Тёмный

குழந்தை தூங்குவதற்கு நல்லது தொட்டிலா? மெத்தையா? 

Dr.Selvan.R
Подписаться 1,8 тыс.
Просмотров 450
50% 1

தொட்டில் கட்டி குழந்தைகளை ஆட்டி தூங்க வைப்பது காலம் காலமாக நம்மிடையே நிலவி வரும் பழக்கம். தூங்காத குழந்தையை தொட்டிலில் போட்டு ஆட்டி தலை கிறுகிறுக்கச்செய்து தூங்க வைப்பது தான் சரியானது என்று சொல்பவர்கள் ஒருபுறம். மற்றொரு புறமோ தொட்டில் கட்டி தூங்க வைப்பது தவறு மறுபுறம்..
இன்று தொட்டில் கட்டி ஆட்டுவது தான் சிறந்த பழக்கமா? ஏன் குழந்தையை மெத்தையிலோ அல்லது தரையிலோ படுக்க வைக்கக் கூடாதா? என்பதைப் பற்றி பார்ப்போம். முதலில் குழந்தையை தூங்க வைக்க எப்படி? எங்கு படுக்க வைக்க வேண்டும் என்பதையும் ஆராய்வோம்.
பல்லாண்டு காலமாக இந்தியாவில் குழந்தையைத் தொட்டிலில்படுக்க வைப்பது வழக்கமாக இருந்தது வருகிறது. இந்தப் பழக்கம் கோபால் பல்பொடி கிடைக்கும் இந்தியா இலங்கை மலேசியா சிங்கப்பூர் உள்ளிட்ட தூரக்கிழக்கு நாடுகளிலும் இருப்பது தொட்டில் பிரச்சனைகளைச் சொல்லும் ஆராய்ச்சிக் கட்டுரைகளில் இருந்து தெரிகிறது.
ஆனால் மேலை நாடுகளில் பிறந்த குழந்தையை மரத்தொட்டில் அல்லது தனியே படுக்கையில் போட்டு படுக்க வைப்பது எப்படியோ வேரூன்றிவிட்டது.
அதுவும் சில இடங்களில் நேராகவும் சில இடங்களில் குப்புறப் போட்டு படுக்க வைக்கவும் செய்ய ஆரம்பித்தனர்.
(இந்த மாதிரி தலைகீழாச் செய்வதில் முதலிடம் அமெரிக்கர்களுக்கு தான். அவர்கள் தான் முதலில் இதை ஆதரித்து உலகம் முழுவதும் பரப்பினர்) மறுபடியும் சில காலத்திற்குப் பிறகு இது தவறு யாரும் செய்யக்கூடாது என்று அவர்கள் தான் எல்லாருக்கும் சொல்ல ஆரம்பித்தனர். ஏனெனில் குப்புறப் படுக்க வைக்கப்பட்ட பச்சிளம் குழந்தைகளுடைய மரண விகிதம் குழந்தை இறப்பு நோயினால் அதிகமாவதை அறிந்து குட்டிக்கரணம் போட்டனர்.மறுபடியும் பழைய கதையாக பச்சிளம் குழந்தையைமல்லாக்கப் படுக்க வைப்பது தான் சிறந்தது என்றானது.குழந்தை தானாகவே குப்புற விழும் வரை குப்புற படுக்க வைக்க கூடாது. என்று மிகப்பெரிய குழந்தைகள் நல மருத்துவர் நிறுவனமான அமெரிக்க குழந்தை நல மருத்துவ சங்கம் அறிவிக்கை வெளியிட்டது. உலகிலுள்ள மற்ற முன்னேறிய நாடுகளும் அதனை ஏற்றுக்கொண்டனர்
(குப்புற விழும்வரை குப்புறப்படுக்க வைக்க கூடாது என்பது நமது பண்பாட்டில் ஒரு முக்கிய கருத்தாக இருந்து வருகிறது). குப்புற விழும் குழந்தை பால் கக்கும் .புறை ஏற வாய்ப்பு உண்டு. எனவே தலை நின்ற பின் தானாகவே குப்புற விழும் வரை குப்புறப் படுக்க வைக்க கூடாது என்பது நமது முன்னோர்களின் அனுவபபூர்வமான கண்டுபிடிப்பு.
குழந்தையைத் தொட்டிலில் படுக்க வைப்பது தான் மிகச் சிறந்தது அதன்மூலம் குழந்தைக்குத் தலையின் வடிவம் ஒழுங்காக இருக்கும் கோணையாக,, தட்டையாக என குழந்தையின் தலை இருந்தாலும் தூளியில் போட்டால் வட்ட வடிவமாக வந்துவிடும் என்று சொல்லும் பாட்டிகள் அதிகம். (இவை அனைத்தும் பாரம்பரியத்தைப்பொறுத்தது என்ற அறிவியல் தெளிவு வந்தது பிற்காலத்தில் தான்)
