Тёмный

கிரகப் பெயர்ச்சியின் தாக்கத்திலிருந்து தப்பிக்கவும், பாதுகாப்பான பயணத்திற்கும் படிக்க வேண்டிய பதிகம் 

Athma Gnana Maiyam
Подписаться 3,5 млн
Просмотров 83 тыс.
50% 1

#குருப்பெயர்ச்சி #சனிப்பெயர்ச்சி #கிரகம்
#பெயர்ச்சி #gurupeyarchi #sanipeyarchi
பதிகம்:
வேயுறு தோளிபங்கன் விடமுண்ட கண்டன்
மிகநல்ல வீணை தடவி
மாசறு திங்கள் கங்கை முடிமேலணிந்தென்
உளமே புகுந்த அதனால்
ஞாயிறு திங்கள்செவ்வாய் புதன்வியாழம் வெள்ளி
சனிபாம்பி ரண்டு முடனே
ஆசறு நல்லநல்ல அவைநல்ல நல்ல
அடியா ரவர்க்கு மிகவே. 1
என்பொடு கொம்பொடாமை யிவைமார் பிலங்க
எருதேறி யேழையுடனே
பொன்பொதி மத்தமாலை புனல்சூடி வந்தென்
உளமே புகுந்த அதனால்
ஒன்பதொ டொன்றொடேழு பதினெட்டொ டாறும்
உடனாய நாள்க ளவைதாம்
அன்பொடு நல்லநல்ல அவைநல்ல நல்ல
அடியா ரவர்க்கு மிகவே. 2
உருவளர் பவளமேனி ஒளிநீ றணிந்து
உமையோடும் வெள்ளை விடைமேல்
முருகலர் கொன்றைதிங்கள் முடிமே லணிந்தென்
உளமே புகுந்த அதனால்
திருமகள் கலையதூர்தி செயமாது பூமி
திசை தெய்வ மான பலவும்
அருநெதி நல்லநல்ல அவைநல்ல நல்ல
அடியா ரவர்க்கு மிகவே. 3
மதிநுதல் மங்கையோடு வடவாலி ருந்து
மறையோதும் எங்கள் பரமன்
நதியொடு கொன்றைமாலை முடிமே லணிந்தென்
உளமே புகுந்த அதனால்
கொதியுறு காலனங்கி நமனோடு தூதர்
கொடுநோய்க ளான பலவும்
அதிகுணம் நல்லநல்ல அவைநல்ல நல்ல
அடியா ரவர்க்கு மிகவே. 4
நஞ்சணி கண்டன் எந்தை மடவாள் தனோடும்
விடையேறு நங்கள் பரமன்
துஞ்சிருள் வன்னிகொன்றை முடிமே லணிந்தென்
உளமே புகுந்த அதனால்
வெஞ்சின அவுணரோடும் உருமிடியும் மின்னும்
மிகையான பூத மவையும்
அஞ்சிடும் நல்லநல்ல அவைநல்ல நல்ல
அடியா ரவர்க்கு மிகவே. 5
வாள்வரி யதளதாடை வரிகோ வணத்தர்
மடவாள் தனோடு முடனாய்
நாண்மலர் வன்னிகொன்றை நதிசூடி வந்தென்
உளமே புகுந்த அதனால்
கோளரி யுழுவையோடு கொலையானை கேழல்
கொடுநாக மோடு கரடி
ஆளரி நல்லநல்ல அவைநல்ல நல்ல
அடியா ரவர்க்கு மிகவே. 6
செப்பிள முலைநன்மங்கை யொரு பாகமாக
விடையேறு செல்வ னடைவார்
ஒப்பிள மதியும்அப்பும் முடிமே லணிந்தென்
உளமே புகுந்த அதனால்
வெப்பொடு குளிரும்வாதம் மிகையான பித்தும்
வினையான வந்து நலியா
அப்படி நல்லநல்ல அவைநல்ல நல்ல
அடியா ரவர்க்கு மிகவே. 7
வேள்பட விழிசெய்தன்று விடைமே லிருந்து
மடவாள் தனோடும் உடனாய்
வாண்மதி வன்னிகொன்றை மலர்சூடி வந்தென்
உளமே புகுந்த அதனால்
