Тёмный

சமாதி நிலை - ஆன்மாவின் விழிப்புணர்வு மற்றும் உன்னதமான அன்பின் பயணம்.. 

Bliss Valley
Подписаться 3,3 тыс.
Просмотров 6 тыс.
50% 1

Unlocking the Mysteries of Samadhi: Journey into Spiritual Awakening and Ultimate Love
What is Samadhi and How is it Attained?
Samadhi is a state of intense concentration and meditation in which a person achieves a complete union with the object of their focus. In Hindu and Buddhist traditions, samadhi is considered the highest form of meditation, leading to a profound state of inner peace and tranquility.
In this enlightening video, the concept of samadhi is explored in-depth, shedding light on the process of attaining this elevated state of consciousness. Viewers are taken on a journey through the various stages of meditation and introspection that ultimately lead to the experience of samadhi.
Furthermore, the video delves into the profound impact of Samadhi on one's spiritual journey, emphasizing that the greatest devotion is born out of this state. It explores how the mind and body reach a state of pure bliss and connection, fostering a deep sense of love and devotion towards a higher power.
Additionally, the video discusses the concept of pure bhakti or devotion, emphasizing the role of samadhi in cultivating a true and unwavering sense of reverence and adoration. It highlights how the practice of samadhi can lead to a profound sense of oneness with the divine, resulting in a heightened sense of devotion and spiritual fulfillment.
Ultimately, this video serves as a valuable resource for individuals seeking to deepen their understanding of samadhi and its transformative effects on one's spiritual journey. It offers insights into the process of attaining samadhi and the profound impact it has on fostering a sense of devotion and spiritual connectedness. Through its exploration of pure bhakti and devotion, the video provides a compelling perspective on the significant role samadhi plays in cultivating a deep and meaningful spiritual practice.
i love to share my spiritual knowledge, which i have gained through spiritual experiences to all. my abilities is focused on binding science and divinity. its a form of spiritual revelation to explain god scientifically. through this, a common person can heighten their conscious expansion.

Опубликовано:

 

19 сен 2024

Поделиться:

Ссылка:

Скачать:

Готовим ссылку...

Добавить в:

Мой плейлист
Посмотреть позже
Комментарии : 107   
@user-qh9jm7cm7l
@user-qh9jm7cm7l 6 дней назад
வணக்கம் ஐயா. ஆன்ம வளர்ச்சியை அடுத்த நிலைக்கு கொண்டுவர வழிகாட்டியாக இருக்கும் தங்களுக்கு சிரம் தாழ்த்துகிறோம். ஆன்ம வளர்ச்சிக்கு எத்தனிக்கும் அனைவருக்கும் உங்கள் வழிகாட்டுதல் பயனுடையதாக அமையும். வாழ்க வையகம் ❤
@blissvalley4553
@blissvalley4553 6 дней назад
மிக்க மகிழ்ச்சி ❤️ மிக்க நன்றி 🙏 வாழ்க வளமுடன் 🙌🪔
@kumudhapiruthivi7337
@kumudhapiruthivi7337 День назад
சமாதியின் உச்சநிலையில் அதாவது நாமே பகவானாகிவிடும் போது உலகம மறந்து போகும். உறவுகள் மறந்து போகும்..கீழே இறங்கி வந்து பார்க்கும் போது தான் பகவான் பக்தன் என்ற வேறுபாடுகள்.இருப்பினும் பால் அருந்திய பூனை போல் சமாதி ருசி மறைவதில்லை. உங்களின் பதிவுகள் மிக அருமை.நிறைய போடுங்கள்.
@blissvalley4553
@blissvalley4553 День назад
மிக்க நன்றி 🙏 வாழ்க வளமுடன் 🙌🪔💙
@shanthyshri7227
@shanthyshri7227 5 дней назад
உங்களுடைய இந்த விடியோ மிக பெரிய நம்பிக்கையை கொடுத்து இருகிறது
@knavaneethakrishnan7311
@knavaneethakrishnan7311 5 дней назад
Game is to play, not to win. Samathi secrets, simply sweet. Thank you so much for beautiful books.