எதற்காக தூளி\தொட்டில் உபயோகப்படுத்தி இருந்தார்கள் என்பதனை ஆராய்ந்து பார்ப்போம் பண்டைக்காலத்தில் காடுகளில்தொடங்கி நாடுகளில் வாழ ஆரம்பிக்கும் வரை ஒவ்வொரு இடத்திலும் விஷ பூச்சிகள் பாம்புகள் மிருகங்கள் இவைகளின் தொந்தரவு இருந்தது.
1. தரையில் படுக்க வைக்கும் குழந்தையின் மேல் விஷப்பூச்சி தேள் மற்றும் பாம்பு இவைகளின் பாதிப்பு ஏற்படாமல் இருக்கவும்
2.குழந்தை புரண்டு வேறு இடத்திற்குப் போகாமல் தடுக்கவும்
3.தாய் அணைத்ததைப் போல் கதகதப்பைத் தரவும்
4.ஆடுவதன் மூலம் தலையிலுள்ள அரைவட்ட குழாய்கள் கலங்கி அரை மயக்க நிலையில் சுலபமாக குழந்தையை தூங்க வைக்கவும் தொட்டில் உதவியது.
தொட்டிலுக்கு என்று தனி செலவு எதுவும் இல்லாமல்
ஆணும் பெண்ணுமாக வேலை செய்யும் வயல்களிலும் வேலை இடங்களிலும் நிழல் உள்ள பகுதிகளில் மரக்கிளைகளில் தாயின் வாசனை மீந்துள்ள சேலையை கட்டி தூளியாகப் போட்டு குழந்தையை படுக்க வைத்து ஆட்டி விடும்போது தூங்கும் .குழந்தையின் மேல் ஒரு கண் வைத்துக் கொண்டு வேலை செய்வதற்கும் தாய்க்கும் எளிதாக இருந்தது. குழந்தையின் வளர்ச்சிக்கு உதவி செய்யக்கூடிய தாலாட்டுப் பாடல்கள்
“ஆரரோ அரிரோ அராரோ அரிரரோ
யார் அடிச்சா நீ அழுர,
அத்தை அடிச்சாலோ, அரளி பூச்செண்டால,
சித்தி அடிச்சாலோ செம்பந்தி பூச்செண்டால,மாமா அடிச்சாரோ மல்லிகை பூச்செண்டால,தாத்தா அடிச்சாரோ தாமரை பூச்செண்டால,
கண்ணம் சிவக்குதடா… கண்ணீரு பெருக்குதடா…
யாரடிச்சி நீ அழுறா… கண்ணே நீ கண்ணுறங்கு….
”தாலாட்டு-2“ஆராரோ ஆரிரரோ
ஆறு ரண்டும் காவேரி,
காவேரி கரையிலயும்
காசி பதம் பெற்றவனே!
கண்ணே நீ கண்ணுறங்கு!
கண்மணியே நீ உறங்கு!
அருகில் படுக்க வைத்துக் கொள்ளுங்கள் .அதுதான் நல்லது குழந்தையின் வளர்ச்சி மிகச் சிறப்பாக இருக்கும் . குழந்தை தூங்குவதற்கு தனியாக எந்த ஒரு விஷயமும் வேண்டியதில்லை. குழந்தை தூங்கப் போகும் இடம் அமைதியாக இருக்கவேண்டும் அதிக ஒலி இருக்கக்கூடாது விளக்கு வெளிச்சம் குறைவாக இருக்க வேண்டும்
பெரிய குழந்தைகள் தூங்கும் நேரத்திற்கு முன் மின்னணுச் சாதனங்கள் உபயோகித்தல் கூடாது மாலை வேளையில் குறைந்தபட்சம் ஒரு மணி நேரம் விளையாட அனுமதிக்க வேண்டும் விளையாடி வந்த பின் குழந்தையை வெந்நீரில் குளிக்க வைக்கவும். நேரத்திலேயே உணவை தரவும் .சூரியன் மறைந்த பிறகு எவ்வளவு நேரம் வயதுக்கு ஏற்றபடி குழந்தை தூங்குகிறதோ? அவ்வளவு நல்லது. உண்ட உணவு சீரணம் ஆகும் .குழந்தை வளரும். வளர்ச்சிக்கு தேவையான ஊக்க நீர்களும் சுரக்கும்.
யார் ஆட்டுவது என்ற பிரச்சனை இல்லாததால் குடும்பத்தில் அமைதி நிலவும் சண்டைகள் குறையும் இல்லற வாழ்வு இனிதே இருக்கும்.
அருகில் படுக்க வைப்பது குழந்தைக்கும் நல்லது குடும்பத்திற்கு நல்லது

Опубликовано:

 

25 мар 2024

Поделиться:

Ссылка:

Скачать:

Готовим ссылку...

Добавить в:

Мой плейлист
Посмотреть позже
Комментарии    
Далее
Mild autism is curable? in Tamil by a Speech therapist
13:06