ஏழ்கடல் சூழிலங்கை அரையன்ற னோடும்
இடரான வந்து நலியா
ஆழ்கடல் நல்லநல்ல அவைநல்ல நல்ல
அடியா ரவர்க்கு மிகவே. 8
பலபல வேடமாகும் பரனாரி பாகன்
பசுவேறும் எங்கள் பரமன்
சலமக ளோடெருக்கும் முடிமே லணிந்தென்
உளமே புகுந்த அதனால்
மலர்மிசை யோனுமாலும் மறையோடு தேவர்
வருகால மான பலவும்
அலைகடல் மேருநல்ல அவைநல்ல நல்ல
அடியா ரவர்க்கு மிகவே. 9
கொத்தலர் குழலியோடு விசையற்கு நல்கு
குணமாய வேட விகிர்தன்
மத்தமு மதியுநாகம் முடிமே லணிந்தென்
உளமே புகுந்த அதனால்
புத்தரொ டமணைவாதில் அழிவிக்கும் அண்ணல்
திருநீறு செம்மை திடமே
அத்தகு நல்லநல்ல அவைநல்ல நல்ல
அடியா ரவர்க்கு மிகவே. 10
தேனமர் பொழில் கொளாலை விளைசெந்நெல்துன்னி
வளர்செம்பொன் எங்கும் நிகழ
நான்முகன் ஆதியாய பிரமா புரத்து
மறைஞான ஞான முனிவன்
தானுறு கோளும்நாளும் அடியாரை வந்து
நலியாத வண்ணம் உரைசெய்
ஆனசொல் மாலையோதும் அடியார்கள் வானில்
அரசாள்வர் ஆணை நமதே. 11

Опубликовано:

 

28 апр 2024

Поделиться:

Ссылка:

Скачать:

Готовим ссылку...

Добавить в:

Мой плейлист
Посмотреть позже
Комментарии : 250   
@pddharshang4686
@pddharshang4686 3 месяца назад
Amma meenakshi amman patriya varalaru full ah sollunga amma
@Devi-tq5se
@Devi-tq5se 3 месяца назад
வணக்கம் mam... சில ஆண்டுகளுக்கு முன் கோளாறு பதிகம் படிக்கலாம் என்று படித்தேன் தமிழில் இருந்த போதும் என்னால் சரியாக உச்சரிக்க முடியாமல் விட்டு விட்டேன்....... ஆனால் கடந்த மாதம் உங்களின் வாயில் உச்சரிப்பை தெளிவா கேட்டு இப்போ நன்றாக மனதில் பதிய வெய்து விட்டேன்..... கோடான கோடி கோடி கோடி கோடி கோடி கோடி கோடி கோடி கோடி கோடி நன்றிகள் உங்கள் பாதங்களுக்கு......... தங்கள் சேவை சிலிர்க்க வைத்தது 🙏🙏🙏🙏🙏🙏🙏🙏
@palanisamyl8836
@palanisamyl8836 3 месяца назад
Super
@Prakash-8105pranavam
@Prakash-8105pranavam 3 месяца назад
நாளென் செயும்வினை தானென் செயுமெனை நாடிவந்த கோளென் செயுங்கொடுங் கூற்றென் செயுங்கும ரேசரிரு தாளுஞ் சிலம்புஞ் சதங்கையும் தண்டையுஞ் சண்முகமுந்தோளுங் கடம்பு மெனக்குமுன்னேவந்து தோன்றிடினே. ... கந்தர் அலங்காரம் 39🙏 வேலுண்டு வினையில்லை,மயிலுண்டு பயமில்லை,கந்தன் உண்டு கவலையில்லை மனமே🙏
@user-ew2ud7nb9r
@user-ew2ud7nb9r 3 месяца назад