@blissvalley4553
@blissvalley4553 5 дней назад
😊 thank you 🩵 God bless You 🙌🪔
@சிவஞானபிரகாசம்
நான் வணங்கும் நாராயணனே பிரபஞ்சத்தின் மூலம் உங்களை அனுப்பி எனக்கு ஏற்ப்பட்ட அனுபவத்திற்கு விளக்கமும் தெளிவான வழிகாட்டுதலை உங்கள் மூலம் அவர் எனக்கு கொடுத்தமைக்கு என் சிரம் தாழ்த்தி வணங்குகின்றேன் நன்றி
@blissvalley4553
@blissvalley4553 6 дней назад
மிக்க மகிழ்ச்சி.. மிக்க நன்றிகள்🙏🙏🙏 வாழ்க வளமுடன் 🙌🪔
@legendsofartist7835
@legendsofartist7835 2 дня назад
Sir u r really great soul keep the servings to the people this is also a kind of jeeva karuinyam
@blissvalley4553
@blissvalley4553 2 дня назад
Sure 🙏 thank you so much for the support 🙏🙌 The
@infokitchen4247
@infokitchen4247 6 дней назад
சென்ற முறை நான் மூச்சை சமநிலைப்படுத்த முடியாமல் ஓடும் என் எண்ணத்திற்கும், உடல் வலியால் நான் கஷ்டப்படுவதற்கு நாங்கள் சென்ற முறை எனக்கு பதில் அளித்ததின் நீள் விளக்கமாக இருக்கிறது மிகவும் நன்றி. குருவே சரணம்🙏🙏
@blissvalley4553
@blissvalley4553 6 дней назад
மிக்க மகிழ்ச்சி 🙂 மிக்க நன்றி 🙏வாழ்க வளமுடன் 🙌🪔
@ssivaprakasam1730
@ssivaprakasam1730 6 дней назад
திருச்சிற்றம்பலம் ... வாழ்த்துக்கள் ஐயா சொல்வது புரியவில்லை என்றால் இதற்கு முன் வீடியோவை பாருங்கள் இந்த வீடியோ ஒரு முறைக்கு இரு முறை ஆழ்ந்து பயனிக்க .... அற்புதமான கருத்துகள் வாழ்க வளமுடன் நன்றிகள் ஐயா
@blissvalley4553
@blissvalley4553 6 дней назад
உங்களுடைய அன்பிற்கும் ஆதரவிற்கும் மிக்க மகிழ்ச்சி 🙂 மிக்க நன்றி 🙏 வாழ்க வளமுடன் 🙌🪔
@jayakumarithanikachalam7596
@jayakumarithanikachalam7596 6 дней назад
Good morning .... தினமும் ஒரு காணொளி போடுங்க Plz....
@blissvalley4553
@blissvalley4553 6 дней назад
தினமும் காணொளி பதிவுகளை இடும் அளவிற்கு சந்தர்ப்ப சூழ்நிலைகள் அமைவதில்லை... எனினும் வருங்காலங்களில் முயற்சி செய்து பார்க்கிறேன்.. அடியேனை மன்னித்தருள வேண்டும். மிக்க நன்றி 🙏 வாழ்க வளமுடன் 🙌🪔
@rathika5363
@rathika5363 4 дня назад
🙏🙏
@blissvalley4553
@blissvalley4553 4 дня назад
மிக்க நன்றி 🙏 வாழ்க வளமுடன் 🙌🪔
@vasudeva7041
@vasudeva7041 6 дней назад
A very good video about agna chakra and Samadhi state. May the almighty bless you and your family at all times. Let all beings live blissfully.
@blissvalley4553
@blissvalley4553 6 дней назад
So nice of you 🙏 வாழ்க வளமுடன்🙌🪔
@பரம்பொருள்
100% true bro ✨ வாழ்க வளமுடன் ❤️
@blissvalley4553
@blissvalley4553 4 дня назад
மிக்க நன்றி சகோதரரே 💙 வாழ்க வளமுடன் 🙌🪔
@RAVICHANDRAN-rd6by
@RAVICHANDRAN-rd6by 5 дней назад
கீதை பக்தன். ... பக்தி...கிருஷ்ணா சரணடைகிறேன்
@blissvalley4553
@blissvalley4553 5 дней назад
மிக நன்று. மோக்ஷம் தின்னம் 🙌🪔 வாழ்க வளமுடன் 🙌🪔
@gunasegaram8826
@gunasegaram8826 6 дней назад
Arumayana vilakam
@blissvalley4553
@blissvalley4553 6 дней назад
மிக்க நன்றி 🙏வாழ்க வளமுடன்🙌🪔
@pushkhalasathyamurthy2569
@pushkhalasathyamurthy2569 6 дней назад
Waaavvv Guruve Charanam Mikka Nandri Iyya
@blissvalley4553
@blissvalley4553 6 дней назад
மிக்க நன்றி 🙏 வாழ்க வளமுடன் 🙌🪔
@infokitchen4247
@infokitchen4247 6 дней назад
குருவே சரணம்🙏🙏
@blissvalley4553
@blissvalley4553 6 дней назад
சிவார்ப்பாணம்🙏🙌🪔
@senthilraj4951
@senthilraj4951 6 дней назад
Nanri iyya arumai vazga valamudan
@blissvalley4553
@blissvalley4553 6 дней назад
மிக்க நன்றி 🙏 வாழ்க வளமுடன் 🙌🪔
@KavithaRajan-pk4fn
@KavithaRajan-pk4fn 5 дней назад
Thank you and greatful
