Тёмный

குரு கவசம் || தக்ஷிணாமூர்த்தி || GURU KAVASAM || DAKSHINAMOORTHY SONG || AMRUTHA || VIJAY MUSICALS 

Vijay Musical
Подписаться 1,5 млн
Просмотров 2,2 млн
50% 1

ஈரேழ் உலகம் உன்புகழ் பாடும் எண்ணில் அடங்கா இன்பங்கள் கூடும்
Song : Then Thisai - Guru Peyarchi Tamil Lyrics
Album : Guru Dakshinamoorthy - Guru bagavan
Music : Sivapuranam D V Ramani
Lyrics : Senkathirvanan
Singer : Amrutha
Video : Kathiravan Krishnan
Produced by Vijay Musicals
#GuruKavasam#DevotionalSongsInTamil
Lyrics:
தென் திசை நோக்கிய தெய்வம் நீயே
தென்னாடுடைய சிவனும் நீயே
மண்ணுயிர்க் காக்கும் மாதேஸ்வரனே
மலரடி பணிந்தோம் அருள் புரிவாயே
சந்திரன் தலையில் சூடிய குருவே
சாந்த சொரூபம் உந்தன் வடிவே
நன்மைகள் பலவும் நாளும் செய்யும்
நல்லோன் நீயே நலம் தருவாயே
புன்னகை தவழும் பொன்னன் நீயே
புலித்தோல் இடையில் அணிந்தவன் நீயே
கண்ணிமை போலெ காப்பவன் நீயே
கை தொழுதோமே குருவே சரணம்
உன்னடி பணிந்தால் உயர்வுகள் சேரும்
ஊழ்வினை துன்பம் துயரம் தீரும்
எண்ணில் அடங்கா இன்பங்கள் கூடும்
ஈரேழ் உலகம் உன்புகழ் பாடும்
சிவனுருவான குருபகவானே
ப்ரகஸ்பதியென்னும் பெயருடையோனே
புவனம் காக்கும் புண்ணியன் நீயே
புகழும் நிதியும் தருபவன் நீயே
தாராதேவி சங்கினி என்று
தேவியர் இருவரை மணந்தவன் நீயே
மாறா கருணை கொண்டவன் நீயே
மஞ்சளில் ஆடை தரித்தவன் நீயே
தனுசு மீனம் ராசிகள் இரண்டின்
அதிபதி நீயே அருள்புரிவோனே
கனவிலும் நினைவிலும் உன்னடி பணிந்து
கடலென செல்வம் அடைந்திடுவோமே
முல்லை மலரால் உன்னை வணங்கி
முந்தை வினைகளின் வேரருப்போமே
இல்லையென்று சொல்லாமல் நீயும்
எங்களுக்கருளும் ஈசனும் நீயே
வியாழன் தோறும் விரதம் இருந்து
ஆலயம் வந்து குரு உனை பணிவோம்
தியானநிலையில் இருக்கும் உந்தன்
திருவடி வணங்கி பெருமைகள் அடைவோம்
திருமணம் நிகழ திருவருள் புரிவாய்
புத்திர பாக்கியம் இனிதே தருவாய்
வருக வருக குருவே வருக
வழிபடுவோம் நலம்பல தருக
சாத்விக குணத்தின் பூர்வீகம் நீயே
சரணடைந்தோர்க்கு காவல் நீயே
போற்றிட வந்தோம் உன் திருவடியே
புரிவாய் புரியவாய் கருணை குருவே
தேவர்கள் வணங்கும் குருவும் நீயே
இந்திரலோக மந்திரி நீயே
பாவங்கள் போக்கும் பகவான் நீயே
பக்தரை காக்கும் ஈசனும் நீயே
கருணை உள்ளம் கொண்டவன் நீயே
மங்களம் அருளும் கோலும் நீயே
வருவோம் உந்தன் சன்னதி நாங்கள்
வாழ்வினில் பூக்கும் வளமை பூக்கள்
இனிப்பை விரும்பி ஏற்பவன் நீயே
பஞ்சபூதத்தில் வானம் நீயே
அழிவில்லாத ஆண்டவன் நீயே
அடைக்களமானோம் உன் திருவடியே
அன்பரை காக்கும் அழகிய இறைவா
ஆற்றல் பதவி அனைத்தும் தருவாய்
துன்பங்கள் தீர்க்கும் தூயவன் நீயே
துணைவரவேண்டும் நிழலென நீயே
தோஷம் உள்ளவர் உன்னடி பணிந்தால்
சேமம் பெருகி சிறப்புடன் வாழ்வார்
வாரம்தோறும் வழிபடும்போது
நேரிடும் இன்னல் நெருங்குவதேது
அரச மரத்தை வளம் வரும் வேளை
அல்லல் நீங்கும் அவதிகள் தீரும்
கொண்டைக் கடலை உனக்கென படைத்து
தானம் கொடுத்தால் தோஷம் நீங்கும்
பாலும் பழமும் பஞ்சாமிர்தமும்
தயிரும் இளநீர் விபூதியாலும்
பகவான் உனக்கு அபிஷேகம் செய்தால்
எல்லா இடரும் நொடியில் விலகும்
பக்தரை உந்தன் பாதம் காக்க