நான்15நாள்களாக இந்த பதிகம் காலை மாலை இரு வேளையும் முழுசா படித்து கொண்டிருக்கிறேன் என்னால் முடிந்த வரை தினமும் படிப்பேன் என் பிரச்சனைகள் எல்லாம் முடிந்தது மன நிறைவான நிம்மதியான வாழ்கை இனிமேலாவது கொடுங்கள் கடவுளே 🙏🙏🙏🙏🙏
@010maggi
@010maggi 3 месяца назад
😊😊😊
@user-ew2ud7nb9r
@user-ew2ud7nb9r 3 месяца назад
@@010maggi 😊🙏
@akashraj6571
@akashraj6571 3 месяца назад
அற்புதமான பதிகம் கைமேல் பலன் கண்டவர் பலர் youtube-ல் உள்ள கருத்துகளே சாட்சி 🙏🙏தென்னாடுடைய சிவனே போற்றிஎந்நாட்டவர்க்கும் இறைவா போற்றி🙏🕉
@JayaLakshmi-kc5hi
@JayaLakshmi-kc5hi 3 месяца назад
அம்மா plz வெயில் அதிகமாக உள்ளது... உலக மக்களை காக்க வேண்டும் plzz. வேண்டிக்கங்க... மாரியம்மன் பதிகம் போடுங்க plz.. மழை வரட்டும்... அனைவரும் கூட்டு பிராத்தனை செய்வோம்....14 வயது சிறுவன் உயிர் பிறந்தது kastamaga உள்ளது
@JayaLakshmi-kc5hi
@JayaLakshmi-kc5hi 3 месяца назад
மன்னித்து கொள்ளவும் உயிர் பிரிந்தது
@kiruthikap2760
@kiruthikap2760 3 месяца назад
அறுட்பேராற்றல் இரவும் பகலும் எல்லா நேரங்கிலும் எல்லா இடங்களிலும் எல்லா தொழில்களிலும் எங்களுக்கு உறுதுணையாகவும் பாதுகாப்பாகவும் வழி காதுவதாகவும் அமையுமாக..அறுட்காப்பு.❤
@bhuvanaeeshwary7280
@bhuvanaeeshwary7280 3 месяца назад
இந்த பதிகம் பாடி தான் என் திருமணம் சுற்றத்தார் போற்ற சிறப்பாக நடந்தது 🙏🙏🙏🙏 சிவாயநம
@vithyasathya8419
@vithyasathya8419 3 месяца назад
தமிழ் நாட்டிற்கு வெயிலின் தாக்கம் குறைய மழை வேண்டி வழிபாடு இருந்தால் சொல்லுங்கள் அம்மா
@CentumMaths
@CentumMaths 3 месяца назад
நான் தினமும் இந்த பதிகம் படிக்கிறேன். நானும் என் குடும்பமும் நன்றாக இருக்கிறோம் சிவபெருமானின் அருளால்.
@user-qu4bu4cv3w
@user-qu4bu4cv3w 3 месяца назад
வெற்றிலை தீபம் பற்றி சொல்லுங்க அம்மா
@RaniRani-kf2nk
@RaniRani-kf2nk 3 месяца назад
திருச்சிற்றம்பலம்.... தினசரி தங்கள் குரலில் கேட்கிறோம்....அதனை கொண்டு படிப்பதற்கும் பயிற்சி எடுத்து பிரதோசம் அன்று ஆலயத்தில் படிகின்றோம் அம்மா, தங்கள் வழிகாட்டுதலுக்கு நன்றி... ஓம் நமசிவாய....
@mithazonetamil9818
@mithazonetamil9818 3 месяца назад
நன்றி அம்மா. சில நாட்களாக இப்பதிகத்தை நான் கேட்டு கொண்டு இருக்கிறேன்.
