Тёмный

அற்புதத் திருவந்தாதி I Arputha Thiruvanthathi I நாள் - 1 I KSS ICF 

  Kamala Vinayagar Sath Sangam
Подписаться 4,2 тыс.
Просмотров 2,9 тыс.
50% 1

காரைக்காலம்மையார் அருளிய அற்புதத் திருவந்தாதி - நாள் - 08/04/2013
பாடல் - 1
பிறந்து மொழிபயின்ற பின்னெல்லாம் காதல்
சிறந்துநின் சேவடியே சேர்ந்தேன் - நிறந்திகழும்
மைஞ்ஞான்ற கண்டத்து வானோர் பெருமானே
எஞ்ஞான்று தீர்ப்ப திடர்.
பாடல் - 2
இடர்களையா ரேனும் எமக்கிரங்கா ரேனும்
படரும் நெறிபணியா ரேனும் - சுடருருவில்
என்பறாக் கோலத் தெரியாடும் எம்மானார்க்
கன்பறா தென்நெஞ் சவர்க்கு.
பாடல் - 3
அவர்க்கே எழுபிறப்பும் ஆளாவோம் என்றும்
அவர்க்கேநாம் அன்பாவ தல்லால் - பவர்ச்சடைமேற்
பாகாப்போழ் சூடும் அவர்க்கல்லால் மற்றொருவர்க்
காகாப்போம் எஞ்ஞான்றும் ஆள்.
பாடல் - 4
ஆளானோம் அல்லல் அறிய முறையிட்டாற்
கேளாத தென்கொலோ கேள்ஆமை - நீள்ஆகம்
செம்மையான் ஆகித் திருமிடறு மற்றொன்றாம்
எம்மையாட் கொண்ட இறை.
பாடல் - 5
இறைவனே எவ்வுயிருந் தோற்றுவிப்பான் தோற்றி
இறைவனே ஈண்டிறக்கஞ் செய்வான் - இறைவனே
எந்தாய் என இரங்கும் எங்கள்மேல் வெந்துயரம்
வந்தால் அதுமாற்று வான்.
பாடல் - 6
வானத்தான் என்பாரும் என்கமற் றும்பர்கோன்
தானத்தான் என்பாரும் தாமென்க - ஞானத்தான்
முன்நஞ்சத் தாலிருண்ட மொய்யொளிசேர் கண்டத்தான்
என்நெஞ்சத் தானென்பன் யான்.
பாடல் - 7
யானே தவமுடையேன் என்னெஞ்சே நன்னெஞ்சம்
யானே பிறப்பறுப்பான் எண்ணினேன் - யானே அக்
கைம்மா வுரிபோர்த்த கண்ணுதலான் வெண்ணீற்ற
அம்மானுக் காளாயி னேன்.
பாடல் - 8
ஆயினேன் ஆள்வானுக் கன்றே பெறற்கரியன்
ஆயினேன் அஃதன்றே ஆமாறு - தூய
புனற்கங்கை ஏற்றானோர் பொன்வரையே போல்வான்
அனற்கங்கை ஏற்றான் அருள்.
பாடல் - 9
அருளே உலகெலாம் ஆள்விப்ப தீசன்
அருளே பிறப்பறுப்ப தானால் - அருளாலே
மெய்ப்பொருளை நோக்கும் விதியுடையேன் எஞ்ஞான்றும்
எப்பொருளும் ஆவ தெனக்கு.
பாடல் - 10
எனக்கினிய எம்மானை ஈசனையான் என்றும்
மனக்கினிய வைப்பாக வைத்தேன் - எனக்கவனைக்
கொண்டேன் பிரானாகக் கொள்வதுமே இன்புற்றேன்
உண்டே எனக்கரிய தொன்று.

Опубликовано:

 

12 сен 2024

Поделиться:

Ссылка:

Скачать:

Готовим ссылку...