@blissvalley4553
@blissvalley4553 5 дней назад
Me too🙏.. thank you so much for watching and supporting me 🙏 வாழ்க வளமுடன் 🙌🪔
@iniyavalvarahifrance411
@iniyavalvarahifrance411 4 дня назад
ஆழ்ந்த தியானத்தில் யான் பெற்ற அதாவது உன் நெற்றி கண் தியானம் போதும் சிவகண் நெற்றிகண்ணுக்கு நேரே பின் நோக்கி அன்னையின் கண் நோக்கி செல் என கீழே கணபதி மேலே வேல் முருகன் நடுவே அன்னை அன்னையின் கண் நோக்கி தியானம் செய் இதைப்பற்றி தேடலும் பிடரி கண் தியானம் அல்லதுஅன்னை கண் தியானம் என்பதை அறிந்தேன் அதுபற்றிய உங்கள் கருத்து கொடுக்க முடியுமா நன்றி வாழ்த்துக்கள் வாழ்க வளமுடன்
@blissvalley4553
@blissvalley4553 4 дня назад
பிடரி கண் தவத்தால் பூர்வ ஜென்ம ஞாபகங்கள் மனதில் வெளிப்படும்.. இந்த நிலையை ஜதீஸ்மரம் என்போம்.. ஆனால் இது ஈசனின் அருளால் தியானத்தில் இயல்பாக நடக்க வேண்டிய ஒன்றாகும். நம் சுய முயற்சியால் இதை செய்யும் பொழுது சில சமயம் இதன் மூலமாக நன்மை அடையலாம் சில சமயம் இதன் மூலமாக தீமையும் அடையலாம்... மனம் தூய்மை அடையாத காரணத்தினால் தான் நாம் பிறவி எடுத்துக் கொண்டிருக்கிறோம். அதனால் கருமய பதிவுகளில் இருக்கும் அசுத்தமான எண்ணங்கள் வெளிப்படும் பொழுது அதை எதிர்கொள்ளும் சக்தி நம் தற்போதைய மனோ நிலைக்கு இருக்கும் என்பது தின்னமல்ல... மிக்க நன்றி 🙏 வாழ்க வளமுடன் 🙌🪔
@iniyavalvarahifrance411
@iniyavalvarahifrance411 4 дня назад
​@@blissvalley4553 நன்றி சகோதரா காலத்தின் தேவை எதுவோ அதை இந்த பிரபஞ்சம் கொடுக்கட்டும் நன்றி வாழ்த்துக்கள் வாழ்க வளமுடன்
@nithiyas1436
@nithiyas1436 6 дней назад
வாழ்க வளர்க
@blissvalley4553
@blissvalley4553 6 дней назад
மிக்க நன்றி🙏வாழ்க வளமுடன் 🙌🪔
@punithap1897
@punithap1897 6 дней назад
வாழ்க வளமுடன் ஐயா🎉🎉🎉
@blissvalley4553
@blissvalley4553 6 дней назад
மிக்க நன்றி 🙏 வாழ்க வளமுடன் 🙌🪔
@aasharamesh3141
@aasharamesh3141 6 дней назад
இனிய காலை வணக்கம்
@blissvalley4553
@blissvalley4553 6 дней назад
இனிய காலை வணக்கம் 🙏🪔வாழ்க வளமுடன் 🙌🪔
@carolinvimali5475
@carolinvimali5475 6 дней назад
Thank you so much Sir
@blissvalley4553
@blissvalley4553 6 дней назад
Thank you a lot for supporting me 🙏🙌🪔
@azhagammaljayamoorthy4865
@azhagammaljayamoorthy4865 6 дней назад
🙏🙏🙏🙏🙏👌👌👌
@blissvalley4553
@blissvalley4553 6 дней назад
மிக்க மகிழ்ச்சி ❤️மிக்க நன்றி 🙏வாழ்க வளமுடன் 🙌🪔
@shanthyshri7227
@shanthyshri7227 5 дней назад
ஐயா நான் ஏற்கனவே15 நாட்களாக மவுனவிரதத்தில் இருக்கிறேன் இன்னும் 15 நாட்கள் ( அம்மாவாசை ) வரை மவுனவிரதம் தொடரும் இந்த நேரத்தில் தொடர்ந்து ஒரு நாளைக்கு 4 மணி நேரம் தியானத்தில் அமர நினைக்கிறேன் நான் என்ன செய்தால் சமாதி சித்திக்கும்
@legendsofartist7835
@legendsofartist7835 2 дня назад
Sir,Pls make more videos
@blissvalley4553
@blissvalley4553 2 дня назад
Sure 🙏🙌🪔💙
@sivakumarm6506
@sivakumarm6506 6 дней назад
அருமையான விளக்கம். நன்றி வணக்கம். தியானத்தின் ஆரம்ப நிலை எப்படி செய்வது என்று விளக்க கோருகிறேன். ஆன்மீக பாதையில் பயணிக்கும் போது பல இடையூறுகள் வருகிறது. இதை எப்படி அகற்றுவது.
@blissvalley4553
@blissvalley4553 6 дней назад
கால பைரவரிடம் சரணாகதி அடையுங்கள்... எந்த கோவிலில் கால பைரவர் இருக்கின்றாரோ அந்த கோயிலுக்கு சென்று காலபைரவரை உங்கள் குருவாக கண்டு பக்தியுடன் சரணாகதி நிலையில் உங்களுடைய மனம் எண்ணம் புத்தி அனைத்தையும் சமர்ப்பிப்பதாக பாவித்து வேண்டிக் கொள்ளுங்கள்... இப்படி தொடர்ந்து செய்து வந்தால் ஆன்மீகத்தில் தடங்கல்கள் விலகிச் செல்லும்... ஆன்மீகத்தில் முன்னேற்றமும் ஏற்படும்...