@jb19679
@jb19679 3 месяца назад
❤❤ அருமையான அற்புதமான பதிவு விளக்கம் நன்றி வணக்கம் 🎉🎉 ஓம் நமசிவாய நமக 🏵️🏵️🙏🙏
@6a17mugulss2
@6a17mugulss2 3 месяца назад
என் குருவுக்கு காலை வணக்கம் பதிவுக்கு நன்றி
@AbiramiSwaminathan-yo3rj
@AbiramiSwaminathan-yo3rj 3 месяца назад
நான் தங்கள் எல்லா பதிவுகளையும் தினமும் பார்த்து வருகிறேன் மிக்க நன்றி நான் வாரியார் ஸ்வாமிகளை 2முறை நேரில் பார்த்து ஆசீர்வாதம் வாங்கி உள்ளேன் எனது சொந்த ஊரான குத்தாலத்தில்தான் நான் சிறு வயதாக இருக்கும் போது எனது தாயார் அழைத்து சென்றார். மிக்க நன்றி
@adminloto7162
@adminloto7162 3 месяца назад
எல்லா கடவுள்மீது நம்பிக்கையுடன் வழிபடுவோம் சிவபெருமானே நம் எல்லோரையும் காப்பார் நன்றி வாழ்க வளமுடன் நலமுடன்
@sivamanikarthiban5015
@sivamanikarthiban5015 3 месяца назад
வேல் மாறல் பற்றி ஒரு பதிவு போடுங்கள் அம்மா. ஓம் சரவணபவாய ஹரிம்🙏
@annamayilganesh2919
@annamayilganesh2919 3 месяца назад
வணக்கம் சகோதரி 🙏🙏 முதல் பாடல் நித்தம் படிப்போம் சகோதரி அருமை யான பதிகம் நீங்கள் பாடும் போது இன்னும் அருமை யாக உள்ளது நன்றி சகோதரி 🙏🙏
@priyapavi3947
@priyapavi3947 3 месяца назад
நன்றி அம்மா நீங்கள் வழி நடத்தும் பயணம் மிகவும் அருமை 🙏🙏🙏
@dishitaranidishitarani4376
@dishitaranidishitarani4376 3 месяца назад
அம்மா அடியேன் தினமும் கோளறு பதிகம் உங்கள் குரலில் கேட்பேன் அம்மா ❤ ஓம்நமசிவாய வாழ்க
@Padmanabankk1962-mk3rg
@Padmanabankk1962-mk3rg 3 месяца назад
ஓம் சரவணபவ நன்றி சகோதரி. மிக அருமையான பதிவு. நனறி
@salemselvi5373
@salemselvi5373 3 месяца назад
அம்மா மிகவும் அற்புதமான அருமையான பதிகம்
@thiruvalluvan-vd7cj
@thiruvalluvan-vd7cj 3 месяца назад
வாழ்த்துக்கள்! வளரட்டும் உங்களின் தொண்டு!🎉
@sathyamurthy5604
@sathyamurthy5604 3 месяца назад
அருமை வாழ்த்துக்கள் 🙏🙏🙏வாழ்க வளமுடன் நலமுடன் 🙏🙏🙏 ஓம் நமசிவாய ஓம் 🙏🙏🙏
@punithavalli3493
@punithavalli3493 3 месяца назад
திருவிளையாடல் புராணம் படலம் 4,5 பதிவிட்டமைக்கு மிக்க நன்றி அம்மா. ஏற்கனவே தெரிந்து இருந்தாலும் உங்கள் குரலில் கேட்கும் அந்த இடத்தில் நானே நின்று நேரில் காண்பது போன்ற ஒரு மகிழ்ச்சி.