பணிந்தோம் உன்னை குருவே காக்க
தக்ஷிணாமூர்த்தி எங்களை காக்க
திருவடி தொழுதோம் என்றும் காக்க
காக்க காக்க கயிலாயன் காக்க
கருணாமூர்த்தி கனிந்தே காக்க
தீர்க்க தீர்க்க பாவம் தீர்க்க
திருத்தலம் வந்தோம் குரு உனை பார்க்க
இமைகள் இரண்டை இமையோன் காக்க
இதயம் தன்னை ஈஸ்வரன் காக்க
தசையுடன் எலும்பை தயவுடன் காக்க
தாழ்பணிந்தோமே குருவே காக்க
இருள்தனை அகற்றும் ஒளியென காக்க
இரு கைகால்களை இறையோன் காக்க
உருவம் முழுதும் உயர்ந்தோன் காக்க
உள்ளே உறையும் குருவே காக்க
பரிவுடன் உந்தன் பார்வையில் காக்க
பழியில் இருந்து பகவான் காக்க
செறிவுடை தெய்வம் சிறப்புடன் காக்க
சீலமாய் வாழ குருவே காக்க
பிணிகள் இன்றி பெரியோன் காக்க
பிழைகள் பொறுத்து ஆசான் காக்க
இனிப்பினை விரும்பும் ஈசன் காக்க
இணையில்லாத குருவே காக்க
விருப்பும் வெறுப்பும் அண்டாது காக்க
விண்ணும் மண்ணும் செழிப்புற காக்க
திருப்பம் வழங்கும் திருவே காக்க
திசைகள் எட்டும் குருவே காக்க
தனித்தனியாக உறுப்புகள் யாவும்
தடைகள் இன்றி இயங்கிட காக்க
நினைத்தது நடக்க நிர்மலன் காக்க
நெஞ்சினில் வாழும் குருவே காக்க
காக்கும் எங்கள் குருவே வாழ்க
கயிலைமலையோன் சிவனே வாழ்க
பார்க்கும் விழிகளில் பரமன் வாழ்க
பரிவுடன் அருளும் ஈசன் வாழ்க
தீராத பிணிகள் தீர்ப்பவன் வாழ்க
தென்திசை பார்க்கும் குருவே வாழ்க
போராடும் வாழ்வை தடுப்போன் வாழ்க
பொன்னிறத்தோனே தேவா வாழ்க
பூக்கும் மலரின் பொழுதுகள் வாழ்க
புதுப்புனலாக கருணை வாழ்க
யார்க்கும் உதவும் இறைவன் வாழ்க
யாவரும் வணங்கும் குருவே வாழ்க
ருத்ராட்ச மாலை தரித்தவன் வாழ்க
பற்றோடு நினைக்கும் அடியவர் வாழ்க
வரும்வினை போக்கும் குருவே வாழ்க
ஆலயம் தோறும் அமர்ந்தாய் போற்றி
அடியவர் உள்ளம் அறிவாய் போற்றி
போதனைசாலையில் இருப்பாய் போற்றி
புண்ணியவடிவே குருவே போற்றி
ஆடைகள் விற்கும் இடங்களிலெல்லாம்
அய்யா நீயும் வாசம் செய்வாய்
மருத்துவமனையில் வங்கியில் நீயும்
மகிழ்வுடன் இருந்து எங்களை காப்பாய்
மனிதரின் உடம்பில் ஒன்பது துளைகள்
ஒவ்வொருத்துளையும் கோல்வெனவாகும்
கண்கள் இரண்டும் சூரியன் சந்திரன்
காதுகள் இரண்டும் செவ்வாய் புதனாம்
மூக்கின் துளைகள் சுக்கிரன் சனியென
முன்னோர் வகுத்து முறைசெய்தாரே
வாயில் உன்னை வைத்ததனாலே
வளமிகு வார்த்தைகள் வழங்கிடு நீயே
முன்வழித் துளையில் ராகு இருக்க
பின்வழித் துளையில் கேது இருக்க
அங்கம் முழுதும் நவகோலாக
எங்களை மண்ணில் அடைத்தவன் நீயே
தலங்கள் தோறும் விதவிதமான
கோலம் தாங்கி தரிசனம் தருவாய்
நலம்பல வேண்டி வருவோர்க்கெல்லாம்
நயமுடனே நீயும் நல்லருள் புரிவாய்
வைத்தீஸ்வரனார் கோவிலில் நீயும்
மேற்கினில் நோக்கி மேன்மைகள் தருவாய்
கஞ்சனூரிலே கீழ்த்திசை பார்த்து
கைத்தொழுவோரை காத்திடுவாயே
திருவொற்றியூரில் வடதிசை பார்த்து
திருவருள் நீயும் புரிகின்றாயே
திருநாவலூரில் நின்ற நிலையிலே
தரிசனம் தந்து அருள்கின்றாயே
காஞ்சியில் நீயும் வீணை மீட்டும்
காட்சியை தந்து கவர்ந்திடுவாயே
ஆந்திர மாநிலம் அனந்தப்பூரிலே
ஐயப்பன் போலே அமர்திருப்பாயே
திருப்புலிவலத்தில் சிங்கத்தின் மீது
திருவடிப் பதித்து வீற்றிருப்பாயே

Видеоклипы

Опубликовано:

 

27 авг 2017

Поделиться:

Ссылка:

Скачать:

Готовим ссылку...

