கொண்டைக்கடலை கபாப் | Veg shammi Kebab In Tamil | Snacks Recipes | Starter Recipes | Veg Starter |
#vegshammikebab #kondakadalaikabab #கொண்டைக்கடலைகபாப் #starterrecipe
#starter #vegstarter #snacks #eveningsnacks #kidsspecial #healthyfood
#healthysnacks #kabulichana #kabulichanakebab #homecookingtamil
We also produce these videos on English for everyone to understand.
Please check the link and subscribe @HomeCookingShow
Veg Shammi Kebab: • Veg Shammi Kebab | Sha...
Our Other Recipes
பச்சை பட்டாணி கபாப்: • பச்சை பட்டாணி கபாப் | ...
டாங்கிரி கபாப் : • டாங்கிரி கபாப் | Tangr...
Here is the link to Amazon HomeCooking Store where I have curated products that I use and are similar to what I use for your reference and purchase
www.amazon.in/shop/homecookin...
கொண்டைக்கடலை கபாப்
தேவையான பொருட்கள்
கருப்பு கொண்டைக்கடலை - 1 கப்
(ஓர் இரவு ஊறியது)
தண்ணீர்
வெங்காயம் - 1 பொடியாக நறுக்கியது
பச்சை மிளகாய் - 2 பொடியாக நறுக்கியது
கொத்தமல்லி இலை நறுக்கியது
புதினா இலை நறுக்கியது
கடலை மாவு - 2 மேசைக்கரண்டி
மஞ்சள் தூள் - 1/4 தேக்கரண்டி
காஷ்மீரி மிளகாய் தூள் - 1 தேக்கரண்டி
தனியா தூள் - 1 தேக்கரண்டி
சீரக தூள் - 1 தேக்கரண்டி
சாட் மசாலா தூள் - 1 தேக்கரண்டி
கரம் மசாலா தூள் - 1 தேக்கரண்டி
உப்பு - 1 1/2 தேக்கரண்டி
எண்ணெய்
தயிர் பச்சடி செய்ய
தயிர் - 1 கப்
கொத்தமல்லி இலை நறுக்கியது
புதினா இலை நறுக்கியது
சில்லி ஃபிளேக்ஸ் - 1/2 தேக்கரண்டி
சாட் மசாலா தூள் - 1/4 தேக்கரண்டி
எலுமிச்சை பழச்சாறு - 1/2 பழம்
செய்முறை
1. கொண்டைக்கடலையை ஒரு இரவு முழுவதும் ஊறவைக்கவும்.
2. பிரஷர் குக்கர்'ரில் போட்டு 6 விசில் வரும் வரை வேகவைக்கவும்.
3. வெந்த கடலையை வடிகட்டி வைக்கவும்.
4. மிக்ஸியில் போட்டு கொர கொரப்பாக அரைக்கவும்.
5. இதில் வெங்காயம், பச்சை மிளகாய், கொத்தமல்லி இலை, புதினா இலை, கடலை மாவு, மஞ்சள் தூள், காஷ்மீரி மிளகாய் தூள், தனியா தூள், சீரக தூள், கரம் மசாலா தூள், சாட் மசாலா தூள் மற்றும் உப்பு சேர்த்து நன்கு கலக்கவும்.
6. தேவைப்பட்டால் சிறிது தண்ணீர் சேர்க்கலாம். (கடலை வேகவைத்த தண்ணீர் சேர்க்கவும்)
7. நன்கு பிசைந்து வடை போல் தட்டவும்.
8. தேவையான அளவு எண்ணெய் ஊற்றி சூடாக்கவும்.
9. கபாப்'பை எண்ணெயில் போட்டு பொன்னிறமாகும் வரை பொரிக்கவும்.
10. அடுத்து தயிர் பச்சடி செய்ய, கிண்ணத்தில் தயிர், கொத்தமல்லி இலை, புதினா இலை, பச்சை மிளகாய், சாட் மசாலா, சில்லி ஃபிளேக்ஸ் மற்றும் எலுமிச்சை பழச்சாறு சேர்த்து கலக்கவும்.
11. தயிர் பச்சடியை குளிரூட்டி பரிமாறவும்.
You can buy our book and classes on www.21frames.in/shop
HAPPY COOKING WITH HOMECOOKING
ENJOY OUR RECIPES
WEBSITE: www.21frames.in/homecooking
FACEBOOK - / homecookingtamil
RU-vid: / homecookingtamil
INSTAGRAM - / homecookingshow
A Ventuno Production : www.ventunotech.com/
11 июл 2020