@selvik5204
@selvik5204 3 месяца назад
Ok mam thankyou super ha sollurenga😊
@kameshpriya4494
@kameshpriya4494 3 месяца назад
Arumayana pathiu nanri sagothari 🙏🙏👍
@dishitaranidishitarani4376
@dishitaranidishitarani4376 3 месяца назад
அம்மா நீங்க சொல்ர பதிகம் எத்தனாவது திருமுறை எந்த பதிகம் என்று சொல்லிட்டு பதிகம் சொல்லுங்க அம்மா ❤ பதிகம் தேடுவதர்க்கு சுலபமாக இருக்கும். ❤ வேயுறு தோளிபங்கன் பதிகம் இரண்டாம் திருமுறை 85 ஆவது பதிகம் ❤ ஓம்நமசிவாய வாழ்க ❤ அன்பே சிவம் ❤
@ShanmugamShanmugam-ln9yg
@ShanmugamShanmugam-ln9yg 3 месяца назад
நன்றி நன்றி நன்றி அம்மா உங்கள் கருணையும் கந்தன் கருணையும் என்றும் வாழ்க வளர்க
@easwariperumal6987
@easwariperumal6987 3 месяца назад
அம்மா நீங்க சொல்றத அப்படியே நான் ஃபாலோ பண்ணிட்டு இருக்கேன்
@munirajn8806
@munirajn8806 3 месяца назад
வாழ்த்துக்கள் நன்றி அம்மா 🙏💐💐
@user-re9dk2mh9b
@user-re9dk2mh9b 3 месяца назад
கோளறு பதிகம் அருமை நன்றி வாழ்க வளமுடன்
@yakshitmahadev6129
@yakshitmahadev6129 3 месяца назад
மிக்க நன்றி அம்மா 🙏🙏🙏🙏🙏
@tamilselvim2069
@tamilselvim2069 3 месяца назад
நன்றி அம்மா மகிழ்ச்சியான காலை வணக்கம் அம்மா
@karuppasamyg6885
@karuppasamyg6885 3 месяца назад
மிகவும் நன்றி அம்மா ❤❤❤
@samuthraselvi9982
@samuthraselvi9982 3 месяца назад
நன்றி அம்மா
@premabhuvana6499
@premabhuvana6499 3 месяца назад
மிக்க நன்றிமா 🙏🙏🙏🙏🙏🙏
@geethachennai5946
@geethachennai5946 3 месяца назад
Thank you so much Madam for this information .God bless you & your family abundantly .❤
@muthupriya3143
@muthupriya3143 3 месяца назад
நன்றி அம்மா வணக்கம் 🙏🙏🏻🙏🙏
@reenaram8794
@reenaram8794 3 месяца назад
தினமும் காலை இந்த பதிகம் கேட்கிறேன் அம்மா 🙏🙏
@chitravk5800
@chitravk5800 3 месяца назад
மிகவும் நன்றி அம்மா வணக்கம்❤
@kishoremano2196
@kishoremano2196 3 месяца назад
மிக்க நன்றி அம்மா
@ShanmugamShanmugam-ln9yg
@ShanmugamShanmugam-ln9yg 3 месяца назад
வேல் உண்டு வினை இல்லை மயில் உண்டு பயம் இல்லை குகன் உண்டு குறைவில்லை கந்தன் உண்டு கவலை இல்லை மன்மே நன்றி நன்றி நன்றி என் இனிய அன்பு முருகா
@adidevanmanimehala6814
@adidevanmanimehala6814 3 месяца назад
கண்டிப்பாக நான் தினமும் காலையில் பாராயணம் பண்ணிட்டு தான் வெளியில போவோமா முழு படலும் தெரியாத அம்மா ஒரு பாடல் மட்டும் தான் தெரியும் அது மட்டும் தான் படிச்சிட்டு போவேன் அம்மா மலைபோல் வரும் பிரச்சினைகள் பனிபோல் கரைந்து போகும் அம்மா ஓம் நமசிவாய 🙏🙏🙏🙏🙏🙏
@kavithasuresh25
@kavithasuresh25 3 месяца назад
நன்றாக சொன்னீங்,
@r.sangeetharubesh1383
@r.sangeetharubesh1383 3 месяца назад
Correct time nanrikal amma
@sumithraraja7190
@sumithraraja7190 3 месяца назад
நன்றி சகோதரி...