Добавить в:

Мой плейлист
Посмотреть позже
Комментарии : 924   
@a.sethuraman5240
@a.sethuraman5240 Год назад
குருபார்க்ககோடிவரும்‌குருகவசம்கேட்டால்கோடிவந்துஒட்டிக்கொள்ளும்
@viki909
@viki909 2 года назад
இப்பாடலை கேட்கும் அனைவருக்கும் குருவருள் கிடைக்க வேண்டும்🙏🙏🙏
@devipriya2376
@devipriya2376 10 месяцев назад
குருபகவானே போற்றி எனக்கு பெண் குழந்தை பிறக்க அருள் புரிவாயாக 🙏🙏🙏🙏🙏
@RajaRaja-vm5ur
@RajaRaja-vm5ur 5 месяцев назад
👃👃👃👃👃
@kumaresanperiyasami9611
@kumaresanperiyasami9611 2 года назад
அருமையான குரல் மற்றும் வரிகள் கேட்க மிகவும் இனிமையாக இருக்கிறது 🌹🌹🌹
@pmariyappanmselvi6518
@pmariyappanmselvi6518 Год назад
குருபகவான் சன்னதியில்சாமி கூப்பி வணங்கியது போல் உள்ளது அருமை வாழ்த்துக்கள் வாழ்க வளமுடன்🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏
@masthanpriya8600
@masthanpriya8600 Год назад
Vary.nise
@m.dwarakeshkrithiksaai6829
@m.dwarakeshkrithiksaai6829 2 года назад
Super
@kvmanokar4559
@kvmanokar4559 2 года назад
குருபாகவனே மஞ்சநாய்க்கனூர் கோழிப்பண்ணை தொழில் மிகச்சிறப்பாக வெற்றி பெற வேண்டுகிறேன்.
@karisan.morthi5903
@karisan.morthi5903 3 года назад
இந்த.நிர்வாகத்தின்.தயவால.நம்மஅனைவரும்.போற்றும்.நம்ம.குரு.பகவான்.பாடலை.மிகமிகஇனிமையாக.குருபகவான்.மகிழ்ழும்.வண்ணம்.நம்மஅனைவரும்.போற்றும்.வண்ணம்.எனது.தங்கச்சி.அறுமையாக.மிகஇனிமையாக.இந்த.குருபகவான்.அருளோடு.பாடியதற்கும்.நல்லமுரையில்.இசைஅமைத்து.நல்லமுரையில்.எழுதிய.நல்லமுரையில்.கேட்க்கும்.அனைவருக்கும்.எங்களது.பனிவான.வாழ்த்துக்கள்.ராணி.கிருஷ்ணமூர்த்தி.கோவிலாம்பூண்டி.சிதம்பரம்.தெ.ஆ.மாவட்டம்.நன்றிவணக்கம்.இந்தசேவை.மீண்டும்.மீண்டும்வளரட்டும்.குருபகவான்.அருள்ளோடு.ஒம்.நமச்சிவாய
@mangaikalyani6009
@mangaikalyani6009 3 года назад
குருவே துணை குருவே போற்றி 🙏🙏🙏🙏🙏🙏
@maniarasan4831
@maniarasan4831 2 года назад
நன்றி அம்மா. குருவே சரணம்
@LakshmananLakshmanan-fz8zh
@LakshmananLakshmanan-fz8zh 11 месяцев назад
Lakshmanan
@LakshmananLakshmanan-fz8zh
@LakshmananLakshmanan-fz8zh 11 месяцев назад
Lakshmanan
@marimuthuthirunavukkarasu
@marimuthuthirunavukkarasu 9 месяцев назад
மிக்க மகிழ்ச்சி அம்மா
@masskingdgirls6645
@masskingdgirls6645 7 месяцев назад
அப்பா அம்மா உத்தரவு ஜகத்குரு அப்பா இச்சேனலில்வேண்டினதைவேண்டவர்கு‌அபரிமிதமாக அள்ளி கொடுத்த அப்பாவுக்கு நன்றி நன்றி நன்றி நன்றி நன்றி நன்றி நன்றி நன்றி நன்றி நன்றி நன்றி நன்றி நன்றி நன்றி நன்றி நன்றி நன்றி நன்றி நன்றி நன்றி நன்றி நன்றி நன்றி நன்றி நன்றி ❤❤❤❤❤😂❤❤❤🎉❤❤❤❤ அப்பா அம்மா
