Тёмный
No video :(

குழந்தையைத் சட்டபூர்வமாகத் தத்து எடுப்பது எப்படி?  

Dr.Selvan.R
Подписаться 1,8 тыс.
Просмотров 90
50% 1

குழந்தையைத் தத்து எடுக்க வேண்டும் என்றால் பெற்றோருக்கு என்ன என்ன தகுதிகள் தேவை,? தத்து எடுக்கப் பின்பற்ற வேண்டிய நெறிமுறைகள் என்ன ?2022 -ல் வந்த தத்து எடுக்கும் சட்டம் என்ன சொல்கிறது? என்பதைப் பார்ப்போம்.
இந்தக் காலகட்டத்தில் குழந்தையின்மை என்பது மிகப்பெரிய பிரச்சினையாக உள்ளது. குழந்தையின்மைப் பிரச்சினைக்கு செயற்கை முறையில் கருத்தரித்தல் சிகிச்சை பல இருந்த போதிலும் இதில் வெற்றிக் கிடைக்காதவர்கள், செலவு செய்ய இயலாதவர்கள் இருக்கிறார்கள். இது தவிரக் குழந்தை இருந்த போதிலும் மேலும் ஒரு குழந்தையைத் தத்து எடுத்து வளர்க்கும் விருப்பம் உள்ளவர்களும் உள்ளனர். குழந்தையைத் தத்து எடுப்பது ஒரு காலத்தில் மிகப்பெரிய விஷயமாக இல்லாமல் இருந்தது. உங்களுக்குத் தெரிந்த மருத்துவமனை, ஒரு வீட்டில் குழந்தைஅதிகமாக இருந்தால், உறவினர் வீட்டில் உள்ள குழந்தைகளை தத்து எடுத்தல் வளர்த்தனர்.
இது எல்லாம் இருந்தும் ஏன் தத்து எடுத்தல் சட்டம் வந்தது? சில நேரங்களில் ஆதரவு அற்ற குழந்தை என்று தெரிந்தவர்கள் மூலமாக எடுத்து வளர்க்கும் போது அந்தக் குழந்தை கடத்தப்பட்ட குழந்தையாகப் பின்னாளில் கண்டறிந்தால் சட்டப்படி அதற்குரிய சிறைத் தண்டனை பெற வேண்டி இருக்கும்.. சில நேரங்களில் குழந்தையை வளர்க்கக் கொடுத்த பெற்றோர்கள் சிறிது காலம் கழித்து தன் பிள்ளையைத் திரும்ப வழங்க கேட்டால் அதனால் குழந்தையை வளர்த்த பெற்றோருக்கும், குழந்தையும் மன அழுத்தத்திற்கு உள்ளாக நேரிடும். இதை எல்லாம் தவிர்க்கும் பொருட்டு உருவாக்கப்பட்டது தான் தத்து சட்டம்.
இந்தச் சட்டத்தின் படி எந்த ஒரு திருமணமான அல்லது திருமணம் ஆகாத ஆணோ, பெண்ணோ குழந்தையைத் தத்து எடுத்துக்கொள்லாம். குழந்தையைத் தத்து எடுப்பவர்களின் உடல் நலம், மனநலம், பொருளாதார ரீதியான அவர்களின் வருவாய், திருமணமாகியிருந்தால் திருமணமாகி குறைந்தபட்சம் இரண்டு ஆண்டுகள் ஆகியிருக்க வேண்டும். அவர்களுக்கு ஒரு குழந்தை இருந்தால் இரண்டாவது குழந்தைக்குப் பதிவு செய்து கொள்ளலாம். ஏற்கனவே இரண்டு குழந்தைகள் இருந்தால் தத்து எடுக்கப்படாத சிறப்புக் குழந்தையைத் தான் தத்து எடுக்க முடியும். பிறந்த குழந்தையில் இருந்து 18 வயது உடைய குழந்தைகள் வரைத் தத்து எடுத்துக்கொள்ள முடியும்.