@sriayyanarhotelsriayyanarh1276
@sriayyanarhotelsriayyanarh1276 3 месяца назад
மிக்க நன்றி அக்கா ஓம் முருகா சரணம் 🙏🙏
@radhikas2125
@radhikas2125 3 месяца назад
Very thanks mam👍👍 om sakthi and sivaya namaha🙏🙏 om varahi annai potri potri🙏🙏 om saravana bava🙏🙏
@jansiranivijaya7282
@jansiranivijaya7282 3 месяца назад
நன்றி சகோதரி 🙏🙏🌹
@shanthikpraba728
@shanthikpraba728 3 месяца назад
Madam. Enakku ungale romba pudikkum unga kooda pessanam romba assa 🌹❤❤❤❤❤🙏🏽❤️❤️🌹🌹🌹🌷🌸
@nagaraik2668
@nagaraik2668 3 месяца назад
Good information amma Nandri amma
@sasikalamurugaiyan3697
@sasikalamurugaiyan3697 3 месяца назад
Amma mikka. Nanri edhudhan enadhu mudhal kamet nanri
@bhavanimadhan6227
@bhavanimadhan6227 3 месяца назад
நன்றி அம்மா 🙏🙏🙏🙏🙏🙏
@lakshmanans1681
@lakshmanans1681 3 месяца назад
இறையருளால் எல்லா குழந்தைகளும் நல்ல எண்ணம், நல்லொழுக்கம், ஆரோக்கியம், ஆயுளுடண், நன்றாக வாழ்கிறார்கள். வாழ்க வையகம்...வாழ்க வளத்துடன்...
@jpmithra1341
@jpmithra1341 3 месяца назад
காலை வணக்கம் குருமாதா... மிக்க நன்றி குரு மாதா.. வெற்றிலை தீபம் ஏற்றி வழிபடுவது பற்றி விரிவாக கூறுங்கள் குருமாதா..
@anithak9700
@anithak9700 3 месяца назад
மிக்க நன்றி அம்மா🙏🙏🙏
@pramila2180
@pramila2180 3 месяца назад
நன்றி மா 🙏
@amuthavalli2641
@amuthavalli2641 3 месяца назад
Amma romba nandri 🙏
@Allways-be-happy08
@Allways-be-happy08 3 месяца назад
நன்றி அம்மா ❤
@LakshmiKalasri-nd8et
@LakshmiKalasri-nd8et 3 месяца назад
ஓம் சரவணபவ 🌷🌷🌷🌷🌷🌷🙏🙏🙏🙏🙏 காலை வணக்கம் குருமாதா💐🙏🙏 ரொம்ப நன்றி குருமாதா🙏🙏
@Mpjsnatural
@Mpjsnatural 3 месяца назад
Sirantha Pathivu Amma 😊
@L_arts578
@L_arts578 3 месяца назад
Ungal pathivai parkum pothu than valkaiyen meethu oru nambikai varuthu
@Kajenthiran.