@sivathanaasivathanaa8416
@sivathanaasivathanaa8416 День назад
​​​@@blissvalley4553நான் விஷ்ணுவை எதார்த்தமாக வணங்க வணங்க ஆரம்பித்தேன் சில நாட்கள் கிடைத்தது அதிசயங்கள் நிகழ்ந்தது நான் இறைவனை நினைத்து அமர்ந்திருக்கும் பொழுது குண்டலினி சக்தி என நீங்க சொல்லிய இடத்தில் சிலர் தூண்டுதல் ஏற்பட்டது அவை என்னால் உணர முடியவில்லை அது என்னவென்று எனக்கு தெரியவில்லை சில நாட்கள் கழித்து எனக்குள் இருந்த இறை சக்தியை இழந்து விட்டேன் முற்றிலுமாக எனக்குள் இந்த இறை சக்தியை நான் இழந்து விட்டு பெரிதும் துயரத்திலும் துன்பத்திலும் மன உளைச்சலிலும் இப்போது இருந்து கொண்டு இருக்கிறேன் இப்பொழுது நெற்றிப்பொட்டு பயிற்சியை நான் செய்து கொண்டிருக்கிறேன் அடுத்து நான் என்ன செய்ய வேண்டும் என உங்களிடம் ஏதும் பழைய வீடியோக்கள் இருந்தால் அதை லிங்கை அனுப்பவும் இல்லையேல் நான் என்ன செய்ய வேண்டும் என்பதை ஒரு புது வீடியோவாகவும் அல்லது இந்த கமெண்ட் பக்கத்திலே பதில் தந்தால் நன்றி நன்றி நன்றி நன்றி
@TamilselvanS-m4z
@TamilselvanS-m4z 4 дня назад
ஐயா சிருமூலை உல்ல பிடரி கண் என்கிரார் கலே அங்கும் சில நேரக்களிள் குருகுரு என்று உல்லது இதற்கும் விளக்கம் கூருமாரு தயவு கூர்ந்து கேட்டு கொள்கிரேன் ஐயா 🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏
@blissvalley4553
@blissvalley4553 4 дня назад
பிடரி கண் தவத்தால் பூர்வ ஜென்ம ஞாபகங்கள் மனதில் வெளிப்படும்.. இந்த நிலையை ஜதீஸ்மரம் என்போம்.. ஆனால் இது ஈசனின் அருளால் தியானத்தில் இயல்பாக நடக்க வேண்டிய ஒன்றாகும். நம் சுய முயற்சியால் இதை செய்யும் பொழுது சில சமயம் இதன் மூலமாக நன்மை அடையலாம் சில சமயம் இதன் மூலமாக தீமையும் அடையலாம்... மனம் தூய்மை அடையாத காரணத்தினால் தான் நாம் பிறவி எடுத்துக் கொண்டிருக்கிறோம். அதனால் கருமய பதிவுகளில் இருக்கும் அசுத்தமான எண்ணங்கள் வெளிப்படும் பொழுது அதை எதிர்கொள்ளும் சக்தி நம் தற்போதைய மனோ நிலைக்கு இருக்கும் என்பது தின்னமல்ல... மிக்க நன்றி 🙏வாழ்க வளமுடன் 🙌🪔
@TamilselvanS-m4z
@TamilselvanS-m4z 4 дня назад
ஐயா ஆக்கினையும் சரஸ்கரராம் மும் ஒரு சேர இயக்கினாலும் மற்றும் வெளியில் சென்றாலும் மற்ற விசயங்கலில் கவனம் செலுத்தும் போதும் ஆக்கினை சரஸ்சராரம் இயங்கலாமா ஐயா தயவு கூர்ந்து விழக்கம் கொடுக்கவும் ஐயா 🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏
@blissvalley4553
@blissvalley4553 4 дня назад
எப்பொழுதும் நீங்கள் ஆக்கினையில் கவனம் வைத்து செயல்படுவது நன்றாகும் ஆனால் ஆரம்ப நிலையில் அது உங்களுக்கு கடினமாக இருக்கும் ஆனால் பயிற்சியின் மூலமாக அது எளிதாகும். இந்த உலக வாழ்க்கைக்கு ஆக்கினையில் கவனத்தை வைத்து வாழ்வதே மிகவும் சிறப்புடையதாக அமையும். துரியத்தில் மனதை நிறுத்தி உலக வாழ்க்கையை நீங்கள் செய்யும் பொழுது நீங்கள் எந்த வேலை செய்தாலும் அதில் ஒரு பிடிப்பில்லாத நிலையை உணர்வீர்கள்... ஏனென்றால் துரியத்தில் மனம் மிகவும் ஆழ்ந்த நிலைக்குச் செல்லும் அந்த நிலையில் மனம் உடலுக்கு ஒத்துழைப்பு கொடுப்பது குறைந்து விடும்.. மிக்க நன்றி 🙏 வாழ்க வளமுடன் 🙌🪔
@bagavathimagi9937
@bagavathimagi9937 6 дней назад
🙏🙏🙏🙏🙏🙏🙏
@blissvalley4553
@blissvalley4553 6 дней назад
🙏🙏🙏🪔🙌
@remadevinatarajapillai5865
@remadevinatarajapillai5865 6 дней назад
❤🙏🙏🙏🙏🙏
@blissvalley4553
@blissvalley4553 6 дней назад
மிக்க நன்றி 🙏வாழ்க வளமுடன் 🙌🪔
@ArjunSuvi
@ArjunSuvi 5 дней назад
