Тёмный

கோவில் யானை என நினைத்து மருதமலையில் காட்டு யானைக்கு பிரசாதம் கொடுக்க சென்ற பக்தர். 

Nellai Kanna TV
Подписаться 3,1 тыс.
Просмотров 6 тыс.
50% 1

கோவை, மருதமலை மேற்கு தொடர்ச்சி மலை அடிவாரத்தில் அமைந்து உள்ள பழமையான சுப்பிரமணிய சுவாமி திருக்கோவில், தமிழ் கடவுள் முருகனின் ஏழாம் படை வீடு என பக்தர்களால் போற்றப்படும் சிறப்புமிக்க திருக்கோவிலில் நாள்தோறும் நூற்றுக் கணக்கான பக்தர்கள் வந்து சாமி தரிசனம் செய்து செல்வது வழக்கம். கலந்து சில மாதங்களாக கோவிலுக்கு வாகனங்கள் செல்லும் மலைப் பாதை மற்றும் படிக்கட்டு பாதையில் ஒற்றை மற்றும் கூட்டமாக யானைகள் கடந்து செல்வது தொடர்ந்து நிகழ்ந்து வருகிறது. மாலை ஆறு மணிக்கு மேல் கோவிலுக்கு செல்ல பக்தர்களுக்கு வனத் துறையினர் தடை விதித்து உள்ளனர். மேலும் கோவிலுக்கு செல்லும் வழியை மறைத்து நிற்பதால் பக்தர்கள் அவதி அடைந்து வருகின்றனர். இந்நிலையில் கோவில் செல்லும் பாதை அருகே வலது புறத்தில் உள்ள பொதி சுமந்து செல்லும் கழுதை பாதை என்று கடந்த காலங்களில் அழைக்கப்பட்ட மண் பாதை தற்போது கட்டிடங்களுக்கு பொருட்களைக் கொண்டு செல்லும் மண் பாதையில் இன்று காலை 6 மணி அளவில் ராஜகோபுரம் பின்புறத்திற்கு வந்த ஒற்றைக் காட்டு யானையை கண்ட பக்தர் ஒருவர் கோவில் யானை என்று நினைத்து அதற்கு பிரசாதம் கொடுக்க சென்று உள்ளார். இதனை கண்ட சக பக்தர்கள் கூச்சலிட்டு அது காட்டு யானை என்று அவரை எச்சரித்தனர். இதனால் உடனே திரும்பி அவர் உயிர் தப்பினார். அங்கு இருந்தவர்கள் தொடர்ந்து கூச்சலிட்டதால் யானை அங்கு இருந்து திரும்பி சென்ற போது துதிக்கையால் கீழே இருந்த பொருளை தட்டி விட்டு, துதிக்கையை மேல் நோக்கி உயர்த்தி விட்டு சென்றது. அதனை அங்கு இருந்து பக்தர் ஒருவர் தனது செல்போனில் வீடியோ பதிவு செய்து உள்ளார். அந்தக் காட்சிகள் தற்பொழுது வைரல் ஆகி வருகிறது.

Опубликовано:

 

9 сен 2024

Поделиться:

Ссылка:

Скачать:

Готовим ссылку...

Добавить в:

Мой плейлист
Посмотреть позже
Комментарии    
Далее
Что думаете?
00:54
Просмотров 321 тыс.
🛑 ты за кого?
00:11
Просмотров 156 тыс.
▼ЮТУБ ВСЁ, Я НА ЗАВОД 🚧⛔
30:49
Просмотров 472 тыс.