@karisan.morthi5903
@karisan.morthi5903 2 года назад
🙏🙏🙏🌻🌻🌻ஓம் ஸ்ரீ குருவே🌻🌻🌻 போற்றி 🌻🌻🌻ஓம் ஸ்ரீ குருவே 🌻🌻🌻போற்றி ஓம் ஸ்ரீ குருவே 🌻🌻🌻போற்றி .அருமை அருமை காலை வேளையில் பாடிய சகோதரி🙏🙏🙏 நிர்வாக நிர்வாகம் 🙏🙏🙏பாடல் எழுதிய வங்க 🙏🙏🙏இசையமைப்பு செய்தவங்க 🙏🙏🙏 குருவின் பெருமைகளை கேட்டவர்கள்🙏🙏👫👬👬 கேட்க இருப்பவர்கள்🙏🙏🙏👫👬👬 அனைவருக்கும் அந்தக் குருவின் அருள் கிடைக்க வேண்டுமென ராணி கிருஷ்ணமூர்த்தி🙏🙏🙏🌻 கோவிலாம்பூண்டி சிதம்பரம் வாழ்க குருவின் புகழ் 🌻🌻🌻🌴🙏🙏🙏🌻🌻🌺🌹🌻
@hariharans573
@hariharans573 3 года назад
குருவே ஸர்வலோகானாம் பிஷஜே பவரோகினாம் நிதயே சர்வ வித்யானாம் ஶ்ரீ தஷிணாமூர்த்தயே நமோ நமஹ குரு பார்க்கின் கோடிநன்மை கிட்டும் அருமையான தெய்வீக கீதம்
@bodhans8364
@bodhans8364 Год назад
பக்தி பரவச பாடல் அம்மா
@krishnamoorthy1859
@krishnamoorthy1859 2 года назад
குரு பிரம்மா குருர் விஷ்ணு குரு தேவே மகேஷ்வரஹ குரு சாக்க்ஷத் பரம் ப்ரமா தஸ்மை ஸ்ரீ குரவே நமஹ
@ushas5233
@ushas5233 2 месяца назад
Super voice thank you so much namaskaram maa
@seetha2062
@seetha2062 10 месяцев назад
குரு கவசம் அமைதியான இடத்தில் அமர்ந்து கேட்பதற்கு மிகவும் ரம்யமாக மன நிறைவை தரும்வகையில் உள்ளது. பாடி அருளிச் செய்த சகோதரிக்கு அநேக கோடி நமஸ்காரம். Excellent singing in my play list always
@padmavathys5589
@padmavathys5589 9 месяцев назад
,
@tggh1191
@tggh1191 4 года назад
குரு பிரம்மா குரு விஷ்ணு குரு தேவோ மகேஸ்வரஹ குரு சாட்சாத் பர பிரம்மா தஸ்மை ஸ்ரீ குருவே நமஹ
@tamilarasu9818
@tamilarasu9818 4 года назад
It
@pandiselvam9602
@pandiselvam9602 Год назад
comments please murugan paktharkallukkkum vendugol
@vspstatusking1509
@vspstatusking1509 Месяц назад
😊😅😅😮😢🎉😂❤😢
@karisan.morthi5903
@karisan.morthi5903 2 года назад
புன்னகை தவழும் ஸ்ரீ குரு பகவான்.பூ முகத்தால் .எங்கள் அனைவரையும் காக்க வேண்டுமென அன்புடன் வேண்டுகிறோம் ராணி கிருஷ்ணமூர்த்தி கோவிலாம்பூண்டி சிதம்பரம் .குருபகவான் பெருமைகளை தேனாக மக்கள் மத்தியில் ஒளிபரப்பிய நிர்வாகத்தில் உள்ள அனைவருக்கும் வாழ்த்துக்கள் வாழ்த்துக்கள் வாழ்த்துக்கள்
@mohanana5694
@mohanana5694 9 месяцев назад
ஓம் குருதேவாய வித்மஹே பரப்பிரம்மாய தீமஹி தன்னோ குரு ப்ரசோதயாத்🙏 ஓம் குரு தேவாய வித்மஹே பரப்பிரம்மாய தீமஹி தன்னோ குரு ப்ரசோதயாத் தன்னோ குரு ப்ரசோதயாத்🙏🙏🙏🙏🙏
@elangoramanathan111
@elangoramanathan111 2 года назад
அற்புதம். தங்களின் இந்த இனிமையான குரலுடன் அருளும் கூடிய இப் படலை கேட்டு நாங்கள் குருவருள் கிடைக்கப்பெருவோம் என்பது உறுதி அம்மா நன்றிகள் பல பல.
