பிறவி எடுத்தபிறகு ஜீவனாகிறது (உயிர் பெற்று வாழ்கிறது) இதைத்தான் பெருமானார் ஜீவனாகிய ஆன்மா என ஜீவகாருண்ய ஒழுக்கத்தில் சொல்லி இருக்கிறார்.இந்த ஆன்மாவை தான் அகவலில் உறுப்பாக்கிக் கொள்ள சொல்கிறார் ஆன்மா வெளியே செல்லாது இதுதான் மரனமிலாப் பெருவாழ்வு நம் வள்ளலார் அடைந்த நிலை