வணக்கம் ஐயா.... நான் ஒரு சில வருடங்களாக தொடர்ந்து தியானம் செய்து வருகிறேன்.நிறைய அனுபவங்களை கடந்து சென்றேன்.சில நேரத்தில் கண்களை மூடினாள் வெட்ட வெளியாக (வெள்ளை நிறம்) தெரியும். தியானம் அதிக அளவில் செய்ய செய்ய தலையில் உச்சியில் (சஹஸ்ரார சக்கரம்) அதிக வலி கொடுக்கிறது.அது மட்டும் அல்லாமல் நான் இறப்பு நடந்த வீட்டிற்கு சென்றால் என்னுடைய தலை உச்சியில் தாங்க முடியாத வலி ஏற்படுகிறது.சூரிய கிரகணம் ஏற்படும் போது அப்படியே வலிக்கும்.ஜீவ சமாதிகளுக்கும் சிவன் கோவில்களுக்கு செல்லும்போது என்னுடைய புருவ மத்தி வலிக்கிறது.வான் மண்டலத்தில் ஏதாவது மாற்றம் நடந்தால் தலையில் பின் புறம் வலி ஏற்படுகிறது.இதற்கு எல்லாம் என்ன அர்த்தம் என்று சொல்லுங்கள் ஐயா.🙏🙏🙏
@LSENTERPRISE-gk2qp
@LSENTERPRISE-gk2qp 5 дней назад
மூச்சை கவனியுங்கள் எப்போ எல்லாம் இந்த மாதிரி தோணுதோ உங்கள் மூச்சை கவனியுங்கள்.
@blissvalley4553
@blissvalley4553 5 дней назад
நீங்கள் ஒரு உன்னதமான ஆத்மா என்பதை அறிந்து கொள்ளுங்கள்.. முதலில் உங்களை நான் வணங்குகின்றேன் 🙏..துரியாதீத இறைநிலை பயிற்சியை தொடர்ந்து செய்து வாருங்கள். துரியாதீத நிலையில் அந்த வெட்ட வெளியில் உங்களது மனம் லயப்படும் பொழுது பக்தியுடன் உங்களது அனைத்து வலிகளையும், உங்களது கஷ்டங்களையும், ஒப்படைப்பதாக பாவித்து சமர்ப்பித்து விடுங்கள்... பின்பு உங்களுடைய அன்பை எப்படி எல்லாம் வெளிப்படுத்த முடியுமோ அப்படி எல்லாம் அந்த சதாசிவத்திடம் வெளிப்படுத்துங்கள்... எப்படி ஒரு குழந்தையின் அழுகுரல் தன் தாய்க்கு வலி எடுக்க காரணமாகுமோ, அதேபோன்ற உணர்வுடன் பரமாத்மா உங்களை சூழ்ந்து அரவணைப்பார்.. அந்த உச்சகட்ட பாசத்தின் பிணைப்பில் நீங்கள் அனைத்தையும் மறந்து விடுவீர்கள்... அப்படி தொடர்ந்து செய்தால் எல்லாம் சரியான நிலையில் அமையும்... மிக்க நன்றி 🙏 வாழ்க வளமுடன் 🙌🪔
@ArjunSuvi
@ArjunSuvi 5 дней назад
🙏🙏🙏
@aasharamesh3141
@aasharamesh3141 6 дней назад
ஐயா சிலசமயங்களில் நான் வேலை செய்துக்கொண்டு இருந்தாலும் கண்கள் திறந்து இருந்தாலும் ஆழ்ந்த உறக்கத்தில் ‌ செல்லுகிறது ஒரு விதமான போதையில் இருப்பது போல் இருக்கும்.
@blissvalley4553
@blissvalley4553 6 дней назад
தியானத்தின் ஆரம்ப நிலைகளில் அது போன்று இருப்பது இயல்பாகும் தியானம் செய்து முடித்த பின்னர் சிறிது பிராணாயாம பயிற்சியையும் சிறிது உடற்பயிற்சியையும் செய்து கொண்டால் அந்த நிலையில் இருந்து வெளிப்படலாம். மிக்க நன்றி 🙏 வாழ்க வளமுடன் 🙌🪔
@aasharamesh3141
@aasharamesh3141 6 дней назад
@@blissvalley4553 நன்றி ஐயா
@bagavathimagi9937
@bagavathimagi9937 6 дней назад
🙏🙏🙏🙏🏻🙏🏻🙏🏻🙏🏻
@gajalakshmisivakumar1715
@gajalakshmisivakumar1715 2 дня назад
Which is correct open eyes or closed eyes Sometimes energy level very low sir I don't know whether doing wrong in meditation
@rohiniritanya6448
@rohiniritanya6448 6 дней назад
அண்ணா... என்னுள் உள்ள ஆமானுஷ்ய சக்தியை பற்றி பேசவேண்டும்
@blissvalley4553
@blissvalley4553 6 дней назад
கூறுங்கள் சகோ..
@gurumurthy3306
@gurumurthy3306 6 дней назад
Sir by nature i love everyone right from adulthood. I expect performance from others in an orderly and time manner. In this process i lost control and at times i showed my attitude. Last 3 years in deep Meditation in Agnai chakra , signs of indigo color and some vibration in that chakra. Later realised how i was stupid as i did not understand that God's creation is unique fir each and every person. In this part of material world nothing is sufficient therefore i lost interest in gaining wealth. Lastly please answer each soul is different or one for entire humanity.