@sivakumari5538
@sivakumari5538 2 года назад
நான் வியாழன் தோறும் இக்கவசம் கேட்கிறேன் மனதிற்கு அமைதிகிடைக்கிறது குரல் இனிமையாக உள்ளது மிகவும் நன்றி
@kannankannan-rz8lw
@kannankannan-rz8lw 5 лет назад
மிக அருமையான பாடல்
@LovelyOasis-nq1db
@LovelyOasis-nq1db 2 месяца назад
குருவே சரணம் ஓம்🙏🙏🙏🙏🙏🙏
@karisan.morthi5903
@karisan.morthi5903 2 года назад
தென் திசை நோக்கிய தெய்வத்தின் இந்த பெருமையை அனைவருக்கும்.பலன் கிடைக்க பாடி காட்டிய .சகோதரிக்கும் நிர்வாகத்திற்கும் நன்றி நல்ல செயல்களை மக்களுக்கு எடுத்துக்கூறும் நிர்வாகம் நலமோடு வாழ்க ராணி கிருஷ்ணமூர்த்தி கோவிலாம்பூண்டி சிதம்பரம் வணக்கம். குரு பகவான் பெருமையைகேட்க அனைவருக்கும் நன்றி
@sakthivadivels1068
@sakthivadivels1068 Год назад
@LakshmiLakshmi-bn3re
@LakshmiLakshmi-bn3re Год назад
E
@ROSESBYANGEL
@ROSESBYANGEL Год назад
@@sakthivadivels1068 g iuyý uh uuýyyyyyyyyyyyyyyyýy
@thanapandi7331
@thanapandi7331 Год назад
🕉 Good
@demongo4149
@demongo4149 16 дней назад
ஓம் தட்சிணாமூர்த்தி போற்றி போற்றி உடல் நலம் பெற வேண்டும்
@rajaganapathi1035
@rajaganapathi1035 Год назад
Om Nama Sivaya Nama Sivaya Nama Sivaya Nama Sivaya Nama Sivaya Nama Sivaya Nama Sivaya Nama Sivaya Nama Sivaya Nama Sivaya Nama Sivaya Nama
@tammilmalarc2411
@tammilmalarc2411 3 года назад
குருவுக்கு ஒருமனைவி தாரா மட்டுமே
@nilamagan7707
@nilamagan7707 5 лет назад
குரு பார்க்க கோடி நன்மை என சொல்றாங்க இனி நான் பார்ப்பதெல்லாம் எனக்கு கோடி நன்மை தான் அந்த குருவே இப்போது என்னிடம் இருக்கிறார் இனி என்றும் இருப்பார் எனக்கு துணையாக இருப்பார் என் நிழலாய் இருப்பார் என்னை கவசம் போல் காப்பார்
@babyganesan9997
@babyganesan9997 3 года назад
Ko P
@valarmathiveluchamyk4637
@valarmathiveluchamyk4637 2 года назад
குருபகவானே என்னுடைய மகன்களுக்கு குழந்தை செல்வத்தை தருவீர்களாக
@karisan.morthi5903
@karisan.morthi5903 3 года назад
ஸ்ரீ.குருபவான்.பாடலை.அறுமையா. பாடியதற்கு சகோதரிக்கு ம்.நிர்வாகத்திற்கும்.எங்கள்.தலை.சாய்ந்த..வணக்கம் ..வாழ்க.நிர்வாகம்.என.வாழ்த்தும்.ராணி.கிருஷ்ண மூர்த்தி. கோவிலாம்பூண்டி. சிதம்பரம். வணக்கம்
@karisan.morthi5903
@karisan.morthi5903 2 года назад
குரு பகவானைப் போற்றி போற்றி ஓம் நமசிவாய
@tggh1191
@tggh1191 4 года назад
குரு கவசத்தை ஒளியேற்றுபவர்க்கு என் சிரந்தாழ்த்தி இருகரங் கூப்பி வணங்குகின
@tggh1191
@tggh1191 4 года назад
வணங்குகின்றேன்
@vijaymusicalsdevotionalsongs
@vijaymusicalsdevotionalsongs 4 года назад
மிக்க நன்றி
@karisan.morthi5903
@karisan.morthi5903 2 года назад
எந்த திசைஜநோக்கிய தெய்வமும் நீயே தென்னாடுடைய சிவனும் நீயே உன் அடி படிந்தால் உயர்வுகள் சேரும் நாம் அனைவரும் குரு பகவானின் பெருமைகளை கேட்டு இனிதே வாழ்வோம் பாடிய சகோதரி எழுதியவர் நிர்வாகம் இசையமைத்து அனைவருக்கும் கேட்கும்படி செய்த நிர்வாகத்திற்கும் நன்றி ராணி.கிருஷ்ணமூர்த்தி கோவிலாம்பூண்டி சிதம்பரம் வணக்கம்
@kvmanokar4559
@kvmanokar4559 2 года назад
தட்சணாமூர்த்தி கடவுளே தொழில் நல்ல வெற்றிஅடைய வேண்டுகிறேன்.
@Ravichandran-ic3ig
@Ravichandran-ic3ig 5 месяцев назад
ஓம் குருபகவானே போற்றி 🙏 ஓம் குருவே போற்றி 🙏 ஓம் குருவே சரணம் 🙏🥀🥀🥀🥀🥀
@chandrar4746
@chandrar4746 2 месяца назад
Om gurudev om 🔥🌷🌺🌿🍊🍋🍍🥭🥥🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏
@sundarampillai3387
@sundarampillai3387 3 года назад
அதிக முக்கியத்துவம் வாய்ந்த கோவில் களையும், அங்கு அருள் புரியும் குரு வடிவான சிவனையும் தரிசித்த பலன், உங்கள் பாடலை கேட்கும் போது கிடைக்கும். இதன் புண்ணியம் இந்த பாடலை எழுதியவர், இசை அமைத்தவர் பாடியவர் பாடலை வெளியிட்டவர் அனைவருக்கும் கிடைக்கும். வாழ்க வளமுடன்.