@Kajenthiran. 3 месяца назад
மிக்க நன்றி அம்மா ❤காலை வணக்கம்❤
@RameshK-sv4ff
@RameshK-sv4ff 3 месяца назад
Na nenacha neenga pathivu podringa amma Tq
@shanmukkanivelusamy2182
@shanmukkanivelusamy2182 3 месяца назад
Thanks amma 🙏
@SARASWATHIK-hz2ty
@SARASWATHIK-hz2ty 3 месяца назад
Guru Vanakkam Amma
@aishwarya486
@aishwarya486 3 месяца назад
Vanakam amma❤
@abisai892
@abisai892 3 месяца назад
அம்மா மதுரவீரன் சாமியை பற்றி வரலாறு கொஞ்சம் சொல்லுங்கம்மா
@velmayilvaiyapuri4137
@velmayilvaiyapuri4137 3 месяца назад
Nandri Amma...❤
@rajiraji7756
@rajiraji7756 3 месяца назад
Nandri amma
@user-yf8tr4os5s
@user-yf8tr4os5s 3 месяца назад
தாயே கோடி நன்றிகள்...மனது சரியில்லாமல் இருந்தது ...இப்பொழுது மனது தெளிந்தது ...🙏🙏🙏🙏🙏🙏🙏
@ananthsivakami5369
@ananthsivakami5369 3 месяца назад
Thanks amma 🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🌹🌹🌹🌹🌹🌹🌹🌹🌹🌹🌹🌹
@user-ks8jt6gg2c
@user-ks8jt6gg2c 3 месяца назад
Vanakkam Amma 🙏 🙏🙏
@user-rp4ed3xw7p
@user-rp4ed3xw7p 3 месяца назад
அம்மா நான் சில நாட்களாகவே உங்களின் பதிலுக்காக காத்திருக்கிறேன்.பகவத் கீதை புத்தகத்தை வீட்டில் வைத்து படிக்கலாமா என்பதையும் படிக்கும் முறை பற்றியும் விரிவான பதிவு தாருங்கள்.மேலும் திருமாலின் பத்து அவதாரங்களை ஒவ்வொரு அவதாரம் பற்றியும் விரிவான பதிவுகளையும் தாருங்கள் அம்மா.தயவுசெய்து பதில் பதிவு தாருங்கள் அம்மா நன்றிகள் பல
@nsubash5356
@nsubash5356 3 месяца назад
Nantri amma
@maheswaran2161
@maheswaran2161 3 месяца назад
பஞ்சாயதன பூஜை பற்றி ஒரு பதிவு கொடுங்கள் அம்மா. 🌸 பஞ்சாயதன பூஜை என்றால் என்ன?? 🌸 அதற்கு தேவையான பொருட்கள் என்னென்ன?? 🌸 பஞ்சாயதன பூஜை எவ்வாறு செய்வது?? 🌸 பஞ்சாயதன பூஜை செய்தால் கிடைக்கும் பலன்கள் என்ன??
@velmayilvaiyapuri4137
@velmayilvaiyapuri4137 3 месяца назад
Mazhai vendi kadavulkita prarthanai seivom amma....🙏🙏🙏
@saivarshan821
@saivarshan821 3 месяца назад
Good morning dear amma❤. I was literally expected ur video. Seeing you I feel very happy 😘😘😘.
@bhuvaneswaribhuvaneswari2717
@bhuvaneswaribhuvaneswari2717 3 месяца назад
Kalai vanakkam amma ❤
@SaiVani816
@SaiVani816 3 месяца назад
Thank you ma🙏🙏
@renugasinniah4317
@renugasinniah4317 3 месяца назад
Vanakam Amma
@Ravi10-sb4rl
@Ravi10-sb4rl 3 месяца назад
Vanakam amma❤❤❤
@premajaiganesh9328
@premajaiganesh9328 3 месяца назад
Thank you sister 😊❤
@VidyaShastra
@VidyaShastra 3 месяца назад
