Тёмный

கபடி அகாடமி நடத்திய 37 ஆம் ஆண்டு மத நல்லிணக்க கபடி போட்டி 

உழவனின் வேர்வை
Подписаться 306
Просмотров 1,9 тыс.
50% 1

#nature #farming #agriculture திண்டுக்கல் மேட்டுப்பட்டி இளங்கதிர் கபடி அகாடமி நடத்திய 37 ஆம் ஆண்டு மத நல்லிணக்க கபடி போட்டியில் பெண்கள் பிரிவில் ஒட்டன்சத்திரம் எஸ் எம் வி கே சி அணியினர் 34 புள்ளிகள் பெற்று முதல் பரிசு ஆன 20 ஆயிரம் ரொக்கம் மற்றும் சுழற் கோப்பையை தட்டிச் சென்றனர்.
திண்டுக்கல் மாநகராட்சி பகுதியில் அமைந்துள்ள மேட்டுப்பட்டி இளங்கதிர் கபடி அகாடமி சார்பில் 37 ஆம் ஆண்டு மத நல்லிணக்க கபடி போட்டி நேற்று முதல் நடைபெற்று வருகிறது இதில் முதலாவதாக 75 கிலோ எடைக்கு உட்பட்ட பெண்களுக்கு போட்டி நடைபெற்றது. இந்தப் போட்டியில் திண்டுக்கல், திருப்பூர், நாமக்கல், சேலம், கரூர், பொள்ளாச்சி ,உடுமலை, மதுரை உள்ளிட்ட தமிழகத்தின் பல்வேறு பகுதிகளில் இருந்து 18 அணிகள் பங்கேற்றன. இன்று மாலை நடைபெற்ற இறுதிப் போட்டியை அதிமுக பொருளாளரும் முன்னாள் அமைச்சருமான திண்டுக்கல் சீனிவாசன் துவக்கி வைத்தார். இறுதிப் போட்டியில் ஒட்டன்சத்திரம் எஸ் எம் வி கே சி அணியினரும் வண்டியூர் மணி வாட்டர்ஸ் அணியினர் மோதினர். இதில் 34 க்கு 24 புள்ளிகள் என்ற கணக்கில் ஒட்டன்சத்திரம் எஸ் எம் வி கே சி அணி முதல் இடத்தை பிடித்தது. முதலிடம் பிடித்த ஒட்டன்சத்திரம் எஸ் எம் வி கே சி அணியினருக்கு 20,000 ரொக்கம் மற்றும் ஆளுயர கோப்பை வழங்கப்பட்டது. இரண்டாம் இடம் பிடித்த வண்டியூர் மணி வாட்டர் அணியினருக்கு 15,000 ரூபாய் ரொக்க பணம் மற்றும் கோப்பை வழங்கப்பட்டது. இதேபோல் மூன்றாம் இடம் பிடித்த நாமக்கல் மாஸ்டர் ஸ்டூடண்ட்ஸ் அணியினருக்கு 10,000 ரூபாய் ரொக்கம் மற்றும் கோப்பை நான்காம் இடம் பிடித்த மதுரை வெற்றி திருமகள் அணியினருக்கு பத்தாயிரம் ரூபாய் ரொக்கம் மற்றும் கோப்பை வழங்கப்பட்டது. மேலும் போட்டிக்கான ஏற்பாடுகளை இளங்கதிர் கபடி அகாடமி நிர்வாகத்தினர் செய்திருந்தனர். மேலும் இன்று மற்றும் நாளை ஆண்களுக்கான கபடி போட்டி நடைபெறுகிறது.#kabadi_game

Опубликовано:

 

8 сен 2024

Поделиться:

Ссылка:

Скачать:

Готовим ссылку...

Добавить в:

Мой плейлист
Посмотреть позже
Комментарии    
Далее