@vijaymusicalsdevotionalsongs
@vijaymusicalsdevotionalsongs 3 года назад
தங்களின் இந்த வாழ்த்துக்கு மிக்க நன்றி
@karisan.morthi5903
@karisan.morthi5903 3 года назад
நீங்கள்.கூறுவது.உண்மைதான்
@suchitravenkatachala7531
@suchitravenkatachala7531 2 года назад
Its my
@suchitravenkatachala7531
@suchitravenkatachala7531 2 года назад
Out ioi
@vetrimala9775
@vetrimala9775 3 года назад
Nan korum varam tharum guruve neethi jeyekkanum atharmam aliyanum
@nalinimanivannan3715
@nalinimanivannan3715 Год назад
குரு பகவானே என் மருமகளுக்கு ஆண் குழந்தை கொடுத்து எங்கள் குலம் தழைக்கச் செய்ததற்கு கோடானகோடி நன்றிகள் தங்கள் பாதங்களில் சமர்ப்பிக்கிறேன் இறைவா.
@eswarimurugesan2013
@eswarimurugesan2013 3 года назад
ஓம் குருபகவானே போற்றி ஓம் சிவ சிவ ஓம் 🙏🙏🙏🙏🙏🙏🙏அடியாருக்கும் அடியேன் நன்றி அருமையான பாடல் 🙏🙏🙏🙏🙏குருவே சரணம்🙏🙏🙏🙏🙏👍👍
@mohanahana9074
@mohanahana9074 3 года назад
What bhakthi song very nice om saranam
@kumarm3634
@kumarm3634 3 года назад
குருவே சரணம் சரணம் ௐசிவாயநம சரணம்.மோட்சகுரு.தில்லை
@mi5874
@mi5874 2 года назад
ஓம் குருவே சரணம் 🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏 🇱🇰🇱🇰🇱🇰🇱🇰🇱🇰🇱🇰🇱🇰🇱🇰🇱🇰🇱🇰🇱🇰🙏
@Ayyanarmassage72
@Ayyanarmassage72 2 года назад
குருவே போற்றி
@nachimuthumuthunachimuthum1366
@nachimuthumuthunachimuthum1366 3 года назад
ஸ்ரீ கு௫பகவான் சிவனின் ௮ம்சம் ௮வாா்.தர்மம் காக்க சிவனின் ௮வதாரம் ௮வாா் .👍நல்ல பாட்டு
@karisan.morthi5903
@karisan.morthi5903 2 года назад
அய்யாவின் செயலுக்கு நன்றி
@pandiselvam9602
@pandiselvam9602 Год назад
yaar yaarellaam intha paadal kettukontirukkireergal
@jothimani7558
@jothimani7558 Год назад
Indha padalai moondru varudangal thursday morning kettu ippodhu indha padal muzhuvadhum nan amrudha sister kudave paduven gurubhagavane potri potrii 🙏🙏🙏
@gnanavelvel3699
@gnanavelvel3699 4 года назад
எத்தனை பூவால் பணிந்தால் என்ன உந்தன் பெருமையை நானென்ன சோல்ல சித்தம் முழுதும் நித்தம் பூக்கும் அன்பு ஒன்றே உன்வசமாகும் .ஓம் நமச்சிவாய நமக. அருமையான வரிகள் .
@vijaymusicalsdevotionalsongs
@vijaymusicalsdevotionalsongs 4 года назад
தங்களின் வாக்கியமும் அற்புதம்
@noordubai506
@noordubai506 3 года назад
Om guruve saranam guruve Nandri Nandri
@gowthamimunusamy3691
@gowthamimunusamy3691 2 года назад
Appa enakum Dineshkum kalyanam aga vendum appa
@kvmanokar4559
@kvmanokar4559 2 года назад
ஓம் சிங் சிங் சங் சங் சாம்புவி புத்ராய நம வா வா ஸ்வாகா
@sathvikamythily5779
@sathvikamythily5779 Год назад
arumai... manasuku amaidi tharum slogam... kettite irukkalaam pola iruku... thanks for the beautiful compilation and the sweet voice with which it is presented... om guru bhagawane potri
@maanusri9082
@maanusri9082 3 года назад
நன்றி நன்றி நன்றி நன்றி அருமை தாயே
@thilakeswaryselvayogan9726
@thilakeswaryselvayogan9726 3 года назад
Dhaksinamoorthiye saranam
@gowthamimunusamy3691
@gowthamimunusamy3691 Год назад
Appa Dineshkum enakum kalyanam aga vendum appa
@eniyavelelectronics222
@eniyavelelectronics222 3 года назад
குருவே சரணம்
@BalaBala-sy5qd
@BalaBala-sy5qd Год назад
ஓம் குருபகவானே போற்றி போற்றி போற்றி 🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏
@masthanpriya8600
@masthanpriya8600 Год назад
ஓம்தக்ஷிணமூர்த்திபோற்றி
@RadhakrishnanRadhakrishn-iw1hk
@RadhakrishnanRadhakrishn-iw1hk 11 месяцев назад
Hi hi hi 6:05 😢 CG hi CG hi n ❤😊
@vinothvijay7325
@vinothvijay7325 3 года назад
குருவே சரணம் சரணம் சரணம்
@saikarthike
@saikarthike Год назад
குரு பகவானே போற்றி!
