Тёмный
No video :(

குழந்தைக்கு சாப்பாடு ஊட்டும் போது தவிர்க்க வேண்டிய ஒரே விஷயம்  

Dr.Selvan.R
Подписаться 1,8 тыс.
Просмотров 318
50% 1

குழந்தையை வளர்க்கும் போது நிறையப் பெற்றோர்கள் குழந்தைச் சாப்பிடவில்லையென்றால் டிவியைக் காண்பித்து அல்லது கைப்பேசியைக் குழந்தை கையில் கொடுத்து ஏமாந்து இருக்கும் போது வாயில் ஒரு வாய் உணவைத் தினித்து தண்ணர்க் கொஞ்சம் கொடுத்து விடுவார்கள் இப்படிச் செய்தால் குழந்தைக்க ஏதாவது தொல்லை வருமா என்பது தான் முக்கியமான கேள்வி.
இதை நினைக்கும் போது முக்கியமாக நினைவுக்கு வருவது ரஷ்யாவின் மிகப்பெரிய ஆராய்ச்சியாளர் மாவுலோ நாய்க்குட்டியையும், மணியையும், சாப்பிடும் உணவையும் வைத்து ஒரு ஆராய்ச்சி செய்தார். மணி அடித்தவுடன் நாய்க்குட்டிக்குச் சாப்பாடு வைக்கும் பழக்கத்தை ஏற்படுத்தினார். கொஞ்ச நாள் கழித்தவுடன் சாப்பாடு வைக்காமலே மணி அடித்தவுடன் நாய்க்கு உமிழ் நீர்ச் சுரக்க ஆராம்பித்தது.
குழந்தைச் சாப்பிடும் போது தொலைக்காட்சியோ அல்லது கைப்பேசியோ பொம்மைப் படத்தைப் பார்த்துக்கொண்டு சாப்பிடும் போது பார்க்கும் பழக்கத்துக்கும், சாப்பிடும் பழக்கத்துக்கும் மூளையில் சங்கிலித் தொடர்பு போல் ஏற்பட்டுவிடும். இதனால் நாளவட்டத்தில் குழந்தை எப்பொழுது எல்லாம் தொலைக்காட்சி அல்லது கைப்பேசிப் பயன்படுத்துகிறார்களோ அப்போது எல்லாம் பசி உணர்வு இல்லை என்றாலும் ஏதாவது சாப்பிட வேண்டும் என்று தோன்றிச் சாப்பிட ஆராம்பித்துவிடுவார்கள். நம் நாட்டில் மிகப் பெரிய பிரச்சினையே எடை, உயரம் குறைவான குழந்தைகள் மற்றும் அதிக உடல் எடை உடைய குழந்தைகள் தான் பிரச்சினையே. மேற்சொன்னது போல் சாப்பிடுவதால் நம் நாட்டில் அதிகமான குழந்தைகள் உடல் பருமன் தொல்லையால் பாதிக்கப்பட்டுள்ளனர்.
பெற்றோர்கள் குழந்தைகளை எப்படியாவது சாப்பிட வைத்தால் போது என நினைக்காமல், குழந்தைகள் சரியாகச் சாப்பிடவில்லை என்றால் எதன் காரணத்தினால் குழந்தைகள் சாப்பிடவில்லை என்பதை மருத்துவரிடம் கலந்து ஆலோசித்து அதைச் சரி செய்து சரியான உணவு உண்ணும் பழக்கத்தைக் குழந்தைகளுக்கு ஏற்படுத்த வேண்டும். அப்போது தான் குழந்தைக்கு வயதுக்கு ஏற்ற உடல் வளர்ச்சி சீராக இருக்கும்.

Опубликовано:

 

9 май 2024

Поделиться:

Ссылка:

Скачать:

Готовим ссылку...

Добавить в:

Мой плейлист
Посмотреть позже
Комментарии : 3   
@saranyasadasivam6196
@saranyasadasivam6196 3 месяца назад
Nandri aya
@sachithanandnemuri5070
@sachithanandnemuri5070 Месяц назад
Sir can u pls post the same in English, such a valuable information
@selvanRathinasamy
@selvanRathinasamy Месяц назад
Please avoid giving food to child while showing screens (television or mobile) if the child is used to see in the t v or mobile and eating that will become a habit . whenever he see's mobile or TV he will like to eat because of habit .child also will not know whether his stomach is full or he needs more .he doesn't know the taste. he doesn't know went to stop all this will lead on to obesity and lifestyle diseases like diabetes hypertension and heart disease This is one of the reasons for raising epidemic of obesity
Далее
Foreign body removal in Children Do's and Dont's
2:35