ஸ்ரீ கொன்றை ஆறன்யேஸ்வர் கோவில் திரு தலவரலாறு மயிலாடுதுறை மாவட்டம் சீர்காழி வட்டாரத்தில் கொன்னக்காட்டுப்படுகை கிராமம் அமைந்துள்ளது ஜுவநதியாகிய கொள்ளிடத்தின் தென்கரையில் கொன்றை மரங்கள் நிறைந்த பகுதிதான் கொன்னக்காட்டுப்படுகை கிராமம். இவ்வூரில் முன்னொரு காலத்தில் ஜமதக்னி முனிவரால் ஆசிரமம் அமைக்க பட்டு அவரால் சிவலிங்கம் ஸ்தாபிக்கப்பட்டது அவரால் பூஜிக்கப்பட்ட சிவபெருமானுக்கு ஸ்ரீ கொன்றை ஆறன்யேஸ்வர் என்றும் அம்பாளுக்கு ஸ்ரீ பிரனவமலர் நாயகி என்ற திருநாமத்தோடு எழுந்தருளி அருள்பாலிக்கின்றனர் கோவில் ஸ்தலவிருச்சம் கொன்றை மரம் இக்கோவில் ஐனவரி மாதம் 21/01/2024 அன்று கும்பாபிஷேகம் நடைபெற்றது. மண்டலாபிஷேக நிறைவு விழாவில் ஏகாதச ருத்ராபிஷேகம் நடைபெற்றது. கோவிலுக்கு செல்லும் வழி சீர்காழி சிதம்பரம் பைபாஸ் சாலையில் சரஸ்வதி விளாகம் பேருந்து நிறுத்தத்தில் இருந்து மேற்கே சுமார் ஒரு கிலோ மீட்டர் தொலைவில் கொன்னக்காட்டுப்படுகை ஸ்ரீ கொன்றை ஆரண்யேஸ்வர் கோவில் உள்ளது. தொடர்புக்கு L. இராஜாராமன் மேனேஜிங் டிரஸ்ட்டி ஸ்ரீ கொன்றை ஆரண்யேஸ்வர் கோவில் டிரஸ்ட் கொன்னக்காட்டுப்படுகை. 9976868604