@sivakamiaustro1918
@sivakamiaustro1918 2 года назад
அம்மா கோடி புண்ணியம் கிடைக்கும்.இந்த பாடல் அவ்லோ மகத்துவம்
@saransoundar22
@saransoundar22 3 года назад
குரு திருவடி போற்றி
@lovelyflowers8788
@lovelyflowers8788 3 года назад
Gurubhagavan potri 🙏🙏🙏
@balaiahvengantiduraisamy559
Mekka nandri Amma guru Kavacham endru keteney Guru dhakshina murthey Namo namah🙏👪🌹🙏
@Sakkaravarthi-ne2gj
@Sakkaravarthi-ne2gj 10 месяцев назад
குருவே நமஹ தஸ்மை குருவே நமஹ.
@balasubramaniyambala7329
@balasubramaniyambala7329 3 года назад
🕉 Om Datsanamurtia Namo Narianaia Namaka 🕉️ Alaa Makalum Noi Node's Elamal KATERALUM Appa Bakavana 🙏 🙏 🙏 🌹🌹🌹🌺🌺🌺🌸🌸🌸🏵️🏵️🏵️🌼🌼🌼🌷🌷🌷🌻🌻🌻🥀🥀🥀
@krishnasamy3946
@krishnasamy3946 3 года назад
நமசிவாய நமசிவாய நமசிவாய ஓம் நமசிவாய🙏🙏🙏🙏🙏🙏🙏சிவ சிவ சிவ 🙏🙏🙏சிவாயநம திருச்சிற்றம்பலம்
@valarmathiveluchamyk4637
@valarmathiveluchamyk4637 Год назад
குருபகவானே துபாயில் இருக்கும் என்னுடையமூத்தமருமகள் மஞ்சுளாவிற்கு சுகப்பிரசவமாக ஆண்குழந்தை பிறந்ததற்கு நன்றி நன்றி கோடான கோடிநன்றியை முருகன் பாதங்களில் சமர்ப்பிக்கிறேன்
@patimsonrajs4742
@patimsonrajs4742 3 года назад
Om Guruvesaranam puthirapakkiyam Tharuvaipotri🙏🙏🙏🙏🙏🙏🙏😖😔😭😭😭😭😭
@elangovanv4212
@elangovanv4212 3 года назад
Rgsqu😫😫😫
@elangovanv4212
@elangovanv4212 3 года назад
Y😫😫😫
@rajivegandhi5036
@rajivegandhi5036 4 года назад
ஓம்நமசிவாயநமக
@umamaheshwari8557
@umamaheshwari8557 5 лет назад
Om dakshnamutri nammo ha
@umayavelayutham1871
@umayavelayutham1871 4 года назад
Omdhachgnamurti potty 🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏
@tptmassmega8094
@tptmassmega8094 4 года назад
ஓம் விநாயகர் பேற்றி ஓம் சிவன் பேற்றி ஓம் கு௫வே பேற்றி அற்புத பாடல்
@ramanigrk2474
@ramanigrk2474 3 года назад
போற்றி போற்றி
@karisan.morthi5903
@karisan.morthi5903 3 года назад
நன்றீ
@babaiyermanispiritualandpo2062
@babaiyermanispiritualandpo2062 4 года назад
Super songs and looks.
@balaiahvengantiduraisamy559
@balaiahvengantiduraisamy559 2 года назад
Guruvadi saranam thiruvadi Saranam 🙏🌹🙏
@valarmathiveluchamyk4637
@valarmathiveluchamyk4637 Год назад
குருபகவானே என்னுடைய. சின்னமருமகளுக்கு ஆண்குழந்தையை கொடுத்து என் குலவம்சம் செழித்து தழைத்து ஓங்குவதற்கு வழிவகை செய்து கொடுத்த தங்களுக்கு கோடானகோடி நன்றியை தங்கள் பாதங்களில் சமர்ப்பிக்கிறேன் குருபகவானே!
@thayamaran810
@thayamaran810 3 года назад
குருபகவான் போற்றி 🙏🙏🙏
@harisharyaa9246
@harisharyaa9246 Год назад
🌺🙏🌺 OM GURU BHAGAVAN POTRI OM 🌺🙏🌺
@devavalar4473
@devavalar4473 3 года назад
ஓம் பிரஹஸ்பதியே போற்றி போற்றி
@vigneshwaranwaran
@vigneshwaranwaran 5 лет назад
very nice
@ramadossb5732
@ramadossb5732 Год назад
Best devotional and meditative hymns, super
@omsairam2403
@omsairam2403 4 года назад
குருபகவானே போற்றி
@eswaramurthys6902
@eswaramurthys6902 4 года назад
ஓம்சிவாய நமஹ இப்படி பட்ட பாடல்களை கேட்க இறைவன் என் மீது கருணை கொண்டு "இந்து" மதத்தில் பிறவி கொடுத்து ஆன்மீகத்தில் லயிக்க வைத்தமைக்கு நான் இறைவனுக்கு எப்படி நன்றி கடன் தீர்ப்பேன்? ஓம் நமச்சிவாய நமஹ
@eswarimurugesan2013
@eswarimurugesan2013 3 года назад
அருமை ஐயா நானும் பெருமிதம் கொள்கிறேன் இந்துவாக பிறந்தற்கு ஓம் சிவ சிவ ஓம் அடியாருக்கும் அடியேன்
@mvenkatesh3527
@mvenkatesh3527 5 лет назад
மிகவும் அருமை .குரு பகவான்
@k.r.dhasarathank.r.dhasara7056
@k.r.dhasarathank.r.dhasara7056 4 года назад
Z🚱♿🚺🚻
@nagammalr811
@nagammalr811 4 года назад
Aum namo Bhagavathe Dhakshina moorththaye Mahyam Maedham prajgnam prayachcha swaha.