@blissvalley4553
@blissvalley4553 6 дней назад
At soul level individual consciousness still exists.. but at supreme consciousness state we are one and the same. it is unity in diversity... Once the supreme consciousness is established, unconditional love, compassion, righteousness, empathy and so on will develop. It is the descending expression of godliness... Thank you so much for watching my videos and supporting me 🙏🪔
@tvsrajan4723
@tvsrajan4723 6 дней назад
🎉
@blissvalley4553
@blissvalley4553 6 дней назад
மிக்க நன்றி 🙏வாழ்க வளமுடன் 🙌🪔
@shanthyshri7227
@shanthyshri7227 4 дня назад
ஐயா உங்களிடம் என் அனுபவத்தை பகிர்ந்து கொள்வதில் எனக்கு நிறைய விஷயங்களுக்கு அற்புதமான விடை கிடக்கிறது ஐயா எனக்கு நிறைய நேரத்தில் ஸஹஸ்ரத்தில் தியானம் அதுவாக மாறிவிடும் ஆனால் தியானம் முடிந்தவுடன் தலை அங்கங்க வீக்கம் ஏற்படுகிறது கடுமையான தலைவலி வருகிறது பின் அதுவாக சரியாகிறது சில மாதத்துக்கு முன் கோரக்கர் சித்தர் தியானத்தில் மூச்சு காற்றை கீழ் நோக்கி கொண்டு போய் மூலத்தில் நிறுத்த முடியுமா என்று கேட்டார் என்னால் கொஞ்சநேர பயிற்சியில் செய்ய முடிந்தது இதெல்லாம் எப்படி ஐயா இந்த அனுபவம் பற்றி உங்கள் கருத்தை எதிர் பார்கிறேன் ஐயா 🙏🙏
@blissvalley4553
@blissvalley4553 4 дня назад
மகா குருவும் மகா சித்திரமாகிய கோரக்கர் பெருமானின் திருவடி கமலத்தில் சரணாகதி அடைகிறேன் 🙏🙏🙏🪷. அம்மா அவருடைய திருநாமத்தை கேட்பதே மிகப்பெரிய பாக்கியமாக கருதுபவன் நான். அடியேனிடம் கேள்வியை உங்கள் மூலமாக கேட்க வைத்த மகா குருவின் திருவடியில் என் முதற்கண் வணக்கத்தை சிரம் தாழ்த்தி பணிகிறேன்.. 🙏🙏🙏🪷🪷🪷 குண்டலினி மகாசக்தி ஆனது மேலெழும்பும்போது அதீத ஆற்றலுடன் மேல் எழும்பும், அதை தாக்குப் பிடிக்கும் சக்தி நம் உடலுக்கு ஆரம்பத்தில் இருப்பதில்லை. அதனால் அந்த சக்தி எங்கிருந்தால் அமைதியாக இருக்குமோ எங்கு இறந்ததினால் அமைதியாக இருந்ததோ, எங்கிருந்தால் உடலுக்கு நலன் பயக்குமோ அந்த இடத்திற்கு மீண்டும் அதை கொண்டு வந்து நிறுத்த வேண்டும். இதை நாம் சாந்தி யோகம் என்று அழைப்போம். அதாவது உக்ர சக்தியாக இருக்கும் குண்டலினி சக்தியை சாந்தப்படுத்தும் பயிற்சி. இதை பயிற்சி செய்வதினால் உடனே பயிற்சியினால் ஏற்பட்ட அதீத உஷ்ணம் குறைந்து குளிர்ந்து விடும்., குறைவது மட்டுமில்லாமல் அந்த அதீத சக்தி உடல் சக்தியாக மாற்றமடைந்து விடும். அது உடலில் உள்ள ஏழு தாதுக்களையும் விருத்தியாக்கும். இதையே குருபிரான் உங்களுக்கு செய்ய சொல்லி இருக்கிறார். அவருடைய ஆண்ம தொடர்பில் உள்ள நீங்கள் அவருடைய செல்லப் பிள்ளையாக நீடூடி வாழ்க 🙌🪔.மிக்க நன்றி 🙏 வாழ்க வளமுடன் 🙌
@shanthyshri7227
@shanthyshri7227 4 дня назад
ஐயா என் குரு உங்களுக்கும் மகா குருவாக இருப்பது எனக்கு மிக பெரிய சந்தோசம் குரு எனக்கு இன்னும் நிறைய விஷயங்கள் சொல்லி கொடுத்துள்ளார் நீச்சலே தெரியாத எனக்கு தண்ணீரில் பல மணி நேரம் மிதக்கும் பயிற்சியையும் கொடுத்துள்ளார் இப்படி பலபெருமையான விஷயங்கள் உள்ளன நம் குருவை சொல்ல ஐயா உங்களை வணங்குகிறேன் என் குருவின் சீடன் என்பதால் 🙏🙏
@blissvalley4553
@blissvalley4553 4 дня назад
மிக்க மகிழ்ச்சி☺️ வாழ்க வளமுடன் 🙌🪔 குருவே சரணம்🙏🪷 குருவே போற்றி 🙏🪷
@Karuppaiya6102
@Karuppaiya6102 2 дня назад