இந்தக் குழந்தைகளைத் தத்து பெற்றுக் கொள்வதற்கு வயது நிர்ணயம் உண்டு. பிறந்த குழந்தையில் இருந்து இரண்டு வயது வரை உள்ள குழந்தைகளைத் தத்து எடுப்பதற்குப் தனிப்பெற்றோரின் வயது 40க்குள் இருக்க வேண்டும். அல்லது தாய் தந்தை இருவரின் கூட்டு வயது 85 க்குள் இருக்க வேண்டும். இரண்டில் இருந்து நான்கு வயது குழந்தையைத் தத்து எடுப்பதாக இருந்தால் தாய் அல்லது தந்தை மட்டும் இருந்தால் 45 வயதாகவும், இருவரின் கூட்டு வயது 90 ஆகவும் இருக்க வேண்டும். 4 லிருந்து 8 வயது உள்ள குழந்தையைத் தத்து எடுப்பதாக இருந்தால் தனியான பெற்றோராக இருந்தால் 50 வயதுக்குள்ளும், கூட்டு வயது 100 க்குள்ளும் இருக்க வேண்டும். 8 லிருந்து 18 வயதுடைய குழந்தையாக இருந்தால் இருவரின் கூட்டு வயது 110 க்குள் இருக்க வேண்டும்.
குழந்தையைத் தத்து எடுப்பதற்கு CARA- Central Adoption Resource Authority (wcd.gov.in) என்ற வலைதளத்தில் முதலில் பதிவு செய்ய வேண்டும். பதிவு செய்ய குடும்பப் புகைப்படம், தனிநபர் புகைப்படம், ஆதார் நகல், திருமணப் பதிவு சான்று, விவாகரத்து ஆகியிருப்பின் அதற்குரிய சான்று, இருப்பிடச் சான்று, வருவாய் சான்று, மருத்துவரின் உடல் தகுதி சான்று ஆகியவைத் தேவைப்படும் ஆவணங்கள் ஆகும். பதிவு செய்த 60 நாட்களில் சமூக நல அலுவலர் வீட்டிற்கு வந்து கள ஆய்வின் மூலம் அறிக்கையைத் தயார் செய்து வலைத்தளத்தில் பதிவேற்றம் செய்வார் இதற்குக் கட்டணமாக ரூபாய் ஆராயிரம் செலுத்த வேண்டி இருக்கும். தத்து எடுப்பது உறுதியான பிறகு ரூபாய் ஐம்பதாயிரம் வரைவோலை வழங்க வேண்டும்.தத்து எடுத்த முதல் இரண்டு வருடத்திற்கு ஆறு மாதத்திற்கு ஒரு முறைச் சமூக நல அலுவலர் வீடு வந்து கள ஆய்வு செய்து அறிக்கையைத் தயார் செய்வதற்கு ஒவ்வொரு முறையும் இரண்டாயிரம் தொகைக் கேரா தளத்தில் செலுத்த வேண்டும்.
இந்தக் கேரா நடுவண் நிறுவனம் மூலம் மாநிலங்களில் உள்ளூர் தனியார் சமூக நிறுவனங்களில் உள்ள குழந்தைகளைத் தத்து எடுத்துக் கொள்ளலாம். தத்து தரும் குழந்தையின் விபரங்களுடன் அனைத்து ஆவணங்களையும் மாவட்ட குழந்தை நல அலுவலரின் சமர்பிக்கப்படும். அவர் அனைத்து விஷயங்களையும் மறு சீராய்வு செய்து, மாவட்ட நீதி மன்றத்தில் அனுப்பவேண்டும். 60 நாட்களுக்குள் குழந்தையைக் கொடுக்கலாம் என்ற முடிவுக்கு வந்தால் குழந்தையைத் தத்து தருவதற்குரிய உத்தரவு வழங்கப்படும்.
Online இல் பதிவு சுய்ய
carings.wcd.go...
Eligiblity criteria
cara.wcd.gov.i...
Guidelines for adoption
cara.wcd.gov.i...
Documents needed
cara.wcd.gov.i...
Adoption agencies
cara.wcd.gov.i...

Опубликовано:

 

20 май 2024

Поделиться:

Ссылка:

Скачать:

Готовим ссылку...

Добавить в:

Мой плейлист
Посмотреть позже
Комментарии    
Далее
Get 10 Mega Boxes OR 60 Starr Drops!!
01:39
Просмотров 12 млн