@pavatharanipavatharani1308
@pavatharanipavatharani1308 6 месяцев назад
ஓம் ஸ்ரீ குருபகவான் நமஹா 🙏🙏🙏🙏🙏🪔🪔🪔🪔🪔🔯🔯🔯🔯🔯🕉️🕉️🕉️🕉️🕉️.......................................................................😊
@devavalar4473
@devavalar4473 3 года назад
ஓம் குருவே போற்றி போற்றி
@kannankannan-rz8lw
@kannankannan-rz8lw 5 лет назад
சிவாய நம சிவாய
@v.balagangatharangangathar8798
@v.balagangatharangangathar8798 3 года назад
ஓம் ஸ்ரீ குருவே சரணம்
@kasthuric1946
@kasthuric1946 8 месяцев назад
குரு கவசம் உங்கள் குரலில் கேட்பது இனிமையாகவும் மிகவும் திருப்தி யாகவும் உள்ளது மிக்க நன்றி
@prakashpandian5488
@prakashpandian5488 5 лет назад
மிக மிக அருமையாக இனிமையாக இருந்தது
@kathirg2323
@kathirg2323 4 года назад
ஓம் நமசிவாய
@rathinamr7819
@rathinamr7819 3 года назад
Rathinam balakrishnan shobha satheesh vijaitha sunil malathi gokul krishna veetha viveen prayeen pranav
@lalithasethupathi1846
@lalithasethupathi1846 3 года назад
@@rathinamr7819 for del ki
@jeyaradha7547
@jeyaradha7547 4 года назад
Nice song
@ashwathram168
@ashwathram168 Год назад
Enna kku intha paadal migavum. Piditha paadal manathai inbamayamakkum
@preminim2903
@preminim2903 3 месяца назад
🙏🙏🙏🙏🙏Om Thatshanamoorthy Perumane Ellorudaya Thevaikalayum Santhiyunko Appa
@b.balayogesh1431
@b.balayogesh1431 5 лет назад
எல்லாம் சிவமயம்
@ahilanmp1890
@ahilanmp1890 4 года назад
Guru Bhramma Guru Vishnu Guru Devo Maheswara Guru Shastha Parabramma Dus my shree Guruve Namaha.
@revathichandrasekar428
@revathichandrasekar428 3 года назад
Om. Saiappa. Addeikkalam. Neeya. Aannapoothu. Addeikkalamga. Erru. Un. Kuzantheiya. Aaz. Vaaikkathy. Yaareiddam. Poovan. Neeya. Addeikkalamga. Eruppei. Saiappa.
@palanimohanasundaram4697
@palanimohanasundaram4697 3 года назад
awesome .Kaaddum Guru songs
@indusreecollections
@indusreecollections 3 года назад
Wonderful 👌🙏👍😊
@user-lo5ml3di4z
@user-lo5ml3di4z 2 месяца назад
ஓம் குருபகவானே போற்றி..... ஓம் பிரகஸ்பதி தட்சணாமூர்த்தியே போற்றி போற்றி.....🙏🙏🙏🙏🙏
@irulandimuthu8606
@irulandimuthu8606 9 месяцев назад
வானவர்க்குஅரசனானவளம்தரும்குருவேபோற்றி ஓம்தெட்ஷிணாமூர்த்திநாயகரேபோற்றி சங்கரனாரேநின்பாதம்போற்றிபோற்றி சதாசிவனாரேநின்பாதம்போற்றிபோற்றி பொங்கரவனாரேநின்பாதம்போற்றிபோற்றி புன்னியனாரேநின்பாதம்போற்றிபோற்றி அங்கமலத்துஅயனோடுமாலுங்கானா அனலுருவாநின்பாதம்போற்றிபோற்றி செங்கமலத்திருப்பாதம்போற்றிபோற்றி திருமூலட்டானவரேபோற்றிபோற்றி ஓம்சிவாயநம ஓம்சிவாயநம ஓம்சிவாயநம ஓம்சிவாயநம ஓம்சிவாயநம 🌿🌺🌹🌼🏵💮🌸💐🍌🍌🍇🍍🍊🍎🍋🍐🍓🌾🍬🥥🥥🇮🇳🔔⭐🕉🔱🙏🙏🙏🙏🙏
Далее
🍟Best French Fries Homemade #cooking #shorts
00:42
ИМПРОВИЗАТОРЫ | Нам 8 лет
1:57:59
Просмотров 342 тыс.
Это было в России
3:14
Просмотров 503 тыс.
ATEEZ(에이티즈) - 'WORK' Official MV
3:15
Просмотров 9 млн