அன்பு சகோதரரே 🙏 சமாதி என்பது ஒன்றுமற்றது பிரபஞ்சத்தில் ஆற்றல் என்பது சக்தி ஆற்றலுக்கு மூலமாக இருப்பது சிவம் அடுப்பில் சமையல் வெந்துக் கொண்டிருக்கிறது வெந்துக் கொண்டிருப்பது ஆற்றல் ( சக்தி ) அதற்கு மூலமாக இருப்பது பாத்திரம் பாத்திரத்திற்கு எந்த வேலையும் இல்லை ஆனால் பாத்திரத்தில் வேலை நடக்கிறது பாத்திரம் சிவம் ( சமாதி ) பாத்திரத்தில் வேலை நடப்பது சக்தி ( ஆற்றல் ) பரமாத்மாதான் சமாதி நிலை அங்கே பக்தனும் இல்லை இறைவனும் இல்லை பரமாத்மாவோடு கலக்கும்போது அங்கே பக்தனும் இல்லை இறைவனும் இல்லை பரமாத்மாவிலிருந்து வெளியே வரும்போது அங்கே இரண்டாக இருக்கிறது இறைவனும் பக்தனுமாக இதைதான் துவைதம் அதுவைதம்னு சொல்லுவாங்க பரமாத்மாவோடு கலக்கும்போது அதுவைதமாகவும் பரமாத்விலிருந்து வெளியே வரும்போது துவைதமாகவும் இருக்கிறது
@blissvalley4553
@blissvalley4553 2 дня назад
அடியேனுக்கு பக்தன் என்ற நிலையில் இருத்தலே போதும், சமாதி நிலையில் பக்தியும் இல்லை ஞானமும் இல்லை.. அது இரண்டற கலத்தலாகும்..
@Karuppaiya6102
@Karuppaiya6102 2 дня назад
@@blissvalley4553 உண்மைதான் சகோதரரே 🙏 இந்த நிலை எல்லோருக்குள்ளும் இருக்கிறது தியானத்தில் இருக்கும்போது பரமாத்மாவோட இருக்கிறோம் தியானத்திலிருந்து வெளியே வரும்போது பரமாத்மாவாகவும் ஜீவாத்மாவாகவும் இரண்டாக இருக்கிறது நன்றி சகோதரரே 🙏
@blissvalley4553
@blissvalley4553 2 дня назад
அடியேன் கூறும் பக்தி உணர்வல்ல அது அனுபவமாகும் அந்த அனுபவம் அன்பாகும் அந்த அன்பே சிவமாகும் அந்த சிவமே அனைத்தும் ஆகும் அந்த அனைத்துமே சக்தியாகும் அந்த சக்தியே முக்தியாகும்...
@Karuppaiya6102
@Karuppaiya6102 2 дня назад
@@blissvalley4553 நிச்சயமாக அன்பு சகோதரரே 🙏
@blissvalley4553
@blissvalley4553 2 дня назад
மிக்க நன்றி 🙏🪷🙏 வாழ்க வளமுடன் 🙌🪔💙
@jackkrish4446
@jackkrish4446 2 дня назад
Ayyane vanakkam kurudeva🙏🙏🙏🙏 unga kita kojam pesanum ayyane unga no send pannuga ayyane🙏🙏
@blissvalley4553
@blissvalley4553 2 дня назад
மன்னிக்கவும்., தற்போதைக்கு நான் எனது தொலைபேசி எண்ணை யாரிடமும் பகிர்ந்து கொள்வதில்லை... என்னுடைய channel description il email id கொடுத்துள்ளேன்... அதன் மூலமாக தொடர்பு கொள்ளுங்கள்... மிக்க நன்றி🙏வாழ்க வளமுடன் 🙌🪔💙
@shanthyshri7227
@shanthyshri7227 5 дней назад
ஐயா நெற்றி பொட்டில் சிவத்தை உணருகிறேன் நெற்றி முழுவது கூச்ச நிலை ஏற்படுகிறது இந்த நிலை மனதிற்கு ஆனந்தத்தை தருகிறது இந்த நிலைக்கும் சமாதி நிலைக்கும் சம்மந்தம் உண்டா
@blissvalley4553
@blissvalley4553 5 дней назад
நீங்கள் ஆக்கினைச் சக்கரத்தில் தொடர்ந்து தியானம் செய்து வந்தால் உன்மணி அவஸ்தை அடைவீர்கள். இது விழிப்பு நிலைக்கும் கனவு நிலைக்கும் நடுவில் இருக்கும் நிலையாகும். அது மனம் இயங்காத நிலையாகும். அங்கு மனம் ஒடிங்கி இருக்கும். அதேசமயம் உங்களால் சுவாசக் காற்று ஆக்கினை சக்கரத்தில் வருவதையும் போவதையும் உணர முடியும்.. அந்த நிலையில் நாத ஒளியை கேட்பீர்கள் பின்பு அந்த ஒளி நுண் அதிர்வுகளாக அனுபவிப்பீர்கள்.. இதுவே ஓங்காரம் எனப்படும். இந்த உணர்வு மிகவும் மெல்லியதாக இருக்கும்.. இந்த நிலையிலேயே தொடர்ந்து பயிற்சி செய்து வந்தால் அது சமாதி நிலைக்கு கொண்டு செல்லும். சமாதி நிலையில் எண்ணங்கள் இயற்கையாக தோன்றுவதில்லை. அந்த நிலையில் இன்பமான அமைதியை அனுபவிப்பீர்கள். இந்த சமாதி நிலையில் மனம் மிகவும் விழிப்பு நிலையில் இருக்கும் ஆனால் கருமைய பதிவுகளால் ஏற்படும் நான் என்ற அகங்காரம் அங்கு வேலை செய்யாது. அந்த அகங்காரத்தில் இருந்து எழும் எண்ணங்களும் உணர்ச்சிகளும் உங்களுக்கு தொந்தரவு செய்ய இயலாது... அந்த ஆனந்த நிலையே சமாதியாகும்...