Добавить в:

Мой плейлист
Посмотреть позже
Комментарии : 14   
@shivangya0573
@shivangya0573 Год назад
சிவாய நம🙏 மிக மிக அருமை ஐயா🙏 இதனை பதிவு செய்த அனைத்து நல் உள்ளங்களுக்கும் மனமார்ந்த நன்றி🙏. இந்த தொகுப்பில் ஐயா 1 முதல் 10 பாடல்களுக்கான விளக்கம் கொடுத்துள்ளார்கள். திருச்சிற்றம்பலம்🙏
@azagappasubramaniyan3276
@azagappasubramaniyan3276 Год назад
ஐயா, மிக்க நன்றி. கமல விநாயகர் சத்சங்க அடியார் பெருமக்கள் அனைவருக்கும் எங்களின் மனமார்ந்த நன்றிகள். ஒவ்வொரு முத்தாக பதிவு செய்து எங்களை திக்குமுக்காட வைக்கிறார்கள். கேட்க முடியாமல் விட்டுப் போன பதிவுகள் அனைத்தையும் இப்போது கேட்கிறோம். மிக்க நன்றி ஐயா.
@thiruppugazh_daily
@thiruppugazh_daily Год назад
அருணாசல பெருமானின் தனிப்பெரும் அருளால் சிவஞானத் திரளாய் திகழ்ந்து அகத்தில் சிவத்தை அமர்த்தும் அடியவர்களுக்கு அயரா அன்பில் அன்றாடம் சிவ ஞானத்தையும் அரிய சைவ கருத்துக்களையும் உணர்த்தி அயில் வேலனின் அளவில்லா கருணையினால் அளர்ந்த புகழ் கொண்ட சிவனடியார்களின்மெய் அன்பையும் சிவக்கீர்த்தியையும் பெறும் எங்கள் சிவகுமார் அய்யாவிற்கு அனேக நமஸ்காரங்கள்🙏🙏🙏!!
@babur3273
@babur3273 Год назад
சிவ சிவ
@deivanayagamv9532
@deivanayagamv9532 6 месяцев назад
ஓம் நமச்சிவாய போற்றி 🙏 குருவடி சரணம் 🙏
@jagysenthil2798
@jagysenthil2798 Год назад
திருச்சிற்றம்பலம் சிவாயநம
@uglyvulture5172
@uglyvulture5172 Год назад
சிவக்குமார் ஐயா வாழ்த்துப் பா ------------------------------- ஆதியாடி எழுசீர் விருத்தம் உன்னை உற்ற ஆசான் என்றே உள்ளம் ஆடி மகிழ தென்றல் வந்து பத்தி கொண்டு தேவன் பாதம் சேரும் கன்னல் ஒத்துக் கூறுந் தமிழைத் தூவு அரிய கொண்டல் அன்ன வாழி நீடு தாளில் பூவைத் தூவி னோம்.
@praveenpraveen3096
@praveenpraveen3096 Год назад
Ohm Muruga ohm namah shivaya sivaparamporul valka
@praveenpraveen3096
@praveenpraveen3096 Год назад
Ohm namah shivaya
@logaarulalingam4166
@logaarulalingam4166 Год назад
OM NAMASIVAYA OM
@dr.n.mohan-738
@dr.n.mohan-738 Год назад
இடர் களையாரேனும், எமக்கு இரங்காரேனும், படரும் நெறி பணியாரேனும், சுடர்-உருவில் என்பு அறாக் கோலத்து எரி ஆடும் எம்மானார்க்கு அன்பு அறாது என் நெஞ்சு அவர்க்கு.
@logaarulalingam4166
@logaarulalingam4166 Год назад
OM NAMASIVAYA OM
@thirumuraipadalgallayakavy6366
நன்றி ஐயா சிவாயநம🙏🙏
@subahmohan9578
@subahmohan9578 Год назад
ஐயாதிருவடிகள்பணிந்துவணங்கிமகிழ்கிறேன்🙏🙏🙏🙏🙏🙏🌺
Далее
А ВЫ ЛЮБИТЕ ШКОЛУ?? #shorts
00:20
Просмотров 2,5 млн
Arputha Thiru Andaadhi
1:58:15
Просмотров 11 тыс.
Mohanasundaram Non Stop Comedy Speech
38:00
Просмотров 398 тыс.
А ВЫ ЛЮБИТЕ ШКОЛУ?? #shorts
00:20
Просмотров 2,5 млн