Тёмный

தமிழ்நாடு மாநில அனைத்து மாநகராட்சி அலுவலர் சங்கங்களின் கூட்டமைப்பு மாநில செயற்குழு கூட்டம் 7.5.23 

Karaikal K.Prabakaran
Подписаться 321
Просмотров 20
50% 1

தமிழ்நாடு மாநில அனைத்து மாநகராட்சி அலுவலர் சங்கங்களின் கூட்டமைப்பு
பத்திரிக்கை செய்தி
தமிழ்நாடு மாநில அனைத்து மாநகராட்சி அலுவலர் சங்கங்களின் கூட்டமைப்பு மாநில செயற்குழு கூட்டம் 7.5.2023 காஞ்சிபுரத்தில் நடைபெற்றது.
தலைமை: வி.ராதாகிருஷ்ணன், மாநிலத்தலைவர்
முன்னிலை: இரா.சீத்தாராமன், மாநில பொதுச்செயலாளர்
வரவேற்புரை திரு.கோவிந்தராஜ்
கூட்டமைப்பு தலைவர்
காஞ்சிபுரம் மாநகராட்சி
கருத்துரை: அனைத்து மாநகராட்சிகளின் நிர்வாகிகள் மற்றும் உறுப்பினர்கள்
இக்கூட்டத்தில் நிறைவேற்றப்பட்ட தீர்மானங்கள்:
1. அரசாணை 152, நாள் 20.10.2022 ன்படி மாநகராட்சி பணிவிதிகளில் ஏற்கனவே உள்ள 20 வகை பணியிடங்கள் நீக்கப்பட்டு இருந்தது.அரசாணை 45 நாள்.12.4.2023ன்படி வெளியிடப்பட்ட அரசிதழில் புதிய பணி விதிகளில் மேற்கண்ட பணியிடங்கள் மீண்டும் சேர்க்கப்பட்டுள்ளது.மேற்படி நீக்கப்பட்ட பணியிடங்களை பணி விதிகளில் சேர்த்துக் கொள்ள உத்தரவிட்டமைக்கு மாண்புமிகு தமிழ்நாடு முதல்வர் அவர்களுக்கும் மாண்புமிகு நகராட்சி நிர்வாகத்துறை அமைச்சர் அவர்களுக்கும் நெஞ்சார்ந்த நன்றியினை தெரிவித்து தீர்மானம் நிறைவேற்றப்பட்டது.
2. 1996 ஆம் ஆண்டு வெளியிடப்பட்ட மாநகராட்சி பணிவிதிகளில் அனைத்து பணியிடங்களையும் தகுதியுள்ள மாநகராட்சி பணியாளர்களை கொண்டே நிரப்பிக்கொள்ள வழிவகை செய்யப்பட்டிருந்தது. ஆனால் தற்போது வெளியிடப்பட்ட புதிய பணி விதியில் அயற்பணி அடிப்படையில் பணியிடங்களை நிரப்பிக் கொள்ள வழிவகை செய்யப்பட்டுள்ளது.இது முற்றிலும் நீக்கப்பட்டு ஏற்கனவே உள்ளது போன்று தகுதியுள்ள மாநகராட்சி பணியாளர்களுக்கே பதவி உயர்வு வழங்க வேண்டும் என தீர்மானிக்கப்பட்டது
3. அலுவலக கண்காணிப்பாளர் பணியிடம் என்பது அனைத்து துறைகளிலும் உள்ள பொதுவான பணியிடமாகும். புதிய பணி விதியில் கண்காணிப்பாளர் பதவி உயர்வு பெற பட்டப்படிப்பு படித்து இருத்தல் வேண்டும் என்ற பணி நிபந்தனை உள்ளது.தமிழ்நாட்டில் உள்ள வேறு எந்த துறை கண்காணிப்பாளர்களுக்கும் இந்த பணி நிபந்தனை விதிக்கப்படவில்லை. எனவே பட்டப்படிப்பு என்ற இந்த பணி நிபந்தனை மாற்றப்பட வேண்டும் என்று தீர்மானிக்கப்பட்டது.
4. நகராட்சி நிர்வாக இயக்குனரகத்தில் புதிய பணி விதிகளை உருவாக்கப்படுவதற்கான பணிகள் நடந்து கொண்டிருந்த போது,புதிய பணி விதிகளில் மாநகராட்சி கூட்டமைப்பின் கருத்துக்களை தெரிவிப்பதற்கு வாய்ப்பு வழங்கப்பட வேண்டும் என்று கேட்கப்பட்டது. பணி விதிகள் இறுதியாக்கம் செய்யப்பட்ட பின்னர் உரிய வாய்ப்புகள் அளிக்கப்படும் என்று உறுதி அளிக்கப்பட்டது.ஆனால் இந்த வாய்ப்பு வழங்கப்படாமல் புதிய பணி விதி உருவாக்கப்பட்டுள்ளது. தற்போது நமது மாநகராட்சி கூட்டமைப்பால் வழங்கப்படுகின்ற மாதிரி பணி விதி திருத்தம் குறித்து விவாதிப்பதற்கு தனியே நாள் மற்றும் நேரம் ஒதுக்கி தரவேண்டும் என நகராட்சி நிர்வாக இயக்குனர் அவர்களையும்,அரசு கூடுதல் தலைமைச் செயலாளர் அவர்களையும் கேட்டுக் கொள்வது என தீர்மானிக்கப்பட்டது.
5. மக்கள் தொகையினை அடிப்படையாகக் கொண்டு மாநகராட்சிகளை ஐந்து பிரிவுகளாக வகைப்படுத்தி,அதன் அடிப்படையில் ஒரே சீரான பணியிடங்களை தோற்றுவித்து அரசாணை 152 நாள் 20.10.2022-ல் பிறப்பிக்கப்பட்டது. இந்த அரசாணையின்படி நீக்கப்பட்ட 20 வகை பணியிடங்கள் தற்போது புதிய பணிவிதிகளில் சேர்க்கப்பட்டுள்ளது. எனவே இந்த 20 வகை பணியிடங்களையும் மாநகராட்சிகளில் மீண்டும் தோற்றுவித்து கூடுதல் அரசாணையை பிறப்பிக்குமாறு நகராட்சி நிர்வாக இயக்குனர் அவர்களையும்,அரசு கூடுதல் தலைமைச் செயலாளர் அவர்களையும் கேட்டுக் கொள்வது என தீர்மானிக்கப்பட்டது.
நன்றியுரை
திரு.தமிழரசு வருவாய் அலுவலர் காஞ்சிபுரம் மாநகராட்சி
#MANAGARACHI #TAMIL #TAMILNADU #tamilnews #tamilnadunews #மாநகராட்சி தமிழ்நாடுதமிழ்நாடு

Опубликовано:

 

17 окт 2024

Поделиться:

Ссылка:

Скачать:

Готовим ссылку...

Добавить в:

Мой плейлист
Посмотреть позже
Комментарии    
Далее
Пряный осенний баббл чай
00:44
Просмотров 324 тыс.