@shanthyshri7227
@shanthyshri7227 5 дней назад
ஐயா மிகவும் ஆனந்தமா இருக்கு உங்கள் பதிலால் சுவாசம் ஆக்கினை வந்து போவதை உணருகிறேன் ஆனால் இன்னும் நாத ஒளி கேட்க்கவில்லை என் மனம் அனந்தம் கூத்தாடுகிறது சமாதி நிலை நெருங்கி விட்டேனா ஐயா பதில் சொல்லுங்கள்
@blissvalley4553
@blissvalley4553 5 дней назад
ஆம் நீங்கள் நெருங்கி விட்டீர்கள் 🙌🪔
@shanthyshri7227
@shanthyshri7227 5 дней назад
உங்கள் உடனடி பதிலால் என்னை போன்ற வழிகாடுதல் இல்லாமல் கஷ்ட்டப்படுபவர்கள் பயணடைவார்கள் மிகவும் நன்றி ஐயா😂😂😂❤❤
@blissvalley4553
@blissvalley4553 5 дней назад
@@shanthyshri7227 உங்களைப் போல் கஷ்டப்படுபவர்களுக்கு நீங்களும் பகிர்ந்து உதவி செய்யலாம்.. மிக்க நன்றி 🙏வாழ்க வளமுடன் 🙌🪔
@jaichithrajayaraman
@jaichithrajayaraman 6 дней назад
முன்றாவது கண் தியானத்தில் சிவ தரிசனம் கண்டேன். இதற்கு என்ன அர்த்தம் ஐயா!!
@blissvalley4553
@blissvalley4553 5 дней назад
அதன் அர்த்தம், உங்களுக்கு தெய்வீக தொடர்பு ஏற்பட்டுள்ளது என்பதாகும்..
@jaichithrajayaraman
@jaichithrajayaraman 5 дней назад
@@blissvalley4553 🙏நன்றி
@arunadevi1385
@arunadevi1385 4 дня назад
Individual astrology events meditative people la affect pannuma
@blissvalley4553
@blissvalley4553 4 дня назад
அனைத்தும் பாதித்தாலும்..மனம் பாதிக்காது...no effect on mind..
@stalinprabhu207
@stalinprabhu207 6 дней назад
வணக்கம் சார் சூக்குமை பைசந்தி மத்திமை வைகரி நான்கு வார்த்தை என்ன அர்த்தம் சார்
@blissvalley4553
@blissvalley4553 6 дней назад
சூக்குமை என்றால் நுண்அதிர்வு நிலை, இதை நாதம் என்றும் சொல்வர். இது மூலாதாரத்தில் உள்ள குண்டலினி சக்தியின் அதிர்வு நிலையாகும். குண்டலினி சக்தியின் நுண்ணதிர்வும் சுவாசத்தால் ஏற்படும் வெளிக்காற்றின் அதிர்வும் பிணைந்த நிலையை உதானன் என்போம். உதானன் என்ற காற்றின் அதிர்வு நிலை மணிப்பூரகத்திற்கு வரும்பொழுது பைசந்தி என்ற நிலையை அடையும். அந்த பைசந்தி அதிர்வானது சுவாதிஸ்டானத்தில் இருக்கும் கருமைய்ய பதிவுகளின் அதிர்வுகளை பிணைத்து மணிபூரகத்திற்கு வருவதாகும்.. அந்த அதிர்வு அங்கிருந்து மீண்டும் மேல் எழும்பி விசுத்தி சக்கரத்தை அடையும் பொழுது அதை மத்திமை என்று சொல்வோம். இது பைசந்தி அதிர்வையும் அநாகத சக்கரத்தில் இருக்கும் அனாதம் என்ற அதிர்வையும் இணைந்து நிற்கும் அதிர்வாகும். பைசந்தி என்ற நிலையில் இந்த அதிர்வானது எண்ணமாக உருமாறி இருக்கும். வைகரி என்றால் அந்த எண்ணம் ஓசையின் மூலம் வெளியில் வார்த்தையாக வெளிப்படுவதாகும். இது உதானன் என்ற காற்றின் ஒரு செயலாகும்... மிக்க நன்றி 🙏🙏🙏 வாழ்க வளமுடன் 🙌🪔
Далее
С чего всё началось?
00:42
Просмотров 168 тыс.
WHO IS MORE GREEDY?!
00:18
Просмотров 1,2 млн