இந்த பாடலை அனைத்து சிறு குழந்தைகளுக்கும் அர்ப்பணிக்கிறோம், அவர்கள் தங்கள் முழு இருதயத்தோடும் இயேசு கிறிஸ்துவை மகிழ்ந்து துதிக்க வேண்டும் இந்த பாடல் உங்களுக்கு மிகவும் பிடித்திருந்தால், கண்டிப்பாக அனைத்து சிறு குழந்தைகளுடனும் உங்கள் குடும்பத்தினருடனும் பகிர்ந்து கொள்ளுங்கள் உங்கள் மதிப்புமிக்க கருத்துக்களைப் பகிருங்கள், மேலும் பாடல்களைப் பதிவுசெய்ய இது நிச்சயமாக எங்களை ஊக்குவிக்கும்
1.இயேசுவே உம் முகம் பார்க்கனுமே பார்த்து அனுதினம் நான் ரசிக்கனுமே-2 ரசிக்கனுமே (உம்மை) ரசிக்கனுமே பார்த்து அனுதினம் நான் ரசிக்கனுமே-2 2.முழு மனதோடு உம்மை துதிக்கனுமே துதித்து துதித்து வாழனுமே-2 வாழனுமே (ஐயா) வாழனுமே உம்மை போல் ஒரு வாழ்க்கை வாழனுமே-2 - இயேசுவே 3.ஓட்டத்தில் ஜெயம் காண வைப்பீரென்று ஆசையோடு ஓடுகிறேன்-2 ஓடுகிறேன் (நான்) ஓடுகிறேன் தடைகளை தாண்டி ஓடுகிறேன்-2 - இயேசுவே
அருமையான பாடல் கேட்கும் போது பரலோகத்தில் இருக்கிறது போல் இருக்கிறது.பாடும் போது பரலோகத்திலிருந்து தேவனை துதிப்பது போல இருக்கிறது.தேவனை ஆராதிக்க அருமையான பாடல்
Yes our family is the greatest fans of The songs by Alwin Paul. Now we all very very interested to hear the "Voice of Ashirah Florelle" Very very cute singers, very simple, melody music, wonderful activities in singing time. Particularly ஆர்ப்பாட்டம் அலட்டல் குத்தாட்டம் இல்லாமல் Again Again Again, etc.... We hear both your songs, especially Alwin Paul God Gives More and More Astonishes in your life.
இந்தப்பாட்டைப்பாடிய இருவருக்கும் வாழ்த்துக்கள். இருவரில் அந்தப் பாப்பா பாடும்போது நன்றாக கவனியுங்கள். என்ன ஒரு அசல்டாக பாடி ஆண்டவரை மகிமைப்படுத்தியிருக்கிறார். அந்த சிறுமிக்கு விசேஷித்த கிருபையை ஆண்டவர் கொடுத்திருக்கிறார்.யார் இந்தப் பாட்டைக்கேட்டாலும் சிறுமியை பாராட்டாமல் இறுக்க முடியாது.நாட்கள் கடைசியாக இருக்கிறது.எழுப்புதல் அக்கினி இவர்கள் மூலமாக பரவட்டும் என்று வாழ்த்தி ஆண்டவரை வணங்குகிறேன். நன்றி ! வணக்கம்.
Very Nice Song. இரண்டு செல்லங்களும் மிகவும் அருமையாக பாடி இருக்கின்றார்கள். இந்த பாடலை திரும்ப திரும்ப கேட்டு ரொம்ப ரசித்தேன். இரண்டு செல்லங்களையும் எனக்கு ரொம்ப பிடித்து இருக்கிறது.