வணக்கம் அம்மா தயவு செய்து புவனேஸ்வரி வழிபாடு முறையை காட்டுங்கள் நன்றி
@jayram5726
@jayram5726 3 месяца назад
Vanakam amma
@dishitaranidishitarani4376
@dishitaranidishitarani4376 3 месяца назад
மிக்க நன்றி அம்மா ❤ சிவபுராணம் விளக்கம் சொல்லுங்க அம்மா ❤ ஓம்நமசிவாய வாழ்க ❤ அன்பே சிவம் ❤
@karpagaselvi3963
@karpagaselvi3963 3 месяца назад
🙏om namasivaya 🙏 Mikka nandri Amma 🙏
@satishkumarm4664
@satishkumarm4664 3 месяца назад
சகோதரி பாம்பன் சுவாமிகள் அருளிய வேற்குழவி வேட்கை பாடலை பற்றி ஒரு பதிவு... வைகாசி விசாகத்திற்கு முன்னிட்டு நீங்கள் கொடுக்கலாம்... வெகு நாள் கோரிக்கை ... நன்றி
@bhuvana1888
@bhuvana1888 3 месяца назад
Nanre Amma❤❤❤😊😊
@maheswaran2161
@maheswaran2161 27 дней назад
கலைகளில் சிறந்து விளங்க படிக்க வேண்டிய பதிகம் பற்றி கூறுங்கள் அம்மா
@ilavarasin9687
@ilavarasin9687 3 месяца назад
இதன் பொருள் தெரிந்தால் மனப்பாடம் செய்ய வசதியாக இருக்கும் அம்மா.... இப்பாட லின் அர்த்தம் சொல்லுங்கள்
@maheswaran2161
@maheswaran2161 3 месяца назад
நர்மதேஸ்வர் பாணலிங்கம் பற்றி ஒரு பதிவு தாருங்கள் அம்மா. 🌸 நர்மதேஸ்வர் பாணலிங்கம் என்றால் என்ன?? 🌸 அதை வழிபாடு/பூஜை செய்தால் கிடைக்கும் பலன்கள் என்ன?? அதை வீட்டில் வழிபடலாமா? அதற்கு என்னென்ன நியதிகள்?? 🌸 அதை எவ்வாறு எப்போது வழிபாடு மற்றும் பூஜை செய்யவேண்டும்??
@kanakajaiganesh9141
@kanakajaiganesh9141 3 месяца назад
௮ம்மா மு௫கனுக்கு தொடர்ந்து பூஜை செய்யும் போது பக்கத்தில் இருக்கும் வீட்டில் உள்ளவர்கள் ௮ம்மை போட்டு இ௫க்கும் அம்மா தொடர்ந்து பூஜை செய்யலாம் ௮ம்மா. விளக்கம் தாங்கள் அம்மா pls 🙏
@Thenmozhirajaram
@Thenmozhirajaram 3 месяца назад
Ungaluku avarkalukum ena samantham neenga poojai panunga
@chitragovindaraj1418
@chitragovindaraj1418 3 месяца назад
🙏🙏🙏Om sivaya nama.🙏🙏🙏 Iniya maalai vanakkam amma. 🙏🙏🙏
@maheswaran2161
@maheswaran2161 3 месяца назад
அம்மா, சொர்ண ஆகர்ஷண பைரவர் வழிபாடு பற்றி ஒரு பதிவு கொடுங்கள் அம்மா.
@anbanaamma9465
@anbanaamma9465 3 месяца назад
உண்மை அம்மா🙏🙏🙏🙏🙏🙏
@thangammadhavan7112
@thangammadhavan7112 3 месяца назад
Thank you Amma
@SwaminathanKannan
@SwaminathanKannan 3 месяца назад
🙏🙏🙏🙏🙏 ஓம் நமசிவாய திருச்சிற்றம்பலம் வணங்குகிறேன் அம்மா🙏க. சிவ சுவாமிநாதன் தஞ்சாவூர் மாவட்டம் பாபநாசம் வட்டம் கபிஸ்தலம்🙏 ஓம் நமசிவாய திருச்சிற்றம்பலம்🙏🙏🙏🙏🙏
Далее
Мой инстаграм: v1.ann
00:13
Просмотров 51 тыс.
Schoolboy - Часть 2
00:12
Просмотров 4,5 млн
На фейсконтроле 💂
09:41
Просмотров 563 тыс.
Мой инстаграм: v1.ann
00:13
Просмотров 51 тыс.